முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Ajith Kumar is the “ASAL HERO” – India Today Cover Story

Source: India Today (Dated: 1-3-2010)

Baahubali 2: The Conclusion (2017) – Tamil & Telugu

      ராஜேஷ்   ‘ஒரு மனிதன், பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள் செய்வார்கள். இதுவரை அப்படித்தான் இருந்துவந்தது. பாஹுபலியின் முதல் பாகத்தில் இதை ராஜமௌலி உடைத்தார். ‘ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் எல்லாம் ஜுஜுபி..அந்தப்பக்கம் போயி விளையாடுங்கடா.. நாங்கல்லாம் டிரெய்னையே விரலை அசைச்சே ரிவர்ஸ்ல ஓட வைக்கும் தெலுங்கு டைரக்டருங்கடா.. இப்பப்பார்டா என் வித்தையை’ என்று சூளுரைத்து, ராட்சத மிருகங்களான கிங் காங், காட்ஸில்லா, டைனோசார், காய்ஜு ஆகியவை மனிதவடிவில் வந்தால் என்னாகும் என்று படம் எடுத்தார். அதுதான் பாஹுபலி 1. பின்னே? கிங் காங் சைசில் உள்ள சிலையை குட்டியூண்டு ஹீரோ அசால்ட்டாகத் தாங்குவது, அருவியின் கீழிருந்து சரசர என்று ஏறி அருவியையே தாண்டுவது என்று காட்ஸில்லாவும் கிங்காங்கும் செய்ததையெல்லாம் ஹீரோவ...

மீன்காரி

  ஷாலின் மரிய லாரன்ஸ்   நான் ஆங்கிலோ இந்தியன் கான்வென்டில் படிக்கும் காலத்தில் பெண்கள் மற்ற பெண்களை கீழ்த்தரமாக சித்தரிக்க வேண்டுமென்றால் "Fisher woman " (மீன்காரி ) என்று அழைப்பார்கள். சில வருடங்கள் முன்பு வரை கூட ஒரு விதமான கொண்டை அணியும்போது எனது சில கார்பொரேட் நண்பர்கள் "மீன்காரி கொண்ட " என்று அடிக்கடி கிண்டல் செய்வது வழக்கம் அப்பொழுது கூட நான் அதைப் பற்றி பெரிதாய் சிந்தித்து இல்லை . ஆனால் சமூகநீதிக்காக பாடுபட ஆரம்பித்ததிலிருந்து விளிம்பு நிலை மனிதர்களின் ,ஒடுக்கப்பட்டவர்களின் தோற்றத்தை வைத்து இழிவுபடுத்துவது மிகப்பெரிய அட்டூழியங்களில் ஒன்று என்று அறிந்துகொண்டேன் .அதிலிருந்து தோற்ற ரீதியிலான சாதிய /வர்க்க அடக்குமுறைகளை இன்று வரை எதிர்த்துப் போராடி வருகிறேன் . எனக்கு மீன் அதிகம் பிடிக்கும் என்பதால் மெரினாவில் கலங்கரை விளக்கம் அருகிலிருந்து துவங்கும் மீன் மார்க்கெட்டில் (நொச்சிக்குப்பம்) மாதத்தில் இரண்டுமுறை நானே சென்று மீன் வாங்குவது வழக்கம் ,இதன் காரணமாக அங்கே மீன் விற்கும் பெண்களிடம் நல்ல நட்பு உள்ளது எனக்கு . அடித்துச் சொல்கிறேன் ,அவர்களைப்போல் வ...

இந்தியா டுடே செல்வாக்கு படைத்தவர்கள் பட்டியல் 2017 தமிழக பலவான்கள்

Rank 34- RAJINIKANTH// NEW 66 | Actor Rajnikanth   LEADER IN WAITING Because  the BJP wants to tap his phenomenal popularity and fan base that steadily chants 'thalaiva, thalaiva (leader, leader)' every time he makes a public appearance and project him as a potential chief minister in Tamil Nadu post-Jayalalithaa. Because  the prime minister requested that he shoot his next film, 2.0, in India in keeping with the Make in India campaign. The Enthiran sequel will release later this year. Because  even a humanitarian exercise of him flagging off a housing scheme to rehabilitate Sri Lankan Tamils in Jaffna became political dynamite and had to be called off. GOLD STANDARD This one-time Bengaluru bus conductor has eaten wafer-thin gold sheets with his meals given his faith in the Siddha system of medicine, yoga and meditation. GENERATION NEXT Elder daughter Aishwarya, 35, is married to actor  Dhanush ; the younger, Soundarya, 32, is...

சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்

அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்த சசிகலாவின் வாழ்க்கை திரு மணத்துக்குப் பிறகு மாறத் தொடங்கியது. திமுக பின்னணி கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நடத்தி வைத்தார். நடிகையாக தமிழ்த் திரையுலகில் ஜொலித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆதரவுடன் தீவிர அரசியலில் இறங்கி னார். 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட் டார். அரசியலுக்கு புதியவரான ஜெய லலிதாவுக்கு ஆலோசனைகள் வழங்க வும், அரசிய...

பேச மறந்த சூரியன்

கட்டுரை தி. பரமேசுவரி “என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாக மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் சவாரி செய்யலாம். என்னை நீங்கள் நெருப்பிலே தூக்கி எறிந்தால், நான் விறகாக மாறி அடுப்பெரிக்கப் பயன்படுவேன்; நீங்கள் சமையல் செய்து சாப்பிடலாம். என்னை நீங்கள் பாறையிலே மோதினால், வெறும் கல்லைப்போல் பொடியாகிவிடமாட்டேன்; தேங்காய்போலச் சிதறி உங்களுக்குத் தின்பண்டமாக மாறுவேன். ஆகவே தமிழர்களே! என்னை நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; உங்களுக்காகவே பயன்படுவேன்” - இது மு.கருணாநிதியின் பொன்மொழியாகப் போற்றப்படும் வசனம். இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினை காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள், காங்கிரசல்லாத பிற கட்சிகளின் எழுச்சி போன்ற பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் குறிப்பிடத்தகுந்தவை. அக்காலகட்டத்தின் வரலாறு இங்கு இன்னமும் விரிவாகப் பதிவு செய்யப்படாமலும் பொருட்படுத்தப்படாமலும் இருக்கிறது. தமிழகம் உருவான வரலாறு தெரியாமலே இரண்டு தலைமுறைத் தமிழர்கள் வாழ்ந்தும் மறைந்தும் போயினர். இன்றும்கூட அந்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அப்போதிருந்த பிரஜா சோஷலிஸ்ட்...

சென்று வா மகளே… சென்று வா.

18 ஆண்டு கால சரித்திரத்தின் இறுதிப்பக்கங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 27 செப்டம்பர் 2014 ஜெயலலிதா மற்றும் தமிழகத்தின் தலையெழுத்தி திருத்தி எழுதப்பட உள்ளது.  பத்தி பத்தியாக எழுதப்பட வேண்டிய இந்த சரித்திரம், என்ன காரணத்தாலோ, ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய இந்த வரலாறு, பக்கம் பக்கமாக ஊடகங்கள் எழுத வேண்டும்.  ஆனால், கனத்த மவுனம் காக்கின்றன. தலைமுறைகளைக் கடந்து நடக்கும் இவ்வழக்கின் விபரங்கள், இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்காது.  அது இணையம் இல்லாத காலம்.  அதனால் அது குறித்த பல பதிவுகள் இல்லை. ஜெயலலிதாவைப் போல ஒரு மோசமான ஆட்சியாளர் / அரசியல்வாதியை பார்க்கவே முடியாது.  கிட்டத்தட்ட ஹிட்லர் ஆட்சி போலத்தான் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடத்தி வந்தார்.   ராஜீவ் கொலைக்குப் பிறகு, தேர்தல் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்ட பிறகு, நடந்த தமிழக தேர்தலில், திமுக மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவும், ராஜீவ் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட அனுதாப அலையின் காரணமாகவும், மிருக பலத்தோடு ஆ...