முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிம்பு குடும்பத்தாருக்கு கொற்றவை கடிதம்!



உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்



                       கொற்றவை -பெண்ணிய செயல்பாட்டாளர்

ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப்படுற வழியப்பாருலே “பு.ண்.டை” நாயம் பேசிட்டு திரியுறவ” என்று சொல்வார்கள். ஓர் உயிரை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் உறுப்பிற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இவ்வளவுதான் மரியாதை என்றோ அல்லது பெண் பித்து பிடித்து அலையாமல் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார் என்றோ சொல்வதாகவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் “புண்டை” நியாயம் பேச வைத்த பெருமை உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் போய்ச் சேரும்.
இதை எண்ணி உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டும், உயிரையும் உடைமையையும் இழந்தும் துன்புருகையில் இவர்கள் “பு.ண்.டை” ஆராய்ச்சி செய்திருப்பதோடு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவ்வாராய்ச்சியில், அதாவது அந்தச் சொல் உண்மையில் எதைக் குறிக்கிறது எனும் ஆராய்ச்சியில் ஈடுபட வைத்துள்ளார்கள். அடடா! ஆண் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றியிருக்கும் இம்மாபெரும் தொண்டைநினைத்து நீங்கள் நிச்சயம் பெருமைப்பட வேண்டும்.
மாண்புமிகு அம்மாக்களே, சகோதரிகளே,
உங்கள் மகண்களும், சகோதரர்களும் பாடி இசையமைத்து ‘லீக்’ ஆகிவிட்டதாகச் சொல்லப்படும் பீப் பாடலை நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாடும் நாட்டு மக்கள் உணவுக்கும், உயிருக்கும், இருப்பிடத்திற்கும் செத்துப் பிழைக்கும் வேளையில் உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் தலை போகும் பிரச்சினையாக எது இருக்கிறது? “என்னா பு.ண்.டைக்கு லவ் பண்ணுகிறோம்” என்பதுதான். இதைத் தெளிவு படுத்தும் கடமை பு..ண்டையோடு பிறந்த அனைத்துப் பெண்களுக்கும், குறிப்பாக பு.ண்.டையின் வழியாக அவர்கள் இருவரையும் ஈன்ற தாய்மார்களாகிய உங்களுக்கும் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.
அதன் முதல் பகுதியாக, புண்டை என்று பொறுக்கிகள் உடைத்து சொல்லியிருக்கும் அந்தச் சொல்லின் எழுத்தாக்கம் புண்டை என்பதாகும். அச்சொல்லின் பொருளை அவ்வுறுப்பைக் கொண்டவர்களாகிய நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பெண்ணின் பிறப்புறுப்பான புண்டை க்கு  தமிழில் அல்குல்*, யோனி, பாலுறுப்பு என்று பல்வேறு சொற்கள் உள்ளன. ஆனால் இந்த புண்டை என்ற சொல்லானது ஒரு வசைச் சொல்லாக, அதிலும் குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் விதமாகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள், இல்லையா? ஆங்கிலத்தில் இச்சொல்லை  cunt என்பார்கள், உலகளாவிய அளவில் அச்சொல் வசைச்சொல்லாகத்தன் பயன்படுத்தப்படுகிறது. ஆணாதிக்க சமூகம் அதை அப்படித்தான் பயன்படுத்தும், ஆனால் ஒரு பெண்ணாக அந்த அல்குலின் மகத்துவத்தை நீங்கள் அறிவீர்கள்தானே. அறிந்து என்ன பயன், பிள்ளைகளுக்கு அதைச் சரியாக சொல்லிக் கொடுத்து வளர்க்கத்  தவறிவிட்டீர்கள் போலும், ஆகவே இப்போது உங்களுக்கும் சேர்ந்த புண்டையுள்ள அனைத்து தமிழ்நாட்டுப் பெண்களும் பாடம் எடுக்கும் நிலை வந்துவிட்டது.
முதலில்,
உஷா, அப்பாடல் குறித்து உங்கள் மகனாகிய சிம்பு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? (படிக்க: http://tinyurl.com/hbl8b8pநாங்கள் தனிப்பட்ட முறையில் இசையமைத்து வைத்திருந்தோம் அது லீக் ஆகிவிட்டது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். உங்கள் மகனுக்கு பண்பு இருக்கிறதோ இல்லையோ நல்ல சாதுரியம் இருக்கிறது. (ஆனால் அதுவும் அரைகுறை என்பதைப் பின்னர் பார்ப்போம்). போகட்டும்! அவர் சொன்னது போல் அது அவரது படுக்கையறைக்குள் மட்டுமே ஒலித்திருந்தால் இன்று தமிழகம் புண்டை நியாயம் பேச வேண்டி வந்திருக்காது. ஆனால், இப்போது (திட்டமிட்டோ, திட்டமிடாமலோ) அவரது படுக்கையறையில் அவரும் அனிருத்தும் சேர்ந்து சுய-மைதுனம் செய்த முனகல்கள் தெருவுக்கு வந்துவிட்டது. சுய-மைதுனம் தவறில்லை என்றாலும், அச்செயலினால் வெளிவந்த விந்துவை அவர்கள் ஒரு குப்பியில் பிடித்து ஜன்னலுக்கு வெளியே கசியும்படி வைத்ததன் விளைவாக, அதிலிருந்து தெரிக்கும் அமில விந்துவானது இன்று விசம் போல் பரவி ஏற்கணவே ஆணாதிக்க சிந்தனைகளால் செல்லறித்துப் போயிருக்கும் பல ஆண்களின் மூளையை மேலும் விஷமாக்கிவிட்டதுஇனி தெருவில் நடக்கும் ஒவ்வொரு பெண்களையும் பார்த்து ஆண்கள் அந்த அமிலத்தைக் கக்குவார்கள் என்பதாலும் நாங்கள் பேச வேண்டியுள்ளது.
சிம்பு வேறொன்றும் கேட்டிருக்கிறார், “என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்” என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” முதலில், அவருடைய வீட்டுப் படுக்கையறையை யாரும் எட்டிப் பார்க்கவில்லை என்றும், அவராக ஜன்னலைத் திறந்து வைத்திருந்தாலே ஒழிய உள்ளே நடப்பது வெளியே தெரியாது என்பதையும் அந்த மரமண்டைக்கு தெளிவுபடுத்துங்கள். மேலும், உங்கள் தவப்புதல்வனுக்கு மற்றொன்றையும் சொல்லிக் கொடுங்கள், ஒருவேளை அவர் சொல்வது போல் யாரோ எட்டிப் பார்த்து ‘கசிய’ விட்டுவிட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், தனக்கு நேர்ந்த துன்பம் மற்றவருக்கு நேரக்கூடாது என்று எண்ணி, அப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்வதுமே பண்புள்ள செயலாக இருக்க முடியும்.  மேலும், உண்மையிலேயே அவர் கூற்றில் உண்மையிருக்கும் எனில், நாங்கள் தனிப்பட்ட முறையில் பாடலிசைத்துக் கொண்டிருந்தோம் அது எப்படியோ கசிந்து விட்டது, பெண்களை இழிவுபடுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை, இது ஒரு தனிப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு இப்படி ஏதேனும் சொல்லி இருப்பார், ஆனால் திட்டமிட்டு வெளியிட்டு, இதுபோன்ற எதிர்வினைகள் வந்தால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று முன்பே பதிலையும் தயாரித்து வைத்திருந்தாரோ  என்றுதான் இப்போது எண்ணத்தோன்றுகிறது. அதிலும், இதுபோன்ற ஆடியோக்களை ‘லீக்’ செய்வதில் உங்கள் மகன் கை தேர்ந்தவர் என்பதை நீங்களே அறிவீர்கள், இல்லையா.
