முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொன்னதும் செய்ததும்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு வருகிறது.  முடங்கிப் போன நிர்வாகம், பெருகிய ஊழல், செயல்படாத அரசு, தலைகாட்டாத முதல்வர் என்று அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் ஜெயலலிதா.    கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசுகையில், “அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது.
AIADMK leader Jayaram Jayalalitha greets the audience during her swearing-in-ceremony as the Chief Minister of Tamil Nadu state in Chennai, India, Saturday, May 23, 2015. An appeals court acquitted the powerful politician in southern India of corruption charges earlier this month, clearing the way for her to return to public office. She was forced last year to step down as the highest elected official in Tamil Nadu after a Bangalore court in September convicted her of possessing wealth disproportionate to her income and sentenced her to four years in prison. (R. Senthil Kumar/ Press Trust of India via AP)

எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என்று கூறினார் ஜெயலலிதா.
உண்மையில் சொன்னதை செய்தாரா ?    அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன.  செய்துள்ளது என்ன ?
விவசாயத்துறையை பொருத்தவரை, அதிமுக தேர்தல் அறிக்கையில், அரிசி உற்பத்தி, 8.6 மில்லியன் டன்களில் இருந்து, 13.45 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.  
2013-14 புள்ளி விபரக் கணக்குகளின்படி, அரிசி உற்பத்தி 7.1 டன்னாக குறைந்துள்ளது.
விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்கு உயர்த்த புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றார் ஜெயலலிதா. 
ஆனால் அப்படி எந்தத் திட்டமும் உருவாக்கப்படவில்லை.
விலைவாசியைக் குறைக்க சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படும் என்றார். இணையத்தில் ஊக வணிகம் தடை செய்யப்படும். 
இரண்டுமே செய்யப்படவில்லை.
கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2500 வழங்கப்படும் ன்று 2011ல் அறிவித்தார் ஜெயலலிதா.  
ஜனவரி 2016ல் கரும்பு விலை 2650 ஆக உயர்த்தப்பட்டது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வழங்கப்படும் என்று அறிவித்தார்.     
அம்மா குடிநீர் என்று அறிவித்து, ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்றதுதான் நடந்தது.   இத்திட்டத்தின் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.   ஆனால் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.
அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் மிகுந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டித்தரப்படும் என்று அறிவித்த 10 ஆயிரம் வீடுகள் கூட கட்டித்தரப்பட வில்லை.   இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சிகளையும் அரசு எடுக்கவில்லை.
அனைத்து கிராமங்களுக்கும் 4 ஆண்டுகளுக்குள் தடையில்லா 3 ஃபேஸ் மின்சாரம் வழங்கப்படும்.  2013ம் ஆண்டுக்குள் 5000மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.   திமுக ஆட்சிகாலத்தில் திட்டமிடப்பட்ட எண்ணூர் மற்றும் உடன்குடி மின் திட்டங்களும், டெண்டரில் செய்த குளறுபடிகளால் நீதிமன்ற வழக்குகளில் இத்திட்டங்கள் முடங்கியுள்ளன.   ஒரு மெகாவாட் மின்சாரம் கூட புதிதாக உற்பத்தி செய்யாமல், தனியாரிடமிருந்து ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
2012ம் ஆண்டுக்குள், 151 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குப்பையிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.    160 கிராமப் பஞ்சாயத்துகளில் 150 கிலோ வாட் பயோ கேஸ் மின்சாரம் தயாரிக்கப்படும்.
குப்பைகளைக் கூட ஒழுங்காக வாராத அரசு என்று பெயர் வாங்கியதைத் தவிர, எதையுமே செய்யவில்லை அதிமுக அரசு.
இத்திட்டங்களின் மூலம், 1,20,000 கோடி கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இத்தகைய சிறப்புத் திட்டங்களின் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலைகுனிவில் இருந்துதமிழகத்தை மீட்டு, நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.
மார்ச் 2016 அன்று உள்ளபடி, தமிழகத்தின் மொத்த கடன் 2,16,000 கோடி என்று தமிழகத்தின் நிதித் துறை செயலாளரே அறிவித்துள்ளார்.     இந்தியாவில் கடன் வாங்காத மாநிலமே கிடையாது என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகிறார்.     இப்படி தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கியதைத் தவிர வேறு எந்த சாதனையும் அதிமுக அரசு செய்யவில்லை.
விவசாய உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்பதன கிடங்குகள், தொழிற்பூங்காக்கள் மாவட்டந்தோறும்அமைக்கப்படும்.   குறைந்த விலையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் அனைத்து விவசாயப் பொருட்களும் மக்களுக்குவிரைந்து கிடைக்கிற வகையில் நவீன மக்கள் சந்தைகள் அமைக்கப்படும்.
1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த உழவர் சந்தைகளை மூடியதுதான் ஜெயலலிதாவின் சாதனை.     இது போன்ற எந்த சந்தைகளையும் அமைக்கவில்லை.
விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.இதனால் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.   
நிறைவேற்றப்படவில்லை.
