புகைப்படம் சித்தரிக்கும் நோக்கில்
நைட்டி என்ற உடை எனக்கு பிடிக்காது என்றுதான் சொன்னேன் ..தவறு சரி என்று வாதிட வரவில்லை.
என்னைப்பொதுத்தவரை நைட்டி ,ஹவுஸ் கோட் என்பது இரவு நேரங்களில் ரிலாக்ஸ்டாக உறங்குவதற்காக அணிந்து கொள்ள வேண்டிய ஒரு அங்கி ..ஆனால் அதை சிலர் நாள் முழுதும் அணிந்து கொள்ளும் விதம் தான் முகம் சுளிக்க வைக்கிறது.

இரவு நேரங்களில் மட்டும் அணிந்து கொள்ள வேண்டியதை நாள் முழுதும் அணிந்து கொண்டு சிலருக்கு உடல் பிரியா உடை ஆகி விட்டது நைட்டி என்றே சொல்லலாம்.
மார்கெட்டுக்கு செல்வதில் தொடங்கி குழந்தைகளைப் பள்ளிக்கு ஸ்கூட்டியில் கொண்டு போய் விடுவது வரை சகலமும் நைட்டியில் தான் ..தீபாவளி பொங்கலுக்கு புது புடவை சுடிதாருடன் புது நைட்டியும் வாங்கிக் கொள்ளும் பல பெண்கள் நைட்டியின் ரசிகைகள்..
நைட்டி போடலாம் ..
நைட் மட்டுமே படுக்கை அறையில் மட்டும் போட்டால் எப்படி வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் ..வாசல் தாண்டியும் நைட்டியைப் போட்டு வலம் வருகிறவர்கள் கண்டிப்பாக கவனமாக அணிய வேண்டும் ..நம் சவுகர்யத்திற்காக போடும் உடை அடுத்தவரை முகம் சுளிக்க வைக்கக் கூடாது .

மூச்சு முட்டற அளவுக்கு இறுக்கம்,லோ கட் நெக் ,டிரான்ஸ்பரண்ட் துணின்னு ஏடாகூடமா நைட்டில அதிர்ச்சி தருபவர்கள் இருக்கிறார்கள்.
சமையலறையின் மொத்த அழுக்கையும் நைடியில் ஏத்திகிட்டு வர்றவங்க இன்னொரு ரகம்..சமையல் செய்யும் போது பாத்திரம் கழுவி கையை நைட்டியில் துடைத்து துடைத்து தொடைப் பகுதியில் அழுக்கு படிந்து சிலருக்கு நைட்டி துணி அந்த பகுதியில் நைந்தே போய்ருக்கும்..

போதாக் குறைக்கு சில நைட்டிகள் அங்கங்கே தையல் பிரிஞ்சு கேவலப்படுத்தும் .
நைட்டி போடலாம்
ஆனா இப்டிலாம் போடறதை தவிர்க்கலாம்...நைட்டியோட வெளியே போறதை தவிர்க்க முடிலன்னா நைட்டிய கொஞ்சம் நாகரிகமாவாச்சும் போட்டுட்டு போலாம் ..உள்ளாடை கூட அணியாமல் நைட்டியைப் போட்டுகிட்டு அதை மறைக்க மேல் அழுக்கு துண்டையோ துப்பட்டாவையோ போட்டுகிட்டு கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தாமல் இருக்கலாம்

ஒல்லியாக இருப்பவர்கள் எந்த உடை வேணா போடலாம் ஆனால் குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக கவனமாக அணிய வேண்டும் .தலகாணிக்கு உறை மாட்டுவது போல் மாட்டிக் கொள்வதும் உயரமான பெண்கள் முக்கா காலுக்கு நைட்டி போட்டுகிட்டு அலைவதும் பார்ப்பவர்களை அறுவருக்கவே வைக்கும் ..
என் உடை என் உரிமைன்னு பெண்ணியம் பேசுபவர்கள் நிச்சயமாக இம்மாதிரி நைட்டி அணிவது கண்ணியம் என்று வக்காளத்து வாங்காதீர்கள்..நைட்டியும் லாங் கவுன் மேக்சிதான் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள்..வேட்டிக்குள் சில ஆண்கள் அணியும் அன்ட் ராயரும் முழங்கால் வரை தான் இருக்கும் அதனால அதுவும் பெர்முடாஸ் ஷார்ட்ஸ்ம் ஒன்றாகிவிடுமா ? நீளமாதானே இருக்குன்னு அதை போட்டுக் கொண்டு வலம் வரும் ஆண்கள் மீது உங்களான அபிப்ராயம் என்னவாக இருக்கும் ? ரெஸ்பெக்ட் வருமா ? வராதுதானே அப்படித்தான் நைட்டியும்..அந்த அந்த இடத்த்திற்குன்னு அந்தந்த உடை இருக்கு அவ்வாறுஅணிந்து கொள்வது தான் நாகரிகம் அழகு கண்ணியம் இது இரு பாலருக்கும் பொருந்தும்.
வீட்டுக்குள்ள இருக்குற வரைதான் நமக்கு பிடித்த உடை..வாசல் தாண்டிட்டா உடைங்றது பல பேர் சம்பந்தப்பட்டது.அத அத எங்கே போடறோமோ அப்பதான் ஆடைக்கும் அழகு அணிபவருக்கும் மதிப்பு..Dress is always a dialoge of Good manners
#கொசுறு டிப்பு ..பெண்களே உங்கள் உடல் கட்டுக் கோப்புடன் இருக்க வேண்டும் என்றுவிரும்புகிறீர்களா .. நாள் முழுதும் நைட்டி அணியாதீர்கள்..ஏனெனெனில் நைட்டி உடல் சதைகளை லூசாக்கி பெருக்க வைத்து விடும் இடுப்பு ,பின் புறம் அடி வயிறு ,மார்பு சதைகளை இழுத்துக் கட்டும் போதுதான் சதை தளர்ந்து போகாமல் இருக்கும் ..ஆக நைட்டி போடும் பெண்களுக்கு அழகான உடல் அமையாது..நைட்டியை விட லெக்கின்ஸ் சிறந்த உடை ..
;-)
:-)

#டிஸ்கி நைட்டி போட்டா நல்லா இல்லைன்னு சொல்லல நைட் மட்டும் போட்டா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்
கருத்துகள்
கருத்துரையிடுக