முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே

சிறுமிகளைச் சீரழித்து ஆணுறை விற்கும் இந்தியா டுடே



வ்வொரு பத்திரிகையும் சில விஷயங்களைப் பெருமிதமாய்ச் சொல்வார்கள்.

தாங்கள் தான் முதன்முதலில் போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தோம், வீட்டு வசதி வாரிய  முறைகேட்டினை அம்பலப்படுத்தினோம், இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாய்ச் செய்து வருகிறோம் என்று, அவர்களுக்கு அதில் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி உரிமை கோருவார்கள்,அதில் பெருமிதமும் சாதித்து விட்ட திருப்தியும் வெளிப்படும்.

ஆனால் இந்த 'இந்தியா டுடே'காரர்களுக்கோ வேறு விதமான உரிமை கோரல்.

பாலியல் இச்சைகளின் ஆய்வுகள் தொடர்பான நீண்டகால உரிமை கோரல் தான். தாங்கள் தான்  11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேசத்தின் தலையணை பேச்சுகளை படம் பிடித்துக் காட்டி வருகிறோம் எங்க‌ளை விட யாருக்கு இதில் தகுதியும் அனுபவமும்  இருக்கிற‌து என . உங்களுக்கு இது வக்கிரமாகவும் கழிசடையின் பிறப்பிடமாகவும் தெரியலாம்,ஆனால் அவர்களுக்கோ அது பெருமிதம்.

ஆனால் அவர்களுக்கே இந்த வழக்கமான பள்ளிய‌றை, கழிப்பறை பாலியல் தொடர்பு ஆய்வுகள்,இட்டுக்கட்டல்கள் அதைத்தொடர்ந்த  பூச்சுகள் அலுத்து விட்டதா என்று தெரியவில்லை.புதிய‌ வெரைட்டியைத் தேடியிருக்கிறார்கள்.

அதனால் தான் வழக்கமான ஆண்- பெண் உறவுகள் தொடர்பான ஆய்வு முடிவுகளைத் தங்களது விற்பனை யுக்தியாய் பயன்படுத்தாமல் இந்த முறை பதின்பருவத்தினர் குறித்த பாலியல் ஆய்வுகள் என்று சொல்லிக் கொண்டு பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் தொடங்கி  கல்லூரி மாணவ மாணவிகள் வரையிலான  பாலியல் தேர்வுகளை,விருப்பங்களையும் அது குறித்த முடிவுகளை ஆய்ந்தறிவதாகச் சொல்லி 'பதின்பருவத்தில் பூக்கும் காமம்' எனத் தலைப்பிட்டு வெளியிட்டு இருக்கிறார்கள்.

வக்கிரம் பிடித்தவனுக்கு பெற்ற தாய்க்கும், பிள்ளைக்கும், மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதது போல 'இந்தியா டுடே' காரர்களுக்குத் தெரிய‌வா போகிறது..? விற்பனைக் கச்சாப் பொருளாக எந்தச் சதை கிடைத்தால் என்ன..? அது மனைவியினுடையதானால் என்ன மகளுடையதானால் என்ன..? நமக்கு கல்லா கட்டணும்,சந்தையில் தொடர்ச்சியாய் நிற்க வேண்டும்.தனது உயர்தட்டு வாசகர்களின் வக்கிரத்துக்குத்  தீனி போடணும்.அவ்வளவு தான்.

சனவரி (16-21)2015 நாளிட்ட இதழில் இந்த 'ஆய்வுகள்' மட்டும் மொத்தம் 24 பக்கங்கள்.

இதனைத் தாங்கிய முகப்பு அட்டை. 'பதின்களில் பூக்கும் காமம்'

முகப்பு கட்டுரையின் முதல் பக்கத்திலேயே ஒரு சிறுமி தனது உடைகளைக் களைந்து விட்டு தன்னை விட‌ சற்று வயது அதிகமான‌ ஆணுடன் கட்டித்தழுவி உடலுறவில் இருப்பது போல ஒரு படம் வரையப்பட்டிருக்கிறது. அருகில் அந்த சிறுமியின் பள்ளிக்கூடப்  பை கிடக்கிறது.

