முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்யாணம் முதல் காதல் வரை





பெண் பார்த்து நிச்சயம் செய்து கல்யாணம் முடிக்கும், அண்ட்  நகர வாசத்தின் வீச்சை வீட்டுக்குள் கொண்டுவராத  பெரும்பான்மைகளுக்கான பதிவு இது so மொக்கை கேள்விகளை தவிர்க்கவும்.

முதல்ல பெண்லாம் பார்த்துட்டு போயி, அப்பறம் மாப்பிள்ளை நகை வேண்டாம்ன்னு சொல்லி, பெத்தவங்க மட்டும் அவங்க கவுரவம் அதில் அடங்கி இருக்குன்னு குறிப்பிட்ட நகையை பேசி முடிச்சு நிச்சயதார்த்தம் வரைக்கும் இந்த பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஒரு வழியா கொண்டு வந்திடுவாங்க. இந்த சமயத்தில் நமக்கு இருந்த ஒரு டென்சன் கொஞ்சம் முடிவுக்கு வந்திருக்கும் அது என்னன்னா, நாம பயந்துட்டே இருப்போம், நம்மள எல்லாம் இந்த மாப்பிள்ளைக்கு பிடிக்குமா? ஒரு வேளை நம்மள ரிஜெக்ட் பண்ணிட்டா என்ன பண்றது, ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்ல இருந்து தகவல் சொல்லாம போன மாதிரி போய்டுவாங்களோ, இந்த மாதிரி சந்தேகங்களை தாண்டி தான் நிச்சயதார்த்தம் நடக்கும், அப்பவும் சந்தேகம் இருக்கும்…., இவருக்கு உண்மைலேயே நம்மள பிடிச்சுருக்கா இல்ல வேற வழி இல்லாம வந்திருக்காரா? இந்த மாதிரி (vice versa also), ACTUALLY எல்லாமே நல்லபடியாதான் நடக்கும் ஆனாலும் இந்த சந்தேகத்தை ஒன்னும் செய்ய முடியாது வரத்தான் செய்யும்,

நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் தான் செல்போன் நம்பர் பரிமாற்றமே நடக்கும், (இப்ப செல்போன்ல சிம் கார்டு போட்டு கிப்டாவே கொடுத்திடறாங்க சிலர்)  இப்ப தான் முதல் பிரச்சினை ஸ்டார்ட் ஆகும் ”யார் முதல்ல call பண்றதுன்னு” மாப்ள நம்பர்ல இருந்து போன் வரும்.. கடைசில பார்த்தா அதுல அவங்க அம்மா பேசுவாங்க அப்பறம் அவங்க நம்ம அம்மாக்கிட்ட பேசுவாங்க, என்னமோ இவங்க ரெண்டு பேரும் பேசிக்கத்தான் நாம போன் வச்சிருக்கற மாதிரி, போனை கட் பண்ணும்போது மாமியா சொல்லும் ”இந்தா பையன் கிட்ட ரெண்டு வார்த்த பேசிடு” அது ஒரு இக்கட்டான சூழ்நிலை இருவருக்குமே, அவங்க நல்லாருக்கிங்களா ன்னு கேட்பார் நாம ஹ்ம்ம் நல்லாருக்கேன்.. அவ்வளோ தான் அந்த கான்வோவே. பிக்காஸ் ஒரு மிகப்பெரிய தயக்கம் முன்னாடி இருக்கும் அதுக்கு காரணம் நம்மள பெத்தவங்கதான், ஏன்னா நம்மள ”இவ போன் பேசறதுக்கு அலையறாளோ!” அப்படின்னு நினைத்துவிட்டால்? நாம இவ்வளவு நாளா ரொம்ப நல்ல பொண்ணுன்னு வீட்ல பெயர் எடுத்திருக்கோமே!, அதுலாம் கெட்டுப் போய்டுமோன்னு பயம் இருக்கும், அதனாலேயே யாருக்கும் தெரியாம மறைந்து இருந்து ஒரு பத்து நிமிடம் மட்டும் பேசி, முன்னாடியே சொன்ன அந்த நமக்கு தேவையான கேள்விகள் மட்டும் கேட்டுட்டு,  ஹப்பாடி உண்மைலேயே இவருக்கு நம்மள பிடிச்சிருக்குன்னு கன்பார்ம் செஞ்சுக்குவோம்,

இந்த அம்மாக்கள் இருக்காங்களே உஸ்ஸ்ஸ்ஸ் தோழியிடம் பேசுவதாக சீன்லாம் போட்டு மிக கவனமாக டி போட்டு அவர்ட்ட பேசிட்டு இருக்கும்போது ”யாரு மாப்ளையா?” ன்னுவாங்க.. தட் ஞே மூமென்ட் :))) ரொம்ப நாள் கழித்து நான் எப்படிம்மா கண்டுபிடிச்ச?ன்னு கேட்டேன்.. அதற்கு அவளின் பதில் ”நான் உன் அம்மாடி!”