பெண்களைத் தொட்டு நடிப்பது கூட தவறு என்று கருதும் திரு. டி.ராஜேந்தர் அவர்களே, இந்தப் புண்டை பாடல் பற்றியும், தொடர்ந்து உங்கள் மகன் பெண்களை இழிவுபடுத்தும் விதமான வசனங்களையும், பாடல்களையும் கொடுப்பது பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துள்ளதா?
லக்‌ஷ்மி, ராகவேந்தர் நீங்கள் இருவரும் கலைஞர்கள். (அனிருத் யார் என்று ஆராயும் துர்பாக்கிய நிலைக்கு இன்று உள்ளானேன்). அனிருத் தொடர்ந்து இதுபோல் பொறுக்கித்தனமான பாடல்களைப் படைப்பது பற்றி உங்கள் இருவரது கருத்து என்ன? அதிலும் கலை என்பது சரஸ்வதி கடாட்சம், கலை என்பது தெய்வீகமானது என்றெல்லாம் சொல்லும் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர்கள் நீங்கள், சொல்லுங்கள் அனிருத் இசையமைக்கும் கொல வெறி, புண்டை பாடல்களும் சரஸ்வதிதேவியின் கடாட்சத்தினால் பிறந்ததுதானா? இதுவும் இசைதான், கலைதான் என்றால் தியாகராயர் தொடங்கி பாலமுரளி கிருஷ்ணா போன்றோர் வரை எவரேனும் இப்படி புண்டைப் பாடல்களை பாடியிருந்தால் சொல்லவும்.  நீங்கள் வணங்கிப் பின்பற்றும் நாட்டிய சாஸ்திரத்தில் இப்படிப்பட்ட பாடல்களும் கலையென எங்கேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லையென்றால், உங்கள் முன்னோர்கள் கலையென்று ஒன்றை வரையறுத்திருக்க, நீங்களும் உங்களது வாரிசுகளும் ஆச்சார அனுஷ்டானங்களை மீறி வேறு ஏதோ ஒன்றை கலை என்று வியாபாரம் செய்கிறீர்கள் என்று நாங்கள் புரிந்துகொள்ளலாமா? உங்கள் மத நம்பிக்கைப்படி இது பாவத்தில் சேர்த்தியா அல்லது புண்ணியத்திலா?
அதேபோல், ராகவேந்தர் ஒரு பேட்டியில் அனிருத்தின் திறமை அந்த கடவுளர்கள் அருள் பாலியது என்றெல்லாம் காலாட்டிக்கொண்டே பெருமை பேசியிருக்கிறார். சொல்லுங்கள், உங்கள் கடவுளர்களும் இப்படி சதா சர்வ காலமும் புண்டை ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள்தானா? யார் அந்தக் கடவுளர்கள், அவர்கள் இசையமைத்த மற்றும் அவர்களது பத்தினிகள் நடனமாடிய புண்டைப் பாடல்கள் இருந்தால் பகிரவும். பார்க்க, கேட்க ஆவலாக உள்ளோம். இருபிள்ளைகளில் எவர் முதலில் பு..டையை வெல்வது எனும் போட்டிகள் நடந்த புராணங்கள் ஏதேனும் இருக்கிறதா?