அதன் தொடர்ச்சியாக 'காதல் வேண்டும் புதிய பதின் பருவ‌த்தினர்,' 'செக்ஸ் பற்றிப்பேசும் நேரம் இது சரியா ?,' 'செக்ஸ் அகராதி-இளசுகளின் வார்த்தைகள்,' 'வளாகத்தில் விளையாட்டுகள்,' 'தொலைந்த பிள்ளைகள்,' 'எல்லாமே இணையத்தில்,''மூன்று நகரங்களின் கதை,' 'கூர் தீட்டப்படும் அழகு,' 'உண்மை தரும் துணிவு,' 'பெருஞ்சுவர் - எல்லைகளை மீறி' என கட்டுரைகள்

ஒவ்வொரு செய்திப்பதிவின் தலைப்பை மட்டும் யாரும் பார்த்தால் முற்போக்கு ஹோல்சேல் குத்தகை எடுத்தது போலத்தெரியும்.விஷயம் படித்தால் காறித்தான் துப்ப முடியும்.





வ்வொரு பகுதி குறித்தும் சில வார்த்தைகள் குறிப்பிட வேண்டுமென்றால்,

'காதல் வேண்டும் புதிய பதின் பருவ‌த்தினர்,'பகுதியில் பள்ளி-கல்லூரி மாணவிகளிடையே,

அ)   10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியர்களில் எத்தனை விழுக்காடு கன்னித்தன்மை மிக்கவர்கள்..?

ஆ) பள்ளி வளாகங்களில் எத்தனை விழுக்காட்டினர் உபயோகப்படுத்திய ஆணுறைகள் கிடக்கின்றன..?

இ) எத்தனை சிறுவ சிறுமியர்கள் ஆன்லைனில் போர்னோ பார்த்திருக்கிறார்கள்.?

ஈ) கன்னித்தன்மையை மதிப்பவர்கள் எத்தனை பேர்..?

இந்தக் கட்டுரையை 'இந்தியா டுடே' இதழின் துணை ஆசிரியர் தமயந்தி தத்தா எழுதியிருக்கிறார்.



நாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும் பொழுது ஏ முதல் இசட் வரை ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் 'இந்தியா டுடே' இதழோ தில்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற‌வர்கள் தொகுத்த 'இளசுகளின் அகராதி' எனத் தலைப்பிட்டு ஒன்றை வெளியிட்டுள்ள‌து.

இதன் படி A பார் ஆப்பிள் அல்ல, தான் படுக்கையைப் பகிர விரும்பும் ஆண்ட்டியை சிறுவன் குறிப்பதாகச் சொல்லும் சொல்லின் முதல் எழுத்து என்கிறது.

G என்பது got if  என்பதன் சுருக்கமாம் அது.

அதாவது வாய்ப்புக் கிடைத்தால் குறிப்பிட்ட நபருடன் படுப்பாயா ? என்பதைக் கேட்கப் பயன்படுத்தும் சங்கேத வார்த்தை என்கிறது. ஆங்கிலத்தில் பெயர்கள் குறிப்பிட்டிருக்கின்றன. தமிழில் பிரியா,ரமேஷ் என இரண்டு பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்.

K என்பதன் விரிவாக்கம் காமசூத்ராவாம். 69 பொஷிசனின் சுருக்கமாம் அது.

S  என்பது எப்பொழுதும் செக்சுக்குத் தயாரானவரைக் குறிக்கும் எழுத்தாம்.

W என்பதன் விரிவாக்கம் விங்மேன் என்பதன் சுருக்கமாம். அதாவது பாலியல் தரகராம்.

இப்படிக் கஷ்டப்பட்டு 'அகராதி' உருவாக்கியிருக்கிறார்கள்,ஆனால் தொகுத்தவர்களின் பெயர் குறிப்பிடக்கூட இல்லை. எடிட்டோரியல் டீம் இதனைச் செய்திருக்கும் போல.


டுத்து -'டீன் ஏஜ் வாக்குமூலம்' என்று தலைப்பிட்டு இன்னொரு பகுதி.

எதையும் அறியாத ஒரு 'பச்சைக்குழந்தை' அனைத்தையும் அறியும் நோக்குடன் ஒரு ஆய்வைச் செய்யத்தொடங்கியதாகவும் அதன் முடிவு என்ன என்றும் எழுதியிருக்கிறார்கள்.

