திருமணத்தில் தோல்வி என்றால் விவாகரத்து செய்வது என்று நினைக்கிறோம்.. உண்மையில் அப்படி அல்ல, மனம் உடைந்து குழந்தைகளுக்காக சேர்ந்து இருக்க நிர்பந்திக்கும் வாழ்க்கை வாய்ப்பதுதான் திருமண தோல்வி.. விவாகரத்து என்பது ஒரு வகையில் விடுதலை., அதை தோல்வி என்று சொல்தல் தகாது., அப்படிப் பார்த்தால் இங்கு நூற்றுக்கு.. இல்லை இல்லை நூறுமே தோல்வி திருமணங்களா? ஆம்! தோல்விதான் அந்த தோல்வியை எப்படி கையாண்டு மீள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது மிச்ச வாழ்வின் சுவாரஸ்யம்.,
கல்யாணம் என்றதும் எல்லா நண்பர்களும் ஆழ்ந்த அனுதாப வாழ்த்துகளை பகிர்ந்து ''மாட்டிக்கிட்டான்'' என்பது போல சொல்வார்கள்., அதை வேடிக்கையாக கடந்துவிடுவதே அப்போது நடக்கும்., அல்லது அவர்களுக்கு வாழத்தெரியவில்லை நாம் அப்படியெல்லாம் இருக்கக்கூடாது நமக்கு அப்படி எல்லாம் ஆகாது என்று நம்பிக்கொள்வார்கள் ஆண்கள்;
கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் பெண்ணை திடீரென கல்யாணத்தில் தள்ளுவது ஒருவகை, 24 25 வயதுகளில் பெற்றோருடன் இருந்த வாழ்க்கை போரடித்து அடுத்து என்ன? கல்யாணம்! என்று விரும்பிச் செய்பவர்கள் ஒருவகை.;, பெரும்பாலான பெண்களின் கணவனுக்கான உருவம் சார்ந்த எதிர்பார்ப்பு -'' மாநிறம், குட் லுக்கிங், fit உடம்பு, இப்படியாக தான் இருக்கும்
எல்லாமும் தாண்டி ஒரு பொது எண்ணம், தன் பின்னாலேயே கணவன் சுற்றவேண்டும் என்பது, இதுதான் உச்ச பட்ச கனவு, கல்யாணத்திற்கு முன்பே இந்த ஆண்கள் புடவை கம்மல் என்றெல்லாம் வாங்கித்தருவார்கள், அப்போது சக கல்யாணம் முடிந்த தோழிகள் சொல்வார்கள் 'இப்போதே வாங்கிக்கொள், கொஞ்ச நாள் கழிச்சு நாம கேட்டாலும் வாங்கி தரமாட்டாங்க'' அப்போது தோன்றும் எண்ணம் '' இவ என்ன பாடு படுத்தினாலோ அவ புருசன., அதான் இப்படி சொல்றா'' ஆனா நாம அப்படி இருக்கக்கூடாது கணவனை எந்த காரணம் கொண்டும் கஷ்டப்படுத்திவிடவே கூடாது அவன் மனதிற்கு பிடிதமானவளாகவே எப்போதும் இருக்கணும்..

ஆச்சா/ அடுத்து கல்யாணம்.
ஒரு புதுமணத்தம்பதிகளை எடுத்துக்கொள்ளுங்கள் அவர்கள் வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்., எப்பவும் கொஞ்சல் சீண்டல் சில்மிஷம் கல்யாணம் பற்றிய புரிதல் இல்லாமல்; சிறு குழந்தைகளின் செப்பு சாமான் விளையாட்டு போல அவ்வளவு அழகியல் அதில் இருக்கும், கொஞ்சம் வேடிக்கையாகவும்.,
ஒரே கலரில் டிரஸ் போட்டுக்குவாங்க, சங்கேத வார்த்தைகளில் வெட்கம், தங்கப்பரிசுகள்., என்ன செல்லப்பெயர் வைக்கலாம் என்ற ஆராய்சிகள், செல்போன் கான்டேக்ட் நேம்ல டார்லிங், லைஃப், ஹனி, ஹோம்மினிஸ்டர், போன்ற நம்பர் சேவிங்குகள், மனைவியை டா சொல்லி அழைக்க சொல்லுதல், கணவன் டி போடும்போதும் மனைவியின் அகமகிழ்ச்சி, உப்புசப்பில்லாத உரையாடல்,; பாப்பா, தங்கப்பிள்ள, குண்டப்பா, குண்டம்மா, கலந்துகட்டிய அழைத்தல்கள், நிதமும் கூடல், எல்லாமும் சேர்ந்து அதியற்புதமான வாழ்க்கை வாய்த்திருப்பதாக நம்பவைக்கும், புதிய ஒன்றை பெறுதலில் உள்ள ஆரம்ப ஆச்சர்யங்களே இவை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கணவன் மனைவியாக வாழவில்லை கட்டற்ற காதலர்களாக வாழ்கிறிர்கள்..

