முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாஸ்மாக் தமிழ்


tas_boy_3_1
“ஆல் ப்ராப்ளம்ஸ் ஓவர் ப்ரோ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“என்னடா தலைவா ரிலீஸைப்பத்திதானே சொல்ற ?” என்றான் வடிவேல்.
”ஆமாம் மச்சான்.. உங்கப் பத்திரிக்கைக்குத்தான் கஷ்டம்”
”ஏன்டா.. எங்கப் பத்திரிக்கைக்கு என்ன கஷ்டம் ? ”
”ஆமாடா… ரெண்டு வாரமா தலைவா படத்தை வச்சு கவர் ஸ்டோரி பண்ணிட்டீங்க.  ஊர்ல வேற பிரச்சினையே இல்லாத மாதிரி ரெண்டு இஷ்யூவுக்கு இதுதான் கவர் ஸ்டோரியா… ? வாரமிருமுறை பத்திரிக்கைக்கு செய்திகள் இல்லாம கஷ்டப்பட்றது உண்மைதான். அதுக்காக விஜய்க்கு இத்தனை முக்கியத்துவம் தரணுமா ? இதுதான் நிகழ்காலத்தின் குரலா ? ”
Rep_18-08-2013_480_W
Rep_22-08-2013_480_W
”தலைவா மேட்டர்தானேடா ஹாட் டாப்பிக் ? ”
”தலைவாதாண்டா ஹாட் டாபிக்.  ஆனா தலைவா மட்டுமா ஹாட் டாபிக் ? ”
”சரி இந்தப் பிரச்சினை எப்படிதாம்பா முடிவுக்கு வந்துச்சு ? ” என்றார் கணேசன்.
”தலைவா படப்பிரச்சினையை திமுக கையில எடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும்தான் அரசாங்கம் வேக வேகமாக களமிறங்குச்சு.  படம் வெளியாகலைன்னதும், தயாரிப்பாளர் சார்பில உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாங்க. ஆனா அனுமதி வழங்கப்படல.  விஜய் தரப்புல ஏதாவது வேகமா செய்யப்போறாங்கன்னு எதிர்ப்பார்த்தா, விஜய் தரப்பு படத்தை வெளியிடறதுக்கு யார் கால்ல வேணா விழறதுக்கு தயாரா இருந்தாங்க. அதனால அரசாங்கமும் மெத்தனமா இருந்துச்சு..
இந்த நேரத்துலதான், கருணாநிதி இரண்டாவது முறையா இந்தப் படம் தொடர்பா பேட்டியளிச்சார்.   விஜய் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, ஒரு படைப்பாளியாக என்ன நினைக்கிறீர்கள்னு கேட்டதுக்கு ஒரு படைப்பாளியாக பதைபதைக்கிறேன்னு பதில் சொன்னாரு.
அன்னைக்கு, மதுரவாயல் உயர்வழிச்சசாலை திட்டம் நிறுத்தப்பட்டது தொடர்பா கைது செய்யப்பட்டிருந்த திநகர் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ட்விட்டர்ல, 300 தியேட்டர்களில் தலைவா படத்தை வெளியிட நான் தயார்னு எழுதியிருந்தாரு. உடனே அரசாங்கம் களமிறங்குச்சு.  மள மளன்னு காரியங்கள் நடந்தது.  தலைவா படத் தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்குற “TIME TO LEAD” எடுக்கணும்னு சொன்னாங்க.  சில வசனங்களை கட் பண்ணச் சொன்னாங்க. எல்லாத்துக்கும் விஜய் தரப்பு ஒத்துக்கிச்சு. மறுநாள் ஞாயித்துக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யலாம்னு முடிவெடுத்தாங்க.  சென்னையில தியேட்டர்கள் இருந்தாலும், வெளியூர்கள்ல தியேட்டர்கள் இல்லாததாலயும், TIME TO LEAD எடுக்கறதுக்கு இரண்டு நாள் அவகாசம் வேணும்னும், செவ்வாய்க்கிழமை படத்தை வெளியட்றதுன்னு முடிவெடுத்துட்டாங்க.
Untitled-1
திமுக இந்த விவகாரத்தை கையில எடுக்கறதைப் பாத்ததும்தான் ஜெயலலிதாவுக்கு பிரச்சினை கை மீறிப் போயிடுமோன்ற பயம் வந்துச்சு.”
