-சரவணன் சந்திரன்
விஜய் தொலைக்காட்சியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சமீப காலமாகவே அவரைச் சுற்றி வருகிற அரசியல் சர்ச்சைகள் குறித்துக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். முழுக்கவும் எதிர் மனநிலையில் விதம் விதமான விமர்சனங்கள், விதம் விதமான தொனிகளில் வெளிப்பட்டிருந்தன. இவற்றை உள்வாங்கிக் கொண்ட பின்னணியில்தான் அவரைச் சுற்றி யோசித்துப் பார்த்தேன். பரிந்துரை அல்ல. தொகுத்துப் புரிந்து கொள்கிற முயற்சி.
அரசியல் குடும்பங்களில் உள்ள அடுத்த தலைமுறை இளைஞர்கள் பலரை நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கல்லூரி காலத்து தொடர் சங்கிலி அது. இப்போது உச்சத்தில் இருக்கிற நடிகர் விஜய்யை லயோலா கல்லூரி கூடைப் பந்து மைதானத்தில் வைத்துக் கிண்டலடித்தவர்கள் அவர்கள். அந்த இடத்தில்தான் விஜய் தன்னுடைய முதல் படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் இன்றைக்கு உச்சத்தில் இருக்கிற சூர்யா அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வேடிக்கை பார்ப்பதென்றால் அந்த இடத்தில் நின்று நோட்டம் விடுவது அல்ல. ஏதோ ஒரு வகையில் இந்தச் சூழலுக்குள் இருந்தார்கள். இதே அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கல்லூரி முடிந்த பின்னர் ஆளாளுக்கு ஒவ்வொரு துறையில் உச்சம் தொட்டார்கள். இந்தயிடத்தில்தான் உதயநிதியின் சினிமா பிரவேசத்தைப் பார்க்க வேண்டும். நண்பர்கள் வழியாய் தயாரிப்புத் துறையில் இருந்தவர் சினிமா வணிகத்திற்கு வருகிறார். எல்லோரும் நினைக்கிற மாதிரி அவர் தோல்வியடைந்த சினிமா தயாரிப்பாளர் இல்லை. அவர் நடித்த கதிர்வேலனின் காதல் படத்தை நான் பணிபுரிந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் எட்டே கால் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இத்தனைக்கும் அதை வாங்கிக் கொண்டு விஜய் தொலைக்காட்சிக்காகத்தான் எல்லா விளம்பரங்களையும் செய்து தந்தார்கள். அவர் படத்தை மாறி மாறி விஜய்க்கும் ஜீ தமிழுக்கும் விற்கிற வித்தை தெரிந்தவர் அவர். அரசியல் பின்புலம் இதில் இருக்கிறது என்றால், ஆமாம் இருக்கிறது.
இதே அரசியல் பின்புலத்தைத் துணைக்கு வைத்துக் கொண்டு, பல தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டில் அவரது ரெட்ஜெயண்ட் நிறுவனம் வைத்திருந்தது. நண்பர் ஒருத்தரின் படத்தை அந்நிறுவனம்தான் வெளியிட்டது. அந்நிறுவனத்தின் கோரக் கரங்கள் எந்தளவிற்கு தியேட்டர்களை வளைத்துப் பிடித்திருக்கின்றன என்பதை நேரடியாகப் பார்த்தேன். அவர்கள் கொடுத்ததுதான் கணக்கு. மதுரையில் உள்ள தியேட்டர் ஒன்றிற்கு ஆள் அனுப்பிப் பார்த்தோம். மதியக் காட்சிக்கு முன்னூறு பேர் இருந்தார்கள். கொடுத்த கணக்கென்னவோ அறுபதுதான். இப்படித்தான் இந்தத் துறையில் அவர்கள் செயல்பட்டார்கள். கேட்ட கால்ஷீட் கொடுக்காவிட்டால் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொந்தரவு செய்யப்பட்டனர். நடிகர் அஜீத் பொது மேடையிலேயே மனக்குமுறலை வெளியிட்ட காட்சியும் காணக்கிடைத்ததே?
