முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்போவான கிம்போ

BY 
இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர்.
ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி.
அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி.
நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம்.
பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்துகையில், அதை மார்க்கெட்டிங் செய்ய பல கோடிகளை செலவு செய்யும்.  நுகர்வோரின் விருப்பங்கள் என்ன.  ஒரு பொருள், என்ன நிறத்தில் என்ன தன்மையில் இருந்தால் அதை நுகர்வோர் விரும்புவார்கள்.   எந்த மாதிரி விளம்பரம் செய்ய வேண்டும்.  எந்த பொருளாதாரப் பிரிவை இந்த பொருள் சென்று சேர வேண்டும்.  சந்தையில் இந்தப் பொருளுக்கான போட்டியாளர்கள் யார்.  அவர்களின் பொருளை விட, இந்தப் பொருள் எந்த வகையில் வேறுபட்டுள்ளது என்பன உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கென்று மட்டும் பல கோடிகளை பன்னாட்டு நிறுவனங்கள் செலவு செய்யும். இத்தனை செலவுகளுக்குப் பிறகும், புதிதாக அறிமுகப்படுத்தும் ஒரு பொருள் சந்தையில் தோற்றுப் போகலாம்.
ஆனால் பதஞ்சலிக்கு அது போன்ற எந்த சிக்கலும் கிடையாது.  நுகர்வோர் பழக்க வழக்கங்கள் (behaviour) தொடர்பாக எந்த செலவுகளையும் செய்தது கிடையாது.   பதஞ்சலி நிறுவனத்துக்கு ஒரே அடிப்படைதான்.  பன்னாட்டுப் பொருட்களை வாங்காதீர்கள். பதஞ்சலி பொருட்கள், இயற்கை முறையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.  இது சுதேசி பொருள்.  இது மட்டுமே பதஞ்சலியின் தாரக மந்திரம்.
மோடி தும்மினால் கூட அதை தேசபக்தித் தும்மல் என்று பெருமை பேசித் திரியும் கோடிக்கணக்கான பக்தாள் கூட்டம்தான் பதஞ்சலியின் இலக்கே.   அந்த கண்மூடித்தனமான மோடி பக்தி மற்றும் தேசபக்தியை அடிப்படையாக வைத்து, களமிறங்கியதுதான் பதஞ்சலி நிறுவனம்.
ஆனால், எல்லா மனிதர்களையும் போலத்தானே பாபா ராம்தேவும் ?   சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பலவீனங்களை விட, ப்ராடு சாமியார்களுக்கு பலவீனங்கள் அதிகமாக இருப்பது இயல்புதானே ?  அந்த இயல்பான பலவீனமான பேராசை பாபா ராம்தேவுக்கும் பதஞ்சலிக்கும் தலை தூக்கியது.  அதன் விளைவுதான், வாட்ஸப் செயலிக்கு போட்டியாக, பதஞ்சலி களமிறக்கிய புதிய செயலி கிம்போ.
வாட்ஸப், இன்று செல்போன் பயன்படுத்துபவர்களில் 99 சதவிகித்ததினரின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டதை நாம் அனைவரும் அறிவோம்.    வாட்ஸப் நிறுவனம் தனி நிறுவனமாக இருந்தபோது இருந்தததை விட, ஃபேஸ்புக் நிறுவனம் அதை வாங்கிய பிறகு, அதன் தொழில்நுட்பமும், பாதுகாப்பு அம்சங்களும் பல மடங்கு மேம்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
அந்த வாட்ஸப்புக்கு போட்டியாக கிம்போ செயலியை சந்தையில் அறிமுகப்படுத்தியது பதஞ்சலி.   அதன் டேக் லைனாக, இந்தியா பேசுகிறது என்ற வாசகத்தையும் அறிமுகப்படுத்தியது பதஞ்சலி.

தேசபக்தி பேசும் பல காவி ஊடகங்களை வைத்து, கிம்போ இந்தியாவை புரட்டிப் போடும் ஒரு செயலி என்று செய்திகளும் வெளியிட வைக்கப்பட்டன.