”விஜய் தரப்பு ஏன் இவ்வளவு அமைதியா இருந்தாங்க… ? ”
”விஜய்க்கு அரசியல்வாதியா ஆகணும்னும் ஆசை…  ஆனா அதுக்காக வியாபாரத்தை இழக்கவும் தயாரா இல்லை.  படம் வெளியில வர்லன்னு தெரிஞ்சதுமே, தன் வீட்லயே உண்ணாவிரதம் அறிவிச்சிருந்தார்னா, கூட்டம் சேந்துருக்கும். விஜய்க்கும் போராடக்கூடியவர்ன்ற ஒரு இமேஜ் கிடைச்சிருக்கும்.  ஆனா, அதை விட்டுட்டு, அப்பாயின்ட்மென்ட் இல்லாம கோடநாட்ல போயி காத்திருக்கறது.., அம்மாவைப் போல சிறப்பான ஆட்சி நடத்தறதுக்கு இந்தியாவிலயே ஆள் இல்லைன்னு பேட்டி தர்றது, இதெல்லாம் தன்னோட நலனுக்காக, கால்ல விழத் தயாரா இருக்கற விஜய்க்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் வித்தியாசமே இல்லைன்னு   ஆயிடுச்சு. ”
”காங்கிரஸ்க்கு தேர்தல் ஜுரம் வந்துடுச்சா ? ” என்றான் பீமராஜன்.
”காங்கிரஸூக்கு மட்டுமில்ல.. எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் ஜுரம் வந்துடுச்சு.   காங்கிரஸ்க்கு எப்படியாவது உணவுப் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கிடணும்னு நெருக்கடி.   ஆனா, டெல்லி தலைமைச் செயலகத்துல பெரும்பாலான அமைச்சகங்கள்ல காங்கிரஸ் திரும்பவும் ஆட்சிக்கு வராதுன்ற உணர்வு வந்துடுச்சு.  இதனால, பல்வேறு செய்திகளை ஊடகங்களுக்கு கசிய விடறாங்க.
நிலக்கரி இறக்குமதி ஊழல்ல. பல்வேறு கோப்புகள் காணாமல் போன விவகாரம் ஊடகங்கள்ல கசிஞ்சுருக்கு. இதையும், ராபர்ட் வதேராவோட நிலபேர ஊழல் குறித்தும், பாராளுமன்றத்துல பிரச்சினையை எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்பட விடாம தடுக்கறதுக்கு பிஜேபி திட்டமிட்டிருக்கு. இதனால, காங்கிஸ் அரசுக்கு கடுமையான நெருக்கடி இருக்கு. ”
food_ss_22_12_2011_1
”உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறுமா நிறைவேறாதா ? ”
”எப்படியும் அதை நிறைவேத்தியே தீர்றதுன்ற முடிவுல இருக்கு காங்கிரஸ்.   உணவுப் பாதுகாப்பு மசோதாவால அந்தந்த மாநிலங்கள்ல என்ன தாக்கம் ஏற்பட்டிருக்கு, இது தேர்தலில் எப்படி பிரதிபலிக்கும்னு, மாநில நிர்வாகிகள் விரிவா ஒரு அறிக்கை தயார் செய்யணும்னு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு போட்டிருக்கு. தேர்தலுக்கான முழு ஆயத்தங்கள்ல காங்கிரஸ் கட்சி தீவிரமா இருக்கு.  உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேரிட்டா, தேர்தலை முன்கூட்டியே நடத்துற திட்டமும் இருக்காம்.”
”சரி திமுக செய்திகள் என்ன இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
”திமுக மாநிலங்களவை தலைவரா கனிமொழியை நியமிக்கணும்னு பேராசிரியர் அன்பழகன் கடிதம் எழுதிட்டாரு.   தலைமைப் பதவிதான் நமக்கு இல்ல… கொறடா பதவியை கைப்பத்தணும்னு திமுகவுல கே.பி.ராமலிங்கத்துக்கும் செல்வகணபதிக்கும் கடுமையான போட்டி.  ரெண்டு பேருமே செல்வாக்கான ஆளுன்றதுனால, யாருக்கு ஆதரவா முடிவெடுக்கிறதுன்னு குழப்பத்துல இருக்காரு தலைவரு. ”
 Shri-T.M.-Selvaganapathi
”திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்துச்சே.. எதும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதா ? ”
”சொல்லிக்கிற மாதிரி பெரிய முடிவுகள் எதுவும் இல்ல.  திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியை விட்டு வெளிய போக முடியாத சூழல்.  கூட்டணியை விட்டு வெளியேறினா, 2ஜி வழக்கை நெருக்குவாங்க.  அதனால தேர்தல் நெருங்கட்டும் அப்புறம் முடிவு பண்ணலாம்னு நெனைக்கிறார் தலைவர்.  தேமுதிக, காங்கிரஸ் சேர்ந்து தமிழகத்தைப் பொறுத்தவரை தனி அணி அமைச்சா அது தனக்கு சாதகமா அமையும், அந்தக் கூட்டணி வாக்குகளைப் பிரிக்கிறதுனால திமுகவு வெற்றி பெற வாய்ப்பு அதிகமாகும்னு நினைக்கிறாரு. ஆனா, இப்போதைக்கு கூட்டணி எப்படி அமையும்னு தெளிவடையாம இருக்கு நிலைமை ”
”கட்சிக்குள்ள மாற்றங்கள் செய்யப்போறதா சொல்றாங்களே.. ? ” என்றான் பீமராஜன்.