எங்கு வைத்து உடலுறவு வைத்துக்கொள்வீர்கள்..? எப்பொழுது வைத்துக் கொள்வீர்கள்..? சுய இன்பம் காண்பதற்கு சராசரி வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன..? பெண்களுக்கு சுய இன்பத்தில் திருப்தி உண்டா..?,
 24 மணி நேரத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்ள முடிந்தது ? எத்தனையாவது முறையிலிருந்து வலிக்க ஆரம்பித்தது என்பன போன்ற‌ அனைத்தையும் எழுதி விட்டு இதனை 'பச்சைக்குழந்தை' ஆய்வு செய்ததாகவும்,இந்த ஆய்வின் மூலம் பல தயக்கங்களை உடைத்ததாகவும்,இது குறித்து  தீவிரமாக விவாதிக்க முடிந்ததாகவும் எழுதியிருக்கிறார்கள்.



டுத்து 'தொலைந்த பிள்ளைகள்' என்றொரு பகுதி.

பள்ளி மாணவிகள் பற்றியது. உடல் உறவின் பொழுது, எத்தனை விழுக்காடு பேருக்கு உடைகள் களையப்பட்டது,மார்பகங்களை எத்தனை விழுக்காடு தொடப்பட்டது..? வாய்வழி புணர்ச்சி எத்தனை விழுக்காடு..? பேச்சு மட்டும் எத்தனை விழுக்காடு..?சுய இன்ப விழுக்காடு போன்ற 'அரிய' தகவல்களுடன் ஆய்வு முடிவுகள்.

'செக்ஸ் பற்றிப்பேசும் நேரம் இது சரியா ?' என்ற கட்டுரையை 'இந்தியா டுடே' சீனியர் எடிட்டர் 'காயத்ரி ஜெயராமன்' எழுதியுள்ளார்.

'எல்லாமே இணையத்தில்' என்ற தலைப்பின் கீழ் என்றொரு பகுதி. இந்தப்பகுதிக்கு ஆங்கில பதிப்பில் can you see the boobs ? எனத் த‌லைப்பிட்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த இதழிலும் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இது போல சிறு சிறு வித்தியாசம் தான்.

இணையத்தொடர்பு எவ்வளவு பாதகங்களை உருவாக்குகிறது என்று சொல்லிவிட்டு 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். இதனை 'இந்தியா டுடே' வின் சீனியர் கரஸ்பான்டென்ட் 'மரூஷா முசாபர்' எழுதியுள்ளார்.

டுத்ததாய் 'மூன்று நகரங்களின் கதை' என்றொரு பகுதி. அதில் இந்தியாவின் பழமையான மூன்று நகரங்களின் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் பாலியல் விருப்பங்கள்,தேர்வுகள்,உடை,பழக்க வழக்கங்கள் குறித்து ஆராய்வதாகச் சொல்கிறது. இதனை இந்தியா டுடேவின் அசோசியேட் எடிட்டர்களான சுகாரி சிங்,அமிதாப் ஸ்ரீ வத்சவா,ரோகித் பரிகர் ஆகியோர் எழுதியுள்ள‌னர். ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 19 நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் சென்னையும்  இடம் பெற்றுள்ளமையால் அது குறித்து குறிப்பாக எதுவும் இருக்கிறதா எனப் பார்த்தோம். ஆனால் எதுவும் இடம் பெறவில்லை. ஒருவேளை 'இந்தியா டுடே' வின் பிற மொழிப்பதிப்பு எதிலாவது சென்னையின் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குறித்த இவர்களின் ஆய்வுகள் இடம் பெற்றிருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம். (தேடிக்கொண்டிருக்கிறோம்.)

40 ஆயிரம் விலை மதிப்புள்ள செல்போனுக்காக  மகிழ்ச்சியுடன் தன்னை அளித்த‌ பெண் குறித்து விளக்கி விட்டு ஓரிரு சந்திப்புக்குப்பின் அந்த ஆளுடனான உறவை  மற‌ந்து விட்டதையும் எழுதுகிறது. அதைத் தொடர்ந்து தார்மீகச் சிங்கங்களுக்கு இது குறித்துப் பேசினால் எரிச்சல் உண்டாக்கலாம் எனவும் எழுதியுள்ள‌து.

