முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுன்னத் கல்யாணம்



பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும்புரியாதோருக்கு, சுன்னத் கல்யாணம் இஸ் நத்திங்பட் சர்கம்சிஷன் AKA கு** கல்யாணம்.

இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லைஇப்போதெல்லாம் சு.க பெரும்பாலும்ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது. 90கள் வரை கிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போலநடக்கும்இப்போது 89% குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர்முன்பு பெரியவன் ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டுஎனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்கு அஞ்சாப்புஆனுவல் லீவ்ல நடந்துச்சு (யார்னு கேக்கப்படாது).
<<<<<<கொசுவத்தி ஸ்டார்ட்ஸ்>>>>>>
அது ஒரு இனிய ஞாயிறுநாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில்வீட்டின் மாடியில்ஷாமியானா போடப்பட்டுஅக்கம்பக்கத்தினர்உறவினர்சுற்றம் சூழ வந்து வீடே கலகலவென்றிருந்தது.ஒரு பக்கம் “தம்” பிரியாணி தயாராகிக்கொண்டிருந்ததுதிடீரென்று கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத்தி சுத்தி வந்தனஒன்று நான்மற்றொன்று என் அண்ணன் (பெரியப்பாமகன்).

மதிய விருந்து தடபுடலாக நடக்கஎங்களுக்கு ஆட்டுக்கால் உறிஞ்சி & எக்ஸ்ட்ரா சிக்கன் 65 தரப்பட்டது.அடுத்த ஆடு நாம் தான் என அறியாத அவ்விரு ஆடுகளும் இலையில் வைக்கப்பட்ட ஆட்டை, அள்ளிஅள்ளிப்பருகவேண்டிய அமிர்தமடா இதுவென உண்டன

பின் , போட்டோகிராபரொருவர் வீட்டுக்கு வந்தார். 90களின் Kidஸல்லவாபோட்டோகிராபரைப்பார்த்ததும்இன்னோவாவை கண்ட நாஞ்சிலாராய் உள்ளம் பூரித்து, எங்களுக்கு செய்யப்பட்ட அலங்காரம் (புது பேண்ட்,சொக்காய்தொப்பிமூஞ்சி முழுக்க பான்ஸ் பவுடர்)  கண்டு கண்கள் பனித்துஇதயம் இனித்து,முத்தாய்ப்பாய் அவர்கள் சூட்டிய ரோஜா மாலையை அணிந்ததும் ஆனந்தத்துக்கம் தொண்டையைஅடைத்தது.
“ச்சளக்...கிஷ்க்யூவ்ன்...ச்சளக்...கிஷ்க்யூவ்ன்... ” - அணி அணியாய் எங்களோடு சேர்ந்து எல்லாரும்போட்டோ எடுத்துக்கொண்டாயிற்று.

மாலை சுமார் 6 இருக்கும்எங்களுடையது இரு வீடுகள் அருகருகே சேர்ந்த ஒற்றை வீடுவீடு #1ல் இருஆடுகள் & ஃபுல் தாய்மார்கள்வீடு #2ல் வெள்ளைத்தொப்பி போட்ட வித வித பாய்மார்கள். அனைவரும் யாரையோ எதிர்பார்த்துக்காத்திருந்தனர். 

சிறிது நேரத்தில் தட் டுத்தடுமாறி ஒரு வயதான (அழுக்கேறிப்போய் ப்ரவுனாக மாறிய வெள்ளைதொப்பியும்ரீகல் சொட்டு  நீலத்தால் வெளுக்கப்பட்ட சட்டை கைலியும் உடுத்தியிருந்ததாத்தா வந்தார்பரஸ்பரம்அஸ்ஸலாமு அலைக்குமும் அலைக்கும் சலாமும் பகிர்ந்த பின்னர் ஊதுபத்திகள் மணம் பரப்பஅரபியில்துஆ (ப்ரார்த்தனைநடைபெற்றதுமுடிந்ததும் கற்கண்டுபேரீச்சை &  ஆசை சாக்லேட் அன்போடுபகிரப்பட்டதுஇதுவரை சிறப்பாக போய்க்கொண்டிருந்த “அப்துல் இன் ஒண்டர்லான்ட்” தினத்தில் கேவிஆனந்த் பட டுஸ்ட்டாக ‘அது’ நடந்தது.
 வயதில் மூத்தவர் என்ற திருக்காரணத்தினால் என் அண்ணனும், பாச்சா என எல்லோராலும் அன்போடுஅழைக்கப்படும் முதல் ஆட்டை வீடு நம்பர் 1ல் இருந்து வீ. 2க்கு அழைத்துச்சென்றனர்சுமார் 3 நிமிடம் 60நொடிக்கு மயான அமைதி.

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ"
கேட்டுச்சே ஒரு சத்தம்எங்கண்ணன்கிட்டருந்து அந்த வீட்டில். 

 சடாரென்று எல்லாம் விளங்கியதுஎங்களை இதுவரை  போஷித்துபரிபாலித்து போற்றி வளர்த்தது பலிகொடுக்கத்தான்கழுத்தில் கத்தி வைத்து கரகரகர... நாம அம்பேல்... நாம மவுத்தாகப்போறோம்நம்மலகுர்பானி குடுக்கப்போறாங்க.. சூரியனில்லாததால் இருட்டிவிட்டது என்பதையும் தாண்டி எனக்கு மட்டும்ப்ரத்யேகமாக உலகம் இருண்டது.