Paytm நிறுவனம் தனிநபர்  தகவல்களை பிரதம மந்திரி அலுவலகத்துக்கு அளித்ததாக கோப்ரா போஸ்ட் நிறுவனம் செய்திவெளியிட்டு அந்த சூடு ஆறும் முன், பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான நபர் அதுவும் பொதுத்தேர்தல் வருவதற்க்கு 1 வருடம் இருக்கும் நிலையில் இப்படி ஒரு செயலியை தயாரித்ததற்கு உள்நோக்கம் இருக்குமா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மிகுந்த படோடாபத்தோடு கிம்போ அறிமுகம் செய்யப்பட்டது.  ஆனால், பாபா ராம்தேவ், இணையத்தின் வீச்சை அறியாத ஒரு மூடன் என்பது ஒரு சில மணி நேரங்களிலேயே அம்பலமானது.
கிம்போ செயலியின் தொழில்நுட்ப அம்சங்கள், அதன் வரலாறு, எங்கிருந்து திருடப்பபட்டது என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அடுத்தடுத்து எடுத்து வெளியிட்டார்கள் இணையவாசிகள்.
ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டாரில் பதஞ்சலி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பதிவேற்றப்பட்ட, iOS ஆப் ஸ்டோரில் Appdios Inc என்ற பெயரில் பதிவேற்றப்பட்டு உள்ளது.

யார் இந்த Appdios என்று பார்த்தால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் என்பது தெரிய வருகிறது, சுதேசி என்பது வெறும் மார்க்கெட்டிங் யுக்தி மட்டுமே. iPhoneஇல் இருந்து சுதேசி பொருளை மட்டுமே வாங்கவும் என்று ட்வீட் போடுவதும், nike ஷூ அணிந்து கொண்டு சுதேசி வசனம் பேசுவதும் வேறு வேறல்ல.
இந்த தகவல்களை இணையவாசிகள் ட்விட்டரில் பாபா ராம்தேவை டேக் செய்து அடுத்தடுத்து அம்பலப்படுத்தினர். கூகிள் ப்ளே ஸ்டோருக்கு புகாரும் அனுப்பினர். கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து கிம்போ செயலி, அம்போவென தூக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் இணையதளமும் www.kimbho.com தற்போது முடங்கி உள்ளது.
Appdios அந்த நிறுவனத்தை அதித்தி கமல் மற்றும் சுமித் குமார் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் 2012 ஆம் ஆண்டு நிறுவி, 2016 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடி உள்ளனர்
அந்நிறுவனம் போலோ மெஸ்சேன்ஜ்ர் என்ற செயலியை 2015ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்டு இருக்கிறது, அதுவும் தற்போது நீக்கப்பட்டு உள்ளது.
போலோ மெஸ்சேஞ்சுரில் உள்ள அத்தனை அம்சங்களும் கிம்போ செயலியிலும் உள்ளது, அந்த செயலி குறித்து விவரிக்கும் வாசகங்களில் இருந்து, screen shot முதல் அத்தனையும்  அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடிக்கப் பட்டிருக்கிறது. போலோ செயலியை வாங்கி பட்டி டிங்கரிங் பார்த்து (White Labelling ) பேரை மாற்றி சுதேசி ஆப் என்று சொல்லி விளம்பரப்படுத்தி இருக்கிறார் பாபா ராம்தேவ் என்ற மோசடிப் பேர்வழி.
சரியாக பட்டி டிங்கரிங் பார்க்கும் அளவுக்கு கூட ஏன் பாபாஜிக்கு பொறுமை இல்லை என்பது தெரியவில்லை.  போலோ செயலியில், ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) கேட்கும் அம்சத்தை, பெயரைக் கூட மாற்றாமல், அப்படியே கிம்போவில் பயன்படுத்தியிருந்தனர்
அறிமுகப்படுத்திய ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது, ஆப் ட்ரெண்டிங்கில் 9 ஆவது இடத்தில் இருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளிவந்தாலும்  உண்மையில் இந்த குளறுபடிகளை சரிசெய்யவே அது நீக்கப்பட்டிருக்கிறது.
இதை தாண்டிய முக்கிய விஷயம் அந்த செயலியின் பாதுகாப்பு தன்மை. உங்கள் போனில் உள்ள கேமரா, தகவல்கள், sms, லொகேஷன் என்று அனைத்தையும் அது பயன்படுத்த அனுமதி கேட்கிறது.
