முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நெஞ்சில் பதிந்த பத்திரிகையாளர்

சரவணன் சந்திரன் வாழ்த்து கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை ஒட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆண்டுக் கணக்கீடுகளின் பார்த்தால் இப்போது கலைஞரின் வைரவிழா நடத்துவது முறையா என்றெல்லாம் ஆங்காங்கே கேள்விகள் எழுகின்றன. இத்தனை ஆண்டுகள் புதைந்து கிடக்க வேண்டுமென என வைரத்திற்கும் தங்கத்திற்கும் யாராவது அதிகாரப்பூர்வமான துல்லியமான கணிப்பு ஏதாவது வைத்திருக்கிறார்களா என்ன? தேவையிருந்தால் கொண்டாடிவிட்டுப் போகவேண்டியதுதானே? திமுகவைப் பொறுத்தவரை அப்படிக் கொண்டாட வேண்டியதற்கான தேவை இருப்பதாகவே தெரிகிறது. அதன் செயல் தலைவர் தமிழ்நாட்டில் யாரை எதிர்த்து அரசியல் செய்வது என்று யோசித்துப் பாருங்கள்? மாதவனையும் தீபாவையுமெல்லாம் எதிர்த்து அரசியல் செய்ய முடியுமா? பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் இருவர்களும் அவரது அரசியல் அனுபவத்தைப் பொறுத்தவரை, மேற்குறிப்பிட்ட இருவருக்கு, ஒப்பானவர்கள்தான் என்கிற போது ஸ்டாலினும் என்னதான் செய்வார்? ஒரு பலமான எதிர்க்கட்சி, பலமான ஆளுங்கட்சியை எதிர்த்துத்தானே அரசியல் செய்ய வேண்டும். அப்படிப் பார்த்தால் தமிழகத்தை இன்றைய தேதியில் மறைமுகமாக ...

என்னை மீட்ட யட்சன்

அன்பின் சரோ.. முதலில் மன்னித்துவிடு. உன் கேள்விக்கு சரியான பதில் இல்லாமல் சொல்லாமல் உன்னோடு பேச்சை நிறுத்திவிட்டமைக்கு. ஞாபகமிருக்கிறதா உனக்கு நம் அறிமுகம்?. தோழி சுந்தரியின் திருமணத்திற்கு வந்திருந்த போது என்னைச்சுட்டி உன் தங்கையிடம் சொன்னாய் ''அவள் சேலை கட்டிருக்கற ஸ்டைலப்பாரேன்.. உடம்பு முழுக்கத் திமிர்'' எனக்கு நன்றாகத் தெரியும் சரோ நீ என்னைக் கவனித்தாய்.. உன் தங்கை எனக்கு சுந்தரி மூலம் கொஞ்சம் பழக்கம்.. அவள் ஒரு சுட்டிக்குழந்தை..அவளுக்கு முத்தங்கள் தரலாம். அவள்தானே உன்னை என்னிடம் இழுத்து வந்து அக்கா நீங்க திமிர் பிடிச்சவங்கன்னு அண்ணன் சொல்றான் என்று உன்னை என்னிடம் காட்டித்தந்தாள்.. ''ஐயோ அப்படியெல்லாம் நான் இல்லைங்க'' என்றதும் உனக்குள் நீயே ஒரு கணம் பின்வாங்கி வெளிவந்தாயே அது உன் கண்களில் தெரிந்தது. நான் திமிர்பிடித்தவளா இல்லையா என்பதெல்லாம் தெரியாது, ஆனால் அந்த நேரத்தில் உன்னிடம் என் திமிரை வெளிக்காட்ட விரும்பவில்லை என்பது மட்டும் நிஜம். திமிர்பிடித்த தோற்றம் என்பது ஒருவகையில் பெண்களுக்குப் பாராட்டு. என்னைப்பார்த்தால் அப்படியா தெரிக...

