இந்தியாவின் மிகப்பெரிய மீடியா கம்பெனியை உருவாக்கியவரின் கதை
நான் காண்பிப்பதைதான் மக்கள் பார்க்க
வேண்டும்; நான் சொல்வதைத்தான் மக்கள்
கேட்கவேண்டும்; நான் கொடுப்பதைதான் மக்கள் படிக்க
வேண்டும்
மீடியா உலகின் தன் இலட்சியம்பற்றி
இப்படி சொன்னவர் யார் தெரிய்மா? கலாநிதிமாறன்.வெறுமனே சொன்னது
மட்டுமல்ல;அதனை நடைமுறைப்படுத்திக்காட்டியதற்கு
இன்றைக்கு ஊடகத்துறையில் பரந்து விரிந்துகிடக்கும் சன் குழுமம் தான் சாட்சி
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடத்தில்
மொத்தம் 33 தொலைக்காட்சி அலைவரிசைகளுடன் 27
உலக நாடுகளிலும் தென்னிந்தியாவிலும் காட்சி
ஊடகத் துறையில் முதலிடத்தில் இருக்கிறது சன்
அமெரிக்காவில் பென்சில்வேனியாவிலுள்ள
யுனிவர்சிட்டி ஆப் ஸ்க்ரான்டனில் எம்.பி.ஏ முடித்த கலாநிதிமாறன் தனது
குடும்பத்தின் "குங்குமம்" பத்திரிக்கையின் பொறுப்பை ஏற்பதற்காக 1980 களில் மத்தியில் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.இருந்தாலும் அவரின்
காதல் தொலைக்காட்சியின் மீதுதான் இருந்தது.தூர்தார்ஷன் மட்டுமே அப்போது இருந்தது.1990 களில் பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் தாராளமயமாதல் கொள்கையினால்
தனியாருக்கு திறந்துவிடப்பட்ட போது கலாநிதிமாறனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன்
பின் நடந்தது எல்லாம் அவருக்கு தொட்டட்தெல்லாம் பொன்
இன்றைக்கு கலாநிதிமாறன் தொட்டதெல்லாம்
பொன் என்கிறார்கள்.ஆனால் அன்றைக்கு அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு முயற்சியும்
அவருக்கு தோல்வியையும் நஷ்டத்தையுமே பரிசாகக் கொடுத்தன.ஒவ்வொன்றிலும் கிடைத்த
அனுபவம் மட்டுமே அவர் கண்ட பலன்."தமிழன்" என்ற பெயரில் முதன்முறையாக
முழு வண்ணத்தில் ஒரு நாளிதழ் கொண்டுவந்தார்,மூன்றே மாதங்களில் பெரும் வீழ்ச்சி கண்டது அந்த பத்திரிக்கை.பெரும்
செலவு.எக்கச்சக்க நஷ்டம்.அடுத்து கம்ப்யூட்டருக்கான லேசர் பிரிண்டர் விற்பனை
செய்தார் லாபம் ஒன்றுமில்லை. அப்போது இந்தியா டுடே நடத்தும் "நியூஸ் ஸ்ட்ரோக்
"வீடியோ கேசட் போல தமிழில்
செய்தார்."பூமாலை" வீடியோ கேசட்டுகள் பைரசி திருட்டால் தோல்விமாலை ஆனது.
அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போன
கலாநிதி, தொழில் சிந்தனைகளால் எல்லாம் மூட்டை
கட்டி வைத்துவிட்டு ,குங்குமத்திலேயே காலத்தை
ஓட்டியிருக்கலாம்,அவர் என்ன செய்தார்?
பிஸினஸ் பண்ணணும் .ஆனா குறிப்பா
இதுதான் செய்யணும்கிற யோசனை எதுவும் எனக்கு முதலில் இல்லை.படிப்பு முடிஞ்சதும் அப்போவோட குங்குமம் பத்திரிக்கையில்
சேர்ந்தேன்.அப்படியே மெள்ள ஒவ்வொரு செக்சன்லயும் வேலை பார்த்து அந்த நிறுவனத்தின்
எம்.டி ஆனேன்.ஒரு கட்டத்துல,பத்திரிக்கையோட விற்பனையில் தேக்கம் வர
ஆரம்பிச்சது.அதுக்குக் காரணம் டிவியோட ஆதிக்கம்னு தெரிய வர அப்ப ஒரு பொறி
கிளம்பிச்சு!