ஆச்சா ,
இது அத்தனையுமே படிப்படியாகக் குறைவது உங்களை அறியாமலே நிகழத்துவங்கும், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பேசிக்கொள்ள ஊர்க்கதைகள் தவிர்த்து எதுவுமே இருக்காது, தன கணவன் சுயமாக சிந்திக்க மாட்டானோ என்ற எண்ணம் மனைவிகளுக்கும், தன் மனைவிக்கு அத்தனை அறிவு கிடையாது நாம் என்ன செய்தாலும் ஏற்றுகொள்வாள் என்ற எண்ணம் கணவர்களுக்கும் வரும்,
கணவன் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்குவான், வீட்டிற்கு வந்தால் தொலைக்காட்சிக்கு.., ஆரம்பத்தில் வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்த மனைவி தற்போது அதை ஏதோ தியாகமாக செய்வது போல நினைப்பாள்., ''எங்க வீட்ல என்னைய ஒரு வேலையும் செய்ய விடமாட்டாங்க'' என்ற அங்கலாய்ப்புகள் கணவனுக்கு எரிச்சலை தரும்.., சமையலில் குறைகள், மாமியார் நாத்தனாரோடு மனக்கசப்புகள், அப்போது யார் பக்கம் பேசுவது என்ற கணவனின் குழப்பங்கள் கடைசியாக மனைவி மேலேயே விடியும்., கர்ப்பம், வளைகாப்பு, குழந்தை என்று நாட்கள் வேகமாக ஓடும், இப்போது நீங்கள் கணவன் மனைவியாக மாறத்தொடங்கி இருப்பிர்கள்.
குழந்தைகள் வந்த பின் அவர்களை வளர்ப்பதுதான் இந்த திருமணத்தின் கடைசி சுவாரஸ்யம், இப்போது மனைவிக்கு ஒரு எண்ணம் வரும் ''தான் என்ன சாதித்தோம் இத்தனை நாட்களாக, குழந்தை பெற்று உள்ளோம் அது தவிர்த்து தன்னோட கனவுகள் என்ன என்பது பற்றிய ஒரு யோசனை, வேலைக்கு போகலாம் என்று வீட்டில் கேட்டால். முதலில் குழந்தையை வளர்த்துக்கொள் அதற்கு பின் வேலையை பற்றி சிந்திக்கலாம் என்று சொல்வார்கள், தன் வாழ்க்கை மொத்தமாக சீரழிந்துவிட்டதோ என்று தோன்றும் எண்ணத்தை எல்லாம் மழலையின் சிரிப்பில் தான் மறக்கடிக்க முடியும்

