முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு


'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம்.
சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது. ஆகையினால் வெற்றிமாறன் அவ்வெளியைக் கோர்ப்பதில் மனம் லயிக்கிறார். வெளியைச் சார்ந்த தனது அழகியல் தனித்துவத்திற்காக மெனக்கிடுகிறார். சினிமாவில் ‘வெளி’யென்பது கதையாடல் விரிந்து பரவும் இடங்களாகவும் கதா பாத்திரங்களின் உள்மனப்பாய்ச்சல்களின் வரைபடமாகவும் விரிகிறது. பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011) போன்ற அவரது படங்களில் கதைமாந்தர்களின் சூழலை வெளியின் யதார்த்தக் கட்டமைப்பைக்கொண்டு வேறுபடுத்திக் காட்டியவர். விசாரணையில் சினிமாவிற்கான கதையாடல் என்ற கட்டாயத்திலிருந்து விடுபட்டு, இருண்ட கனவாய் நம்மைச் சுற்றிப் பரவியிருந்தும் நாம் காண மறுக்கும் சந்திரகுமார்களின் வாழ்க்கை எதார்த்தங்களின் மீது ஒளி பாய்ச்சுகிறார். நாமறிந்த வெளிகளில் அத்தகைய யதார்த்தங்களைக் கட்டமைத்து, ‘சட்டம் ஓர் இருட்டறைதானே; மற்ற அறைகளிலுள்ள அரைகுறை வெளிச்சத்தில் ஆசுவாசம் பெறுவோம்’ என்று நாம்கொண்ட மயக்கத்திலிருந்து நம்மை வெளியேற்றுகிறார். சட்டம், நமது ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கும் இருண்மையான தீ; அது நமது விழுமியங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக சாம்பலாக்கி, நமது வாழ்வை அர்த்தமில்லாமலாக்கிக் கொண்டிருப்பதைச் சீருடை தரித்த பாதுகாவலர்களின் சீர்குலைவைக் கொண்டு சித்திரிக்கிறார்.
முத்துவேல் என்கிற போலீஸ் அதிகாரியாய் சமுத்திரக்கனி தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய கதாபாத்திரமாய் உருவெடுத்திருக்கிறார். ‘கோட்டா’வில் பதவிபெற்ற முத்துவேல் விளிம்புநிலையிலுள்ள பாண்டி, முருகன், அப்ஸல் மற்றும் குமாரிலிருந்து தன்னை முற்றிலும் துண்டித்துக் கொள்ளமுடியாமல் அல்லாடுகிறார். அவரது மேலதிகாரிகளும் சக அதிகாரிகளும் சமுதாயத்திற்குள் ஆழமாக ஊடுருவியிருக்கும் அதிகாரத்திமிர் மற்றும் ஊழலின், அமானுஷ்யத்தின், இதயமற்ற சடவடிவான இயந்திரங்களாக வலம் வருகிறார்கள். அவர்களின் ஊடாக உள்பரவியிருக்கும் வறட்சியையும் மீறிய ஈரத்தினால் தடுமாறும் முத்துவேல் கதாபாத்திரம் இருத்தலியல் தத்துவத்தின் உன்னத மானுடப் பிரதிபலிப்பு. முத்துவேல் மற்றும் பாண்டியின் கடைசி எதிர்ப்படுதல் ஆக உருவான அந்தக் காட்சி இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். இங்கு மருதம், இருண்ட வெளியாக மாறி நம்பிக்கைத் துரோகம் எனும் கருத்தாக்கத்தை, நாமறிந்த வெளிகளை நமக்கு அந்நியமாக்கி வெகு அருகாமையில் அலசுகிறது. சமுத்திரக்கனியைப் போலவே பாண்டியாக தினேஷ் ரவியும், முருகனாக முருகதாஸும், அப்ஸலாக சிலம்பரசனும், குமாராக ப்ரதீஷ் ராஜும் மனதில் நிற்கிறார்கள். திருப்பதி லட்டுகளை உண்ண அளித்து உடனே துன்புறுத்தி இன்புறும் அதிகாரி விஷ்வேஸ்வரராவாக நடித்திருக்கும் அஜய் கோஷும் அப்பாத்திரத்திற்கு அருமையாகப் பொருந்தியிருக்கிறார். பக்தியின் கோரவடிவமும் வன்முறையின் தாண்டவமும் நாம் வாழும் காலகட்டத்தின் வெறுமையின் அதிர்வலைகளாகக் குமிழ்கின்றன.
