டாக்டர் கஃபீல் கான் ஆகஸ்ட் 2017ல், உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், 290 பச்சிளம் குழந்தைகள் இறந்தன. இணைப்பு கட்டுப்படுத்த முடியாத ஒரு தொற்றுநோயின் காரணமாக இக்குழந்தைகள் இறந்திருந்தால், நாம் மிக எளிதாக கடவுளை திட்டி விட்டு கடந்திருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைகள் இறந்தது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாத காரணத்தால். எல்லா துர்நிகழ்வுகளிலும், கடவுளர்களின் கற்பனை அவதாரங்களைப் போல, சில மனிதர்கள், கடவுள் செய்ய வேண்டும் என்று நாம் விரும்புவதை நம் கண் முன்னே நிகழ்த்துவார்கள். அவர்கள் மனிதர்கள் என்பதை, நாம் வசதியாக மறந்து விட்டு, இது கடவுள் அனுப்பிய அவதாரமே என்று நாமே இல்லாத கடவுளுக்கு முட்டுக் கொடுப்போம். அப்படி கடவுளின் அவதாரமாக இருந்தவர்தான் டாக்டர் கஃபீல் கான். ஆகஸ்ட் 10 அன்று இரவு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, வெறும் 2 மணி நேரம்தான் தாக்கு பிடிக்கும் என்பதை உணர்ந்த கஃபீல் கான், தன் காரை எடுத்துக் கொண்டு, இரவு முழுவதும் தனியார் மருத்துவமனைகளை அணுகி, ஆக்சிஜன் சிலிண்டர்களை சேகரித்தார். ...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்