பூமாலைனு ஒரு வீடியோ பத்திரிக்கை ஆரம்பிச்சோம்.21
பேர் தான் டீம்,ஒரு பத்திரிக்கையை பேட்டி ,நாடகம் , நியூஸ்,சினிமானு அப்படியே 3 மணி நேரம் ஓடுற வீடியோ காசேட்டாகத் தயாரிச்சு அதை மார்க்கெட்
பண்ணினோம்.அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.ஆனால் யார் யாரோ லாபம்
பார்க்க...எங்களுக்கு அதுல ஒண்ணுமே இல்லை.
தனியார் டீவிங்கிறது அப்போ புதுசான விஷயம்.ZEE,ATN ரெண்டே கம்பெனி வந்தாங்க.நாங்க அவங்களோட காண்ட்ராக்ட
பேசினோம்"எங்களுக்கு ஒரு மூணு மணி நேரம் கொடுங்கனு ஒரு ஓப்பந்தம். ஜீ டிவி
ஆர்வம் காட்டலை. ATN சம்மதிச்சாங்க என்று ஒரு பேட்டியில் சொன்னார் கலாநிதி
1993 ஏப்ரல் 14 (சித்திரை முதல் நாள்)
மாலை 6 மணி
பத்திரிக்கை நிருபர்கள்
கூடியிருந்தார்கள்.ஒரு தொலைக்காட்சிப் பெட்டி அவர்கள்முன் வைக்கப்பட்டிருந்தது
இதோ அதோ என்று கலாநிதியும் அவர் டீமும்
குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
6.00
6.30
7.00 என மணி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது
ஆனால் டீவியில் ஒளிபரப்பு தொடங்கியபாடில்லை
இப்போது போல அன்றைக்கு செல்போன்
வசதிகள் இல்லை .மும்பைக்கு டிராங்கால் போட்டு பார்த்தால் எதிர்முனையிலிருந்து
பதிலே இல்லை.என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை,நேரம் ஓட,ஓட திகிலாகி
நின்றார் கலாநிதி. அடடா. ஏமாந்துபோய்ட்டோமா ! டிவி ஆட்கள்னு,வேற யாரோ நம்மை
ஏமாத்திட்டாங்களா? இப்படி தாறுமாறாக யோசித்து அவர் குழம்பிக்கொண்டிருந்தார்.
காத்திருந்த பத்திரிக்கையாளர்கள்
கலைவதற்கு ஆயத்தமாயினர்.கலாநிதியின் மொத்த டீமும் பதற்றத்தின் உச்சத்தில்
இருந்தது.
சரியான இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகத்
தொடங்கியது சன்டீவியின் தமிழ்மாலை
.சன் டிவி ஆரம்பமானது அப்படித்தான்
அதன் பிறகு நடந்தது எல்லாம் வரலாறு.
நான் பெர்சனலாக ஒரு திமுக காரன் தான்
அதுல மாற்றம் இல்லை. ஆனால் சன்டிவி எப்போதும் திமுக மீடியா அல்ல.அதில் குழப்பமே
கிடையாது( ஆனந்த விகடன் 1999 பேட்டியில்)
உங்களோட இன்ஸ்பிரேசன் யார்?
எங்க தாத்தவும் (கலைஞர்).அப்பா
முரசொலிமாறனும் தான்!
தாத்தா ஒரு அற்புதமான போராளி.அவர்
எப்போதும் தன் முயற்சிகளை கைவிட மாட்டார்.எத்தனையோ தோல்விகள் வந்தாலும் தாண்டி
போயிட்டே இருப்பார்.ஓர் அரசியல்வாதிங்கறதை மறந்துட்டு ஒரு மனிதரா மட்டும் அவரை
பாருங்க;இந்த வயசுல அவர் உழைக்கிற வேகத்தை,இன்னும் கற்றுக்கொள்கிற ஆர்வத்தை...அந்த துடிப்பு எனக்குப் பெரிய
தூண்டுகோல்!