”ஆமாடா… திமுக மாவட்டங்களை மேலும் பிரிக்கிறதா பேச்சு இருக்கு. குறிப்பா வட தமிழகத்துல சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களை புறநகர்னு தனியா பிரிக்கிறதா பேச்சு இருக்கு.   ஸ்டாலின் கட்டுப்பாட்டுல கணிசமான மாவட்டங்கள் இருக்கு.   கனிமொழி தன்னோட கட்டுப்பாட்டுல சில மாவட்டங்கள் வரணும்னு நினைக்கிறாங்க. புதுசா மாவட்டங்களை பிரிச்சு, அதை தன்னோட ஆதரவாளர்களால நிரப்பினா, நாளைக்கு கட்சியை கைப்பற்ற அது உதவும்னு நினைக்கிறாங்க. ”
”ஸ்டாலினுக்கு நிகரா அவங்களால அரசியல் பண்ண முடியுமா ? ஸ்டாலின் விட்டுடுவாரா ? ”
2881310355_aa4ea16668_b
”டெல்லியைப் பொறுத்தவரை கனிமொழிதான் திமுகவோட முகம்னு ஆயிப்போச்சு.  அடுத்து ஆறு ஆண்டுகளுக்கு கனிமொழி ராஜ்யசபா எம்.பியா இருப்பாங்க.  நாளைக்கு டெல்லியில அமையப்போற ஆட்சியில, திமுக பங்கேற்றாலும், பங்கு எடுக்கலன்னாலும், கனிமொழி  ஒரு முக்கிய பங்கு வகிப்பாங்க.  அப்போ கட்சியில தனக்கு வலுவா செல்வாக்கு இருக்கணும்னு நினைக்கிறாங்க. தயாநிதி மாறன் மந்திரியா இருந்த வரைக்கும் அவருக்கு டெல்லியில செல்வாக்கு இருந்தாலும், கட்சியில அவருக்கு செல்வாக்கு இல்ல. அது மாதிரி தானும் ஆயிடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. ”
”சரி கேடி சகோதரர்கள் எப்படி இருக்காங்க ? ”
”அவங்களுக்கென்ன ? அவங்கக்கிட்ட இருக்கற பணத்தால யாரை வேணாலும் விலைக்கு வாங்குவாங்க… பிஎஸ்என்எல் இணைப்புகளை மோசடியா சன் டிவிக்கு பயன்படுத்தினாங்கன்ற குற்றச்சாட்டு அவங்க மேல நெடுநாளா இருந்துச்சு.  இது தொடர்பா சென்னை சிபிஐ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி, ஒரு பூர்வாங்க விசாரணை தொடங்குனாங்க.  பூர்வாங்க விசாரணை முடிஞ்சு இரண்டே மாசத்துல எப்ஐஆர் போடணும்னு டெல்லிக்கு அறிக்கை அனுப்பினாங்க.  ஆனா, எப்ஐஆர் போட உத்தரவு வழங்கறதுக்கு பதிலா, அந்த வழக்கையே டெல்லிக்கு மாத்தி உத்தரவு போட்டுச்சு, சிபிஐ தலைமை அலுவலகம்.  அதுக்குப் பிறகு பல நாட்கள் எந்த முன்னேற்றமும் இல்ல.
இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போடணும்னு ரெண்டு பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்துல தாக்கல் செய்யப்பட்டுச்சு.  ஒரு வழக்கை தொடர்ந்தவர், இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஆடிட்டர் குருமூர்த்தி.  இன்னொரு வழக்கு ட்ராஃபிக் ராமசாமி போட்டது.  இந்த வழக்குகள் தொடரப்பட்டதுக்குப் பின்னாடி சமீபத்துல சிபிஐ இந்த விஷயத்துல எப்ஐஆர் பதிவு பண்ணாங்க.   அந்த வழக்குல 440 கோடி இழப்பு ஏற்படக் காரணமா இருந்த தயாநிதி மாறனை குற்றவாளியா காட்டாம, அப்போ பிஎஸ்என்எல் பொது மேலாளரா இருந்த வேலுச்சாமி என்பவரை குற்றவாளியா காட்டி வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க.
editorial
2ஜி வழக்குல சிக்குன ஆ.ராசா போலவோ, கனிமொழி போலவோ, சிக்கிக்காம, தயாநிதி மாறன் எவ்வளவு கவனமா தப்பிச்சிக்கிட்டு வர்றாருன்னு இதுலேர்ந்தே தெரியுது.   வழக்கு பதிவு பண்ணி விசாரணை தொடங்குன நாலே மாசத்துல ஆ.ராசாவை கைது பண்ண சிபிஐக்கு, இரண்டு வருஷமா தயாநிதி மாறனை விசாரிக்கக் கூட தோணல. உச்சநீதிமன்றம் எப்போ கேள்வி கேட்டாலும், மலேசியாவுல இருந்து ஆதாரங்கள் வரல… ஆப்பிரிக்காவில் இருந்து கோப்புகள் வரலனைன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்காங்க.  இந்த செல்வாக்கு பத்தி நல்லா தெரிஞ்சதுனாலதான், திமுகவுல பெரும்பான்மையான ஆட்கள், கேடி சகோதரர்களை அடக்கியே வைக்கணும்னு நினைக்கிறாங்க.. ”
”சரி… அமைச்சரவை மாற்றம் எப்போப்பா…. அம்மா கோடநாட்ல இருந்து வந்து ஒரு வாரம் ஆகப்போகுதே… ? ”
”வெகு சீக்கிரம் அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு சொல்றாங்கண்ணே..  பல அமைச்சர்கள் வழக்கம் போலவே கலக்கத்துல இருக்காங்க.  செந்தில் பாலாஜி பேர்தான் ரொம்ப அடிபடுது.  அவரை காலி பண்ணிடுவாங்கன்னு பேச்சு இருக்கு.  அவரைத் தவிரவும், அம்மா அமைச்ச ஒழுங்கு நடவடிக்கைக் குழு மீதே ஏராளமான புகார்கள் இருக்கறதால,  அந்த கமிட்டியிலேர்ந்தும் சிலர் கழட்டி விடப்படுவதா சொல்றாங்க.
அமைச்சர்கள் தவிர்த்து, அதிகாரிகள் மட்டத்துலயும் பெரிய அளவுல மாற்றங்கள் எதிர்ப்பார்க்கப்படுது.  தேர்தல் வர்றதுனால, அது வரைக்கும் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் சிறப்பா செயல்படக் கூடிய அதிகாரிகள் வேணும்னு ஜெயலலிதா நினைக்கிறாங்க.
சமீபத்துல இந்தியா டுடே நடத்துன கருத்துக் கணிப்புல அதிமுக தனியா நின்னாவே 30 சீட் ஜெயிக்கும்னு சொன்னது, அம்மாவை ரொம்ப குஷியாக்கியிருக்கு. ஆனா அம்மாவோட டார்கெட் 35.  2004ல்  திமுக கூட்டணி நாற்பதையும் அடிச்ச மாதிரி அடிக்கணும்னு பாக்கறாங்க. ”
”காவல் துறையிலயும் மாற்றம் இருக்குமாப்பா ? ”
”காவல்துறையிலயும் மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க.   தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, சீரழியும் சட்டம் ஒழுங்கு குறித்து, உளவுத்துறை ஒரு அறிக்கை அனுப்பியிருக்காங்க.  அந்த அறிக்கையைப் பார்த்த ஜெயலலிதா, கடும் அதிருப்தியில இருக்காங்க.    எந்த அதிகாரி, சட்டம் ஒழுங்கை சிறப்பாக பார்த்துக்க தகுதியானவர்னு டிஜிபிக்கிட்ட ஒரு பரிந்துரை கேட்டிருக்காங்க… அந்த பரிந்துரையின் அடிப்படையில, தேர்தல் வரைக்கும் பிரச்சினை ஏற்படாத வகையில, பாத்துக்கக் கூடிய அதிகாரிகளா நியமிக்கணும்னு முடிவெடுத்திருக்காங்க.
மத்திய அரசை கடுமையா விமர்சிச்சு பேச, பல்வேறு ஆதாரங்களை அம்மா திரட்டிக்கிட்டு இருக்காங்க.  வரக்கூடிய நாட்களில், மத்திய அரசை கடுமையா விமர்சிச்சு, ஏற்கனவே இருக்கக் கூடிய காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வை கூர்மைப்படுத்தி காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப்படக் கூடிய அளவுக்கு காங்கிரஸை கதறடிக்க ஜெயலலிதா திட்டம் போட்ருக்காங்க. ”
”சரி கேப்டன் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு ? ” என்றான் ரத்னவேல்.
