சரவணன் சந்திரன் December 12 at 1:04 PM · -மகிழ்ச்சி என்பது இங்கே விலை போகிற சமாச்சாரம் என்று யூகித்திருக்கிருக்கிறோமா? ஆழமாக விவாதிப்பதென்றால், மகிழ்ச்சி என்று இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிற உணர்வு கைதேர்ந்த கைகளால் உருக்கி உருவாக்கப்பட்ட சரக்கு. கவலைகளை மறந்து எந்நேரமும் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருப்பது. காடுகளில், மலைகளில், ஒரு கோப்பைத் தேநீரில் என சந்தை வழிநடத்தும் இடங்களிலான தேடல் அது. தொண்ணூறுகள் என்றில்லை. எண்பதுகளின் இறுதியில் இருந்தே இந்த மகிழ்ச்சி வணிகம் மெல்ல இந்தியாவிற்குள் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. வறுமையின் நிறம் சிவப்பு என சாக்கடைக்குள் அமிழ்ந்து கிடக்கிற ஆப்பிளை எடுத்து கழிவிரக்கத்தோடு உண்ணும் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் சந்தைச் சரக்கது. எதுவெல்லாம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்? என்னென்ன பரிந்துரைகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன? உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமெனில் மகிழ்ச்சியாய் மலர்ந்து சிரிப்பதற்கு ஒரு கோல்கெட் தேவையாக இருக்கிறது. மெல்ல பின்னோக்கி யோசித்தால், உலகமயமாக்கல் என்கிற கரங்கள் எ...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்