அம்மாவிடம் பெர்மிசன் கிடைத்ததும் விடிஞ்சாலும் அடைஞ்சாலும் போனும் கையுமாத்தான் திரிவோம்.., எல்லாம் அப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் தான் நடக்கும், அப்பா மேல் அளவுக்கு மேல் பயம் கலந்த மரியாதை, ஒரு நாள் அப்பா கிட்டயும் மாட்டிக்குவோம்.. அப்போ பதறி எந்திரிச்சி திரு திருன்னு முழிக்கும் போது, கையாலேயே பேசு பேசுன்னு சைகை காமிச்சுட்டு சிரிச்சுக்கிட்டே போய்டுவார்… வாழ்வில் உன்னதமான தருணங்களில் அதுவும் ஒன்று.., இதுக்கு அடுத்து நம்மள கேள்வி கேட்க ஆளே இல்ல, மாப்ள வீட்ல எதுனா கேட்கனும்னா கூட நம்மகிட்ட தான் சொல்வாங்க அந்த அளவுக்கு டீப்பபா போயிருக்கும், சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை பரஸ்பரம் இருவருமே ஒரு மாசத்துல பேசி தீர்த்து முடிச்சுடுவோம்.

இப்ப அடுத்த பிரச்சினை, இந்த தோழிகள் எல்லாம் ஒன்னா சேர்ந்து ”அப்படி என்னதான்டி மணிக்கணக்கா பேசுவிங்க” அதுக கேட்கும் தோரணைலையே ஒரு டபுள் மீனிங் இருக்கும், அப்பறம் ஏற்கனவே கல்யாணம் முடித்த நம்மள விட சீனியர் தோழிகள் சொல்வாங்க ”அப்ப அப்படிலாம் நீங்க பேச ஆரம்பிக்கலையா? எப்படிக்கா ? பாவம் உம்புருசன் உன்னைய கட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறானோன்னு திரிய பத்த வச்சுட்டு போய்டும்., அதுல இருந்து வேற ஒரு கனவுக்கு ரெக்கை முளைச்சுடும், அதுக்கு அப்பறம் இந்த டாப்பிக்க எப்படி ஆரம்பிக்கறது என்று இருவருமே பெரிய குழப்பத்தில் இருப்பாங்க, சில மாப்பிள்ளைகள் ரொம்ப விவரமா ”நம்ம ஹனிமூன் எங்க வச்சுக்கலாம்ன்னு” தொடங்குவாங்க, அப்படி இல்லாத சில அப்பாவி மாப்பிள்ளைகளுக்கு நாமதான் எடுத்து கொடுக்கணும், ”அந்த அக்கா இப்படிலாம் சொல்லுது” அப்படின்னு.. ஆச்சா! இப்பத்திலிருந்து கல்யாணம் முடியறதுக்கு முதல் நாள் வரைக்கும் காமத்தை பற்றி தியரி எல்லாம் பேசி முடிச்சிடுவாங்க.

இப்ப அடுத்த பிரச்சினை முதலிரவுல.., எவ்வளவோ தன்னை பற்றி உயர்வாக நினைத்துக்கொண்டிருந்த ஆணின் எண்ணத்தில் சம்மட்டி அடி விழும் நாள், இவ்வளவு நாள் தியரியா பேசிட்டு இருந்த காமத்தை பிராக்டிகலாக செயல்படுத்துதல் எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு தெரியும் நாள் அதுதான், அந்த நேரத்தில் ஆணும் மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது, பெண்ணும் அதிருப்தி ஆகி கணவனை பார்க்க கூடாது.. இரண்டுமே ஆபத்து.. இப்படி தான் ஆகும் இதுதான் இயல்பு, மறுநாள் காலையில் ஒரு கூட்டமே உங்களை கொத்திப்பிடுங்க காத்திருக்கும் என்னாச் என்னாச் என்னாச் என்று!, ஒன்னுமே ஆகலன்னு மட்டும் சொல்லிட்டா போதும் ஒவ்வொருவரும் தன் பராக்கிரம பலத்தை எடுத்துக்காட்டாக சொல்லி இன்னும் குற்ற உணர்ச்சி கொள்ள வைத்துவிடுவார்கள், actually அவிங்களுக்கும் இப்படிதான் நடந்திருக்கும் இருந்தாலும் அதை வெளியில் சொல்வது மதிப்பு குறைவான விஷயம் என்பதால் சொல்ல மாட்டாங்க இரு பாலருமே,! முதலிரவு இப்படி முடிவதற்கான காரணம் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் ஆணுக்கு பழக வேண்டும், அதை பற்றிய ஆச்சர்யம் கொஞ்சமேனும் உடைந்தால் தான் அவனால் அடுத்த கட்டத்திற்கே செல்ல முடியும் இதற்கு குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் எடுக்கும் அதற்குதான் இரண்டாம் மறுவீடு என்று தாய் வீட்டில் மூன்று நாட்கள் தங்கச் சொல்வார்கள் so பொறுமை காக்க!.

