நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன்.
''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார்.
''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.''
அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் .
15
அம்மா ஒரு நாள் துணிக்கடைக்கு கூட்டிச்சென்றாள். இன்னர் செக்சன் கூட்டிப்போய் அங்கிருப்பவனிடம் உள்பாடி வேண்டும் என்று கேட்டாள். யாருக்கு என்றான். என்னைக்காட்டினாள். சைஸ்? தெரியவில்லை என்றாள். அவன் என் மார்பை தயக்கமின்றிப் பார்த்தான். ஒரு முறை எச்சில் விழுங்கிக்கொண்டேன். அவன் பார்த்தது பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை சரிவர முடிவு செய்யமுடியவில்லை. ஆனால் திரும்பவும் பார்க்கமாட்டானா என்றிருந்தது. டீன்ப்ரா என்று சொல்லிக்கொடுத்தான். கருப்பும் வெள்ளையுமாக மூன்று வாங்கித்தந்தாள் அம்மா.
உண்மையில் ப்ரா மட்டும் போட்டு என்னைக் கண்ணாடியில் பார்ப்பதற்கு எனக்கே வெட்கமாகத்தான் இருந்தது. சிரித்துக்கொண்டேன். அப்போதிருந்து நிமிர்ந்து நடக்க நிறைய ஆசை . அம்மா விடமாட்டாள். எனக்கு தெரியப்படுத்தவேண்டும். நான் ப்ரா போட்டுருக்கிறேன் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். வேண்டுமென்றே ஸ்ட்ராப்பை வெளித்தெரியுமாறு இழுத்துவிட்டுக்கொள்வேன். யாராவது கவனித்து கண்ணைக்காட்டினால் மறைத்துக்கொள்வதும் பின் வெளித்தெரிய வைப்பதும் எனக்கு விளையாட்டாகிப்போனது. ராஜி அக்காதான் முதலில் கவனித்தாள். இது என்ன உனக்கு விளையாட்டா இருக்கா? என்று ஸ்ட்ராப்பை உள்ளிழுத்துவிட்டுத் திட்டினாள். இப்படிச்செய்ய எனக்குப் பிடித்திருக்கிறது என்றேன். உனக்கு மூடா இருக்கா? என்றாள்.. ''அப்படின்னா?'' அதாம்டி ஒரு மாதிரி உடம்புக்குள்ள செய்யுதா? ''ஒன்னும் செய்யல. என்ன செய்யும்?'' பொறுமை இழந்தவளாக காதருகில் வந்து விரல் போடுவியா? என்றாள். அப்போதும் அவள் சொல்லவருவது எனக்குப்புரியவே இல்லை. நான் நடிக்கிறேன் என்றுசொல்லி அதற்கு மேல் அவள் அதைப்பற்றி என்னிடம் எதுவும் பேசவே இல்லை.
உணவு இடைவேளையில் சம்படத்தை கழுவிக்கொண்டிருக்கும் போது நல்லசிவம் அருகில் வந்தான்.
''பெரிய மனுசி ஆகிட்ட போல ''
அந்தரங்கத்திற்குள் நுழைகிறான் என்பது மட்டுமே அந்த வயதில் தெரிந்திருந்தது அதை மறுதலிக்கவும் முடியாது ஏற்கவும் முடியாத நிலை. புன்னகைத்தேன். நல்லாயிருக்கு என்றான். ச்சீ என்றேன். அந்த ச்சீயில் வெட்கத்தை உணர்ந்திருப்பான். இதயம் படபடக்க கிளாஸ்ரூமில் அமர்ந்திருந்தேன். ஆண்கள் டெஸ்க் பக்கத்தில் இருந்து அவன் என்னைப் பார்ப்பதாகத் தோன்றியது. கால் கை விரல்களை இறுக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும்போல இருந்தது. ஜட்டி விளம்பரத்தில் நல்லசிவத்தை குதிரை அருகில் நிறுத்திவைத்தேன்.