காலைல வேலைக்கு போன கணவன் நிறைய நபர்களை சந்திப்பான், அவனோட உலகம் வேறு, சந்திக்கும் நண்பர்களிடத்து தன் மனைவி பற்றிய குறைகள், ஆண்கள் ஒன்று சேர்ந்தாலே மனைவியை பற்றி குறை சொல்லாமல் எந்த கான்வோவும் செய்யமுடியாது, அதில் முக்கியமானது ''இவளை இவ அப்பா அம்மாக்கிட்ட பேசவிட கூடாது அப்படி பேசினால் வீட்ல ஓவரா முரண்டுபிடிக்கறா'' கொடுமை என்னன்னா இதை ரொம்ப ஜாலியா பேசி.., நண்பர்களோடு இருப்பதுதான் சந்தோசம் என்று அவர்களுக்கு அவர்களாகவே ஒரு விளக்கம் கொடுத்துக்கொள்வார்கள்., மனைவிகள் அவர்களின் தோழிகள்
)))) ஹிஹிஹி இங்கயும் அதுதான் நடக்கும் உண்மைய சொல்லணும்னா கல்யாண வாழ்வில் உள்ள மிகப்பெரிய entertainment இது..!
தினமும் ஒரே மாதிரியான வேலைகள் - துணி துவைப்பது, பாத்திரம் கழுவது, சமையல், பாப்பாக்கு ஆய கழுவி, குளிக்க வைத்து, வீடு பெருக்கி, இதே வேலைகளை செய்து செய்து செய்து சலித்து போயிருப்பாள், நாம மட்டும் தான் பெத்தோமா புருசனும் கொஞ்ச நேரம் பார்க்கட்டும்ன்னு அவன் கையில் வேண்டுமென்றே குழந்தையை கொடுத்துப்போவார்கள், கணவர்களுக்கு வீட்டுக்கு வந்தால் அக்கடான்னு படுக்கணும் என்பதே முதல் வேலை, அவர்களால் ரொம்ப நேரம் குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது என்பதே உண்மை., அவர்கள் குழந்தைகளை கொஞ்சுவார்கள் ஆனால் பார்த்துக்கொள்ளமாட்டார்கள்., எப்படியேனும் கணவனிடம் வாயைப்பிடுங்கி தன் மனக்குமுறல்களை கொட்ட வேண்டுமென மனைவி காத்துக்கொண்டே இருப்பாள், நல்லதொரு சாக்காக குழந்தையை வைத்தே சண்டை வரும், அப்படி வரலன்னா ''சனியனே நீயும் ஏன் என்னைய இப்படி படுத்தறன்னு குழந்தையை அடிப்பவர்களும் இருக்கிறார்கள்., வீட்டுக்கு வந்தாலே சண்டை வருதுன்னு வெளியில் நேரத்தை அதிகமாக செலவிட ஆரம்பிப்பார்கள் கணவர்கள்.,

''குழந்தை மட்டும் இல்லன்னா இவளை எப்பவோ தலைமுழுகிருப்பேன்..'',
''குழந்தைக்காக தான் பார்க்கறேன் இல்லன்னா லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்ந்து ஒரு வேலையை பார்த்துகிட்டு இருப்பேன், ''
இப்படி சொல்லும் தம்பதிகள் தான் இரண்டாவது குழந்தையை சீக்கிரம் பெற்றுக்கொள்கிறார்கள், ஆச்சரியத்தின் ஆச்சர்யம் இது,
இத்தனையும் நடந்த பின் ஒருவருக்கொருவர் மிகச்சரியான புரிதலோடு இருப்பார்கள், கணவன் ஒரு செயலை செய்வது எதற்காக என்று மனைவிக்கு நன்றாக தெரியும், அவன் நமக்காகதான் உழைக்கிறான் என்று நன்றாக தெரியும் ஆனாலும் வேலையவே கல்யாணம் செஞ்சு அழ வேண்டியது தானே போன்ற மறைமுக திட்டுகளை தவிர்க்க முடியாது.., போலவே மனைவி பற்றி கணவனுக்கும்., வீட்டு வேலையை பார்க்கிறாள் சப்போஸ் வேலைக்கு சென்றால் அவளுக்கு இன்னும் வேலைகள் அதிகம் எல்லாம் தெரிந்திருந்தும், அதை வியந்து சொல்வதற்கு அவர்களுக்கு வாய் வராது., கணவன் மேல் ஒரு மதிப்பு தானாகவே உருவாக்கி இருக்கும்., எந்த அளவுக்கு என்றால், புதுத்தம்பதிகளாக இருக்கும் போது licking செய்த அதே கணவன் தற்போது அப்படியெல்லாம் செய்யக்கூடாது என எண்ணும் தன் சுகம் தாண்டிய ஓர் உயர்ந்த மரியாதை., கணவனை டா போட்டு கூப்பிட அதிக தயக்கம், (அப்போதின் நேரங்கள் விதிவிலக்கு) கொஞ்சல் கிஞ்சல் எல்லாம் அறவே ஒழிந்து இருக்கும், காரணம் அதில் ஏதோ நடிப்பு இருப்பதாக தோன்றும் அதனால் அது தேவை இல்லை என்ற முடிவு., இன்னது சொன்னால் இன்னது தான் பதிலாக வரும் என்று தெரிந்த பின் உரையாடலில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்?.,
இந்த புரிதலை நம்ம மனசு ஏத்துக்காது அதுவாகவே ஒன்றை டிசைன் செய்யும்,