சாந்தியாக நடித்திருக்கும் ஆனந்தி மொழியைக் கருவியாகக் கொண்டு காவுவாங்கத் துடிக்கும் ஆணாதிக்க சமூகத்தை மீறிய பெண் காதலுடைய பாய்ச்சலின் வடிவம். விளிம்புநிலையிலிருந்து ஆண் மையச் சட்டங்களின் மறுதலிப்பில் உள்ள பதற்றத்தைச் சாதிமறுப்பு காதலினால் அவதிக்குள்ளாகும் இன்றைய பெண்ணின் நிலைமையை நினைவுகூரும் வகையில் வடித்திருக்கிறார். “அவரவர் வானம் அவரவர்க்கேயானாலும் அடியாமல் பிடியாமல் வசப்பட வழியில்லை” என்ற வண்ணநிலவனின் கவிதையை ரீங்கரிக்கும்வகையில், தமிழ் தெலுங்கு என்று அண்டை மாநிலத்தார் அடிதடியில் இறங்கும்பொழுது மேலடுக்கிலுள்ள ஆங்கிலம் வந்து மோதுகிறது. ஊடாக அல்லல்படும் முத்துவேல், பாண்டி மற்றும் முருகனின் மொழிமாற்றத்திற்கு உறுதுணை புரிந்து தன்னையறியாமல் அவர்களின் வாழ்வின் தடமாற்றத்திற்கும் காரணமாக அமைந்துவிடுகிறார். அதற்காகச் சஞ்சலப்பட்டு வருந்தி அவர் குமுறுவது சிந்தனையை அடகு வைத்தபின் தமிழ் சினிமாவில் மாமூலாக நடக்கும் புலன்விசாரணைகளின் திக்கிலிருந்து மாற்றி இதுவரை அதிகம் பயணிக்காத ஒரு பாதையில் இப்படத்தை இட்டுச்செல்கிறது.
ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் முதல் படத்திலேயே கதையாடலுக்கு உகந்த அழகியலைத் தேர்ந்தெடுத்து தனது முதிர்ச்சியை அறிவிக்கிறார். விளிம்புநிலையிலுள்ளோரின் அகவயத்துக்குள் ஒளிபாய்ச்சும் வெற்றிமாறனின் முயற்சிகளுக்கு ராமலிங்கத்தின் ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் குறுகியவெளிகளைத் தீர்க்கமாகக் கட்டமைப்பதில் உள்ள தேர்ச்சி கை கொடுக்கிறது. கேமரா கோணங்களைக் கண்ணுக்குத் துருத்தாமல் கட்டமைத்து ஒளியையும் நிழலையும் கவனமாகக் கூட்டித் தூவியுள்ளார். நிழலின் அருமை தெரிந்தவனே வெளியைக்கொண்டு உள்ளுணர்வுக்குள் இப்படி ஒளிபாய்ச்ச முடியும். வெற்றிமாறன் தனது இளம் தொகுப்பாளரான காலம் சென்ற டி.இ. கிஷோருக்கு விசாரணையைச் சமர்ப்பித்துள்ளார். சிறிய வயதிலேயே தனது அபார உழைப்பினால் கவனம்பெற்ற கிஷோரின் தொகுப்பழகியலுக்கு ‘விசாரணை’ மகுடமாக அமைந்துள்ளது ஒரு ஆறுதல். ஆரம்பத்திலிருந்து படத்தின் இறுதிவரை உள்ள லயம் மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திராவின் அந்தக் காலப் படங்களை நினைவூட்டுகிறது.
