முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) – Analysis


கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) – Analysis

??????????????????????????????????????????????????????????????????????????????

இந்த விமர்சனத்தில் எந்த முக்கியமான பாயிண்ட்களும் விவாதிக்கப்படவில்லை என்பதால் அவசியம் முழுதும் படிக்கலாம்.
 
கண்ணன் என்பவன் ஒரு பஸ் கண்டக்டர். பஸ்ஸில் வரும் பெண்களை சைட் அடித்துக்கொண்டு, இரவானால் டாஸ்மாக்கில் சரக்கடித்துக்கொண்டு ஜாலியான வாழ்க்கை வாழ்ந்துவரும் கதாபாத்திரம். அப்படிப்பட்ட கண்ணன் ஒருநாள் ஒரு திருமணத்துக்குச் செல்கிறான். அங்கே பூவு என்ற பெண்ணை சந்திக்கிறான். பார்த்தவுடன் அவனுக்கு அவள்மேல் காதல் வருகிறது. ஆனால் பூவுக்குக் கண்ணன் யார் என்பதே தெரியவில்லை. மறுபடியும் பூவுவை சந்திக்கவேண்டும் என்று அவள்மேல் வெறியனாக மாறுகிறான் கண்ணன். சிறுகச்சிறுக அவளைப் பற்றிய விபரங்களைச் சேகரிக்க ஆரம்பிக்கிறான். அப்போதுதான் பூவுவுக்கு ஒரு அக்கா இருப்பதாகவும், அவள் ஒரு LIC ஏஜெண்ட் என்பதையும் கண்டுபிடிக்கிறான். அவளை ஒருநாள் எதேச்சையாகக் கண்ணன் சந்திக்க நேர்கிறது. அவள் யார் என்ற உண்மையை அப்போது கண்ணன் கண்டுகொள்கிறான். அவனது வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்னர், கல்லூரி முடித்துவிட்டு ஊதாரியாகத் திரிந்தபோது அவன் காதலித்திருந்த பெண் அவள். அவளை சுற்றிச்சுற்றிப் பாடல்கள் பாடிக் (ஏ கலா கலா) காதலித்திருந்தது அவனது நினைவில் இருக்கிறது. அவளும் இதை உணர்கிறாள். ஆனால் பிரச்னை என்னவென்றால், அவள்மீது கண்ணனுக்குத் துளிக்கூடக் காதல் இப்போது இல்லை.
இந்த நேரத்தில், கண்ணன் தனது அம்மாவுக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் ஒரு ரவுடியிடம் பணம் கடன் வாங்க நேர்கிறது. அந்த ரவுடியின் பெயர் சீதாராமன். அந்த சீதாராமன் செய்யாத பாவம் இல்லை. பல பெண்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறான். செத்த பிணத்தின் நெற்றியில் இருந்து ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு பீடி வாங்குபவன் அவன். அந்தப் பணத்தைக் கண்ணனால் கொடுக்க முடிவதில்லை. கண்ணனின் வாழ்க்கையில் நேரடியாகக் களம் இறங்குகிறான் சீதாராமன். பூவுவைக் கடத்துகிறான். பூவுவின் அக்காவைப் பாலியல் பலாத்காரம் செய்கிறான். இந்தச் சூழலில், வேறு வழியில்லாமல் கண்ணன் அவனுக்குத் தெரிந்த ஒரு போலீஸ் கமிஷனரை அணுகுகிறான். அவர் பெயர் கஜா. அவரது மனைவியின் பெயர் மீனா. அந்தப் பெண்ணும் போலீஸ்தான்.
கஜாவும் கண்ணனும் மீனாவும் சேர்ந்து சீதாராமனை எப்படி அழிக்கிறார்கள்?
 
