முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.

கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி?

``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன.

1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந்த கார்செட்டுகள், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி, இடையை மெலிதாகக் காட்டும்.

இதைத் தொடர்ந்து 16-ம் நூற்றாண்டில், மேலாடைக்கும் மேலே உடுத்தக்கூடிய கார்செட்டுகள் ரோமானியர்களால் பயன்படுத்தப்பட்டன. உடலமைப்பை மாற்றிக் காட்டுவதோடு, முற்றிலும் மாறுபட்ட எம்பிராய்டரி, லேஸ் (Lace) போன்ற அழகிய வேலைப்பாடுகள் இந்த கார்செட்டுகளில் நிறைந்திருந்தன. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெல்லிய உடலமைப்பு ட்ரெண்டானது. அதைத் தொடர்ந்து, உலகப்போரின்போது `எலாஸ்டிக்’ பொருத்திய ஷேப்வேர்கள் தயாரிக்கப்பட்டன. இதுதான், கார்செட்டிலிருந்து இப்போது உபயோகப்படுத்தப்படும் ஷேப்வேர்களுக்கு அடித்தளம்போட்டது. அன்றுவரை ஆடம்பரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட `ஷேப்வேர்கள்’, 21-ம் நூற்றாண்டில் அத்தியாவசிய உள்ளாடைகளாகவும் உருவெடுத்தன.’’

எத்தனை வகையான ஷேப்வேர்கள் இருக்கின்றன?

`` `கம்ப்ரெஷன் (Compression)’, `ஸ்கின் டைட்டனிங்’ (Skin Tightening), `ஷேப்பர்ஸ்’ (Shapers) என ஷேப்வேர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அதிகப்படியான தசைகளை இறுக்கி, அழகான உடலமைப்பைக் கொடுப்பது கம்ப்ரெஷன் டைப். இதை, பெரும்பாலும் மருத்துவம், விளையாட்டு, அழகு தொடர்பான துறைகளில் பயன்படுத்துகிறார்கள். ஸ்கின் டைட்டனிங், கம்ப்ரெஷன் அளவுக்கு இல்லாமல், மிதமான அளவில் உடலை இறுக்கி, கட்டுக்கோப்பான உடலமைப்பு தரும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் உள்ளாடைகள்தான் ஷேப்பர்ஸ். இவை அந்தரங்க உறுப்புகளை மறைக்க உதவுவதோடு, அழகான உடலமைப்பையும் தருகின்றன.”

யாரெல்லாம் இதைப் பயன்படுத்துகிறார்கள்?

``ஃபேஷன் மற்றும் ஃபிட்னெஸ் விழிப்புஉணர்வு  உள்ளவர்கள் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நீச்சல் வீரர்கள், `வெட் சூட்’ எனும் ஷேப்வேர்கள் பயன்படுத்துகிறார்கள். ஜிம்னாஸ்டிக் செய்பவர்கள், சைக்கிளிங் போகிறவர்கள், பெல்லி டான்சர்ஸ் போன்றோரும் ஷேப்வேர்கள் பயன்படுத்துகின்றனர். இது உடலுக்குக் குறைந்த அதிர்வைக் கொடுத்து, அதிக நெகிழ்வுத் தன்மையைத் தரும்.
திரைத்துறையில் இருப்பவர்கள் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைக்கு பதிலாக ஷேப்வேர்களைப் பயன்படுத்தலாம். இளைஞர்கள் மட்டுமல்லாமல், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைக்கும் முதியவர்கள்கூட பல்வேறு வகையான ஷேப்வேர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஏராளமான ஷேப்வேர்கள் இருக்கின்றன.

பார்ட்டி உள்ளிட்ட ஸ்பெஷல் நிகழ்வுகளுக்கு மட்டும் ஷேப்வேர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது சல்வார் கமீஸுக்குக்கூட உபயோகிக்கிறார்கள்’’ என்கிறார் அர்ச்சனா.

உடலோடு ஒட்டியிருக்கும் ஷேப்வேர்கள் உடலுக்கு ஆரோக்கியமானவைதானா என்று  பிசியோதெரபிஸ்ட் கோதண்டத்திடம் கேட்டோம்.