இப்ப அடுத்த பிரச்சினை.. எல்லாம் சுமுகமாக முடிந்த பின்னர் கொஞ்ச நாள் கழித்து கணவர் வழக்கம் போல வேலைக்கு போக ஆரம்பிப்பார், அதுவரை ஏதோ சந்தோசமாக இருந்தது பறிக்கப்பட்டு தனிமையில் தள்ளப்பட்டதாக தோன்றும், இன்னும் கொஞ்ச நாள் கழித்து அதாவது மூன்று மாதம் கழித்து, மொத்த வாழ்வும் சூனியமாக தோன்றும் கணம் அது, வேலைக்கு போகும் மனைவிகள் இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்வார்கள், வீட்டிலேயே இருக்கும் மருமகள் தான் ஐயோ பாவம், ஏன்னா பேச ஆளே இருக்காது, வீட்டு வேலை செய்வது தான் ஒரு வேலையாகவே இருக்கும் தினமும் இதையே தானே செய்கிறோம் என்று சலிப்பு தட்ட ஆரம்பிக்கும்,

இப்ப அடுத்த பிரச்சினை, வீட்ல போர் அடிக்குதுன்னு கணவனிடம் போன் பேசலாமே ன்னு போன் பண்ணினால் வரக்கூடிய பதில் ”போன வை நான் அப்பறமா கூப்பிடறேன்” முதல் நிராகரிப்பு அது, அதுக்கு அவர்கள் ஆயிரம் காரணம் சொல்வார்கள் ஆரம்பத்தில் இது அப்படியே பழகி பழகி பழகி ஒரு கட்டத்தில் ”எதுனா முக்கியமா இருந்தா மட்டும் போன் போடு அடிக்கடி தொந்தரவு செய்யாத” என்று சொல்வதில் வந்து நிற்கும், நாம் ஏமாற்றப்பட்டதாக மனம் நம்ப வைக்கும், கல்யாணத்துக்கு முன்னாடி ”நீ பேசறது கேட்டுட்டே இருக்கலாம்ன்னு சொன்ன அதே வாய்தான் இப்போ தொனதொனன்னு பேசாம இருன்னு சொல்லும். இந்த சமயத்தில் மனைவிகளில் ஓவர் ரியாக்சன்களால் கணவர்களுக்கும் ஒருவித எரிச்சல் வரும், இப்போது எல்லா பழியையும் ஆண்கள் மேல போட்டு தப்பித்து விட பார்ப்பார்கள் பெண்கள், ஆணுக்கு தன் மேல் குற்றம் சொல்வதை ஒத்துக்கொள்ளவே முடியாது, உறவில் விழும் முதல் விரிசல்  இது..,  இந்த இடத்தில் இருந்து வாழ்க்கையை சரியாக கொண்டு போக தெரியாத இருவருமே பிரிந்துதான் ஆக வேண்டும். இதுக்கு காரணம் கல்யாணத்துக்கு முன்னாடி போன் பேசியதா என்றால் நிச்சயமாக இல்லை.. பேசவில்லை என்றால் இதே பிரச்சினை ஒரு இரண்டு மாதம் கழித்து வரும் அவ்வளவுதான். இந்த இடைப்பட்ட காலத்தில் கர்ப்பமான பெண்கள் வாழ்க்கை முற்றிலும் வேறு தளத்தில் பயணிக்கும், கர்ப்பிணி பெண்ணின் மனநிலைக்கு தனி பதிவே தேவைபடுவதால் இன்னொருநாள் சொல்கிறேன்.