கொஞ்சம் சுமாராக இருந்தாலே அங்கே ஹீரோவாக நடிக்க வற்புறுத்தத் துவங்கி விடுவார்கள். கேமரா வெளிச்ச ஆசை யாரையும் விட்டு வைக்காது. அதுவும் படப்பிடிப்புத் தளங்களில் கிடைக்கும் போதை ராஜ போதை. அதனால்தான் சினிமா என்பது எல்லோரையும் ஈர்க்கிற குவியமாக இருக்கிறது. பெரிய இடத்துப் பிள்ளைகள் எல்லோருக்குமே அதில் ஒரு கண் எப்போதும் இருக்கும். அதை வெறும் வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடியாது. இரவு பார்ட்டிகளில் நீங்கள் ஐயாயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பவராகக்கூட இருங்கள். இரண்டு படத்தில் நடித்து விட்டு இன்னமும் சொந்தமாக ஒரு கார்கூட வாங்காத சினிமா நட்சத்திரத்திற்குக் கிடைக்கிற கண்சிமிட்டல்கள் ஐயாயிரம் கோடிக்குக் கிடைக்கவே கிடைக்காது. எல்லோரும் மேலே வந்து விழுவார்கள். உடலோடு உடல் உரசி ரம்மியமாய் உலவும் கனவு இடம் அது.
அந்த இடத்திற்குத்தான் உதயநிதியும் தாவ ஆசைப்பட்டார். இடது கையால் ஒதுக்கித் தள்ளுகிறவர் அவர் அல்ல. அவருக்கு ஒரு வியாபாரத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார். தமிழகத்தில் நகரங்களை விட கிராமப்புறப் பகுதிகள் அடர்த்தியானவை. கொங்கு மண்டலத்தில் அவருடைய படங்கள் மற்ற இடங்களை விட நன்றாக ஓடுவதாக தியேட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. இன்றைக்கு நிலையில் ஆர்யாவை விட அதிக வணிகம் இருக்கிற கதாநாயகன்தான் அவர். நடிக்கத் தெரியவில்லை. இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்கிறேன். ஆனால் மற்றவர்களை விட மோசமொன்றும் இல்லை.
இன்றைக்கு காமெடி நடிகராக இருக்கும் சத்யன் கதாநாயகனாக நடித்தார். அவரது முதல் படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். கிடைத்தால் பாருங்கள். அதையெல்லாம் ஒப்பிடும் போது உதயநிதி அவரது முதல் படத்தில் மிகச் சிறப்பாகவே நடித்திருந்தார். முதல் படத்திலேயே ஒருத்தரை நாயகராக மக்கள் ஒத்துக் கொண்டுவிட்டால் மேற்படி பயணத்தைத் தொடரலாம்.
அதில் ரஜினிக்கும் இடமிருக்கிறது. இருபது கோடி ரூபாய் பட்ஜெட் படங்களுக்கும் இடமிருக்கின்றன.
அதில் ரஜினிக்கும் இடமிருக்கிறது. இருபது கோடி ரூபாய் பட்ஜெட் படங்களுக்கும் இடமிருக்கின்றன.
அந்த வகையில் உதயநிதி இன்னமும் பட்ஜெட் ஹீரோதான். அவருடைய வணிகம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவருக்கு என்று ஒரு கொள்ளளவு இருக்கிறது. அவரிடம் போய் ஆஸ்கர் கோப்பையை எப்போது ஏந்தி வருவாய் என்று கேட்கக் கூடாது. அவரே குபுக்கென்று சிரித்து விடுவார். அவர் நகைச்சுவை பாத்திரங்கள் வழியாகவே தன்னை இன்னமும் மக்கள் மத்தியில் இறக்கி கொண்டிருக்கிறார். ஒரு மகிழ்ச்சியான முகத்தை மக்கள் மத்தியில் எளிதில் இறக்கி விடலாம்.