பால் உற்பத்தி 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
2013-2014 புள்ளி விபரத்தின்படி 7.04 மில்லியன் டன்னாக பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.    பால் விலையை கணிசமான உயர்த்தியது அதிமுக அரசு என்பதும் குறிப்பிடத்தக்கது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். 
நிறைவேற்றப்பட்டுள்து.
மாணவர்களின் புத்தகச்சுமை குறைக்கப்படும். பள்ளிக் கல்வியின் நடைமுறைக் குறைபாடுகள் நீக்கப்படும்.
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியதுதான் ஜெயலலிதா ஆட்சியின் லட்சணம்.
பல்கலைக்கழகங்கள் தனித்தன்மையுடன் இயங்க 12 அம்ச திட்டங்கள் தீட்டப்பட்டு,  பல்கலைக்கழங்களின் தரம் உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்தப்படும்.
இன்றைய தேதிக்கு தமிழகத்தின் 8 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லை.   அண்ணா பல்கலைக்கழகம் உட்பட, தமிழகத்தின் அனைத்துப பல்கலைக்கழக நியமனங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.    துணை வேந்தர் பதவிக்கு 14 கோடி லஞ்சம் பெறப்படுவதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாணவர்களின் பன்முகத்திறனை ஊக்குவிக்க தனித்திறமை மற்றும் அறிவுசார் கழகம் உருவாக்கப்படும்.  அனைத்துமாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.
அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.    லேப்டாப் வழங்குகையில், இலவச மென்பொருளான லைனக்ஸ் மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து, விண்டோஸ் மின்பொருளோடு கூடிய லேப்டாப்பை வாங்கினார் ஜெயலலிதா.    அறிவுசார் கழகம் உருவாக்கப்படவில்லை.
இலவச ஃபேன் மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.
நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக நதிகளை நீர்வழிச்சாலை மூலம் இணைத்து, தண்ணீர் வீணாகாமல் வெள்ளப்பெருக்கு நீரையும் வரைமுறைப்படுத்தி,பாசனத்திற்கு பயன்படுத்தப்படும்.  தமிழக நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை, உலகவங்கி கடன் உதவியோடுஅமைக்கப்படும்.
நீர்நிலைகளை இணைத்து, வெள்ளப்பெருக்கு நீரை சேமிக்கும் லட்சணத்தை சமீபத்திய வெள்ளத்தில் பார்த்தோம்.
அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரண்முறை, உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம்நிறைவு செய்யப்படும்.
அரசு ஊழியர்கள் தங்கள் குறைகள் குறித்து பேசுவதற்காக கடந்த ஐந்தாண்டுகளாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு, கிடைக்காத காரணத்தால், படிப்படியாக பல்வேறு போராட்டங்களில் இறங்கி, பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம்.
இரண்டு மடங்காக்கி கிழிப்பது இருக்கட்டும்.  ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளும், கடையை காலி செய்து விட்டு அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலைமைதான் தமிழகத்தில் நிலவுகிறது.
சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவைக்கு சிங்கப்பூரில் உள்ளது போல மோனோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 
கட்டி முடிக்கப்பட்ட மெட்ரோ ரயிலே, ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக காத்துக் கிடந்தது தமிழகத்தில் நடந்தது.  மோனோ ரயில் சாத்தியப்படாது என்று நிபுணர்கள் தெளிவாக தெரிவித்து விட்ட நிலையில், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக எவ்வித தயவுதாட்சண்யமின்றி நிலை நாட்டப்படும். மக்கள் அமைதியாக வாழத் தேவையானஅனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி சந்தி சிரிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.   உள்துறையை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா தமிழக சட்டம் ஒழுங்கை ஒழுங்காக பராமரிக்கத் தெரியாமல் கோட்டை விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.    கொலைகள், கொள்ளைகள், திருட்டுக்கள் என்று குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
சென்னையை மட்டுமே சார்ந்து புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதால், தமிழகத்தின் தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்குபகுதிகளுக்கும் அதை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்டோமொகைல், தொலைத் தொடர்பு, எலெக்ட்ரானிக்ஸ்,மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை, போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.  சிறுதொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி அந்நிய முதலீட்டுக்கு வழிவகைசெய்யப்படும்.
சிறப்புத் தொழிற் கொள்கை உருவாக்கப்பட்டு ஒற்றைச் சாளர முறையில் வெளிநாட்டு முதலீட்டை கவர திட்டம் தீட்டிதொழில் துறை முன்னேற்றத்திற்கு நீர்மிகு நடவடிக்கை எடுக்கப்படும்.
