அராத்து
இந்த படத்துக்கெல்லாம் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இந்த
படத்துக்கு எழும் எதிர்ப்பைப் பார்த்தவுடன் எழுத வேண்டிய கட்டாயம்.
முதலில் படம் :- மொக்கை படம். கொஞ்சம் கூட கவனமும் , மெனக்கெடலும் , ப்ரொஃபஷனலிஸமும் இல்லாத மட்டி படம்.
அடல்ட் காமடி : இதை எடுக்க மூளையும் ரசனையும் வேண்டும். கலா ரசிகனாக இருக்க வேண்டும். அடல்ட் காமடி என்ற பெயரில் இந்த படத்தில் இருப்பதெல்லாம் , கற்பனை வளம் இல்லாத அருவருப்பு காமடி.அதிலும் ஒரு ஓவியத்தை பார்த்து இருவர் நின்று கொண்டே சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் அருவருப்பின் உச்சம். அடல்ட் காமடியை விடுங்கள், படத்தில் காமடியே இல்லை. செக்ஸ் பற்றி , பொதுமக்கள் பேசிக்கொள்வதை , வெளிப்படையாக திரையில் வைத்ததால் ஆர்பரிக்கிறார்கள் , அவ்வளவே !
கவர்ச்சி : இதைப்போன்ற படங்களில் கவர்ச்சியாவது இருக்க வேண்டும். க்ளீவேஜ் , தொடையை காட்டினால் கவர்ச்சி என்பதெல்லாம் , பிரசாந்த் காலத்தோடு மலையேறி விட்டது. இந்த படத்தில் காயலான் கடை பார்ட்டி , டொக்கு ஒடிசல் வாங்கியதையெல்லாம் காட்டி கவர்ச்சி என்கிறார்கள், மண்ணாங்கட்டி ! அவனவனுக்கு வாழைப்பழம் , ஈச்சம்பழம் ஆனதுதான் மிச்சம்.
எதிர்ப்பு :- பல தமிழ் சினிமாக்களில் மட்டமான அரசியல் இருக்கும். சமுதாயத்தை சீரழிக்கும் சாதி , மத வெறி கொண்ட காட்சிகள் இருக்கும். காதலிக்கலைன்னா கடத்திட்டு போவது , காதலி வீட்டுக்கு முன் போய் குடித்து விட்டு கலாட்டா செய்வது போன்ற கேடு கெட்ட காட்சிகள் இருக்கும். இளைஞர்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்யும்.
ஹீரோயின் தொப்புள் முழு க்ளோஸப்பில் காட்டப்படும்.முழு முலைகளையும் பார்ப்பதற்காகவே ஹீரோயின் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்வார். வடிவேலு மனைவியுடன் , சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு போர்வைக்குள் ஆவி பிடிப்பார். இது குழந்தைகளோடு பார்க்கும் குதூகலச் சித்திரம்.
மொத்தமாகவே தமிழ் சினிமா வன்முறையையும் , சாதி வெறியையும் , பெண்களுக்கு எதிரான கருத்துக்களையும் , ஒரு மேம்பட்ட சமூகத்தை கீழே இழுக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்து வந்திருக்கிறது. செய்து கொண்டும் இருக்கிறது.
இந்த அடிப்படையில் வைத்து பார்த்தால் “இருட்டு அறையில் முரட்டு குத்து” மொக்கை படம் தானே தவிர சமுதாயத்துக்கு எந்த கேடும் விளைவிக்காத படம்.
இதை ஒரு மரண மொக்கை படம் என்று விமர்சிக்கலாமே தவிர , இது ஓடக்கூடாது ! இது சமூகத்துக்கு கேடு என்றெல்லாம் எதிர்ப்பது படு முட்டாள்த்தனம்.
தம்பி , எரக்ஷன் , 25 நிமிஷம் செய்யணும் என்றெல்லாம் படத்தில் ஓப்பனாக பேசினால் சமுதாயம் கெட்டுப்போயிடுமா ?
நம்மூரில் ஹிப்போகரிஸ்டுகளுக்கும் , போலி அறச்சீற்ற ஆதரவாளர்களுக்கும் பஞ்சமில்லை. இந்த பட விஷயத்திலும் அதுதான் நடக்கிறது.
நம் ஆட்களுக்கு செக்ஸ் என்றால் அலர்ஜி. கலாச்சாரம் , பண்பாடு , தொன்மம் , விழுமியங்கள் , பாரம்பரியம் , குடும்ப கௌரவம் எல்லாமே செக்ஸ்தான். இதில் இன்னொரு நுட்பம் இருக்கிறது நம் தமிழர்களிடையே ! தொப்புள் , பம்ஸ் , பூப்ஸ் , அக்குள் என எதை வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால் அதை வாயால் உச்சரிக்கக்கூடாது. படத்தில் முலையை காட்டலாம், ஆனால் முலை என்று சொல்லக்கூடாது.
பல குத்துப்பாடல்களில் ஹீரோயின் சூத்தை ஆட்டிக்கொண்டு ஸ்டெப் போடுவார். அவரின் சூத்து திரை முழுக்க காட்டப்படும். நான் கூட சூத்துக்கு எல்லாம் சிறப்பு நடன அமைப்பாளர் உண்டு போல சினிமாவில் என வியந்து இருக்கிறேன். ஆனால் பாட்டில் “சூத்தை ஆட்டி டேன்ஸ் போடுறா “ ஙொம்மாள என் பூளை கெளப்ப ஆட்டம் போடுறா “ என்று வரி வைத்தால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்
ஆனால் இதைத்தான் காட்சியாக வைக்கிறார்கள்.ஹீரோயின் ஆட்ட , ஹீரோ "அங்கே" தன் கைகளை பொத்தி வைத்துக்கொள்வார்.

இருட்டு அறையில் …படத்தில் கொஞ்சம் “பேசி” விட்டார்கள். அதனால் தான் திரைத்துறையிலேயே இருக்கும் , தங்களை கலாச்சார காவலர்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பவர்கள் பட படக்கிறார்கள்.இவர்கள் தொப்புளில் பம்பரம் விடுவது , ஆம்லேட் போடுவது , முலையில் ஆப்பிளால் அடிப்பது , சூத்தில் பலாப்பழத்தால் அடிப்பது போன்ற காட்சிகளை வைத்தவர்கள் அல்லது ரசித்து மகிழ்ந்தவர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக