இன்றைய நவீன இளைஞர்கள் / இளைஞிகளிடம் அசாத்திய திறமைகள் இருக்கின்றன.நம்ப முடியாத அளவு மெச்சூரிட்டியும் இருக்கிறது.எந்த தயக்கமும் இல்லாமல் 60 வயது ஆளிடம் சரிக்கு சமமாக பேச முடியும். சுதந்திரமாக இருக்கிறார்கள். இந்த ப்ளஸ்களெல்லாம் இருந்தாலும் ஒரு சிறு குறை இருக்கிறது.
சின்ன சின்ன சிக்கல் வந்தாலும் உடனே டிப்ரஷன் என்கிறார்கள். கொஞ்சம் போரடிப்பது போல இருந்தால் ஸ்டிரெஸ் என்கிறார்கள். மூட் ஸ்விங்க் எல்லோருக்கும் இருக்கும் அல்லவா ? கொஞ்சம் மூட் டல்லாக இருந்தாலே ப்ரெஷர் , ஆங்க்சைட்டி என இருக்கும் மன நோய் பெயர்களையெல்லாம் உச்சரிக்கிறார்கள்.
20 வருடங்களுக்கு முன் பொருளாதாரம் டிங்கி அடித்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் , சிங்கிள் டீக்கே வழியில்லாமல் ஒட்டிய வயிறோடு திரிந்து கொண்டிருந்த இளைஞர்கள் நண்பர்களுடன் சேர்ந்து கலகலப்பாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது வர்களுக்கு ஸ்டிரெஸ் , டிப்ரஷன் வந்து இருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தங்களுக்கு வந்தது ஸ்டிரெஸ் , ஆங்க்சைட்டி , டிப்ரஷன் என்பது தெரியாமலேயே அதைக் கடந்து வந்தனர். நண்பர்கள் சூழ இருந்ததும் உதவியாக இருந்தது.
இப்போதைய இளைஞர்களின் பிரச்சனை , நெருங்கிய நண்பர்கள் , நண்பர்கள் குழாம் இல்லாமல் இருப்பது , டாய்லெட்டில் அமர்ந்து இருக்கும்போது கூட தனிமையாக இருக்கிறோம் என கழிவிரக்கத்தில் உழல்வது , தனிமையுணர்ச்சியை வெல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிலேயே உள்ளே உள்ளே உழல்வது .
எல்லாவற்றிர்க்கும் மேலே , அனைத்து மன நோய் பெயர்களையும் தெரிந்து வைத்து இருப்பது !
கருத்துகள்
கருத்துரையிடுக