அதனால்தான் அறிமுகமாகிற அத்தனை பேரும் நல்ல ஒரு காமெடி சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்க என்பார்கள். மக்கள் அடிதடியை விட அனுசரணையாக இருப்பவர்களையே அதிகமும் தங்களது குடும்பப் பையன் போல ரசிப்பார்கள். அதில் ஒரு சின்ன இடம் உதயநிதிக்குக் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்காதீர்கள். மக்களிடம் சென்று சேர்க்க முடியாத முகத்தை கோடிகள் கொட்டினாலும் சேர்த்து விட முடியாது.
எத்தனையோ புகழ்பெற்ற நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் ஜொலிக்க வில்லையே? அவர் தன்னுடைய சினிமாவில் ஒரு ஓரத்தில் அவரும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறார். அந்த நட்சத்திர பிம்பத்தைத்தான் திமுக இப்போது பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது.
எத்தனையோ புகழ்பெற்ற நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் ஜொலிக்க வில்லையே? அவர் தன்னுடைய சினிமாவில் ஒரு ஓரத்தில் அவரும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறார். அந்த நட்சத்திர பிம்பத்தைத்தான் திமுக இப்போது பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது.
திமுகவில் இப்போது சொல்லிக் கொள்கிற மாதிரி நடிகர்கள் யாரும் இல்லை. பெரும் நடிகர்கள் களத்தில் இறங்குகிறார்கள். டேமேஜ் கண்ட்ரோல் நடவடிக்கையாக தங்களிடம் இருக்கும் ஒரே அஸ்திரத்தை வீசிப் பார்க்கிறார்கள். அது குத்துமா என்கிற ஆராய்ச்சிகளில் எல்லாம் நான் இறங்க விரும்பவில்லை. அதே சமயம் திமுகவின் மேல் மட்டத்தை செயல் தலைவரின் குடும்பம் சுற்றிப் போர்த்துகிறது. எந்தவித உடைவுகளும் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அவரது குடும்பம் பின்னணியில் இறங்கியிருக்கிறது.
ஒருவகையில் தங்களது கரங்களை கட்சியின் அடிவேர் வரை பரப்புகிற முயற்சிதான். கலைஞர் அதைச் செய்தார். பிற கட்சிகளும் அதைச் செய்தன. ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்த ஆட்கள்தானே இப்போது அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணத்தக்க தலைவர்கள் இதை தங்களுடைய கட்சிகளில் செய்திருக்கிறார்கள். கட்சியின் அடிமட்டம் அதை வெறுத்தாலும் வேறு வழியில்லாமல் காலப் போக்கில் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
அண்ணியார், தம்பியார், அண்ணனார் என விழுந்து கும்பிடும் மரபும் திராவிட மரபுதான். ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படி விழுந்து கும்பிடுபவர்கள் எல்லாம் நம்முடைய சொந்தக்காரர்கள்தானே?
கட்சிக்காரர்களின் கல்யாண வீடுகளுக்கு இவர்கள் போகும் போது வேடிக்கை பாருங்கள். கடவுளைப் பார்த்த மாதிரி சுற்றிப் படர்வார்கள். ஆனால் பொதுமக்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? இன்றைய தேதியில் படித்தவர்கள் இந்தப் போக்கை பெரும்பாலும் ரசிக்கவில்லை. எவன் செய்யல இதை என்று சொல்கிற ஒரு கூட்டமும் இருக்கிறது. பரவாயில்லப்பா அவங்கப்பா மாதிரி மூர்க்கமா இல்லை, சிரிச்ச மேனிக்கு இருக்கான் என்று சொல்கிற கூட்டமும் இருக்கிறது. யூஸ்லெஸ் பெலோஸ் என உமிழ்ந்து விட்டுப் போகிற கூட்டமும் இருக்கிறது.