இத்தருணத்தில் எனக்கொரு வேண்டுகோள் உள்ளது, இப்போது டிசம்பர் மாதம், மன்னிக்கவும், தமிழ்நாட்டுக்கு மட்டும் அது பார்ப்பன ஆதிக்க மாதம். அது எம் தலையெழுத்து, போகட்டும். இந்த மார்கழி மாத குளிருக்கு இதமாக நான் ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவிருக்கிறேன். அதில் ஒப்பனிங் சாங் இந்தப் புண்டை பாடல்தான் இதற்கு லக்‌ஷ்மி நீங்கள் நடனமாட வேண்டும். அதற்கு சம்பளம் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.   அதற்கு முன்னர் எனக்கொரு சந்தேகம், இந்தப் புண்டை எனும் சொல்லுக்கு நீங்கள் எப்படி முத்திரை பிடிப்பீர்கள் என்பதை ஒரு முன்னோட்டமாக உங்கள் அலைபேசியில் படம்பிடித்து வாட்ஸப்பில் அனுப்பினால், அது பொறுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்த்து, தேவைப்பட்டால் சில இம்ப்ரூவ்மெண்டுகளை செய்துகொள்ளலாம். அதேபோல் “உண்ணை டார் டாரா கிழிச்சு ஓத்துட்டுப் போனவள” எனும் வரிக்கு நீங்கள் எப்படி அபினயம் பிடிப்பீர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக அந்தப் பாடலுக்கு எப்படி நடனம் அமைப்பீர்கள் என்றும் பார்க்க ஆவலாக உள்ளது. அதுமட்டுமின்றி “மூடிட்டு சும்மா இரு” என்பதில் எதை மூடச் சொல்கிறார்கள், எப்படி மூடச் சொல்கிறார்கள், ஏன் மூடச் சொல்கிறார்கள் என்பதும் ஐயமாக உள்ளது, இதையெல்லாம் உங்கள் நடனம் மூலம் தெளிவுப்டுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் இதனை ஒரு வீடியோ ஆல்பமாகவும் கொண்டு வருவோம்.
கச்சேரி நடக்கும் அரங்கத்தில் வைஷ்ணவிக்கும், இலக்கியாவிற்கும்தான் முதல் வரிசையில் இடம். விருப்பப்பட்டால் அவர்களும் மேடை ஏறி ஆடலாம். அவர்களுக்குப் பெண் குழந்தை இருப்பின், அல்லது இனி பிறப்பின் அவர்கள் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை பாடுவதற்கு நான் வாய்ப்பு வாங்கித் தருகிறேன். ஆனால் அவர்கள் பீப் இன்றி என்னா புண்டைக்கு  லவ் பண்றோம் என்றும், டார் டாரா கிழிச்சு ஓத்துட்டுப் போனவள என்று முழு வார்த்தைகளையும் உடைக்காமல் பாட வேண்டும்.
லதா, நீங்கள் நடத்தும் பள்ளியில் இப்பாடலை தினம் தினம் காலையில் அசெம்ப்ளியில் ஒளிபரப்பி உங்கள் அண்ணன் மகனின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் நீங்கள் உதவலாம்.  உங்களது பேத்திகளும் சூப்பர் சிங்கரில் இப்பாடலைப் பாடியோ அல்லது அவர்களை வைத்து இந்தப் பாடலை ஒரு வீடியோ ஆல்பம் செய்வது குறித்தும் நாம் யோசிக்கலாம்.
சிம்புவும், அனிருத்தும் செய்த ஒரு செயலுக்கு எங்களைப் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆண்கள் செய்யும் தவறுக்குப் பெண்களைப் பழிக்கும் வழக்கமான செயலை நான் செய்ததாக நீங்கள் குற்றம் சாட்டக் கூடும். மன்னிக்கவும், அது போன்ற அறம் சார் அனுகுமுறை உங்களது குடும்பங்களுக்குப் பொருந்தாது என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமூகத்தின் பெரும்பாலான குடும்பத்தில் உள்ள பெண்களின் நிலை போல் அல்ல உங்களது நிலை. ஏனென்றால், உங்கள் மகன்களின் ‘தெய்வீகத் திறன்கள்’ குறித்து கலைக் குடும்பமாக நீங்கள் அனைவரும் பெருமை பேசியுள்ளீர்கள், அவர்களின் படைப்பை கலை என்று நீங்கள் சத்தியம் செய்வதாலும் உங்களிடம் முறையிடுகிறோம்.