''பெரிய மனுசி ஆகிட்ட போல ''
அந்தரங்கத்திற்குள் நுழைகிறான் என்பது மட்டுமே அந்த வயதில் தெரிந்திருந்தது அதை மறுதலிக்கவும் முடியாது ஏற்கவும் முடியாத நிலை. புன்னகைத்தேன். நல்லாயிருக்கு என்றான். ச்சீ என்றேன். அந்த ச்சீயில் வெட்கத்தை உணர்ந்திருப்பான். இதயம் படபடக்க கிளாஸ்ரூமில் அமர்ந்திருந்தேன். ஆண்கள் டெஸ்க் பக்கத்தில் இருந்து அவன் என்னைப் பார்ப்பதாகத் தோன்றியது. கால் கை விரல்களை இறுக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும்போல இருந்தது. ஜட்டி விளம்பரத்தில் நல்லசிவத்தை குதிரை அருகில் நிறுத்திவைத்தேன்.
16
B4U சேனலில் "Aashiq Banaya Aapne'' பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. அம்மா எங்கிருக்கிறாள் என்று தேடினேன். பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். சத்தத்தை குறைத்தேன். டிவியின் வலது ஓரம் நின்றுகொண்டு பாடலைப்பார்த்தேன். அம்மா வந்தால் உடனே சேனலை மாற்றுவதற்கு தயாராக இருந்தேன். முதல்முறையாக பார்த்த காட்சிகள். முத்தம், கழுத்தில் மோப்பம், வெறும்முதுகின் அணைப்பு. எல்லாவற்றையும் மனதில் பதியவைத்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக பாடல் முடியும் வரைக்கும் அம்மா எழுந்தே வரவில்லை. அன்று இரவும் முழுவதும் "Aashiq Banaya Aapne'' மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இம்ரான்ஹஸ்மியின் பெயர் தெரியவில்லை. அவன் என்னை முத்தமிட்டால் எப்படியிருக்கும் என்று நினைத்தேன். கழுத்தில் முகம்பதித்தால், கட்டிப்பிடித்தால் எப்படியிருக்கும். இம்ரான்ஹஸ்மி குதிரையில் வந்தான். மார்புக்காம்புகள் விறைத்து உறுத்தியது. தொட்டுப்பார்த்ததும் அழுத்தச்சொல்லியது. என் கைகள் அவனின் கையாக ஆனது. தவறா சரியா என்று யோசித்து முடிக்கும் வேளையில். என்அவன் கைகள் யோனியைத் தொட்டிருந்தது. அருகில் அம்மா படுத்திருக்கிறாள். உறங்கத்தான் செய்கிறாள். எழுந்துவிட்டால்? அடிப்பாவிமகளே என்று கத்துவாளோ.. அங்கெல்லாம் தொடக்கூடாது அது தவறென்றே பதியப்பட்ட ஒன்றை மீறுகிறேன். புதிய தவறுகள் உடலை நடுக்கும். ராஜியின் ''மூடா இருக்கா'' விரல் போடுவியா'' என்பதின் அர்த்தங்களை விளங்கிக்கொள்ளும் தருணம். ஈரம் கண்டு பயந்து ஒன்பாத்ரூம்தான் போய்விட்டோமோ என்று பாத்ரூம் போயி வந்தேன். அன்று என் உடலை எனக்கு முழுதாகத் தெரியவில்லை. அரைகுறை அவசரத்தில் என்னை நான் கையாண்டேன். அதற்கு பின்னான இரவுகளில் என்னுடல் என் வசமானது. தொடையிருகி, கால்விரல்கள் வளைந்து, வயிறதிர்ந்து, நரம்புகள் பின்னித்தெறிக்க, மங்கலான கண்கள் தெளிவுற்ற பின் காண்பவை யாவும் புதிதாக இருக்கும். புதிதாக இல்லாவிட்டாலும் குறை ஒன்றுமில்லை.