2011ம் ஆண்டில் ஜெயலலிதா பதவியேற்றதிலிருந்து ஒரே ஒரு புதிய தொழில் கூட தொடங்கப்படவில்லை.    இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்பட்ட தமிழகம், தொழில் துறையில் அதளபாதாளத்திற்கு வீழ்ந்தது.  அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை, முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கி, முதலீடுகளை வரவேற்று வந்த நிலையில், தமிழகத்தில் முதல்வரையே சந்திக்க முடியாத ஒரு அவலச் சூழல் நிலவியது.    முதல்வரை சந்திக்க முடியாதது மட்டுமல்ல, அப்படியே சந்தித்தாலும், தொழில் தொடங்க வருபவர்களிடம் 25 சதவகிதிம் கட்சி நிதி என்று கறாராக கேட்டதன் காரணமாக பல்வேறு தொழில் அதிபர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள்.     ஆட்சி முடியப்போகிற கடைசி கட்டத்தில், முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை நடத்தி, அதில் 2,42,000 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று நாடகமாடியதைத் தவிர்த்து, தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்காக ஜெயலலிதா எதையுமே செய்யவில்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் தொழில்துறையில் சந்தித்த பின்னடைவை வேறு எப்போதும் சந்தித்தது கிடையாது.
போக்குவரத்துத் துறை நவீனப்படுத்தப்படும்.  கூடுதலான நவீன பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும்.
ஓட்டை உடைசலாக ஓடும் தமிழக பேருந்துகளின் படங்கள் சமூக வலைத்தளங்கள் முழுக்க உலவிக் கொண்டிருக்கின்றன.    தமிழக போக்குவரத்துத் துறை மிக மிக மோசமான சீரழிவை சந்தித்துள்ளது.
இவையெல்லாம் புரட்சித் தலைவி அறிவித்தது.   ஆனால், சொல்லாமலேயே பலவற்றை செய்து மிகச்சிறந்த சாதனையாளராகியிருக்கிறார் ஜெயலலிதா.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தையும் தனது சொந்தப் பணத்தில் செயல்படுத்துவது போல, “நான்” “எனது” என்று மார்தட்டிக் கொள்வது.   வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், இலவச பொருட்கள் அனைத்திலும் தன் படத்தை வெட்கமே இல்லாமல் ஒட்டிக் கொள்வது.
திமுக தலைவர் கருணாநிதி படம் இருந்தது என்பதற்காக, லட்சக்கணக்கான பாடப்புத்தகங்களை கிழித்தது.
அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டிருந்த அண்ணா நூலகத்தை எப்படியாவது முடக்க கடுமையாக முனைந்தது.  நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் பின்னடைவை சந்தித்த பிறகு, நூலகத்தை திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டது.
கூடங்குளம் மக்களுக்கு ஆதரவு தருவது போல நடித்து, இடைத்தேர்தல் முடிந்ததும் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்தது.
பேருந்துக் கட்டணம், பால் விலை மற்றும மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது.   இத்தனை கட்டண உயர்வுகளுக்குப் பிறகும், தமிழகத்தின் கடன் சுமையை அதிகரித்தது.
சட்டசபையை துதிபாடும் அரங்கமாக மாற்றியது.   எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்தது.
அடிப்படை வசதிகளான சாலை வசதிகளைக் கூட செய்து தராமல், மக்களை பரிதவிக்க விட்டது.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கொடநாட்டில் ஓய்வெடுத்தது.
மக்கள் நலப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பின்னாலும் பணி நீக்கம் செய்தது.
தமிழக மக்களை குடிக்கு அடிமையாக்கியது   காவல்துறை பாதுகாப்போடு டாஸ்மாக்கை நடத்தி சாதனை புரிந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஒரே முதல்வர் என்ற பெருமை
சிறையிலிருந்து விடுதலை அடைய வேண்டி அமைச்சர்களும், இதர அடிமைகளும் மண் சோறு தின்றது, காவடி எடுத்தது, அலகு குத்தியது.
விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலம் அற்பத்தனமாக அரசியல் ஆதாயம் தேடியது.
அப்துல் கலாம் மரணத்திற்கு கூட செல்லாமல் ஓய்வெடுத்தது.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டு சென்னை நகரை மிதக்க விட்டது.
வெள்ள நிவாரணத்துக்கு வந்த பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியது.
எதிர்த்துப் பேசியவர்கள், எழுதியவர்கள் மீதெல்லாம் அவதூறு வழக்கு போட்டது.
டாஸ்மாக்கை எதிர்த்து பாடல் பாடியவரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது.
இந்தியாவிலேயே இல்லாத வகையில், செய்தி வாசிப்பாளர் மீது அவதூறு வழக்கு போட்டது.
வருடந்தோறும் நடக்கும் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மாநாடுகளை நடத்தாமல் நிறுத்தியது.
இப்படி சொல்லாமல் செய்த சாதனைகள் ஏராளம்.   மொத்தத்தில், தமிழகம், ஜெயலலிதாவின் ஆட்சியில், தீராத வேதனைகளையே சந்தித்துள்ளது.
ஆனால் ஜெயலலிதாவோ, ஒவ்வொரு துறையின் சாதனைகளையும் சொல்ல ஒரு நாள் போதாது என்கிறார்.        

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

பெண் பெரியார்.

யார் இந்த பெண் பெரியார் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படக் கூடும். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவைத்தான் பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன.   இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி. தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது.   ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும்.  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களி...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...