மேலும், உங்கள் அனைவருக்கும் திரைத்துறையோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளது எனும் அடிப்படையில், திரைத்துறையின் ஆணாதிக்க வக்கிரம் குறித்து உரையாட வேண்டியுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே ஒரு தலைமுறை செய்த ‘கலைச் சேவை’ பத்தாதென்று அடுத்த தலைமுறையாக சிம்புவும் அனிருத்தும் கலைச் சேவையை கொலை வெறியுடன் ஆற்ற வந்திருக்கிறார்கள். கண்டிப்பாக அடுத்த தலைமுறையையும் நீங்கள் தயார்படுத்தி விடுவீர்கள். அதற்குள்ளாகவாவது கடவுளர்கள் அருள் பாலித்திருக்கும் உங்கள் மூளைகளுக்கு கலையோடு கலையாக சிறிதேனும் சமூகப் பொறுப்புணர்வை ஊட்டிவிட முடியுமா எனும் ஒரு எளிய முயற்சியே இது.
ஆணாதிக்க சமூகத்தின் அனைத்து மட்டங்களும், படைப்புகளும் ஆணாதிக்க சிந்தனயோடே இருக்கும். ஆனால் அதையும் தாண்டி சமூகத்திற்கு விழிப்புணர்வும், அறிவும் ஊட்டும் படைப்புகளையே கலை என்று சொல்ல முடியும், அதுவல்லாத எது ஒன்றும் வியாபாரமே. அந்த வகையில் இந்த திரைத்துறை ஒரு தொழில் நிறுவனம் என்பது நிதர்சனம். அதில் கடைந்தெடுத்த அயோக்கியர்கள்தாம் சிம்பு, அனிருத், தனுஷ் உட்பட பெரும்பாலான கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள். இந்தப் பட்டியலில் தற்போதைய வரவு நீ எனக்குப் பிட்டுப் படம் என பாடிய ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் படைப்பதில் தொடங்கி பெண்களை பழித்தும், இழிவு செய்தும், ஆதிக்கம் செலுத்தியும், ஆபாசப் பாடல்கள் வழியாக பாலியல் ரீதியாக சுரண்டியும்தான் திரைப்படங்கள்  வெளி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும்பொது பெண்களாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?  ஐஷ்வர்யா, சௌந்தர்யா என்று உங்கள் குடும்பத்தில் பெண் இயக்குனர்கள் வந்தார்கள் திரைத்துறையின் வக்கிரத்திற்கெதிராக புரட்சிகரப் படைப்புகள் கொடுப்பார்கள் என்று பார்த்தால் அவர்களின் இலட்சியமும் மிகத் தெளிவாக இருக்கிறது.
இப்படி உங்களது குடும்பங்களால் பாதிக்கப்பட்ட பெண்களாகிய எங்களுக்கும், எங்களது குடும்பத்தாருக்கும்  உங்கள் படைப்புகளை காசு கொடுத்துப் பார்க்கும் நுகர்வோர் என்ற உரிமையில் கேள்வி கேட்கும் உரிமை உண்டல்லவா?
ஓரளவுக்கு ‘அடக்கத்தோடு’ ஆடிக்கொண்டிருந்த ஆணாதிக்கத் தடித்தனத்தை  கொலைவெறிடி பாடல் மூலம் தறிகெட்டு ஓடும்படி கட்டவிழ்த்து விட்டு இந்த சீரழிவிற்கு பலமான உரம் போட்டவர் உங்கள் குடும்ப வாரிசான ஐஷ்வர்யா தனுஷ் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனிருத்.  அவரைத் தொடர்ந்து அட்றா அவளை, வெட்றா அவளை என்று கொலை வெறியைத் தொடர்ந்தவர் அவரது கனவரான தனுஷ், அதற்கு இசையமைத்தவர் பிட்டுப் பட ஜி.வி. பெண்களைப் பழிக்கும் பாடல்கள் இல்லாத படங்களே இல்லை எனும் நிலை தற்போது வந்துவிட்டது.