``அழகுக்காக உபயோகப்படுத்தும் ஷேப்வேர்கள், நிச்சயம் உடலுக்கு பலவிதமான உபாதைகளைக் கொடுக்கக் கூடியவையே! உடலோடு ஒட்டி இருப்பதால், வியர்வைச் சுரப்பிகளை முற்றிலும் தடுக்கின்றன. உடலை எளிதில் அசைக்க முடியாது. வயிற்றுத் தசை அசைந்தால்தான் சாப்பிடும் உணவு செரிக்கும். வயிற்றுப் பகுதி இறுகினால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். அதிகபட்சம் ஐந்து மணி நேரம் தொடர்ந்து இந்த ஷேப்வேர்களைப் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் நேரத்தில் அணியவே கூடாது.

ஷேப்வேர்களைப் பயன்படுத்துவதால், டயட் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் தவறான எண்ணம். அதிகப்படியான தசைகளை, குறுகிய நேரத்துக்கு மறைக்க மட்டுமே இந்த ஷேப்வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், எந்த வகையிலும் உடலமைப்பு நிரந்தரமாக மாறப்போவதில்லை. எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சியை நிச்சயம் பின்பற்றியே ஆக வேண்டும்” என்கிறார் கோதண்டம்.

ஷேப்வேர்களைப் பயன்படுத்து வதால் ஏற்படும் சருமப் பிரச்னை களைப் பற்றி விளக்குகிறார் சரும மருத்துவர் பூர்ணிமா.

``ஷேப்வேர்கள் பெரும்பாலும் லைக்ரா துணிவகையில்தான் தயாராகின்றன. இது உடலை இறுக்கிப் பிடித்துக்கொள்வதால்,  சருமம் தன் சுவாசிக்கும் தன்மையை இழக்கிறது. 12 மணி நேரம் தொடர்ந்து இந்த ஷேப்வேர்களைப் உபயோகித்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகப்படியான அழுத்தம், வியர்வையைக் கட்டுப்படுத்தி ஃபங்கஸ் தொற்று, வீக்கம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

இதற்குத் தீர்வாக, பெரும்பாலான பெண்கள், மாய்ஸ்ச்சரைஸரைத் (Moisturiser) தவறாக உபயோகிக்கிறார்கள். அப்படிச் செய்தால், நோய்த்தொற்று அதிகம் பரவ வாய்ப்பிருக்கிறது. இவற்றை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த, மார்க்கெட்டுகளில் விற்கும் `டஸ்ட்டிங் பவுடர்’ உபயோகிக்கலாம். லைக்ரா துணி வகைக்குப் பதிலாக `காட்டன் கலந்த (Cotton Blended)’ துணி வகையில் உருவான ஷேப்வேர்களைப் பயன்படுத்தலாம்” என்கிறார் பூர்ணிமா.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

ரகசியத்தின் அரூப நிழல்கள் ( சிறுகதை )

ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது பக்கத்திலோ அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால் பதட்டப்படாமல் பாதியில் நிறுத்தாமல் முழுவதும் வாசிக்க முயற்சி செய்யுங்கள். அவன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது தனிமனித உடல் இச்சைகளை அல்ல. காமத்தின் சுவிசேஷத்தை. Story of a male whore….. Whore? இந்த வார்த்தை எத்தனை அபத்தமானது தெரியுமா? உடல் என்பது பிரார்த்தனைக்கானது, சமயங்களில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிரார்த்திக்க, இன்னும் சில சமயங்களில் ஒரு ஆணும் சில பெண்களும் அல்லது சில ஆண்களும் சில பெண்களுமென தேவை எதுவோ அதுவாக கொண்டாடுவது. அதிகாரத்தின் வழியாய் தனிமனித விருப்பங்களை ஒடுக்க நினைக்கும் சர்வாதிகார மனம் கொண்டவர்களை வேண்டுமானால் இப்படி சொல்லலாம், whore. அந்த இணையத் தளத்தில் முகம் மட்டும் மறைக்கப்பட்ட இவன் படத்திற்குக் கீழ் தன்னை இப்படி அறிமுகம் செய்திருந்தான். Hi I am foot fetish slave. Looking for a mistress who wants me to be her slave dog. This relation is full of submission and domin...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...