இப்படி பக்கத்துக்கு பக்க‌ம் டீன் ஏஜ் வயதினரின் என்ற பட்டியலில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் பாலியல் தேர்வு,விருப்பங்கள் என வகை வகையாய் பக்கத்தை நிரப்பியுள்ள‌து இந்தியா டுடே. தாங்கள் சொன்ன விஷயம் படிப்ப‌வர்களுக்குப் புரியாமல் போய் விடுமோ என்ற 'அக்கறையில்' வரைபடங்கள்.'ஈர்க்கக் கூடிய ' தலைப்புகள்.

ங்கில புது வருடத்தின் இரண்டாவது இதழை இப்படி வெளிக்கொணர்ந்து தனது தேக்கமான விற்பனை நிலையைச் சரிக்கட்டி இருக்கிறது. வழக்கமாய் செவ்வாய்க்கிழமை இரவு வரை கடையில் கிடைக்கும் இந்தியா டுடே இதழானது இந்த முறை கடைக்கு வந்த ஞாயிறு மாலையே விற்றுத் தீர்ந்து விட்டது. இந்த சர்வே எப்படியும் 3 மாதங்கள் அதன் விற்பனையைத் தக்க வைக்கும். (அடுத்து இருக்கிறது இன்னொரு சர்வே.! சிறுவ சிறுமியர்களிடையே அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கை என ஒன்றை எடுத்து விட்டால் கிடக்கிறது.எவன் கேட்கப் போகிறான்..?)

பள்ளி,கல்லூரி மாணவிகள் எப்படி உடலுறவு கொள்கிறார்கள்,அதில் மார்பைத்தொடுவது எத்தனை விழுக்காடு../ வாய்வழிப்புணர்ச்சி எத்தனை விழுக்காடு என்பது ஒரு ஆய்வு. ( இதனை எடுத்தார்களா இல்லையா என்ற கேள்வியே இங்கு அனாவசியம்.)அதற்கு ஒரு கவர் ஸ்டோரி. இதற்கு எடிட்டோரியல் குழு.

இது தான் இந்தியாவின் நம்பர் ஒன் செய்திப் பத்திரிகை எனச் சொல்லிக்கொள்ளும் 'இந்தியா டுடே'வின் வழக்கமான லட்சணம். இந்தியாவைப் புரிந்து கொள்ள இதைப்படிக்க வேண்டுமாம்.

இது தான் அவர்கள் கட்டமைக்க விரும்பும் இந்தியா.

*****



ந்தியா முழுவதும் குழந்தைகள் உட்பட இளம் பிராயத்தினர் மீதான பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் முன் எப்பொழுதையும் விட மிக அதிக அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. 'இந்தியா டுடே' இதழே சில இதழ்களுக்கு முன் 'சிதையும் குழந்தைமை' என ஒரு முகப்புக் கட்டுரையை வெளியிட்டது. இன்றோ சிறுவ சிறுமிகளின் பாலியலை கதைகளாகவும் ஆய்வுகளாகவும் அகராதியாகவும் எழுதி குழந்தைகளை பாலியல் விருப்பத்துக்குள் தள்ளி விடும் வேலையைத் திட்டம் போட்டுச் செய்கிறது.

பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் சீரழிந்த நிலையை உருவாக்கி, மிக மிகக் குறைந்த விழுக்காட்டினரின்  செயல்களை ஆய்வு என்று அதற்கு நாமகரணம் சூட்டி ஒட்டுமொத்த சமூகத்தின் நடவடிக்கையாக மாற்றி அதனை விற்பனைப் பொருளாக்கி காசு பார்க்கத் துடிக்கிறது வக்கிர இந்தியா டுடே கும்பல். இதுவரை தனது விற்பனைப்பொருளாக பெண்களைப் பயன்படுத்தி வந்த இதழ் இப்பொழுது இளம் பிராயத்தினரைப் பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.



இந்த இதழில் கண்துடைப்புக்காகவாவது  ஏதாவது மனநல மருத்துவர்,குழந்தைகள் நல நிபுணர் யாரிடமாவது கருத்து வாங்கி பள்ளி மாணவிகள் மீதான தனது 'அக்கறையை' வெளிப்படுத்தி இருப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக பக்கத்துக்குப் பக்கம்  ஆணுறை விளம்பரங்கள் .வயதான ஆண்களுக்கு எழுச்சியை உண்டாக்கும் Vacurect சாதன விளம்பரமும் வண்ண‌த்தில் இருக்கிறது.

