இப்ப சமீபமா வரக்கூடிய பெண்கள் பெர்பார்ம் பண்ணக்கூடிய டப்மாஸ்கள் பெரும்பாலும் கிளிவேஜ் காட்டியபடியோ அல்லது நெஞ்சை நிமிர்த்தியபடி தொப்புள் தெரியும்படி இப்படி ஏதோஒருபடியாக தன்னை தன்னுடலை முன்வைப்பது பிரதானமாகவே அப்பட்டமாகவே தெரிகிறது.. மேல்தட்டு கீழ்தட்டு நடுத்தட்டு என்று எல்லா வகையினரும் கலந்தே இருக்கின்றார்கள்.. இந்த ஆடைப்பிரச்சினை எடுக்கும் போதெல்லாம் அதை சுதந்திரம் என்று சொல்லிக்கூப்பாடு போட ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.. ஆனா இந்த உலகத்துலேயே பெண் சுதந்திரம்ன்னா ஆடைக்குறைப்புதான் முதல்ல செய்யணும்ன்னு நம்பற ஒரே ஒரு கரகாட்ட கோஷ்டி நாமதான்... நாகரிக வளர்ச்சில ஆடையும் ஒரு பகுதி so ஆடை அணிவதே ஒரு நாகரிகம்தான். கொஞ்சம் யோசிங்களேன் எதுக்காக டிரஸ் போடறிங்க? பிறப்புறுப்புகளை மறைக்கவா? மறைக்கன்னா ஏன்? அது அசிங்கமா இருக்குதுன்னா இல்ல அழகா இருக்குதுன்னா? actually the truth is நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் இடங்களை நாம் காட்சிப்படுத்த விரும்பல.. ஒரு மரியாதைக்குறைவான விஷயமாகப்பட்டது like வீட்ல எல்லா ரூம் கதவு திறந்திருந்தாலும் பாத்ரூம் கதவ மட்டுமாச்சு பூட்டி வைக்கற மாதிரி ஒரு தீம்.. இந்த மார்பரசியல்தான் எப்படித் தோன்றி எதனால் இத்தனை முக்கியத்துவம் பெற்றதென்பது தெரியவே இல்லை.. எத்தனையோ தேடிப்பார்த்துவிட்டேன் எங்கும் சரியான தகவல்களே இல்லை. / இப்படியாக இருக்கலாம் : முதலில் தன் பிள்ளைகள் பால் அருந்துவது பிறர் பார்க்காமல் இருக்க மறைக்க முயற்சி செய்து பின் அப்படியே பழகி.. மார்புக்கும் செக்ஸ்க்கும் உள்ள தொடர்பு. ரிவியல் ஆகவும்.. முழுதாக மறைக்கத்துவங்க.. ஆணுக்கு அதன் பின்னே மார்பின் மீது ஆர்வம் வந்திருக்க வேண்டும். அதுவரைக்குமாக அவன் மார்பை எப்படி கையாள்வது என்ற அடிப்படை கூடப்புரியாதவனாக எதற்கிந்த மார்பு என்றே... கிட்டத்தட்ட மிருகங்கள் புணர்வது போல புணர்ந்திருப்பான். நாகரிக வளர்ச்சி காமத்தையும் கற்றுக்கொடுத்தது...
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நாகரிகம் என்பது வேறு வேறு வகை... நமீபியாவில் இம்பா என்ற இனம் உண்டு அவர்கள் மார்பை வெளிக்காட்டுவார்கள் ஆனால் தொடையை காட்ட மாட்டார்கள் அவர்களைப் பொறுத்த வரை மார்பை விட தொடையில்தான் காமஉணர்வு அதிகம் அதனால் தொடையை பொதுவிடத்தில் காட்டுவதில்லை.../ சரி மனித உடலில் காமம் இல்லாத இடம்தான் எது? நடுமுதுகு, பின்னந்தலை, அக்குள், தொப்புள், என்று எல்லாமே காமத்தை தருவிக்கக்கூடியதுதான்.. நாம் இப்போது மார்பை வெளிக்காட்டி பின்னங்கழுத்தை மறைத்தே வைத்து பழகி இருந்தால் இன்று பின்னங்கழுத்தானது... மார்பின் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்.. நம்முடைய நாகரிகம் மார்பை மையப்படுத்தி வளர்ந்துவிட்டது.