பின்னாளில்"கட்சி ஆபிஸை என்
பேரன் புகழ்( கலாநிதிமாறனின் செல்ல பெயர்)
கம்ப்யூட்டர் கம்பெனி ஆபிஸ் போல மாற்றி இருக்கான் பாருங்கள்" என்று தாத்தா
கருணாநிதியே வியந்து அண்ணா அறிவாலயத்தில்
நடைபெற்ற கட்சி பொதுக்குழுவில் பாராட்டி
பேசினார் .
அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறா
இருந்தாக்கூட கமா,புல்ஸ்டாப் வரைக்கும் கரெக்டா
இருக்கணும்.எந்த வேலையா இருந்தாலும் அதுல ஓர் ஒழுங்கு இருக்கணும்,கச்சிதம் வேணும் எதிர்பார்ப்பார்.அந்த கண்டிப்பு எனக்கு இப்போ
உதவுது!"
இளைஞர்களுக்கு கலாநிதிமாறன் விஜய் டிவி பேட்டியில் சொன்னது
1 மனதை திறந்து வையுங்கள். பெரிதாக சிந்தியுங்கள்.குறுகிய
வட்டத்துக்குள் எதையும் செய்ய வேண்டும் என எண்ணாதீர்கள்
2. அடுத்தவரிடம் வேலை செய்வதைத் தாண்டி நம்மால் 10 பேருக்கு வேலை
கொடுக்க முடியுமா என்று சிந்தியுங்கள்.
3. எல்லோரும் செய்கிற வேலையை நீங்களும் செய்யாதீர்கள்.அவர் பண்ணினார்
வெற்றி அடைந்து விட்டது.அதனால் நாமும் அதையே செய்வோம் என்று
முடிவெடுக்காதீர்கள்.உங்களுக்குப் பிடித்த புதிய விசயங்களை கண்டெடுங்கள்.மற்றவர்களிடம்
இருந்து தனித்துவம் மிக்கவராக வெளிப்படுங்கள்.
4 கடின உழைப்பு அதுதான் அடிப்படை
கலாநிதிமாறன் சன்டிவி நிர்வாக
இயக்குநர்.1999 வருடத்தின் இளம் தொழில்
சாதனையாளர்"என்ற சர்வதேச விருதைப் பெற்றவர்.ஒரு இந்தியர் இந்த விருதை பெறுவது
இதுவே முதல் முறை.
"40 வயதுக்குட்பட்டவராக இருக்கணும்
குடும்பத் தொழில் என்று இல்லாமல் புதிய முயற்சியாக இருக்க வேண்டும் இந்த
விருதுக்கு இந்தியாவிலிருந்து போட்டியிட்ட 40 தொழில் அதிபர்களில் கலாநிதி வென்றார்.
நுழைந்தார் அதிர்ந்தது
2005 தமிழ் ஊடக உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கலாநிதி,திரும்பி
பக்கமெல்லாம் அதுதான் பேச்சாக இருந்தது.
