முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார்வதி தாண்டவம் (சிறுகதை)




“தேவுடியா பசங்க... பீயத் தின்ற நாயே... அறிவில்ல? முண்டம். முட்டா புண்டை, கூமுட்ட. என்ன நெனப்புடா ஒனக்கு? வேர்வயோட மாரக் காட்னா பொம்பளைங்க மடிஞ்சிருவாங்கன்னு நெனப்பா? செருப்பெடு... நாரக்கூதிமவனே’’இன்று என்னவோ என் குரல் அதிக கொடூரமாக எனக்கே திரும்பக் கேட்டது. எனக்குக் கோவமான கோவம். நான் லுலூ. என் குடும்பத்தோடு இந்த வீட்டுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. 

வந்தது முதலே பார்க்கிறேன். அந்த ஆள் எப்போது பார்த்தாலும் பெண்கள் இருக்கும் பக்கமாகவே சுற்றுகிறான். அவன் மட்டும்தான் என்றில்லை. அங்கே ஆண்கள் அனேகருமே பெண்கள் புழங்க அசெளகரியமாக, பெண்களை நோட்டம் விட்டபடி, சும்மாவேனும் பம்படியில் நின்று பேசுவது, சத்தம் போட்டுச் சிரிப்பது... தவிர பக்கத்து கடைத்தெரு குட்டிச் சுவற்றில் வேறு சில நாய்கள் பெண்கள் புழங்கும் பக்கமாகவே நோட்டம் போட்டுக் கொண்டிருக்கும். 

கடைத் தெருவை ஒட்டியே அமைந்த எட்டு குடும்பங்கள் கொண்ட முடுக்கு வீடு இது. நடுவில் கிணறும், அடிபம்பும். சுற்றி ‘ப’ வடிவத்தில் எட்டு வீடுகள். எல்லோரும் புழங்கும் பொது புழக்கடை. கடை கண்ணிக்குப் போக சுலபமாக இருக்கும் என நினைத்துதான் எல்லோருமே இந்தக் குடியிருப்புக்கு போட்டி போட்டு குடி வருகிறார்கள். இங்கே குடி இருக்கும் ஆண்கள் அநேகரும் கடைகளிலோ, தொழிற்சாலைகளிலோ மாத சம்பளம் வாங்குபவர்கள். 

வருகிற சம்பளத்தில் இந்த வீடுதான் சாத்தியம். அநேகமாக பெண்கள் எல்லோரும் வீடுகளிலேயே மெழுகுவர்த்தி, அப்பளம் என தயார் செய்து விற்பவர்கள். சுமாரான சம்பாத்தியக்காரர்கள்தான். நான் மட்டும்தான் ஒரு ப்யூட்டி பார்லரில் வெளி வேலைக்குப் போகும் பெண். 

அங்கே குடியிருக்கும் பெண்களும் இவன்களைக் கண்டு ஏன் பம்முகிறார்கள் எனத் தெரியவில்லை. எல்லோருமே இங்கே குடியிருப்பவர்கள்தானே? அட அந்த மாரைக்காட்டும் மம்முதன் நேரு... அவனைக் கூட எதிர்க்கத் துப்பில்லை. ஏன் பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை.

இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என அதிகாலையிலேயே பொது புழக்கடைக்கு குளிக்கக் கிளம்பினேன். அந்தப் பெண் குடிவந்து ஒரு வாரம்தான் இருக்கும். பெயர் என்னமோ லுலூ என்றார்கள். முதல் வீட்டில் அவள். ஏதோ பார்லரில் வேலை செய்கிறாளாம். வந்து ஒரு வாரமிருக்கும். கெட்ட வார்த்தைகள் எல்லாம் அநாயாசமாக வந்து விழும். இவள் புழக்கடைக்கு வந்தால் நிற்கும் ஆண்களை கையிலிருக்கும் வாளியால் நகர்த்தியபடி, கெட்ட வார்த்தையில் திட்டுவாள். 

அவளுக்கும் புருசன் பிள்ளைகள் உண்டு. நல்லவளாகத்தான் தெரிகிறாள். ஆனால், எப்போதும் கெட்ட வார்த்தைகள் வாய் விளிம்பில். எல்லா வார்த்தைகளும் பேசுவாள். பெண்களிடம் அதிகம் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டாள். எல்லாமும் ஆண்களோடுதான். ஆனால், அவர்களோடு எப்பொழுதும் சண்டை சண்டை சண்டைதான். 

கடைக்காரன் ஒரு முறை வேண்டுமென்றே இவள் கையைப் பிடித்து பாக்கி சில்லறை கொடுத்தான் என அப்படியே கொத்தாக அவன் சட்டையைப் பிடித்து அடி வெளுத்து விட்டாள். உண்மையில் அவன் ஒரு மாதிரிதான். வேணும்தான் அவனுக்கு. கொஞ்சம் பெண்களிடம் வம்பு செய்தாலும் போதும் இவளுக்கு. சண்டைக்குக் கிளம்பிவிடுவாள். சரியான பஜாரி. 

