உங்களுக்கு என்னங்க இந்த வயதிலும் அழகாகத்தான் இருக்கிங்க.. எதற்கு சரோ இப்படி சொன்னான் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மது, ''ஒருவேளை நான்தான் காரணமா? அதுகிடக்கட்டும் அதென்ன இந்த வயதிலும்? அவனை விட வயது மூத்தவள் என்பதை குத்திக் காட்டுகிறானா? எல்லாவற்றிலும் இந்த வயதை இழுக்கிறான்.. இந்த வயதில் இத்தனை உடல்வாகு இத்தனை கச்சிதம்.. போதும் ச்சீ கண்ணாடி முன் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள் பிரசவத்தில் விட்டுப்போய் தளர்ந்த உடம்பு அப்படியே பழகி இன்று வடிவு இழந்திருந்தது. ஆனாலும் அழகாகவே இருந்தாள் அவளுக்கு.
பட் பட் பட்டென்று அறைக்கதவு தட்டப்பட நைட்டியை அணிந்தபடி கதவைத் திறந்தாள்..
கதவ பூட்டிக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்கிற நீ? ஆடை மாற்றிக் கொண்டிருப்பதாகச் சொன்னாள்.
''இதென்ன புதுசா? கதவை சாத்தி டிரஸ் மாத்துறது. இந்த வீட்ல உன்னை என்னை தவிர வேற யார் இருக்கா? கேள்விக்கு பதில் சொல்லாமல் அவ்விடம் விட்டு நகன்றாள். மறைப்பதற்கு அதிசயமாக உன்னிடம் எதுவும் இல்லை.. உன் நிர்வாணம் அப்படி ஒன்றும் எனக்கு கிளர்ச்சி தராது.. என்னும் தாக்குதலாக அவளுக்குப் பட்டது., ஏன் நான் என்னை மறைக்கக் கூடாதா? கிளர்ச்சி அடையச் செய்யும் நிர்வாணம் மட்டும்தான் மறைக்கப் படக்கூடியதா? அவளுக்கு கேள்விகள் இருந்தன பதில்கள் இல்லாமல்.

''கௌசிக் இந்த செம் லீவுக்கு friends வீட்டுக்கு போறானாம் அடுத்த செம் லீவுக்கு friendsகள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதா சொல்றான். என்ன சொல்லட்டும்..''
....சரின்னு சொல்லிடுங்க.
....சரின்னு சொல்லிடுங்க.
வாட்சப் திறந்ததும் சரோவின் மெசேஜ்
''என்ன நான் சொன்ன மாதிரி கண்ணாடி முன்ன நின்னு பார்த்திங்களா? இப்பவாது தெரிஞ்சுக்கோங்க நீங்க ரொம்ப அழகுன்னு''
''என்ன நான் சொன்ன மாதிரி கண்ணாடி முன்ன நின்னு பார்த்திங்களா? இப்பவாது தெரிஞ்சுக்கோங்க நீங்க ரொம்ப அழகுன்னு''
..ம்ம்ம்ம்...
''என்ன ம்ம்ம்ம்?''
....ம்ம்ம்ம்ன்னா ம்ம்ம்...
''நீங்க மட்டும்தான் உங்க அழகை பார்ப்பிங்களா?''
''hello'''
''hello''
''hello'''
''hello''
கௌசிக்கிற்கும் சரோவிற்கும் எத்தனை வயது வித்தியாசம் என்று யோசித்தாள்..மனதுள் ஏதோ இடறியது.
..........................
..........................