தமிழகத்தில் 3 ஆம்
இடத்திலிருந்த தினகரன் நாளிதழை 350 கோடிக்குமேல் கொடுத்து கைப்பற்றினார் கலாநிதி.அதன் டீலீங்கை யாரும்
அறியாத ஒரு பனிப்பிரதேசத்தில் முடித்தார் .இத்தனைக்கும் அப்போது முதலிடத்தில் இருந்த
தினத்தந்தியின் உறவினர் கே பி கந்தசாமியின் பத்திரிக்கைதான் தினகரன்.ஏற்கனவே
குங்திகுமத்தை "பெஸ்ட் கண்ணா பெஸ்ட்"என்று விளம்பர படுத்தின ஆனா
டெக்னிக்குடன் தினகரன் விற்பனையை அதிகரிக்க புது உத்தியை கையாண்டார் கலாநிதி 20 பக்க வண்ண இதழாக தினகரனுடன் கூடவே இலவச பொருட்களை வாரி இறைத்தார்.6 மாதங்களில் 10 இலட்சம்
பிரதிகளுடன் தினகரன் தமிழின் நம்பர் ஓன் நாளிதழானது.தினந்தந்தியும் தினமலரும்
ஆட்டம் கண்டன....அது போல தமிழில் தமிழ் முரசை 20 பக்க டேபாப்ளைடு வடிவமைப்புடன்அளித்து
1 ரூபாய் இதழுடன் 5 ரூபாய் பேனாவை பரிசாக அளித்தார் மலையாளிபோல பேப்பர் படிக்க தனி தொகை
ஒதுக்காமல் டீக்கடை சலூனில் ஓசியாக படிக்கும் பாமர மக்கள்கூட வாங்கி
படித்தனர்.இவ்வாறு அச்சு ஊடகங்களில் முதலிடம் பெற்றார் கலாநிதிமாறன்
கலாநிதியின் மறுபக்கம்
தமக்கு நெருக்கமான ஏழு எட்டு பேர்
அதாவது ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாளர்க்கு மட்டுமே சம்பளத்தையும் வசதிகளை வாரி இறைப்பார் அவர்கள் 5 ஆயிரத்துக்கும் 10 ஆயிரத்துக்கும் ஆட்களை எடுத்து வேலை
வாங்க வேண்டும்..இதை யாரிடமிடம் கேட்டாலும் சொல்வார்கள்..அவருக்கு வேண்டியது நெம்பர் ஓன் இடம்.சம்பள உயர்வு கேட்டால் புதிய
ஊழியர்களை எடுப்பார். அப்போதுதான்
புதுப்புது சிந்தனைகள் உள்ளே வரும் என்பது கலாநிதியுன் சித்தாந்தம் .நண்பர்களுக்கு
வெற்றியில் பங்குகொடுத்தவர் ஊழியர்களை
பலம் என்று ஒரு போதும் சொன்னதில்லை, 1990 களில்
பூமாலையில் துவங்கிய கலாநிதிமாறனின் ஆரம்பம்,திமுகவின் பின்புல உதவி இல்லாமல் சன்டிவியை உருவாக்கி இருக்க
முடியாது சேனல் துவங்க டெபாசிட் செய்ய திமுக கணக்கு வைத்திருக்கும் இந்தியன்
வங்கியிருந்து 80 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது என
கூறப்படுகிறது ,திமுகவை பின்னணி சக்தியாகக் கொண்ட
ஆரம்ப வளர்ச்சியை சந்தித்தது சன்டிவி.ஒரு கட்டத்தில் சுயமாக நிற்கும் பிசினஸ்
சாம்ராஜ்ஜியமாக உயர்ந்தாலும் அதற்கான அஸ்திவரமாக இருந்த கேபிள் தொழில் ஏகாதிபத்தை
எட்ட திமுகவின் பின்புலம் உதவியது.இந்தியாவின் அதிக லாபம் கொண்ட டிவி நிறுவனமாக
சன்டிவி உயர்ந்ததன் ரகசியம் எஸ்.சி.விதான் போட்டி சேனல்களை வளர விடாமல் தடுப்பதில்
முக்கிய பங்கு வகித்த ,தனது சேனல்களை மக்களிடம் சென்றடைய உதவிய எஸ் சிவின் ஆதிக்கம் அரசு
கேபிளால் ஜெ யால் கொஞ்சமாவது அடி
வாங்கியது எனலாம்.எனினும் சுமங்கலி கேபிள் விசன் மூலம் தமிழக கேபிள் தொழிலில் ஆதிக்கம்
செலுத்திகிறார் கலாநிதி. 2012 அவரது மறு ஏற்றத்தின் முக்கியமான அடையாளமாக ஹைதராபாத் அணியை வாங்கி
ஐபிஎல்லில் கால் பதித்தார் .நெருக்கடிகளை மீறி புதிய தொழிலில் நுழைவதில் பயந்தோ தயங்கிதோ இல்லை ஹைதராபாத் அணியை 85.05 கோடிகள் கொடுத்து வாங்கி ஐபிஎல்லில் நுழைந்தார்
.ஏர்செல் மார்சிஸ் ,சிபிஐ தொடந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது ஆனால்
கடைசி தீர்ப்பில் போதிய ஆதாரம் இல்லை என காரணம் காட்டி மாறன் சகோதரர்களை விடுதலை
செய்தது மாறன்களின் செல்வாக்கு மீண்டு வருவதை காட்டுகிறது.