”கேப்டன் எதுவுமே பண்ணாம இருந்தாக் கூட அவர் கட்சி வளரும். ஆனா, கட்சியை உருப்பட விட மாட்டேன்னு தீர்மானமா இருக்காரு கேப்டன்.   காங்கிரஸ் கட்சியோட கூட்டணி பேச்சுவார்தை தொடங்கறதுக்கு முன்னாடி, பிஜேபியோட பேச்சு நடத்துங்க.  அப்படிப் பண்ணீங்கன்னா, காங்கிரஸ் கட்சிக் கூட, அதிகமான சீட்களை கேட்க முடியும்… காங்கிரஸ் பயந்துக்கிட்டு அதிக இடங்களுக்கு ஒத்துக்குவாங்க ன்னு  பன்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை சொல்லியிருக்கார்.  பன்ருட்டி ராமச்சந்திரன் சொல்றதைக் கேட்டா… மூத்த அரசியல்வாதிகளான ப்ரேமலதாவுக்கும் சுதீஷுக்கும் என்ன மரியாதை.  அதனால பன்ருட்டி சொல்றதைக் கேட்காம தொடர்ந்து காங்கிரஸ் கூட பேசிக்கிட்டு இருக்கார் கேப்டன்.
தான் சொல்றது எதையுமே கேப்டன் கேக்காததால, தானும் ஏற்கனவே வெளியே போன ஏழு தேமுதிக எம்.எல்.ஏக்கள் வழியில போலாமான்னு பன்ருட்டியார் தீவிர யோசனையில இருக்கார். மேலும் சில எம்.எல்.ஏக்களை அழைச்சுக்கிட்டு, தனி அணியா செயல்படலாமான்னும் யோசிக்கிறார்.. ”
”அவரும் போயிட்டா கேப்டன் கதி… ? ”
”மூத்த அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஞானிகள் ப்ரேமலதாவும், சுதீஷும் இருக்காங்கள்ல.. ?  அவங்க போதாதா ? ”
”சரி கோர்ட் செய்திகள் என்னடா இருக்கு ? ” என்றான் பீமராஜன்.
”சமீபத்துல நேரடியா தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நீதிபதிகள் தேர்வுல பல கீழமை நீதிபதிகள் கடுமையான வருத்தத்துல இருக்காங்க. ”
”ஏன்… தேர்வு நேர்மையான முறையில நடந்ததா பல வழக்கறிஞர்களே சொல்றாங்களே… ? ”
”இந்த மாவட்ட நீதிபதிகள் தேர்வுல கீழமை நீதிபதிகள் கலந்துக்க முடியாது.  கீழமை நீதிபதிகள் அத்தனை பேருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியாகணும்னு ஆசை இருக்கும்.   கடந்த ஐந்து ஆண்டுகளா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கற பெரும்பாலான நேரடியான மாவட்ட நீதிபதிகள் சின்ன வயசா இருக்கறதால, கீழமை நீதிபதிகள் பலருக்கு மாவட்ட நீதிபதி பதவியை தாண்டி பதவி உயர்வு கிடைக்காது… இதனால, பதவி உயர்வே இல்லாம ஓய்வு பெற வேண்டிய சூழல்ல பலர் விரக்தியாயிருக்காங்க…”
”சரி அதுக்காக, மாவட்ட நீதிபதிகள் தேர்வை தப்புன்னு சொல்ல முடியாதுல்லயா ? ”
”கீழமை நீதிபதிகள் அவங்களோட குறைகளை சொல்றாங்க.. ஒன்னு அவங்களும் நேரடி மாவட்ட நீதிபதிகள் தேர்வுல கலந்துக்க வழிவகை செய்யணும்.  இல்லன்னா, அவங்களுக்கு விரைவா பதவி உயர்வு பெற ஏற்பாடுகளை செய்யணும்.  இது ரெண்டும் நடக்கலன்னா, கீழமை நீதிபதிகள் பலர் விரக்தியடைஞ்சுடுவாங்கன்னு ஒரு பேச்சு இருக்கு.. ”
”மற்றபடி இந்த மாவட்ட நீதிபதிகள் தேர்வுல குறை எதுவும் இல்லையா ? ”
”இந்தத் தேர்வுல 31 வயதான தீப்தி அறிவுநிதின்னு ஒரு பொண்ணு மாவட்ட நீதிபதியா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கு.  இந்தப் பெண் முற்பட்ட சமூகத்தை சேர்ந்ததால, 31 வயசுல மாவட்ட நீதிபதியா தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் உச்சநீதிமன்றத்துக்கு போக வாய்ப்பு இருக்குன்றதாலயே தேர்ந்தெடுக்கப்பட்டதா ஒரு பேச்சு இருக்கு. ஆனா தேர்வுக் குழு தரப்புல, அப்படிப்பட்ட எந்த உள்நோக்கமும் தேர்வுக் குழுவில் உள்ளவர்களுக்கு கிடையாது.