கட்சிக்காரர்களின் கல்யாண வீடுகளுக்கு இவர்கள் போகும் போது வேடிக்கை பாருங்கள். கடவுளைப் பார்த்த மாதிரி சுற்றிப் படர்வார்கள். ஆனால் பொதுமக்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? இன்றைய தேதியில் படித்தவர்கள் இந்தப் போக்கை பெரும்பாலும் ரசிக்கவில்லை. எவன் செய்யல இதை என்று சொல்கிற ஒரு கூட்டமும் இருக்கிறது. பரவாயில்லப்பா அவங்கப்பா மாதிரி மூர்க்கமா இல்லை, சிரிச்ச மேனிக்கு இருக்கான் என்று சொல்கிற கூட்டமும் இருக்கிறது. யூஸ்லெஸ் பெலோஸ் என உமிழ்ந்து விட்டுப் போகிற கூட்டமும் இருக்கிறது.
இப்படி எல்லாம் கலந்த கூட்டத்தில் எப்படியாவது தக்கவைத்து விடலாம் என்று நம்புகிறார்கள். ஆதரவு எதிர்ப்பு என்பதைத்தாண்டி அது அவர்களுடைய களச் செயல்பாடு.
அந்த வகையில் பார்த்தால், திமுகவிற்கு இப்போது ஒரு நட்சத்திர அந்தஸ்து தேவையாக இருக்கிறது. ஏற்கனவே சொன்ன மாதிரி டேமேஸ் கண்ட்ரோல் நடவடிக்கைதான். அதேசமயம் கட்சியையும் தனது நம்பகமானவர்களை நிரப்பி கட்டுக்குள் வைக்க வேண்டிய காலக் கட்டாயம்.
அந்த வகையில் பார்த்தால், திமுகவிற்கு இப்போது ஒரு நட்சத்திர அந்தஸ்து தேவையாக இருக்கிறது. ஏற்கனவே சொன்ன மாதிரி டேமேஸ் கண்ட்ரோல் நடவடிக்கைதான். அதேசமயம் கட்சியையும் தனது நம்பகமானவர்களை நிரப்பி கட்டுக்குள் வைக்க வேண்டிய காலக் கட்டாயம்.
திமுக தனது அஸ்திரத்தைப் பயன்படுத்திப் பார்க்கிறது. ஹம்மர் கார் வைத்திருந்தவர்தான் அவர். யார் வைத்திருக்கவில்லை என்று சொல்லுங்கள். முந்தாநாள் பிறந்த விவேக் ஜெயராமன்கூட எத்தனை கார்கள் வைத்திருந்தார். அம்பாசிடர் காரில் இவர்கள் போனால், எளிமையின் சிகரங்கள் என்று நம்புவீர்களா? இவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களது அப்பாக்களின் செல்வாக்கில் வளர்ந்தவர்கள். ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் சம்பாதிக்கவே அல்லாடும் பஞ்சப் பாராரிகள் நிறைந்த ஒரு கூட்டத்தில் அவர்களை ஆளும் செல்வச் சீமான்களின் புதல்வர்கள் இப்படித்தான் உலா வருகிறார்கள். காலம் பூராகவும் இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கவே முடியாது. எதிர்காலத்தில் தடுத்து விடலாம்தான். தடுத்து விடலாம் என்கிற மனநிலை மெல்ல சமூகத்தில் மேலெழுந்து வருகிற நேரத்தில், உதயநிதி என்கிற குட்டி நட்சத்திரம் எழுந்து மேலே வர ஆரம்பித்திருக்கிறது. காலம் அதற்குச் சாதகமாக இல்லை. ஆனாலும் வானில் நீந்தியே ஆகவேண்டிய கட்டாயம். மிச்சம் அவர்களுடைய பாடு. மக்களின் பாடு!
கருத்துகள்
கருத்துரையிடுக