அந்த அலுவலகத்தில் மதுவிடம் கணக்குக் காட்டவேண்டிய விற்பனைப் பிரதிநிதி சரோ. இவன் போன இடத்தில் என்ன நடந்தால் எனக்கென்ன அதையெல்லாம் எதற்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.. சில நாட்களில் இன்று என்ன நடந்தது என்று மதுவே கேட்கலானாள்.. பேசுவதற்கு ஏதுமில்லாத போது அன்றைய செய்தித்தாள் செய்திகள் உரையாடல் செய்திகளாயின.. பார்த்த அழகிய பெண்கள்.. தன் காதலை ஒதுக்கிய பெண்கள்.. பெண்களால் ஒதுக்கப்பட்டவன் நான் ஒரு விர்ஜின் என்றவன் சொல்லும் போது மதுவிற்கு சிரிப்பாக வரும்.. அவன் புத்திசாலி சுவாரஸ்யமானவன் நிராகரிக்கப்பட காரணங்கள் இல்லாதவன். ஏன் எதனால் என்று கேட்டாள்.. அலைவரிசை ஒத்துவரவில்லை உங்களுக்கும் எனக்கும் இருப்பதைப் போல.. நீங்கள் ஏன் சீக்கிரமாகப் பிறந்திர்கள் என்று கோபிப்பான். அதில் விகல்பமே இல்லாமல் மனதில் பட்டதை அந்த நொடியே சொல்லும் வெளிப்படை மதுவை வெகுவாய் ஈர்த்தது..
உங்களிடம் எத்தனை பேர் propose பண்ணினாங்க? யாருமே இல்லை என்றாள்.. உங்களுக்கு என்னங்க இந்த வயதிலும் அழகாகத்தான் இருக்கிங்க.. இளமையில் எப்படி இருந்திருப்பிங்க! என்று சொல்லி அவள்காலத்து இளைஞர்களை ரசனை கெட்டவர்கள் என்று திட்டினான். அதற்குமேல் அவனின் பேச்சை மதுவால் தவிர்க்க முடியவில்லை.. உடலின் கட்டுக்கோப்பும் நிர்வாணத்தின் அழகும்
என்று வந்து நின்றது.

...................
ஒரு இளைஞன் தன்னை வியப்பது அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.. அத்தனை இளம் பெண்களையும் தாண்டி அவனைக் கவர்ந்ததில் அவளுக்கே கொஞ்சம் கர்வம்.. அவன் கண்களுக்கு அழகாகத் தெரியவேண்டி காலையில் தயாராகுதல் நினைத்து சிரித்துக் கொள்வாள்.
வந்ததும் கேட்டான்.. நேத்து அனுப்பின மெசேஜ்க்கு நீங்க பதிலே சொல்லலியே.. - சொல்வாங்க சொல்வாங்க உன்னைய கொல்வாங்க. என்று சிரித்தாள்.
எல்லையற்ற பேச்சுக்கள் எல்லையற்ற பார்வை மேய்தல்கள். அனுமதித்து ரசிக்கும் கயமைகள் தொடுகைக்குக் காத்திருந்தது

அன்றிரவு அவன் மீண்டும் கேட்டால் கேட்டதை அனுப்பவேண்டும் என்னும் முடிவோடு மெசேஜ்க்கு காத்திருந்தாள்.. காத்திருப்பது இப்படி இதயம் நடுங்கச் செய்யும் என்பதையே அன்றுதான் உணர்ந்தாள்.. எந்த விதத்தில் selfie எடுக்க வேண்டும் என்பதற்கு புரண்டு படுத்து ஒத்திகை நடத்தினாள்.. கன்னத்திற்கும் கழுத்திற்கும் இடையில் வெட்கம் ஓடிக்கொண்டிருந்தது.. உடலை நெளித்து துணியை போல திருகிப் போட்டால் தேவலாம் என்றிருந்தது.. பல் எளிர் முதற்கொண்டு நமைந்தது...கால்களைப் பின்னிக் கொண்டாள். இந்த அவஸ்தை அவளுக்குப் புதிது.. புதிதான சந்தோசம் எண்ணி திளைத்திருந்தாள், கடைசியில் இவளே oi என்று அனுப்பினாள்..தூங்கும் வரைக்கும் ஒரு டிக்கில் மெசேஜ் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..
கனவில் கௌசிக்.. உடல் உதறி எழுந்தாள்.. ஐயோ என்ன இது.. அவனுக்கு இதுவெல்லாம் தெரிந்தால் என்ன ஆகும். அவள் உணர்வுகள் தாய்மையோடு முட்டி மோதிக்கொண்டிருந்தது.. ஒருவேளை சரோ மேலிருப்பதும் ஒருவித தாய்மை உணர்வுதானா? நான்தான் தேவையில்லாமல் குழம்புகிறேனா? அவளுக்கு மீண்டும் கேள்விகள் பதில் இல்லா கேள்விகள்.