எழுத்துத் தேர்வுல சிறப்பா எழுதி ஏராளமான மதிப்பெண்களை பெற்றிருந்த பலர், நேரடித் தேர்வுல சரியாவே பதில் சொல்லலை.  இத்தனைக்கும் நேர்முகத் தேர்வின் போது, எந்த பிரிவுல அந்த வழக்கறிஞரா ப்ராக்டிஸ் பண்றாங்களோ, அந்த பிரிவுலேர்ந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டன.  அந்தக் கேள்விகளுக்கும் பலர் சரியா பதில் சொல்லலை.  நேரடித் தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் யாருக்கும் வழங்கப்படலை.
மாவட்ட நீதிபதியா நேரடியா தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மிகச் சிறந்த தகுதியுடையவர்களா இருக்கணும்னு ஒரே நோக்கத்துலதான் இந்த தேர்ச்சி நடைபெற்றுச்சு.  தேர்வில் கலந்துக்கிட்ட ஒரு நபரைப் பற்றிய அத்தனை பின்புலங்களும் விசாரிக்கப்பட்டு, அவர் மேல குற்றச்சாட்டுகள் இருக்கா இல்லையான்ற விபரங்கள் பரிசீலிக்கப்ப்டட பின்னாடிதான், மதிப்பெண்கள் வழங்கப்பட்டதுன்னு சொல்றாங்க.. ”
”அது சரிப்பா… எல்லா தரப்பையும் எப்படி திருப்தி செய்ய முடியும் ?”
”மச்சான்…  திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியை பணி இடைநீக்கம் பண்ணியிருக்காங்களே என்னடா மேட்டர் அது.. ? ”
”அவர் பேரு நாகநாதன்.  அவருக்கு வேலையே தண்ணியைப் போட்டு தகராறு பண்றதுதான்.  சில வருஷத்துக்கு முன்னாடி, திருநெல்வேலியில இவர் வேலை செஞ்சப்போ, தண்ணியப் போட்டுட்டு, போலீஸ் ஸ்டேஷன்ல போய் தகராறு பண்ணியிருக்காரு.   அப்போ இவர் மேல புகார் போயி, உடனடியா சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.  சரி இப்பவாவது ஒழுங்கா இருப்பாருன்னு பாத்தா, திருவண்ணாமலையில இவர் வீட்டுக்கு பாதுகாப்புக்கு ஒரு பெண் போலீசை போட்ருந்தாங்க.  தண்ணியைப் போட்டுட்டு, அந்தப் பெண் போலீஸ் கிட்ட தகாத முறையில நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கார்.  அந்தப் பெண் உயர் அதிகாரிகள்ட புகார் சொல்லவும், உடனடியா அவரை பணி இடைநீக்கம் பண்ணிட்டாங்க.
இதே தவறை வேற ஒரு நபர் பண்ணியிருந்தா, அவர் இந்நேரம் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டிருப்பார்.   ஏற்கனவே குன்னூர் மேஜிஸ்ட்ரேட் தங்கராஜை போலீஸ் கைது பண்ணப்போ, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  வெகுண்டெழுந்து, தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாங்க.
இப்போ முறைப்படி அவங்ககிட்ட ஒரு புகார் வந்ததும், என்ன பண்ணியிருக்கணும் ? சட்டப்படி என்ன நடவடிக்கையோ எடுங்கன்னு உத்தரவு போட்ருக்கணுமா இல்லையா ? சாமான்ய மக்களுக்கு ஒரு சட்டம்…. நீதிபதிகள்னா வேற சட்டமா ?  தண்ணியைப் போட்டுட்டு பொம்பளை போலீஸ்கிட்ட தகராறு பண்ணவன்லாம் இருக்க வேண்டிய இடம் சிறைதானே… ? ”
”சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம் ஒப்புதல் ஆயிடுச்சு போல… ?” என்றான் வடிவேல்.