மோட்டிவே இல்லாமல் கொலை செய்ய முடியுமா? நாம் பாட்டுக்கு ஜாலியாக தெருவில் நடக்கிறோம். நமது பாக்கெட்டில் வீட்டு சமையலுக்காக அப்போதுதான் வாங்கிய கத்தி இருக்கிறது. அதை எடுத்து சரேல் என்று எதிரில் வருபவரைக் குத்திக் கொன்றால் அது மோட்டிவ் இல்லாத கொலை என்று சிலர் வாதாடக் கூடும். ஆனால் கத்தியை எடுத்துக் குத்தவேண்டும் என்று ஒரு எண்ணம் எழுந்ததல்லவா? கொலை செய்வதற்குச் சில கணங்கள் முன்னர்தான் அந்த எண்ணம் எழுந்திருக்கிறது. எனவே அதுதான் அந்தக் கொலையின் காரணம். மோட்டிவ். எனவே மோட்டிவ் இல்லாமல் கொலை செய்வது என்பது கனவில் கூட நடக்காத வேலை. இது common sense. அதைப்போலவே கதையே இல்லாமல் ஒரு படம் எடுக்க முடியுமா? ஏற்கனவே பல வருடங்களாகத் தமிழில் அப்படித்தான் பல படங்கள் வந்திருக்கின்றன. என்றாலும் அவையெல்லாம் ‘கதை’ என்ற ஒரு வஸ்து இருக்கிறது என்று தயாரிப்பாளரை நம்பவைத்து எடுக்கப்பட்ட ஸ்பூஃப்கள். ஆனால் இதனாலேயே அப்படங்களில் கதை இருக்கிறது என்று ஒரு முடிவுக்கும் ஆடியன்ஸாகிய நாம் அவசரப்பட்டு வந்துவிடமுடியாது. இப்படி ஆரம்பத்திலேயே இரண்டுவிதமான முரண்கள் அந்தப் படங்களின் கதையில் இருப்பதால் அது ஒருவிதமான பின்நவீனத்துவ முயற்சி என்று ஆகிறது. ஆனால் அது பின்நவீனத்துவ முயற்சி என்பதே அந்தப் படம் எடுத்த இயக்குநருக்குத் தெரியாது. காரணம் இலக்கியப் பரிச்சயம் இல்லாமை. இதனால் பின்நவீனத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் படுபயங்கர பின்-பின்நவீனத்துவ முயற்சிகள் தமிழ்ப் பட உலகில் பல வருடங்களாக சம்மந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் நடந்துகொண்டு இருக்கின்றன.
ஆனால் ஆர். பார்த்திபன் என்ற ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எடுத்த இந்தப் படம் அப்படி அல்ல. படத்திலேயே ஒரு கதாபாத்திரம், கதை இல்லாமல் படம் எடுத்தால் என்ன என்று கேட்கிறது. எனவே இதில் ஒருவித intertextuality இருக்கிறது. அதாவது பிரதிக்குள் பிரதி. ஜிகர்தண்டாவில் படத்துக்குள் படம் எடுப்பார்களே அப்படி. படத்தின் ஆடியோ ரிலீஸிலேயே கதையில்லாமல் கதை என்ற விவாதத்தை நடத்தியவர் பார்த்திபன். அப்போது அந்த செய்தியைக் கேள்விப்பட்டதுமே மேலே சொன்ன ‘மோட்டிவ் இல்லாத கொலை’ என்பதுதான் எனக்குத் தோன்றியது. அது நடக்காத காரியம் என்று. ஆனால் படம் பார்த்தபின் அது நடக்கக்கூடிய காரியம்தான் என்று புரிந்தது. இது ‘கதை இருக்கிறது’ என்று தயாரிப்பாளரை நம்பவைத்து கதையே இல்லாத படத்தை ஆடியன்ஸின் தலையில் கட்டக்கூடிய ஸ்பூஃப் அல்ல. படம் எடுக்கும்போதே படத்தில் கதை இல்லை என்பதைப் பார்த்திபன் தயாரிப்பாளரிடம் சொல்லிக் கன்வின்ஸ் செய்துதான் படம் எடுத்திருக்கிறார்.
 