''நம்ம கூட பேசறதுக்கு புருசனுக்கு விருப்பம் இல்லை, பிடிக்காம நம்ம கூட வாழறாங்க.,''
''இவளுக்கு வேற கதி இல்லன்னு நம்ம கூட இருக்கறதா நெனைச்சுக்கிட்டு இருக்காங்க,
எங்க போவாள்? எங்க போனாலும் இங்க தானே வந்தாகணும் என்ற ஆணாதிக்கம்.,''

''குழந்தை மட்டும் இல்லன்னா இவர் என் கூட இருந்திருக்கவே மாட்டார்''
''இவள் இல்லாமல் என்னால் வாழமுடியாதுன்னு நினைக்கிறாள்''
''நான் அவள் மேல் அக்கறையாக இருக்கிறேன் என்பதை அடிக்கடி நிரூபிக்க சொல்கிறாள்'
'''குழந்தை மட்டும் இல்லன்னா இவள் என் கூட இருந்திருக்கவே மாட்டாள்''
actually இது எல்லாமே பொய் நமக்கு யாரை அதிகம் பிடித்து அவர்களே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோமோ..! அவர்கள் நம்மை உதாசீனம் செய்வதாகவே தோன்றும்., அவர்களை சீண்டிப்பார்த்து அன்பை அவர்கள் வாயாலேயே சொல்ல கேட்க ஆசைப்படுவோம்., ஒட்டுமொத்த வாழ்க்கையோட டிசைனே இதுதான், ஏதேனும் ஒரு விதத்தில் அவர்களை காயப்படுத்திக்கொண்டே இருக்கத்தான் விரும்புவோம், நம் பேச்சு அவர்களை எதுவுமே செய்யவில்லை என்றால் மட்டுமே கோபம் வரும்., அவர்கள் மனதில் நாம் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று நன்றாக தெரிந்திருந்தும் அதை மீண்டும் மீண்டும் செக் செய்து மகிழ்ந்து கொள்ள செய்யப்பட்டவைதான் இவை,
அப்படி ஒன்னும் மகிழ்ச்சிக்காக நான் செக் செய்யவில்லை என்று நம்மை நாமே நம்பவைக்க இணையை நம்மீது அதிக அக்கறை இல்லாதவர்களாக சித்தரிக்கிறோம், தப்பில்ல இது அழகுதான், சண்டைப்போட்டுக்கொண்டே சேர்ந்து வாழ்வோம்,
குறித்த நேரத்தில் வரத்தாமதமாகும் கணவனுக்கு அலைபேசுவதிலும்,
கால்வலி என சொன்னால் தைலம் தேய்த்துக்கொண்டே ''டாக்டர்ட்ட போனா என்ன''வெனக் கோபமுறும் கணவனின் குரலிலும்,
மதிமயக்கிய பெண்களை படுக்கையில் பேசும் கணவனிடம், அவர்களை நினைத்துதான் எனை புணர்ந்தாயா எனக் கேட்க வாய்வராத மனைவியின் புரிதலிலும்,
அக்கறையும் முக்கியத்துவமும் நீங்கள் நினைப்பது போலல்லாமல் காலம்முழுக்க நீளும்.,
எத்தனை பெரிய சண்டையாக இருந்தாலும் மூன்றாவது நபரை கருத்து சொல்ல இல்வாழ்க்கைக்குள் அனுமதிக்காத தாம்பத்யத்தில் -

நீடூழி வாழ்க..!
கருத்துகள்
கருத்துரையிடுக