ஆயினும் அப்படங்களிலுள்ள பாடல்கள் மற்றும் இறுதிக்காட்சியில் உள்ள திணிப்பைத் தவிர்த்திருக்கிறது விசாரணை. அவற்றினும் மேன்மையான படங்களை இயக்கிய கோவிந்த் நிஹ்லானியின், காவல்துறை அத்துமீறலையும் வன்முறை யையும் விமர்சிக்கும் படமான அர்த் சத்யா (1983)வின்பால் நம்மை இட்டுச் செல்கிறது. அதில் ஒரு காட்சியில் மராத்திய கவிஞர் திலிப் சித்ரேயின் கவிதையை நாயகன் ஓம் பூரி வாசிப்பார். அக்காட்சி அர்த் சத்யா (அரை உண்மை) என்ற தலைப்பை சித்ரேயின் கவிதை வரிகளிலிருந்து படத்தின் திரைக்கதை வசனகர்த்தாவான விஜய் டெண்டுல்கர் பெற்றிருப்பதைச் சுட்டும். அர்த் சத்யாவின் கதையாடல் முத்துவேல் போன்ற எளிய ஆயினும் மனச்சாட்சிக்கு உண்மையான காவலரான அனந்த் வேலாங்கரின் (ஓம்புரி) வாழ்வைப் பற்றியது.ஆயினும் படத்தின் பின்னணியில் மேலடுக்கில் உள்ளோரின் கைவண்ணம் தெரியும். வெற்றிமாறனின் படம் அத்தகைய யுக்திகளை நிராகரித்துக் கலை, சினிமா என்ற சுமையை வீணாகத் தூக்காமல் சந்திரகுமாரின் நாவலிலுள்ள மாந்தர்களின் மன உளைச்சல்களுக்கு உண்மையாக இருக்கிறது. ஆயினும் கோவிந்த் நிஹலானி எனும் இந்திய சினிமாவின் நிகரில்லாத கலைஞன், தரத்தில் அர்த் சத்யாவிற்குக் குன்றாத ஆக்ரோஷ் (1980), துரோககால் (1994, தமிழில் குருதிப்புனலாக கமல் ஹாசனால் 1996ல் மீளுருவாக்கம் செய்யப்பட்டது) மற்றும் ஹஜார் சௌராஸிகி மா (ஆயிரத்து எண்பத்து நான்காம் நம்பரின் தாய், 1997) போன்ற படங்களின் மூலம் தொடர்ந்து போலீஸின் வன்முறையைப் பற்றியும் சாதாரண மக்களுக்கு நமது சமூகத்திலிருக்கும் பாதுகாப்பின்மை பற்றியும் அரசு அதிகாரிகளின் அக்கறையின்மையைப் பற்றியும் ஆழமாகச் சித்திரித்துள்ளார். இதனால் இடதுசாரி அரசியல் சார்ந்த இந்தி கலை சினிமாவில் நிகரற்று விளங்கும் நிஹ்லானி உலகளாவிய ரசிகர்களைப் பெற்றிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.