’கலைஞர் 94’ - பத்திரிகையாளர்கள் பார்வையில் மகத்தான ஆளுமை!

கலைஞர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டப்பேரவை பணிகளில் வைர விழா இவை இரண்டையும் முன்னிட்டு இன்று ( ஜூன் 3)  திமுக கட்சித்தொண்டர்கள் தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். தலைச்சிறந்த தலைவராக திகழும் கலைஞர் கருணாநிதியின் இச்சாதனையை, திமுக கட்சியினரையும் தாண்டி அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரை வாழ்த்தியும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் பற்றியும் சமூக ஊடகங்களில் படங்களுடன்  பகிர்ந்து வருகின்றனர்.  அவரின் வரலாற்றுச் சாதனைகளையும், வாழ்க்கையில் அவர் சந்தித்த பல சவால்களை பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். உலகத்தமிழர்கள் முதல் இந்திய அளவிலான கட்சித்தலைவர்கள் வரை அவருக்கு வாழ்த்து மடல்களையும், அன்புப்பரிசுகளையும் அனுப்பி வருகின்றனர். ஆனால் சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதை தவிர்த்துள்ள கலைஞருக்காக இன்று எடுக்கப்படும் வைரவிழாவில் அவர் கலந்து கொள்ளமுடியாமல் இருப்பது சற்றே வருத்தமான விஷயம்.  கலைஞர் கருணாநிதியன் பேச்சுக்கு அவர் மட்டுமே நிகர் என்கின்ற அளவில் கலை...

சிவில் சர்வீஸ் தேர்வில் நந்தினி 849-வது ரேங்கில் இருந்து முதல் இடம் பிடித்தது எப்படி?

எம்.குமரேசன் க ர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி, சிவில் சர்வீஸஸ் தேர்வில் 849-வது இடத்திலிருந்து விடாமுயற்சியின் காரணமாக முதல் இடத்துக்கு முன்னேறி, அபார சாதனை படைத்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் பணிக்கு 1,099 (846 ஆண்கள், 253 பெண்கள்) தேர்வுசெய்யப்படுவர். இவற்றில் 500 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 347 இடங்கள் ஓ.பி.சி பிரிவினருக்கும், 163 இடங்கள் எஸ்.சி பிரிவினருக்கும், 89 இடங்கள் எஸ்.டி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ளவற்றில் 180 ஐ.ஏ.எஸ்., 150 ஐ.பி.எஸ்., 45 ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுக்கான பணியிடங்கள். மீதம் உள்ளவை  834 'ஏ' மற்றும் 'பி' ரகப் பணிப் பிரிவுகள். இதுதவிர 220 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பார்கள். கடந்த 2016- ம் ஆண்டுக்கான  சிவில் சர்வீஸஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் 25 இடங்களில் 18 ஆண்களும், 7 பெண்களும் இடம்பிடித்துள்ளனர்.  தேசிய அளவில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி, முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் தந்தை, பள்ளி ஆசிரியர். இதற்கு முன் மூன்று மு...

The hunt for Amma’s assets

COVER STORY By Lakshmi Subramanian  |  Green, with a hint of red: Kodanad estate was recently in the news when a security guard there was murdered during a heist | Bhanu Prakash Chandra Jayalalithaa’s death triggered a battle for assets worth thousands of crores. While Sasikala and her family want to have it all, Jayalalithaa’s niece and nephew have staked their claim. Now, with the Kodanad murder adding mystery to the mix, THE WEEK visits some of the high-profile properties that are part of Jayalalithaa’s legacy Though it is famous as Jayalalithaa’s abode, she holds shares worth only Rs 3.13 crore in the Kodanad estate. “The value of the properties was so huge that the [Mannargudi] family members themselves could not ascertain it.” - A. Shankar, RTI activist Though it is famous as Jayalalithaa’s abode, she holds shares worth only Rs 3.13 crore in the Kodanad estate. “The value of the properties was so huge that the [Mannargudi] family members t...