ஒரு பக்கம் ஆண்கள் ரவுடிகளாக, பொறுக்கிகளாக, அடியாட்களாக, சைக்கோக்களாக எப்படி இருந்தாலும், பெண்கள் அவர்களை காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டளையிடுகின்றன திரைப்படங்கள். அப்படி காதலிக்காத பெண் பேராசை பிடித்தவள், திமிர் பிடித்தவள். அல்லது காதலித்த பின்னர் அவனது செயல்கள் பிடிக்காமல் அவனை விட்டு நீங்க விரும்பினால், அவள் வேசி, இதுதான் திரைப்படங்கள் பெண்கள் மீது குத்தும் முத்திரை. ஆனால் அப்படி ஒழுக்கம் பேசும் ஆண்கள்தான் கதாநாயகியின், நடனப் பெண்களின் தொப்புளை நக்காத குறையாக பெண்களின் உடலை அங்குலம் அங்குலமாக தடவியபடி ஆடிப் பாடி மகிழ்ந்து, ஊரிலுள்ள பெண்கள் அனைவரையுமே ஒரு பாலியல் பண்டமாகக் காணும்படி கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அறியாதவர்களா நீங்கள். பெண்கள் மீது திரைத்துறை நிகழ்த்தும் வன்முறை கண்டு உங்களுக்கெல்லாம் கோபமே வரவில்லையா? இரத்தம் கொதிக்கவில்லையா?
“அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல” என்று உங்கள் குடும்பத் தலைவர் ரஜினிகாந்த் சொல்லிவிட்டதால் நீங்களெல்லாம் அடக்க ஒடுக்கமான பெண்களாக இருக்க முடிவு செய்துவிட்டீர்களா? ஆனால் மானமும், அறிவும் உள்ள பெண்களாகிய நாங்கள் அப்படி இருக்க முடியுமா என்ன? உங்களைப் போன்ற கலைக் குடும்பங்களுக்கு நாங்கள் கொடுக்கும் காசு மட்டும் வேண்டும் ஆனால், நாங்கள் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது, கண்டிக்கக்கூடாது, அப்படித்தானே? இது பாசிசமாகத் தோன்றவில்லையா உங்களுக்கு.
எல்லா விஷயங்களிலும் ஒழுக்கம் பேசுபவர்களாகவும், விதிகளை உருவாக்குபவர்களாகவும் இருப்பது பார்ப்பனர்களே, அதேபோல் அதை உடைத்து, கலாச்சாரத்தை சீரழித்து, அதற்கும் கலை, சுதந்திரம் என்று பேசி நன்றாக காசு பார்ப்பவர்களாக இருப்பவர்களும் நீங்கள்தானே. பெண்களுக்கு கல்வி கூடாது, 9 வயதில் திருமணம் செய்து வையுங்கள், பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்றெல்லாம் மனு சாஸ்திரங்களை எழுதி வைத்துவிட்டு, கொல்லைப் புறம் வழியாக உங்கள் வீட்டுப் பெண்களை மட்டும் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் செய்தவர்கள் உங்கள் இனம்தானே? இப்படி நீங்களும், உங்களுக்கு ஆதரவாக இயங்கும் ஆதிக்க சாதியினரும் உருவாக்கும் அநீதிக்குறிய விதிகளையும், கேவலமான முன்மாதிரிகளையும் எதிர்ப்பதும், கண்டிப்பதும், முறியடிப்பதுமாகவே எங்கள் பொழுதுகள் கழிகின்றன. இப்போது திரைத்துறையிலும் உங்களது வாரிசுகள் அராஜகம் செய்து வருகின்றனர். அதை சரஸ்வதி கடாட்சம் என்று ஒரு பெண்ணின் பெயராலேயே நியாயப்படுத்துகிறீர்களே, வெட்கமாக இல்லை?