ஆக்ரோஷில் பழங்குடியினனான லாஹன்யா பிகு (ஓம்புரி) நிலக்கிழார்களின் கொடுமைக்கு ஆளாகிறான். பிகுவின் மனைவி நாகியை (ஸ்மிதா பாடில்) வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கும் நிலக்கிழாரின் கையாளான மேஸ்திரி பிகுவின் மேல் வீண்பழிசுமத்தி அவனை ஜெயிலில் அடைக்கிறான். அந்த சோகத்தில் நாகி தற்கொலை செய்துகொள்கிறாள். ஒரு இளம் வழக்குரைஞர் (நஸ்ருதீன் ஷா) பிகுவிற்காக வாதாட விரும்புகிறார். ஆயினும் கடும் ஒடுக்குமுறையைச் சாதி காரணமாகக் காலம்காலமாக அனுபவித்த வம்சாவளியில் வந்த பிகு பேசக் கூட இயலாதவனாக/ விரும்பாதவனாக இருக்கிறான். அவனது தந்தை இறந்ததினால் அவரது சிதைக்குத் தீயூட்ட பிகுவை மயானத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு பிகு நிராதரவாக இருக்கும் பருவ வயதை அடைந்த தனது தங்கை மேல் அந்த மேஸ்திரியின் காமுகப் பார்வை படர்வதைக் காண்கிறான். அவளது ஆதரவற்ற எதிர்காலத்தை எண்ணி அங்கிருக்கும் கோடாலியை எடுத்து அவளது தலையைத் துண்டித்து வானத்தை நோக்கி அலறுகிறான். இதுவரை அவன் தனக்குள் அடக்கிவைத்திருந்த சோகமும் கோபமும் தொடர்ந்து ஒலித்து விண்ணை நிரப்புகிறது. உலக சினிமா வரலாற்றில் எல்லாவகையிலும் இடம்பெறத் தகுதியான ‘ஆக்ரோஷ்’, மொழியையும் அதன் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கும் சட்டத்தையும் மற்றும் அவ்விரண்டிற்கும் அடித்தளமாக இருக்கும் வன்முறையையும், பேச மறுக்கும் பிகுவின் மூலம் நிராகரிக்கிறது. நமது (அழுகிய) சிந்தனை அமைப்பிற்குள் கட்டமைக்கப்பட்டிருக்கும் சட்டத்தைப்போல அல்லாது நீதி என்பது ஏன் நாளை வரும் ஒன்றாகவே என்றும் இருக்கும் என்ற ழாக் தெரிதாவின் கூற்றை முன்னறிவிப்பதாக நிஹ்லானியின் படம் உள்ளது.
இந்தி சினிமாவைப்போல ஆர்ட் சினிமாவின் தடயங்கள் இல்லாத தமிழ் சினிமா வெற்றிமாறனின் மினிமலிஸ அழகியலின் மூலம் வரவேற்கத்தக்கதொரு சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் யதார்த்த அழகியலே அதற்குக் காரணம். நான் மதிக்கும் பெரும் கலைஞரான ஜெர்மானிய இயக்குனர் விம் வெண்டர்ஸ் கூறுவதைப்போல பணம் / நேரம் இல்லை என்று வீட்டிற்குள் நுழையும்முன் இருக்க வேண்டிய படியேறும் காட்சியை வைக்காமலிருப்பது ஒத்துக்கொள்ள முடியாதது. சினிமா என்பதே ‘வெளியை வைத்து’ காலத்தைக் கட்டமைப்பதுதானே. வெற்றிமாறன் வெளியின் தொடர்புறுத்தலின் மூலம் யதார்த்தத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ளார். பிரஞ்சு சினிமா அறிஞர் ஆந்த்ரே பஜான், கால அளவில் காட்சிகளை நீளமாகப் பதிவு செய்வதை வலியுறுத்தினார். ஏனென்றால் நெடுநேரம் ஓடும் அக்காட்சிகளை மீண்டும் நாம் திரையில் காணும்போது, நமது கண்கள் நேரடியாகப் பார்க்கும்போது தவறவிட்ட பல யதார்த்தக் கூறுகளை நுண்மையாக அவதானித்து, நாம் வாழும் சூழலை நன்கு அறியக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய சினிமாவின் மூலமாக மட்டுமே காணக்கிடைக்கும் யதார்த்தமானது விசாரணையில் நாம் அரிதாக நுகரக்கூடிய வாழ்வனுபவமாகப் பரிணமித்துள்ளது. வெற்றிமாறனுக்கும் அவரது சகபயணிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...