........
அறிமுகங்கள் துவக்கம் அல்ல
காத்திருந்தது அறிமுகங்களுக்காக
துவக்கம் என்றோ எப்போதோ துவங்கிவிட்டது
உலகம் முழுக்க எதால் நிரம்பினால் அதிசயமோ
அதால் நிரம்பியிருக்கிறது
புன்னகைக்கும் பிரியங்கள்
உன் பெயர் இன்னதா?
என் பெயர் இன்னது!
பிரியங்கள் கண்டுகொள்ளும்
கண்டுகொண்ட பிரியங்கள்
ஒன்றையொன்று வதைக்கும்
வதைப்பதற்கு பிரியங்களை மிகுதியாய்ப் பொழியும்
கிடைக்கமாட்டேன் போவென்று
பிரியத்தின் பிரியத்தில் பிரியம் முரண்டு செய்யும்
பாடம் புகட்டுவதாக
பழிவாங்குவதாக
தள்ளி நின்று அழும் பாவப்பிரியம்
புரிந்துகொண்டதாக தேம்பும் சகப்பிரியம்
துவக்கங்கள் துவங்கியதாகவே இருக்கட்டும்
அறிமுகம் நடவாதிருக்கச்செய்வோம்
நானுன்னை நீயாய் விட்டுவிடுகிறேன்
நீயென்னை நானாய் விட்டுவிடு
காத்திருந்தது அறிமுகங்களுக்காக
துவக்கம் என்றோ எப்போதோ துவங்கிவிட்டது
உலகம் முழுக்க எதால் நிரம்பினால் அதிசயமோ
அதால் நிரம்பியிருக்கிறது
புன்னகைக்கும் பிரியங்கள்
உன் பெயர் இன்னதா?
என் பெயர் இன்னது!
பிரியங்கள் கண்டுகொள்ளும்
கண்டுகொண்ட பிரியங்கள்
ஒன்றையொன்று வதைக்கும்
வதைப்பதற்கு பிரியங்களை மிகுதியாய்ப் பொழியும்
கிடைக்கமாட்டேன் போவென்று
பிரியத்தின் பிரியத்தில் பிரியம் முரண்டு செய்யும்
பாடம் புகட்டுவதாக
பழிவாங்குவதாக
தள்ளி நின்று அழும் பாவப்பிரியம்
புரிந்துகொண்டதாக தேம்பும் சகப்பிரியம்
துவக்கங்கள் துவங்கியதாகவே இருக்கட்டும்
அறிமுகம் நடவாதிருக்கச்செய்வோம்
நானுன்னை நீயாய் விட்டுவிடுகிறேன்
நீயென்னை நானாய் விட்டுவிடு
கருத்துகள்
கருத்துரையிடுக