சரி இப்போது நாகரிகம்ன்னா என்ன? நீங்கள் எந்த இடத்தில் வாழ்கின்றிர்களோ அந்த இடம் எதை மையப்படுத்தி நாகரிகம் அடைந்ததோ அங்கு எது நாகரிகமோ அதன்படி நடத்தல் நாகரிகம்.. இம்பா நாட்டுப்பெண்கள் மார்பை வெளிக்காட்டுகிறார்கள் நானும் கொஞ்சமாச்சு காட்டுவேன் என்பது எவ்வகையில் நாகரிகம் என்கின்றிர்கள்? மேற்கத்திய பெண்களின் ஆடை அப்படியாக இருக்கிறது அதனால் நானும் அப்படி அணிவேன் என்பது எவ்வகை நாகரிகம்? மேற்கத்திய நாட்டுல எல்லாம் மார்பை அப்படி உத்து உத்து பார்க்க மாட்டார்கள் அதனால் அங்கு புரிதல் அதிகம் மெச்சூரிட்டி அதிகம் இங்க உள்ளவன்லாம் பொறுக்கிப்பயலுக... see ரெண்டுமே ரெண்டு எக்ஸ்ட்ரீம் நாகரிகம்.. எப்படி இந்த ரெண்டு பேரையும் கம்பேர் பண்ண முடியும்? one more think எதற்காக மார்பை வெளிக்காட்டத் தோன்றியதுன்னு யோசிச்சிங்களா? ''. நாம் இப்போது மார்பை வெளிக்காட்டி பின்னங்கழுத்தை மறைத்தே வைத்து பழகி இருந்தால் இன்று பின்னங்கழுத்தானது... மார்பின் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்'' so இந்த நாகரிகத்தில் வளர்ந்ததால் உங்களுக்கு மார்பு முக்கியமாகப்போய் அதை முக்கியமில்லாததாக ஆக்கத்துடிக்கின்றிர்கள் அதற்கு காரணம் வேறொரு நாகரிகத்தைப்பார்த்து.. இது எவ்வளோ அபத்தம் தெரியுமா?
ஒரு கோட்சூட் போட்டவன் விவசாய நிலத்தில் இறங்கி நின்றால் பொருத்தமாக இருக்காதா? பொருத்தம் இல்லை என்று நமக்குத் தோன்றுகிறதா? தோன்றுகிறது! விவசாயின்னா இப்படிதான்ற ஒரு வடிவம். நம்ம மனசுல பதிஞ்சு போயிட்டு அத ரீப்ளேஸ் பண்ண முடியாது. சோ அந்த தோற்றம் தவிர்த்த ஒன்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனா இத நான் மாற்றிக்காட்டுவேன்னு ஒருத்தன் கங்கணம் கட்டிக்கிட்டு இறங்கறான்.. எப்படியும் ஒரு காலத்தில் இந்த மாற்றம் பழகிவிடும் என்ற கொள்கையோடு..! இது நடக்குமா? நடக்காது! ஏன்னா குளிருக்கு அவனுக கண்டுபிடிச்ச கோட்டுசூட்ட மொட்ட வெயில்ல போட்டுக்கிட்டு திரியற ஊர் இது.. ஏசி ரூம்ல கூட ஓக்கே.. வெயில்ல எப்படி செட் ஆகும்? முடியாதுல்ல அவனே ஒரு கட்டத்தில் எல்லாத்தையும் அவுத்து வச்சுட்டு கோவணத்தோட வேலை செய்யத் துவங்கிடுவான்.. இந்த கலாச்சாரம் இந்த சூழல் இந்த பருவநிலை இந்த நாகரிகத்திற்கு தன்னை தயார் படுத்துவான். அதுதான் தக்கனப்பிழைத்தல்.
ஆக என்ன சொல்ல வரேன்னா.. அன்பின் பெண்களே நீங்கள் எந்த சமூகத்தைப்பார்த்து எப்படியான ஆடைகள் போடவேண்டும் எப்படியாக வெளிக்காட்ட வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றிர்களோ அந்த சமூகத்திற்குச் சென்று அப்படியாக இருங்கள்.. யாரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்.. இல்லையா. அதற்கு சற்றும் தொடர்பில்லாத சமூக அமைப்பில் இருந்துகொண்டு வெளிக்காட்டுவதும்....., பார்க்கிறான் என்று ஆணைக் குறை சொல்வதும்.. லூசுத்தனம்.. இதுல கொடுமை என்ன ஆகிப்போச்சுன்னா இந்த பயலுவ பூராம் தன்னை அந்த பெண் இன்டலக்சுவலா நினைக்கணுன்னு பெண் உடலை ரசிக்காதவன் போலவே சுத்திக்கிட்டு இருக்கான் பாவம்.. ரசித்தலுக்கும் வெறித்துப் பார்ப்பதற்கும் இடையேயான இல்லாத வித்தியாசத்தை வேறு சொல்லி தன்னை முன்னிறுத்துகிறான்.. பாவம்டா நீங்க
:)

முன்பே சொன்னது போல காட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு காரணமே நாம் கடந்து வந்த இந்த நாகரிக வளர்ச்சிதான் என்பதை நினைவில் நிறுத்துங்கள்... நிறைய விசயங்கள் புரிபட ஆரம்பிக்கும்.. மற்றபடி உங்கள் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.. புரிதல் இல்லா சுதந்திரம் வீண்.. நீடூழி வாழ்க
கருத்துகள்
கருத்துரையிடுக