உங்களுக்கு என்னங்க இந்த வயதிலும் அழகாகத்தான் இருக்கிங்க.. எதற்கு சரோ இப்படி சொன்னான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மது, ''ஒருவேளை நான்தான் காரணமா? அதுகிடக்கட்டும் அதென்ன இந்த வயதிலும்? அவனை விட வயது மூத்தவள் என்பதை குத்திக் காட்டுகிறானா? எல்லாவற்றிலும் இந்த வயதை இழுக்கிறான்.. இந்த வயதில் இத்தனை உடல்வாகு இத்தனை கச்சிதம்.. போதும் ச்சீ கண்ணாடி முன் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள் பிரசவத்தில் விட்டுப்போய் தளர்ந்த உடம்பு அப்படியே பழகி இன்று வடிவு இழந்திருந்தது. ஆனாலும் அழகாகவே இருந்தாள் அவளுக்கு. பட் பட் பட்டென்று அறைக்கதவு தட்டப்பட நைட்டியை அணிந்தபடி கதவைத் திறந்தாள்.. கதவ பூட்டிக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்கிற நீ? ஆடை மாற்றிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். ''இதென்ன புதுசா? கதவை சாத்தி டிரஸ் மாத்துறது. இந்த வீட்ல உன்னை என்னை தவிர வேற யார் இருக்கா? கேள்விக்கு பதில் சொல்லாமல் அவ்விடம் விட்டு நகன்றாள். மறைப்பதற்கு அதிசயமாக உன்னிடம் எதுவும் இல்லை.. உன் நிர்வாணம் அப்படி ஒன்றும் எனக்கு கிளர்ச்சி தராது.. என்னும் தாக்குதலாக அவளுக்குப் பட்டது., ஏன் நான் என்னை மறைக்கக் கூடாதா...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்