”மொத்தம் 15 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.  அப்படி பரிந்துரை செய்யப்பட்டபோதே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், தலித் வழக்கறிஞர்களோட பெயர்கள் வேண்டாம்னு சொன்னதா ஒரு பேச்சு இருந்துச்சு.  ஆனா, அதையும் மீறி இரண்டு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுச்சு. ஆனா 15 பேர்ல 7 பேர் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு, இப்போ ஒப்புதல் அளிக்கப் பட்டிருக்க 8 நீதிபதிகள்ல ஒருத்தர் கூட தலித் இல்லை. ”
”ஆனா கவுண்டர் இருப்பாங்களே… ? ” என்று கூறி சிரித்தான் பீமராஜன்.
”கரெக்ட்டா சொன்னடா…  இப்போ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க எட்டு பேர்ல ரெண்டு பேர் கவுண்டர்கள். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது அல்லவா ? ”
”சரி பத்திரிக்கை உலக செய்திகள் என்னப்பா இருக்கு ?” என்றார் கணேசன்.
”அண்ணே.. தமிழ் இந்துவோட ஆன்லைன் பிரிவுக்கு தலைவரா விகடன்ல ஆன்லைன் பாத்துக்கிட்டு இருந்த பாரதி தமிழன் நியமிக்கப்பட்டிருக்கார்.  அவர் விகடன்லேர்ந்து அடுத்த வாரம் ரிலீஸ் ஆவாருன்னு சொல்றாங்க. ”
”டேய்…. உனக்கு பத்திரிக்கை உலக செய்திகள்னா எங்க பத்திரிக்கை மட்டும்தானா… வேற பத்திரிக்கையே கிடையாதா… எப்போப் பாத்தாலும் எங்கப் பத்திரிக்கையைப் பத்தியே பேசறியே…”
”மச்சான் கோவப்படாத மச்சான்…  காய்ச்ச மரம்தான் கல்லடி படும்.  இருக்கறதுல நம்பர் ஒன் பத்திரிக்கையைப் பத்திதான் எல்லோரும் பேசுவாங்க..  வாயைத் திறந்தாலே விகடன் பாரம்பரியம், விகடன் பாரம்பரியம்னு நீங்கதானேடா பேசறீங்க.. நானா பேசறேன்… இவ்வளவு கோவப்பட்றியே…  26 வருஷம் விகடன்ல வேலைப் பாத்துட்டு, ராஜினாமா பண்ணிட்டு போனாரே அசோகன்.. அவருக்கு இன்னை வரைக்கும் ஏன் ரிலீவ் ஆர்டர் குடுக்காம ஏமாத்தறீங்க ?
ஒரு மனுஷன் வேலையை ரிசைன் பண்ணா சந்தோஷமா அனுப்பி வைக்கிறதுதானே மரியாதை ?  ஏன் இன்னும் ரிலீவ் பண்ணாம வச்சுருக்கீங்க.. சொல்லுடா… ? ”
”அது ஏதாவது நிர்வாகச் சிக்கலா இருக்கும் ” என்றான் பீமராஜன்.
”ஒரு புடலங்காய் சிக்கலும் இல்ல.  ரிலீவ் பண்ணா அவருக்கு பிஎஃப், இதர பணப்பயன்களை கொடுக்கணும்னு தானே ரிலீவ் பண்ணாம வச்சுருக்கீங்க. ?  இப்படி அற்பத்தனமா நடந்துக்கிட்டா உங்க பத்திரிக்கையைப் பத்தி எழுதாம என்ன பண்ணுவாங்க ? ”
”என்னப்பா இவ்வளவு மோசமா நடந்துக்கிறாங்க ?” என்றார் கணேசன்.
”அண்ணே இன்னொரு விஷயம் கேட்டா இன்னும் மோசமா திட்டுவீங்க. ”
”என்னப்பா அது ? ”
”விகடன்லேர்ந்து ராஜினாமா பண்ணிட்டுப் போன அசோகன் ஒரு மொபைல் நம்பர் வச்சுருந்தாரு.   அந்த நம்பர் 9840985240.  இந்த நம்பரை அசோகன் கிட்டத்தட்ட 15 வருஷமா வச்சுருக்காரு.  இது விகடனோட நம்பர்.  ராஜினாமா பண்ணப்போ, இந்த நம்பரை மட்டும் நான் வச்சுக்கறேன்னு கேட்டார்.  விகடன் நிர்வாகமும் சரி வச்சுக்கங்க ன்னு சொல்லிட்டாங்க.