காலையில் அலுவலகத்தில் அவன் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்திருப்பதாகத் தெரிந்தது.. இருப்புகொள்ளாமல் தவித்து என்ன செய்து கொண்டிருப்பான் என்று யோசித்தாள். உடல் நிலை சரியில்லைன்னு ஒரு வார்த்த அவன் சொல்லிருந்தா நான் போயி அவனை கவனித்து இருக்கலாமே.. தனியாக இருப்பதாக வேற சொன்னான் என்ன செய்வான்.. அவளிடம் பெருங்கருணை சுரந்து கொண்டிருந்தது.. மேலும் ஒரு தடையும். ஐயோ பாவம், இரக்கம், காதல் காமம்.. எல்லாம் கலந்த ஒரு நிலையில் இருந்தாள்.. இப்போது அவன் வீட்டில் போய் நின்றால் என்ன செய்வான்? யாருமே இல்லை என்று வருந்தியவன் என் வருகைக்கு மகிழ்ந்து கட்டிப்பிடித்து அழுவானா? அன்பின் அணைப்பை விட எது பெரியது இவ்வுலகில்.. காமம் எல்லாம் ஊடுவிளைவு தான். காமம் நிகழ்ந்தால்தான் என்ன தவறு.. நான் அந்த கருணையையும் அவனுக்கு வழங்குவேன்.. எனக்குள்ளிருக்கும் காதலும் காமமும் இதைக் கருணை என்று தனக்கு வசதியாக மொழி பெயர்ப்பதாக தோன்றுகிறதே. பரவாயில்லை mutual தானே! யோசனைகளில் நாள் கடத்தி மறுநாள் விடுப்பெடுத்தாள்..
தோழிக்கு உடல்நிலை சரியில்லை பார்க்கப் போவதாக கணவனிடம் காரணம் சொன்னாள்..
என்ன வாங்கிச் செல்வது? ஏதும் வேண்டாம் அங்கு அவனுக்கு சமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தாள்.. பேரன்பை வழங்கப் போகிறோம் என்ற திமிர் அவள் நடையிலேயே தெரிந்தது.. மிகுந்த உற்சாகம்.
என்ன வாங்கிச் செல்வது? ஏதும் வேண்டாம் அங்கு அவனுக்கு சமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தாள்.. பேரன்பை வழங்கப் போகிறோம் என்ற திமிர் அவள் நடையிலேயே தெரிந்தது.. மிகுந்த உற்சாகம்.
வாசலே அலங்கோலமாக பேச்சுலர் வீட்டிற்கு அத்தனை தகுதியோடும் இருந்தது சரோ வீடு.. முதலில் கூட்டிபெருக்கி கோலம் போடவேண்டும் அப்போதுதான் வாசல் வாசலாக இருக்கும் இதுதான் முதல்வேலை என்று மனதில் நிறுத்தி.. காலிங் பெல் அழுத்தினாள்.. கதவு திறந்துதான் இருக்குது உள்ள வாங்க என்றான் சரோ.. கட்டிலில் படுத்திருந்தான் அவன் அருகில் அவன் கால் பாதத்தை சூடு பறக்க தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள் ஒரு இளைஞி.. இந்த மேடம் தான் என்னோட சீஃப் என்று அந்த இளைஞியிடம் அறிமுகம் செய்தான்..
இவ என்னோட friend மேடம் என்றான்.. முதல் முறையாக மேடம் என்றழைக்கிறான்..
இவ என்னோட friend மேடம் என்றான்.. முதல் முறையாக மேடம் என்றழைக்கிறான்..
என்ன இந்தப்பக்கம் என்று அவனும் கேட்கவில்லை.. இவளும் எந்த பொய்க்காரணமும் சொல்லவில்லை. get well soon என்று வெளிவந்தாள்
அண்ணாந்து பார்த்தாள். மழைக்கு எந்த அறிகுறியும் இல்லை.
மழைபெய்தால் நன்றாக இருக்கும் தோன்றிற்று
மழைபெய்தால் நன்றாக இருக்கும் தோன்றிற்று
.
கருத்துகள்
கருத்துரையிடுக