இப்ப அடுத்த பிரச்சினை  கல்யாணமான ஆறே மாதத்தில் தனக்கு பிரைவேசி இல்லைன்னு தனிக்குடித்தனம் போகும் பெண்கள் போல் முட்டாள் இந்த உலகத்திலேயே இல்லை, மாமியார் கூட சண்டை போடுவது நாத்தனார் கூட சண்டை போடுவது எல்லாம் நம் சுயத்தை நிலை நிறுத்திக்கொள்ளும் விடயமாக இருக்கலாம் இந்த நேரத்தில் யாருக்கு சப்போர்ட் செய்யணும்ன்னு கணவனை தர்மசங்கடபடுத்தக்கூடாது, பெண்கள் சண்டைகளை பெண்களோடு முடித்துக்கொள்ளனும், கூட்டத்தில் வாழ்ந்தவனை தனியா பிரித்துக் கொண்டு வந்து வாழ்வதென்பது கத்தி மீது நடப்பது போல் ஆபத்தானது, கல்யாணம் முடித்த ஆண்கள் நிம்மதியாக இருக்கணும் இல்லையேல் அந்த நிம்மதிக்காக அவன் தேர்ந்தெடுக்கும் வழிகள் ஆபத்தாக அமையும்,

இப்ப அடுத்த பிரச்சினை. கணவர்களே! ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு இரண்டு மணி நேரமாவது வீட்டிலே இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள் முக்காவாசி பிரச்சினை வரவே வராது, நீங்கள் தூங்கும் நேரம் சாப்பிடும் நேரம்லாம் இதில் சேர்த்தி இல்ல, நண்பர்களோடு போகணும்ன்னு தோணும் ஆனா பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்ல இருக்காளே என்ன பண்றது, பொண்டாட்டி தாசன் என்று நண்பர்கள் கேலி பேசத்தான் செய்வாங்க, சொல்லிட்டு போறாங்க, உங்க பொண்டாட்டிக்கு தானே தாசனா இருக்கிங்க தப்பே இல்ல,

அப்பறம் மனைவிகளே! ஓட்டு மொத்த அன்பையும் கணவன் மீது கொட்டாதிர்கள், மாமியார் உங்களை கரிச்சு கொட்ட இதுவே காரணமாக கூட அமையும், அதாவது பாசமாக இருக்கின்றேன் என்பதை எஸ்டாபிளிஷ் செய்யவேண்டாம், பிக்காஸ் இந்த அன்புக்கு கணவனால் ஈடுகட்ட முடியாது விச் மீன்ஸ் நம்மை போல் பாலிஷாக பேச அவனுக்கு தெரியாது, அவன் அப்படிதான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறான், மேலும் கணவர்களிடம் சொல்லகூடாத ஒன்று அவன் தாயை பற்றிய குறைகள், அவன் தாய் பேயாக இருந்தாலுமே அவனுக்கு அவள் தாய், அவளை ரிபிளேஸ்மென்ட் செய்யவேண்டும் என்று நினைக்கவே கூடாது, பாசத்தை பங்குபோட வரவில்லை பகிரவே வந்திருக்கிறோம், அப்பறம் கணவனின் முகத்தை வைத்தே அவன் எந்த உணர்ச்சியில் இருக்கிறான் என்று நம்மால் எளிதில் சொல்லிவிட முடியும் ஆனால் அவர்களால் எவ்வளவு மெனக்கட்டாலும் முடியாது,  ஆண் ஏன் இப்படி இருக்கிறான் என்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் ”அதான் ஆண்’

சரி இதற்கான தீர்வுதான் என்ன? கல்யாணம் முடிந்த முதல் மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்கு யாருமே கணவன் மனைவி அல்ல, இருவரும் பரஸ்பர சொரிதல்களுக்கு பயன்படும் கருவி அவ்வளவுதான். இதை மட்டும் புரிந்துகொண்டால் போதும் அதை விட்டுட்டு நான் அதிக பாசத்தை கொட்டுகிறேன் அவர்(ள்) கொட்டவில்லை, என் மேல அக்கறையே இல்ல,   இந்த மாதிரிலாம் சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிர்கள், நாம நம்ம அப்பாவையும் அம்மாவையும் அப்பறம் சொந்தத்தில் உள்ளவர்களை ஐடியல் கப்பிளாக எடுத்துக்கொள்வது முதல் பிரச்சினை, அவங்கள மாதிரி ஈருடல் ஒருயிரா நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என்ற கேள்வி வேற வரும், actually அன்பு பாசம்  நேசம் கரிசம் அக்கறை எல்லாம் எடுத்த உடனே படார்ன்னு வந்திடாது அதற்கு கால அவகாசம் வேண்டும் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள். அதிக பட்சமாக ஏழு வருடங்கள், அதற்கு பின் தான்  இணை என்பவர்கள் தன் உடலின் ஒரு பகுதி என்று ஆவார்கள், குறிப்பறிந்துசெயல்படும் கணவன் அண்ட் மனைவி எல்லாம் இப்போதுதான் சாத்தியம்,

சொல்லாமல் விட்டவை அதிகம்

நீடூழி வாழ்க!




கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...