சரி. கதையே இல்லாத இந்தப் படம் எப்படி இருக்கிறது?
நன்றாக, ஜாலியாக இருக்கிறது. இது ஒரு பார்த்திபன் படமே இல்லை என்ற ஒரு உணர்வைப் படம் முழுக்க உள்ளே வைத்திருக்கிறார் பார்த்திபன். ஆனால் அப்படிப்பட்ட சந்தேகங்கள் அடிக்கடி மனதில் எழும்போதெல்லாம் திரையில் பார்த்திபனாகவே தோன்றி, இது பார்த்திபன் படம்தான் என்பதைத் தெளிவாகவும் ’புரிய’ வைக்கிறார். மிக விரைவில் வெளியாக இருக்கும் ‘Sin city: A dame to kill for’ படத்தில் இப்படி இயக்குநர்கள் ராபர்ட் ரோட்ரிகஸும் ஃப்ராங்க் மில்லரும் ஒரு காட்சியில் அவர்களாகவே (இயக்குநர்களாகவும்) வருகிறார்கள்’ என்று படித்திருக்கிறேன். அந்த வகையில் இது அவசியம் ஒரு ஜாலியான முயற்சிதான். பார்த்திபனின் இந்தக் கேமியோ எனக்கு மிகவும் பிடித்தது. அதனாலேயே சில மாற்றங்களையும் ஒரு இயக்குநராக ஆன் த ஸ்பாட்டில் படத்தில் செய்கிறார் பார்த்திபன். இதுவுமே ஒருவித intertextuality தான். ஆனால் அதையெல்லாம் விட்டுத்தள்ளுவோம். அதையெல்லாம் எப்படியும் இலக்கியவாதிகள் விமர்சனம் எழுதும்போது கவனித்துக்கொள்வார்கள் (அவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால்). ’கல்லுக்குள் ஈரம்’ படத்தில் பார்த்திபனின் தாத்தா பாரதிராஜாவே ஒரு இயக்குநராக வரவில்லையா? (தாத்தா என்பது குரு பரம்பரையில் குரு, குருவின் குரு என்ற முறையில் உபயோகப்படுத்தப்படும் பதம் என்று அறிக). ஆனால் அவர் வேறு ஒரு இயக்குநரின் படத்தில்தான் அப்படி (கல்லுக்குள் ஈரம் ஒரு நிவாஸ் படம்) வந்தார். அவராகவே வரவில்லை. வந்து படத்தின் காட்சிகளை மாற்றவில்லை.
பார்த்திபனின் இந்த ரீ எண்ட்ரி ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதை அவசியம் சொல்வேன். ஒரு திரைப்பட ரசிகனாக, என் பார்வையில் ஒரு திரைப்படம் என்பது என்னை முழு இரண்டு மணி நேரமும் அதனோடு ஒன்றச்செய்யவேண்டும். அலுப்பு தட்டவைக்கக்கூடாது. எரிச்சல் வரவைக்கக்கூடாது. படத்தில் எத்தகைய க்ளிஷேவுமே வரட்டும். ஆனால் அந்த இடத்தில் அது எடுபடுகிறதா இல்லையா என்பதுதான் ஒரே விஷயம்  இதுதான் எனது ஒரே rule. அந்த விதிப்படி ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்னை அவசியம் கவர்ந்தது. படம் முழுக்க அதனோடு ஒன்ற வைத்தது. சிறிதுகூட அலுப்புத் தட்டவைக்கவில்லை.
படத்தில் பல திரைப்பட மேதைகளுக்கான Homageகள் உள்ளன. பல திரைப்பட ஜாம்பவான்களைப் பற்றிய விபரங்கள் வருகின்றன. . கலைஞானம் கலைஞானமாகவே வருகிறார் (யார் இவர் என்று வினவும் ஆட்கள் ரஜினி நடித்த பைரவியைப் பற்றி இணையத்தில் தேடுக. அந்தப் பெயர் வந்ததுமே எனக்கு அவரைப் பற்றித் தெரிந்துவிட்டது என்பது பின்குறிப்பு. தமிழ் சினிமாவில் ஒரு Cinephileஆக இருப்பதன் நன்மை). சேரன் சேரனாகவே வருகிறார். ஆர்யா ஆர்யாவாகவே வருகிறார். விஜய் சேதுபதி விஜய் சேதுபதியாகவே வருகிறார்.  தனஞ்செயன் தனஞ்செயனாகவே வருகிறார். இன்னும் பலரும் இன்னும் பலராகவே வருகிறார்கள்.
பார்த்திபன் ஜாக் டேனியல்ஸை (அல்லது அவருக்குப் பிடித்த ஒரு மாக்டெய்லை – குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் தீமையானது) அட்டகாசமாக அருந்திவிட்டு ஆடியிருக்கும் ஒரு Ballet+contemporary+jazz+salsa+hiphop+tap இது. பொதுவாகத் திரைப்பட இயக்குநர்களைப் பற்றி ஒரு விஷயம் உலகில் உண்டு. வயது ஆக ஆக அவர்களின் திறமை மங்கும். ஸ்கார்ஸேஸியே அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் பார்த்திபன் மிகுந்த இளமையுடன் இப்போதுதான் பிறி கட்டி அடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இப்படியே அவர் தொடரவேண்டும் என்பது என் எண்ணம். பொறுத்துப் பார்ப்போம் (உடனே ‘பார்த்திபனும் ஸ்கார்ஸேஸியும் ஒண்ணாடா?’ என்ற மோஸ்தரில் அமைந்த அவசரமான கீபோர்டு நடன கமெண்ட்கள் வரவேற்கப்படுகின்றன).
இந்தப் படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் அவசியம் பலருக்கும் பிடிக்கும் என்று தோன்றுகிறது. பாருங்கள். அவசியம்.
பி.கு
1. பார்த்திபன் மட்டும்தான் அஜபுஜாக்ஸாகக் காட்சிகளை அமைக்கவேண்டுமா? ஒரு விமர்சகனாக நான் அப்படி அமைத்த காட்சிகள்தான் முதல் சில பேராக்களில் நீங்கள் படித்த கதை. அதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் இதுவரை பார்த்திபன் படங்களில் வந்த பாத்திரங்களே (இதை சொல்லக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் தமிழ் படிக்கும் நல்(கெட்ட)உலகம் இப்படி சொல்லாவிட்டால் அதை உண்மை என்று எண்ணிக்கொண்டு வடக்கிருந்து உயிர்விட்டுவிடக்கூடும் என்பதால் சொல்லநேர்ந்துவிட்டது).
2. படத்தின் ஒரே பிரச்னை – ஆங்காங்கே பார்த்திபன் நுழைத்திருக்கும் ’அக்மார்க் நயம் பார்த்திபன் பாணி’ வசனங்கள். ஆனந்த விகடனுக்கு ஒருமுறை பார்த்திபன் விளம்பர இன்புட் கொடுத்தார். பல ஆண்டுகளுக்கு முன். அதன் விளம்பரம் டிவியில் இப்படி இருக்கும். ’ஆனந்த விகடன்… நந்த விகடன்.. ந்த விகடன்.. த விகடன்.. விகடன்.. கடன்.. டண்டணக்கர டடண்டன்’… இதுதான் பார்த்திபன் பாணி. இந்த மாதிரியான பல வசனங்களைப் படம் முழுக்கக் கேட்க நேர்ந்தது.
3. தம்பி ராமையா வழக்கமான க்ளிஷே கதாபாத்திரத்தில் க்ளிஷேவாகத்தான் நடித்திருக்கிறார் என்றாலும் அவரது பாத்திரமும் நடிப்பும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கதையில் அது எடுபடுவது ஒன்றே காரணம்.
4. ஆங்காங்கே தம்பி ராமையா உச்சரிக்கும் வசனங்களில் ஸிட் ஃபீல்டைப் படித்த நண்பர்களுக்கு சில இன்புட்கள் உள்ளன.

