திருமணத்தில் தோல்வி என்றால் விவாகரத்து செய்வது என்று நினைக்கிறோம்.. உண்மையில் அப்படி அல்ல, மனம் உடைந்து குழந்தைகளுக்காக சேர்ந்து இருக்க நிர்பந்திக்கும் வாழ்க்கை வாய்ப்பதுதான் திருமண தோல்வி.. விவாகரத்து என்பது ஒரு வகையில் விடுதலை., அதை தோல்வி என்று சொல்தல் தகாது., அப்படிப் பார்த்தால் இங்கு நூற்றுக்கு.. இல்லை இல்லை நூறுமே தோல்வி திருமணங்களா? ஆம்! தோல்விதான் அந்த தோல்வியை எப்படி கையாண்டு மீள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது மிச்ச வாழ்வின் சுவாரஸ்யம்., கல்யாணம் என்றதும் எல்லா நண்பர்களும் ஆழ்ந்த அனுதாப வாழ்த்துகளை பகிர்ந்து ''மாட்டிக்கிட்டான்'' என்பது போல சொல்வார்கள்., அதை வேடிக்கையாக கடந்துவிடுவதே அப்போது நடக்கும்., அல்லது அவர்களுக்கு வாழத்தெரியவில்லை நாம் அப்படியெல்லாம் இருக்கக்கூடாது நமக்கு அப்படி எல்லாம் ஆகாது என்று நம்பிக்கொள்வார்கள் ஆண்கள்; கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் பெண்ணை திடீரென கல்யாணத்தில் தள்ளுவது ஒருவகை, 24 25 வயதுகளில் பெற்றோருடன் இருந்த வாழ்க்கை போரடித்து அடுத்து என்ன? கல்யாணம்! என்று விரும்பிச் செய்பவர்கள் ஒருவகை.;, பெரும்பாலான பெண்களின் கணவனு...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்