அசோகன் போயி ஒரு மாசம் கழிச்சு, ஏர்டல்லில் சொல்லி, விகடன் நிர்வாகம் போன வாரம் இந்த நம்பரை டீ ஆக்டிவேட் பண்ணிட்டாங்க.   இப்படி ஒரு அற்பத்தனமான நிர்வாகத்தை பாத்திருக்கீங்களா ?  சீப்பை ஒளிச்சு வைச்சா கல்யாணம் நின்னுடுமா ?  இவர்களோட அற்பத்தனத்தை இதனால பாதிக்கப்பட்ட  நபர்கள் வெளியில பேசத்தானே செய்வாங்க… அவங்க பேசறதுதானே அப்படியே கசிஞ்சு நம்ப பார் வரைக்கும் வருது.. ?  அந்த விஷயத்தை  நான் உங்கக் கூட பகிர்ந்துக்கிறது தப்பாண்ணே… ? ”
”அவன் கிடக்கிறான்… நீ சொல்லுப்பா…”
”விகடன் பதிப்பகம் மூடப்படும் நிலையில இருக்குன்ணே…”
”என்னப்பா சொல்ற… அவங்க வாரா வாரம் புது புத்தகம் போடுவாங்களே… மிக மிக வெற்றிகரமான பதிப்பகமா இருந்துச்சே…?”
”ஆமாம்ணே…  வெற்றிகரமான பதிப்பகம்தான்.   தமிழ் இந்து தொடங்குனதும், பல லே அவுட் ஆர்ட்டிஸ்டுகள், விகடனை விட்டு, இந்துவுக்கு போயிட்டாங்க.  இதனால, ஜுனியர் விகடன், ஆனந்த விகடன் இதழ்களுக்கு ஆட்கள் பஞ்சம் ஏற்பட்டு இருக்கு.  இதனால ஆனந்த விகடன் ஆசிரியர் கண்ணன், பதிப்பத்துல இருந்த ஆட்களை, விகடனுக்கு கூப்பிட்டிருக்கார்.   பதிப்பகத்துல இருக்கற மாதிரி, விகடன்ல வேலை எளிது இல்ல.   கஷ்டம்.  டெட் லைன் வச்சு வேலை வாங்குவாங்க.  இதனால பலர், நாங்க பதிப்பகத்துலயே இருந்துக்கறோம்னு சொல்லிட்டாங்க.
இப்படியே இருந்தா சரிப்படாதுன்னு, பதிப்பத்துக்கு ஆட்களே வேண்டாம், நாம வெளியில குடுத்து இந்த வேலைகளைப் பாத்துக்கலாம், இப்போ பதிப்பகத்துல இருக்கறவங்களை விகடனுக்கு மாறுதல் பண்ணிடலாம்னு சொன்னதும், எம்.டியும் ஒத்துக்கிட்டார்.  பதிப்பகத்தை மூடப்போறோம்… ஒன்னு விகடனுக்கு வாங்க, இல்லன்னா வெளியில போங்கன்னு, கண்ணன் பதிப்பகத்துல வேலை பாத்தவங்க கிட்ட சொன்னதும், அவங்க என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்காங்க.”
”சரி… தமிழ் இந்து எப்போ வெளியில வருதாம் ? ”
”செப்டம்பர் இரண்டாவது வாரத்துல வெளிவர்றதா சொல்றாங்க.  ஆட்கள் தேர்வு இன்னும் முழுமையா முடிவடையில.  இதுக்கு நடுவுல திருவெங்கிமலை சரவணன், தமிழ் இந்துவுல ஜாயின் பண்றாருன்னு பரபரபப்பா பேச்சா இருக்கு.  ஆனா, அவர் அங்க ஜாயின் பண்ணா, அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ராஜினாமா பண்றதுக்கும் சிலர் தயாரா இருக்காங்க. ”
”சரி காவல்துறை செய்திகள் என்னடா  இருக்கு ? ”
”பெருசா இந்த வாரம் செய்திகள் எதுவும் இல்ல.  சென்னை மாநகர ஆணையாளர் மாற்றப்படுவார்னு செய்தி அடிபட்டுக்கிட்டு இருக்கு.   அவர் மேல பல துணை ஆணையர்கள் வருத்தத்துல இருக்காங்க.  எந்த துணை ஆணையர்கிட்டயும் ஜார்ஜ் பேசறதே கிடையாதாம். அவங்களை மனுஷனாவே மதிக்க மாட்ராறாம்.   வெறும் உத்தரவுகள்தான். அதுவும், இணை ஆணையர்கள் மூலமாத்தான் உத்தரவுகள்.”
”சரி மச்சான்.. மழை வர்ற மாதிரி இருக்கு.. போலாமா ? ”  என்றான் ரத்னவேல்..
தூறல் போடத் தொடங்கியதும் அனைவரும் எழுந்தனர்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...