with the help of   rajeskaru

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

பெண் பெரியார்.

யார் இந்த பெண் பெரியார் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படக் கூடும். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவைத்தான் பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன.   இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி. தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது.   ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும்.  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களி...

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

முதல்வர் ஓபிஎஸ்

.மகேஷ் இடது: டீக்கடை | வலது: ஓபிஎஸ் பூர்வீக வீடு தமிழ்நாட்டைத் தாண்டியும், “அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்? சவால்களைச் சமாளிப்பாரா ஓபிஎஸ்?” என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸை வளர்த்தெடுத்த ஊர்க் காரர்கள் ‘இதுபற்றியெல்லாம் என்ன நினைக்கிறார்கள்?’ என்ற கேள்வியோடு பெரியகுளம் புறப்பட்டேன். பெரியகுளத்துக்காரர்கள் பேசப் பேச… ஓபிஎஸ் உருவம் பிரம்மாண்டம் ஆகிறது! பெரியகுளம் மக்களிடமும், பன்னீர்செல்வத் தின் முன்னாள், இந்நாள் நண்பர்களிடமும் நான் பேசியதில் தெரிந்துகொண்ட மிக முக்கியமான முதல் விஷயம், பொதுச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறபடி ஓபிஎஸ்ஸின் இன்றைய வளர்ச்சிக்கு அவருடைய விசுவாசம் மட்டும் காரணமல்ல; தன்னை நம்பி வேலையை ஒப்படைப்பவர்களிடம், அதைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் திறனும் பெற்றவர் அவர் என்பது. அடுத்த முக்கியமான புரிதல், தன் வாழ்க்கைப் பாதையின் குறுக்கே சிக்கலான சாலைச் சந்திப்புகள் தென்படும்போதெல்லாம் எந்தச் சாலையில் செல்வது வளர்ச்சிக்கு நல்லது என்பதைத் தேர்ந்தெடுப்பதிலும் அவர் புத்திசாலி என்பது. இதயத்தில் இடம்பிடித்த பன்னீர் ஓபிஎஸ் வளர்ச்சிக் ...