அராத்து இந்த படத்துக்கெல்லாம் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இந்த படத்துக்கு எழும் எதிர்ப்பைப் பார்த்தவுடன் எழுத வேண்டிய கட்டாயம். முதலில் படம் :- மொக்கை படம். கொஞ்சம் கூட கவனமும் , மெனக்கெடலும் , ப்ரொஃபஷனலிஸமும் இல்லாத மட்டி படம். அடல்ட் காமடி : இதை எடுக்க மூளையும் ரசனையும் வேண்டும். கலா ரசிகனாக இருக்க வேண்டும். அடல்ட் காமடி என்ற பெயரில் இந்த படத்தில் இருப்பதெல்லாம் , கற்பனை வளம் இல்லாத அருவருப்பு காமடி.அதிலும் ஒரு ஓவியத்தை பார்த்து இருவர் நின்று கொண்டே சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் அருவருப்பின் உச்சம். அடல்ட் காமடியை விடுங்கள், படத்தில் காமடியே இல்லை. செக்ஸ் பற்றி , பொதுமக்கள் பேசிக்கொள்வதை , வெளிப்படையாக திரையில் வைத்ததால் ஆர்பரிக்கிறார்கள் , அவ்வளவே ! கவர்ச்சி : இதைப்போன்ற படங்களில் கவர்ச்சியாவது இருக்க வேண்டும். க்ளீவேஜ் , தொடையை காட்டினால் கவர்ச்சி என்பதெல்லாம் , பிரசாந்த் காலத்தோடு மலையேறி விட்டது. இந்த படத்தில் காயலான் கடை பார்ட்டி , டொக்கு ஒடிசல் வாங்கியதையெல்லாம் காட்டி கவர்ச்சி என்கிறார்கள், மண்ணாங்கட்டி ! அவனவனு...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்