17 - 18
ராஜி அக்காவின் வீடு எங்களுடைய வீட்டை விடப் பெரியது. அவளுக்குத் தனியறை எல்லாம் கொடுத்திருந்தார்கள். இப்படி ஒரு தனியறை மட்டும் எனக்குக் கிடைத்தால் நிர்வாணமாகத்தான் உறங்குவேன் என்று நினைத்துக்கொண்டேன். ராஜிஅக்கா சொன்னாள். '' பசங்க கூட ரொம்ப க்ளோசா பழகாத மது'' அவனுங்க உன்னைய யூஸ் பண்ணிடுவாங்க.. நீ ரொம்ப அழகா இருக்க.. அதான் சொல்றேன். '' இல்லக்கா அப்படிலாம் ஒன்னுமில்ல. ''சரி உன் இஷ்டம்'' பரவால்ல சொல்லுங்கக்கா.. என்றதும். ஒரு கதை சொன்னாள். எங்கோ இருக்கும் யாரோ ஒரு என் வயதையொத்த பெண்ணைப் பற்றிய கதை. இப்படித்தான் அவள் பசங்களோடு நெருங்கிப்பழகும் போது ஒருவன் அவள் மார்பை பிடித்து அழுத்தினான். ''எதற்கு'' என்றேன். அருகில் வந்து அமர்ந்தாள். அழுத்தினாள். உனக்கு இது பிடித்து இருக்கிறதல்லவா? ''ஆமாம்'' அதற்குதான். எங்கோ இருக்கும் அவளை எங்கோ இருக்கும் அந்த ஒருவன் இதழ்களில் முத்தமிட்டான். அவளின் ஆடைகள் களைந்தான். உடலை ஆண்டான். அவனுக்கு ஆணுறுப்பு மட்டும் இல்லை. கதையை முடித்ததும் ராஜி அக்கா என்னுடைய ஆடைகளை தேடி எடுத்துத் தந்து உடுத்திக்கச்சொன்னாள். அடுத்த வாரம் வருவாயா? என்றாள். ''வருகிறேன்''
19
தலைல இடியத்தூக்கி போட்டுட்டாளே பாவிமக என்று அம்மா அரற்றிக் கொண்டிருந்தாள். ராஜியின் அம்மா வந்து நான்தான் ராஜியின் மனத்தைக் கெடுத்துவிட்டதாக குறைகூறி சபித்துச் சென்றிருக்கிறாள். பொம்பளையும் பொம்பளையும் ச்சேய் என்று அப்பா என் கன்னத்தில் அறைந்தார். அரிப்பெடுத்த முண்ட என்று அம்மா ஒரு புதுப்பெயர் எனக்கு சூட்டினாள். போர்வைய மூடி மூடி படுக்கும் போதே நினைச்சேன்டி. கத்தினாள். இரு கொள்ளிக்கட்டைய வச்சு பொசுக்கி விடறேன். வெந்நீர் விறகை கையில் எடுத்தாள். அப்பா தடுத்தார். நான் நிமிர்ந்து கேட்டேன். என்ன தவறு இதில்? அம்மா மேலும் கோபப்பட்டாள். பண்றதெல்லாம் பண்ணிட்டு என்ன தப்புன்னா கேக்கற.. ''அதான் சொல்லு என்ன தப்பு?'' அம்மாவிற்கு பதில் சொல்லத்தெரியவில்லை. போயும் போயும் பொம்பள கூட என்று நிறுத்தினாள். ''அப்போ ஆம்பள கூடன்னா சரியா?'' அவளிடம் பதிலில்லை. கல்யாணம் வேணும்ன்னா சொல்லித்தொலைடி என்று அழுதாள். என் தேவை கல்யாணம் இல்லை என்பதை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. புரிந்துகொள்ளமுடியாதுதான்.
20
திருமணம் முடிந்த நான்காவது மாதம்.. வீட்டிற்கு அம்மா வந்தாள். ஒரு சுற்று பெருத்திருந்தேன். இப்பதான் பூசுனாப்ல இருக்கே என்றாள். மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கேட்டாள். ''மாப்ள உன்னை நல்லா பார்த்துக்கறாரா? சந்தோசமா இருக்கியா?''
எனக்கு அவளிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருந்தது.. ''எப்போது கடைசியாக சந்தோசமாக இருந்தது உன் உடல்?''
வித்தாரக் கள்ளி. திருநெல்வேலி
கருத்துகள்
கருத்துரையிடுக