எங்களால் சமாளிக்க முடியாத இன்னொரு ஜீவனும் உண்டு. அவன்தான் நேரு. அரசாங்க சம்பளக்காரன். ஒரு ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கும். எல்லா பெண்களும் அவன் மீதே மையல் கொண்டு அலைவது போல அவனுக்கே ஒரு எண்ணம். 

அழகான பெண்களிடம் இவனாகப் பேசிவிட்டு ஊருக்குள் ‘பட்சி மடிஞ்சிருச்சு’ என மார்தட்டுவான். சுமாரான பெண்கள் எனில், ‘‘சனியன், அலையுறா எவண்டா கெடப்பான்னு...” என்பான். அதனாலேயே எந்தப் பெண்ணும் அவனைச் சந்திப்பதையே தவிர்த்து வந்தோம். எவரும் எழும் முன்பே பெண்கள் புழக்கடையில் குளித்துவிடலாம் என்றால், இல்லாத பழக்கமாக அந்த வேளையிலேயே எக்ஸசைஸ் செய்வதாகச் சொல்லி ஸ்லீவ்லெஸ் பனியனும் முட்டி தெரியும் அரைபேண்டுமாகச் சுற்றுவான். 

அந்த நேரத்தில் அங்கே புழங்க வேண்டாம் என மென்மையாக பலமுறை அவனிடம் நாங்களே சொல்லியாயிற்று. அவன் கேட்பதாக இல்லை. காலையில் காய் வாங்க பெண்கள் காய் வண்டி முன் நிற்கையில் காய் விலை பேசுவது போல வியர்வை நாற்றத்தோடு வந்து நிற்பான். அவன் அரசு உத்யோகஸ்தன். எதற்கு வம்பு என ஒதுங்கிக் கொண்டிருந்தோம்.

நான் ராஜி. அன்னிக்கு அப்படித்தாங்க. எங்க வீட்டுக்காரர அந்த பஜாரி பொம்பள வாளியால இடிச்சுத் தள்ளிட்டு அடிபம்புல தண்ணி புடிச்சிட்டிருந்திருக்கா. நாங்கல்லாம் ஆம்பளைங்க அடிபம்புகிட்ட இருந்தா போகக்கூட மாட்டம். இவரு பாவம். பச்ச மண்ணு. அவள எல்லாம் எதுத்து பேசுறது கேவலமின்னு வீட்டுக்கு வந்திட்டார். 

நேத்து அடுத்த வீட்டு அக்காகிட்ட கூட அவளப் பத்தி பேசிக்கிட்டிருந்தாரு. ‘அவளை மாதிரியானவங்க ஏதோ கூட்டத்தைச் சேர்ந்தவங்களாம். சண்டை போட காரணம் கிடைக்கலேன்னா புரச்சி பேசுவாங்களாம். அக்கா நீங்கல்லாம் எவ்ள பண்பா பேசுறீஹ? சின்னப்பிள்ள மாதிரி என்னை தம்பி தம்பின்னு எப்டி அன்பா பேசுறீய? அண்ணம் பேச்சுக்கு மறு பேச்சி உண்டுமா? குடும்பப் பொண்ணுன்னா இப்டி இல்ல இருக்கோணும்!’ அக்காக்கு கூட அந்த புது பொம்பிள மேல கோவம்தான். 

‘சின்னப்பிள்ள மாதிரி, குடும்பப் பொண்ணு’ என ராஜி புருசன் என்னைச் சொன்னது எனக்கு சந்தோசமாகவே இருந்தது. வீட்டில் ஆண்கள் எல்லோரும் அந்த பார்லர்காரியை ‘ஈயம்’ எனக் கிண்டலாகக் குறிப்பிடுவார்கள். அவள் பேசுவது ‘பெண்ணியமாம்’. ஆண்களாக சொல்லிக் கொள்வார்கள். நமக்கென்ன தெரிகிறது அது பற்றியெல்லாம்?

‘அதானே, அதென்ன பொம்பிளையளுக்கு ஈயமும் பித்தாளையும். நம்மள மாதிரி இருந்திட்டு போக வேண்டியதுதானே?’ என எங்களுக்குள்ளாக பேசி சிரித்துக் கொண்டோம். ஆண்களின் முன் அவளைப் பற்றி புரணி பேசி மகிழ்ந்தோம். 