இந்த செயலியை பயன்படுத்திய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எலியட் ஆண்டர்சன் என்ற ஹேக்கர் தன்னால் இந்த செயலியை பயன்படுத்தும் எல்லா நபர்களின் SMS சை படிக்க முடிகிறது என்று கூறுகிறார்
தனி நபர் பாதுகாப்புக்கு எந்த ஒரு சட்டமும் நம் நாட்டில் இல்லாத போது ஆதார் கசிவு, cambridge analytica, PayTM என்று தொடர்ந்து தனி நபர் தகவல்களை அரசியலுக்கு பயன்படுத்தும் நேரத்தில் சுதேசி போர்வையில் இப்படி ஒரு செயலி. இது போன்ற செயலிகளால் ஏற்படும் ஆபத்தை நாம் ஏற்கனவே இந்த கட்டுரையில் பார்த்தோம். இணைப்பு
இது போதாதென்று இதே பெயரில் போலி செயலிகள் மிக குறுகிய நேரத்தில் ப்ளே ஸ்டோரில் நிறுவப்பட்டுள்ளது, பதஞ்சலி மேல் உள்ள மோகத்தில் அறியாத பயனாளிகள் அதற்கு பதில் வேறு ஒரு செயலியை தரவிறக்கம் செய்தால் அதில் என்ன வில்லங்கம் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தி, உலகில் பல நாடுகளில் உள்ள கட்சிகள் பயனடைந்தது போலவே, நமது டேட்டாவை திருடி, நமது சமூக வலைத்தள பழக்கவழக்கங்களை ஆராய்ந்து, நம்மை மூளைச் சலவை  செய்து, பயமுறுத்தி, தாமரை மலர்ந்தால் மட்டுமே இந்தியாவில் இந்துக்கள் வாழ முடியும் என்ற எண்ணத்தை நம் மனதில் ஏற்படுத்தி, மீண்டும் தாமரையை மலர வைக்க எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு வடிவமாகவே ப்ராடு சாமியார் பாபா ராம்தேவின் கிம்போ முயற்சியை பார்க்க வேண்டி உள்ளது.
ஒரே நாளில் இந்த செயலியை தங்கள் செல்பேசிகளில் நிறுவிய 50 ஆயிரம் பேரின் டேட்டாக்களை, பாபா ராம்தேவ் உறிஞ்சி இந்நேரம் பாதுகாத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நமது டேட்டாவை உருவ, சங் பரிவாரமும், பாபா ராம்தேவும், கிம்போ செயலியோடு நிற்கவில்லை.   பொதுத் துறை நிறுவனமான, பிஎஸ்என்எல் நிறுவனத்தோடு இணைந்து, பதஞ்சலி நிறுவனம் புதிய சிம் கார்டுகளை வெளியிட்டுள்ளது.    இந்த பதஞ்சலி-பிஎஸ்என்எல் சிம் கார்டை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால், பதஞ்சலி நிறுவனத்தின் ஸ்வதேஷி சம்ரித்தி கார்டையும் சேர்த்து வாங்க வேண்டும்.   அந்த சம்ரித்தி கார்டு டெபிட் கார்டு போல.   அதை பயன்படுத்தி, நாடெங்கும் உள்ள பதஞ்சலி கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.  இணைப்பு 1 இணைப்பு 2
எப்படியெல்லாம், பொதுத் துறை நிறுவனங்களையும் பயன்படுத்தி, நம் டேட்டாவை திருடும் வேலைகளில் காவிப் பரிவாங்கள் இறங்குகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கிம்போ வெகு விரைவில் அம்பலப்பட்டு விட்டது.  ஆனால் இந்த அனுபவத்தை பயன்படுத்தி, கவனமாக, அம்பலப்படாத வகையில், நாளை வேறு ஒரு செயலியை காவிகள் களமிறக்கலாம். அதை நாம் தாமதமாக கண்டுபிடிக்கலாம் அல்லது கண்டுபிடிக்காமலும் போகலாம்.
ஆனால், நமது சமூக வலைத்தள பழக்க வழக்கங்களின் அடிப்படையில் நாம் யார், நாம் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை உத்தேசமாக ஊகிக்க மட்டுமே முடியும்.  தெளிவான சிந்தனையோடு, சாதக பாதகங்களை, பாரபட்சமின்றி நாம் அலசி, சற்று பொறுமையாக சிந்தித்து முடிவெடுத்தால், கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா, கிம்போ போல ஆயிரம் மென்பொருட்கள், செயலிகள் வந்தாலும் நம் மனதை யாராலும் மாற்றவே முடியாது.
கிம்போ போன்றவை பலவீனமானவர்களை மனதில் வைத்தே உருவாக்கப்படுகின்றன.    அவர்களின் நோக்கத்தைப் போல எதையும் அலசி ஆராயாமல், முட்டாள் பக்தர்களாக இருக்கப் போகிறோமா, அல்லது சுய சிந்தனையோடு இருக்கப் போகிறோமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...