அப்படியானால் தங்க‌ள் நோக்கம் என்ன என்பதை வெளிப்படையாகப் பறைசாற்றுகிறது.

எதை வலியுறுத்துகிறது 'இந்தியா டுடே'..?

இதனைப் படிக்கும் இரு தரப்பினரும்  சக பாலினரை   என்ன மனநிலையில் அணுகுவார்கள்..? அவர்களின் மீதான தாக்குதலை எதிர்க்கும் மனநிலையுடன் பயிற்றுவிக்கப்படுவானா அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது தனது இச்சைக்கு அவர்களைப் பயன்படுத்த நினைப்பானா..?

அது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பிரச்சனையையும் 'இந்தியா டுடே' 'கொண்டாட்ட' மனநிலையுடன் அணுகுகிறது. அதனால் தான் 3 ஆண் நண்பர்களுடன் உறவு வைத்திருக்கும் பெண் குறித்துக் கூறும் பொழுது இவரின் செயல் தார்மீகச் சிங்கங்களுக்கு எரிச்சலை உண்டாக்கலாம் என நக்கலாய் எழுதுகிறது.

பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களிலாவது அவர்கள் தங்களுக்கு இழைக்கப்ப‌டும் தீங்கு குறித்து தெரிந்திருக்கின்றனர். அதனை எதிர்கொள்ள ஓரளவுக்காவது மன வலிமையும் உடல் பலமும் இருக்கிறது.

ஆனால்  சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதலை எதிர்கொள்ள அவர்களுக்கு எந்த வடிவத்திலும் உரிய பக்குவம் இருப்பதில்லை. ஆனால் அத்தகைய வன்முறையையும் அவர்கள் மீதான பாலியல் சீண்டலையும் 'இந்தியா டுடே' திட்டமிட்டு உருவாக்க நினைக்கிற‌து.

ஆபாச பத்திரிகையை சட்டப்படி இந்தியாவில் பதிவு செய்ய முடியாது. ஆனால் 'இந்தியா டுடே' போன்ற பத்திரிகைகள் அத்தகைய வேலையைத் தான் மறைமுகமாய்ச் செய்கின்றன.  இத்தகைய பத்திரிகைகளைத் தடை செய்வது தான் சரியாக இருக்கும். அதற்கான கோரிக்கைகள் இனி வலுப்பெற வேண்டும்.

டைம்பாஸ்,வண்ணத்திரை,சினிக்கூத்து இதழ்கள் கூட இப்படிப்பட்ட மனநிலையை உருவாக்க முனைவதில்லை. தங்கள் விற்பனைப் பொருட்களாக பெண்களுடன் மட்டும் நிறுத்திக் கொள்கின்றனர்.ஆனால்  'இந்தியா டுடே' பதின்பருவத்தினர் எனச் சொல்லிக் கொண்டு சிறுவ சிறுமியர்களை வைத்து அருவருப்பான இதழை வெளியிட்டிருக்கிற‌து.

இந்த செக்ஸ் சர்வே முழுவதும் டெல்லியில் இருந்து முடிவு செய்யப்பட்டு ஒட்டு மொத்த இந்தியா முழுமைக்கும் ஒன்று போல் வெளியிடப் பட்டிருக்கின்றன.

இதில் குறிப்பாகத் தமிழ்நாட்டுப் பெண்களையும் (தென்னக வார்த்தை என லாவகமாய் சொல்லியிருக்கிறார்கள்) மிக இழிவு படுத்தியிருக்கிறார்கள்.

இளசுகளின் அகராதியில், UB என்பது பின்னாலிலிருந்து கவர்ச்சியாகவும் முன்னால் அப்படி இல்லாமலும் இருக்கும் பெண் என்று எழுதியிருக்கிறார்கள். பெண்களை மிக இழிவுபடுத்தியதற்காய் தமிழ்நாட்டு பெண் முற்போக்காளர்கள் எனச் சொல்லப்படுவோர் 'இந்தியா டுடே' சென்னை அலுவலகத்தை இதற்காய் முற்றுகையிட வேண்டும். ஜெயமோகன் விமர்சனத்துக்கு எதிராய் சாரை சாரையாய் அணிவகுத்து பக்கம் பக்கமாய் எழுதி கொடி பிடித்த‌ பெண் 'போராளிகளில்' ஒரே ஒருத்தர் கூட 'இந்தியா டுடே' போன்ற ஊடகத்தை எதிர்த்து முணுமுணுக்க கூட மாட்டார்கள் என்பது தான் கசப்பான உண்மை.