இல்லாத அதிசயமாக அந்த அதிகாலையில் லுலூவும் புழக்கடைக்கு குளிக்க வந்திருந்தாள். இவளை கவனிக்காமலோ, அல்லது எங்கள் பேச்சை எதிர்த்தோ என்னவோ, நேருவும் அங்கே ஆஜராகி இருந்தான். கையைக் காலை ஆட்டி குதித்துக் கொண்டிருந்தான். எக்சசைசாம். 

என்னவோ நடக்கப்போகிறது என எங்களுக்குள் சாடை செய்து கொண்டோம். அந்த அதிகாலை அவள் குளிக்கும் நேரமும் அல்ல. அவளின் இடமும் இது இல்லை. வேண்டுமென்றேதான் அவள் இன்று இங்கே வந்து எங்களோடு குளிக்கிறாள். 

‘‘மயிராண்டி, பொம்பளைங்க குளிக்கிற இடத்துல, நேரத்திலதான் வந்து நிப்பான். செருப்பெடு...” வீடுகளிலிருந்து ஆண்கள் எட்டிப்பார்த்து பதுங்கிக் கொண்டார்கள். அது அவனுக்கு மட்டுமான திட்டாகத் தெரியவில்லை. எல்லா ஆண்களையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டாள் லுலூ. 

மறுபடி ஆரம்பித்தாள், ‘‘தே... பசங்க...”கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த நேரு, நாங்கள் எதிரே பார்த்திராதபடி பதில் ஏதும் சொல்லாமல், தலை கவிழ்ந்தபடி நகர்ந்தான். இருந்த ஒன்றிரண்டு ஆண்களும் முணுமுணுத்தபடி வெளியேறினார்கள். பார்க்கிற எங்களுக்கு சிரிப்புதான் வந்தது. ‘என்ன பாடு படுத்தினே எங்கள?’ மனசுக்குள் கேட்டுக் கொண்டோம்.

எங்கள் வீட்டு ஆண்கள் முன்னிலையில், ‘‘பாரேன் இந்த பஜாரிய, நேருதான் தப்பானவன். இவ அவனுக்கு மேல இருக்குறா பாரேன். நம்ம வீட்டு ஆம்பளைங்களையும் விடுறதில்ல. அன்னிக்கி அப்டித்தான ராஜி புருசன திட்டினா...” எனப் புரணி பேசினோம். நாங்கள் குடும்பப் பெண்கள் அல்லவா? லுலூ அல்லவே?

ஆனால், எங்களுக்குள் பேசிக்கொள்ளாமல் ஒன்றை மட்டுமே அத்தனை பேரும் கவனித்தோம். புன்னகைத்துக் கொண்டோம். லுலூ வந்த பிறகு இப்போதெல்லாம் ஆண்களின் அடாவடித்தனம் கொஞ்சம் குறைந்தே இருக்கிறது. புழக்கடையில் சும்மா நிற்பதெல்லாம் இல்லை. 

ஆணின் மொழி பேசினால்தான் அவர்களுக்குப் புரிகிறது போல. தன் கோவத்தை வெளிக்காட்டுவதற்கும், அதன் மூலம் தன்னை தற்காத்துக் கொள்வதற்கும் சொல்லப்படும் கெட்ட வார்த்தைக்கும், தன் திமிரைக் காட்டவும், அடுத்தவரை இழிவு செய்யவும் மட்டுமே சொல்லப்படும் கெட்டவார்த்தைக்கும் எத்தனை எத்தனை வித்தியாசம்? 

கெட்ட வார்த்தை எதுவாகவும் இருக்கட்டும், கோவத்தை வெளிப்படுத்துதலே இப்போது முக்கியம். இல்லாத அதிசயமாக தன் புருசனைத் திட்டிய கோவத்தையும் மறந்து ராஜி ஏதோ தீனி ஒன்றைக் கிண்ணத்தில் மூடி எடுத்துக் கொண்டு லுலூ வீடு நோக்கி போய்க் கொண்டிருந்தாள்.

பார்வதியுடனான போட்டி தாண்டவத்தில், சிவன் ஒரு காலைத் தூக்கி நின்றாடினாராம். அந்தரங்கம் வெளித் தெரிய, பார்வதி கூசிக் கூனிக்குறுகி, ஸ்தம்பித்து நின்றாளாம். போட்டியில் சிவனே வென்றதாக அறிவிக்கப்பட்டதாம். இது கதை. இப்போது பார்வதிகளும் பதிலுக்கு தாண்டவமாட ஆரம்பித்துவிட்டார்கள் போல. சிவன்கள் கூசிப்போகட்டுமே! குறைந்த பட்சம் இனியும் பார்வதி இதற்கெல்லாம் கூச மாட்டாள் என்றாவது 
உணரட்டுமே! இதுதான் ‘பெண்ணியம்’ என்றால் அட இருந்துவிட்டுத்தான் போகட்டுமே

                    ஹன்ஸா ஹன்ஸா தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்.















கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...