திரைத்துறையில், ‘கலைத்துறையில்’ பணிபுரிபவர்களான உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். பெரும்பாலான திரைப்படங்களில் (அநேகமாக எல்லாம்) ஆண்கள் மட்டுமே உண்மையாக காதலிப்பவர்களாக, காதலால் பாதிக்கப்படுபவர்களாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே சோகப் பாடல்களும், சூப் சாங்குகளும் உள்ளன. தண்ணி அடித்துவிட்டு சாலைகளில் ‘பாலுறவுக்கான’ உடல் அசைவுகளை  காட்டி காட்டி ஆடுகிறார்கள். ஏன்? பெண்கள் யாருமே உண்மையாக காதலிப்பவர்கள் இல்லையா? அல்லது ஆண்களால் அவர்கள் பாதிக்கப்படுவதே இல்லையா? காதல் தோல்விகள் பெண்களுக்கு இல்லையா? என்ன இது? ஏன் இப்படி என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?
ஏதாவது கேள்வி கேட்டால் கருத்து சுதந்திரம்.
எது கருத்து சுதந்திரம்? சமூகத்தை சீரழிப்பதா?
அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது கருத்து சுதந்திரம். அதிகாரத்தின் முகத்திரையைக் கிழிப்பது கருத்து சுதந்திரம். சமூகத்தை முன்னேற்றுவதற்காக முன்வைக்கும் கருத்துகள் விமர்சனங்கள் கருத்து சுந்தந்திரம். அவை முடக்கப்படும்போதும், விளிம்பு நிலை மக்களின் குரல்கள் நசுக்கப்படும்போதும் அதற்குக் குரல் கொடுப்பது கருத்து சுதந்திரம். மாறாக, நினைப்பதையெல்லாம் பேசுவதும், வக்கிரங்களைப் பரப்புவதும், இன,மத, சாதி, பால் அடையாளம், பாலியல் மற்றும் உடலியல் மாற்றங்களை இழிவு செய்வதுமா கருத்து சுதந்திரம்? நீங்களெல்லாம் ஆறறிவுள்ள மனிதர்கள்தானே? சிந்திக்கத் தெரியாதா உங்களுக்கு?
இல்லையேல் இன்னொரு பதில், மக்கள் ரசிக்கிறார்கள் என்பது. சிம்பு, அனிருத், தனுஷ், ஜி.வி மற்றும் திரைத்துரையின் இதர ஆண்களே, இந்த சமூகத்தின் ஆண்கள் உங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களையும், அந்தரங்கக் காட்சிகளையும்  , ஆபாச நடனங்களையும் கூடத்தான் ரசிப்பார்கள் நீங்கள் ஏன் உங்கள் அம்மாக்களையும் சகோதிரகளையும் ஆடவைத்து பாடவைத்து அதுபோன்ற காட்சிகளை வெளியிடக்கூடாது. பிடித்தால் பாருங்கள், பிடிக்காவிட்டால் அணைத்துவிட்டு போங்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். செய்வீர்களா?
சிம்பு மற்றும் அனிருத் குடும்பத்துப் பெண்களே, இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, திரைத்துறையில் உங்களது வாரிசுகளின் வக்கிரத்தைக் கண்டித்தும், பெண் உடல் சுய-மரியாதை மீட்பிற்கும் களமிறங்க உங்களுக்கு இப்போதும் வாய்ப்புள்ளது. அதை முதலில் உங்கள் வாரிசுகளுக்கெதிராக தொடங்குவோம்.  திரைப்படங்கள், ஊடகங்கள் இவற்றில் பெண் உடல் சித்தரிப்பு மற்றும் ஆபாச பாடல்வரிகளை எதிர்த்து ஓர் ஆர்பாட்டம் செய்ய விழைகிறோம், அதற்கு உஷாவாகிய நீங்களும், லக்‌ஷ்மியாகிய நீங்களும்தான் தலைமை தாங்க வேண்டும்.
இது குறித்துப் பேச நேரம் தருவீர்களா?

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...