சிலர் நினைக்கலாம் தமிழ் பதிப்பு எடிட்டோரியலில் பெண்கள் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள்.அசோசியேட் எடிட்டர் கவிதா முரளிதரனும்,அசோசியேட் காப்பி எடிட்டர் கவின் மலரும் முற்போக்காளர்கள் என வெளியுலகில் அறியப்படுபவர்கள் அவர்களை மீறி எப்படி இதுவெல்லாம் வந்தது என ? அப்படி நினைத்தால் நினைப்பவர்கள் ஊடக அறியாமையில் இருக்கிறார்கள் எனலாம்.

காவல் நிலையத்தில் மகளிர் காவலர்கள் இருப்பதானலேயே அங்கு செல்லும் பெண்கள் மீதான  மீதான வன்முறைகள்,தாக்குதல்கள்,பாலியல் கொடுமைகள் நின்றுவிட்டனவா.. என்ன..? அது போலத்தான் இங்கும். 'இந்தியா டுடே' இந்த இதழில் இடம்பெற்றுள்ள வக்கிரமான கட்டுரைகள் டெல்லியில் இருந்து முடிவு செய்யப்பட்டவை,எங்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை  என வாதிடுவது சரியாகாது. அருண் பூரி தலைமையிலான  எடிட்டோரியலில் இருக்கும் அனைவரும் தமிழ்ப் பதிப்பில் வெளிவந்தமைக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் தான்.

india today editor arun purie
இந்தியா டுடே சீப் எடிட்டர் அருண் பூரி


ந்தியாவைப் புரிந்து கொள்ள இந்தியாடுடே வைப்படிக்க வேண்டுமாம்.

இந்தியா டுடே வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் பிரதிபலிக்கும் இந்தியாவிலிருந்து தான் இந்தக் கட்டுரை உருவாகியுள்ளது.
எந்தச் சமூகத்தில் இருந்து வந்தார்களோ அதன் வக்கிரத்தைப் பிரதிபலிக்கிறார்கள்.

இந்தியா டுடேவின்  மேட்டுக்குடியினர் முன்பெல்லாம் பணத்தை அள்ளி இறைத்து அவர்களுக்குப் பிடித்த   அழகிகளையும் அல்லது வாய்ப்பிருந்தால் நட்சத்திரங்க‌ளையும்  தங்கள் இச்சைக்குப் பயன்படுத்துவார்கள்.அதற்குத் தோதான தரகர்களை வைத்திருப்பார்கள்.

இப்பொழுது அவர்களுக்குத் தங்களது வழக்கமான விருப்பங்கள் சலித்து விட்டது.அவர்கள் இப்பொழுது தங்களின் வக்கிரத்துக்குத் தீனி போட விரும்புகிறார்கள். அவர்கள் விரும்புவதெல்லாம் புத்தம் புதிய மலர்கள் தான். அதனால் தான் கல்லூரி,பள்ளி மாணவிகளை நோக்கித் திசை திருப்பியிருக்கிறார்கள்.இது தான் அவர்களின் இப்பொழுதைய விருப்பம்.அதற்கு என்ன விலை கொடுக்கவும் ,எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராய் இருக்கிறார்கள். அதற்கான புரோக்கர்களும் இருக்கிறார்கள். இது மேல் மட்டத்தில் சமீப ஆண்டுகளாய் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அவர்களின் இந்த வக்கிரத்தை பொதுத்தளத்தில் கடைசிக் கட்டம் வரைக்கும் கொண்டு போய் திட்டமிட்ட பண்பாட்டுச் சீரழிவை உருவாக்க நினைக்கும் செயலைத்தான்  இந்தியா டுடே செய்கிறது.அதன் விளைவு தான் இந்த இதழ்.

பெண்களிடமிருந்து விலகி சிறுமிகளை நோக்கி விபச்சாரத் தரகர்கள் தங்கள் பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள்.

விபச்சாரத் தரகர்களின் செயல்பாட்டிலிருந்து 'இந்தியா டுடே' வேலை மாறுபட்டிருக்கலாம்.

ஆனால் தன்மை ஒன்று தான்.

courtesy:kalakakural 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...