தமிழில் முதல் நியூஸ் சேனல் சன் நியூஸ்
தான் ,ஆனால் புதியதலைமுறை,பாலிமர் சேனல்களின் வருகையால் ஆதிக்கம் வீழ்ந்தாலும் பணத்தைக்
கொட்டும் பொழுதுபோக்கு சேனல்களில் மக்களின் நம்பர் 1 ஆக திகழ்கிறது. இவர் மனைவி காவிரி கலாநிதிமாறன் தான் நாட்டில் அதிக
சம்பளம் பெறும் எக்சியூடிவ் எம்.டி( 65 கோடி
ரூபாய்)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் “போர்பஸ்” என்ற வார இருமுறை செய்தி ஏடு 1917ல் துவங்க
பட்டது. அது பொருளாதார வியாபார விவரங்களை வெளியிடும் பத்திரிக்கை. உலகில் முக்கிய
நாடுகளை பற்றி ஆராய்ந்து ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் ஆண்டு வருமானம் நிதிநிலைமை
ஆகியவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து வெளியிடுகிறது.
1987 முதல் ஓவ்வொரு ஆண்டும் உலகின் பல நாடுகளில் உள்ள செல்வந்தர்களின்
பட்டியலை போர்பஸ்” வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியலில் ஒருவர் சேர்க்கப்படுவதற்கு
அவருடைய நிர்வாகத்தில் உள்ள சொத்து மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு பில்லியன் அளவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். 1 பில்லியன் எனபது 100 கோடி ரூபாய்
2017ல் அளவில் ரூபாய் மதிப்பு 64 என்றால் இந்திய
மதிப்பிட்டில் 6400 கோடி ரூபாய் ஆகும்.
25 ஆண்டுகளுக்கு
முன்னால் இந்தியர் யாரும் இடம்பெற வில்லை.1997ல் ஆரம்பித்து ஜி.டி பிர்லா குடும்பம்
ஒன்று மட்டும் தொடர்ந்து பில்லியனர் பட்டியலில் இடம்பெற ஆரம்பித்தது. 2017ல் போர்ப்ஸ் பட்டியல் வெளிவந்துள்ளது. அதில் சென்னையில் இருப்பவர்
கலாநிதிமாறன் 4.5 பில்லியன் ரூபாய் 28 800 கோடி
திமுக பிதாமகர் அறிஞர் அண்ணா ஒருமுறை
சொன்னார். “எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் துணிக்கோடியும்,தெருக்கோடியும்தான் "என்று.அண்ணா உருவாக்கிய கட்சியில் இன்றையே
தலைமையே கூட உலகக்கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்றால் அந்த
புகழ் கலாநிதிமாறனைத்தான் சாரும். மாறன் மீது
எல்லாவித விமர்சனங்களும்,ஊழல் புகார்கள் ,குற்றசாட்டுகள் இருந்தாலும் கூட ஒரு தமிழராக தென்னிந்திய காட்சி
ஊடகத்தில் முடிசூடா மன்னர் கலாநிதிமாறன்.கூர்மையான அறிவு,தொழில்நுட்ப தெளிவு.போட்டியாளர்கள் வளரவிடக்கூடாது என்ற வெறி,அரசியல் அதிகாரம்,வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வேகம்
அனைத்தும் சேர்ந்து குறுகிய காலத்தில் தென்னிந்தியாவில் மிகப்பெரிய மீடியா மன்னராக
ஆகியுள்ளார் கலாநிதி அவருக்கு வானமே எல்லை..!
"சூரியன் எப்போதும் நம்பர் ஓன் தான்,மேகமூட்டம் வரலாம்.மழைபெய்யலாம்,புயல் அடிக்கலாம்; ஆனாலும் சூரியன் தான் எப்போதும் நம்பர் ஓன்".
கலாநிதி மாறன் சொன்ன சூரியன்,'சன்டிவி' என்பது சொல்லித் தெரியவில்லை!
மகேஸ்வரன் பாண்டியராஜ்
கட்டுரையாளர், ஊடக ஆர்வலர்.
தொடர்புக்கு maheshwarag20@gmail.com
.
கருத்துகள்
கருத்துரையிடுக