10 நிமிடம் இருக்கும்சிவப்புத்துணி போர்த்தப்பட்டு (என்னது எங்கேயா? ‘அங்க’தான்...)  கண்ணீர் பீய்ச்சியபடிகிடந்த எங்கண்ணனைக் கையில் ஏந்தி வந்தார்கள்.

கொலை செய்யப்படுவதை விட கொலை செய்யப்படுவதைக்காண்பதும்அடுத்து தானும்அதுபோலக்கொல்லப்படப்போகிறோம் என அறிவதும் மிகப்பெரும் சித்ரவதைஅது எனக்கு நேர்ந்தது.அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லைஆனால் நிச்சயம் ஆபத்து உண்டென்றுஉள்ளங்கை ஸ்மார்ட் போன் போல தெரிந்தது.

அண்ணனை பாயில் கிடத்திஅடுத்து என்னை அழைத்தனர்நானாவது போறதாவது, “என்ன உட்டுடுங்கடாடாய்” என எங்கப்பாரைப்பார்த்து கத்தவும், என்ன பாய் பேசிட்டு இருக்கீங்க என ஒரு தடி தாடி பாய்என்னைஅலேக்காக தூக்கிச்செல்லவும் சரியாய் இருந்தது.

அந்த அறை.

முதலில் மல்லாக்க படுக்கப்போட்டு சட்டையையும்பேண்ட்டையும் கழட்டினர்பின் "சக்கரையில்” ஒருதிரவத்தை ஊற்றி உள்ளே ஊசிபோட்டனர்.  அப்போதே ஆரம்பித்துவிட்டேன் என் ஆலாபனையைகைகாலை உதற முடியாமல் பல பாய்மார்கள் அழுத்திக்கொண்டனர் (மத்தியானம் சாப்ட்ட ஓசி பிரியாணிக்குவிசுவாசமாம்... தக்காளி).
ஊதுபத்தி வாசம்இனிப்பு வகைகள்ரோஜா மாலைகள் சூழ்ந்திருக்கநடுவே ட்ரெஸ் இல்லாமல்அம்மன்குண்ஸாக நான்சுத்திலும் தாடிவாலாஸ். இதை விட ரொமாண்டிக்காக எதும் இருக்க முடியுமாஹூம்ம்ம்...
 
ஒரு கிழவனார் "தீன் தீன் மொஹ்மாத்...தீன் தீன் மொஹ்மாத் சொல்லுஎன்றார்எனக்கு பகலிலேயேபாத்திமா கேக்காதுராத்திரியில் ராக்கம்மாவா கேட்கும்சரியாய் புரியாமல் "தீன் தீன் மாமா"எனக்கதறினேன். “அரே... மாமா இல்ல... மொஹமத்” என்றார்வந்த கடுப்பில் "ப்போடாஎன நான்எதிர்வினையாற்றஎமோஷனை வெளிக்காட்டாதுஆத்திரத்தில் அந்தக்கிழவர்  காலை இன்னும் இறுக்க,ஒரு சைனா கத்தரியால் (அல்லது சேவிங் கத்தி), பிறந்ததிலிருந்து என்னுடன் வாழ்ந்த ‘அது’பிப்ரவரி14க்கு ரோஜா மொட்டு செடியிலிருந்து களையப்படுவதுபோல் கத்தரிக்கப்பட்டது.
அந்த வலியை சொன்னால் புரியாது.
பிறகு இன்னும் சில பல அடித்தல் திருத்தல்கள்லத்தி சார்ஜ்துப்பாக்கி சூடுகள் என "சம்பவஇடத்தைஅடித்து நொறுக்கிய பின்இடுப்பில் சிவப்பு துணி (யெஸ்.. ஸேம் ப்லட்... ஸேம் செஹப்புத்துணி… பாரபட்சம்பாக்காம அடிச்சுப்புட்டானுவபோர்த்தப்பட்டு அரை மயக்க நிலையில் மைனர் operated குஞ்சு கிடத்தப்பட்டார்
  
சிறிது நேரத்திற்குப்பின் கண்விழிக்கையில் எங்களைச் சுற்றி அக்கம்பக்கத்திலுள்ள அத்தனை பெண்களும்(ஹிந்து & கிர்ஸ்டின்ஸ்கூடி விட்டனர்அவர்கள் இது போன்ற சம்பவத்தை செவி வழிச்செய்தியாகமட்டுமே அறிந்துள்ள படியால் நேரலைக்காட்சிக்காக கூடினர் (6லிருந்து 60 வரை). வரும்ஒவ்வொருவருக்கும் முதலில் "சப்ஜெக்ட்குறித்து 5 நிமிடம் தியரி வகுப்பு நடைபெறும்பின் “நாடகமேடையின்” சிவப்புத்திரை விலக்கப்பட்டு நான் & என் அண்ணன் பங்கேற்கும் "இரு கோடுகள்எனும்பிரசித்தி பெற்ற நாடகம் காட்டப்படும்.
"ஸ்ஸ்ஸ்....ஷ்ஹ்ஷ்ஹ்ஸ்ஷ்....அய்யூஊஊ... உஹ்ப்ஹ்ப்ஃப்ஃப்…என ஒவ்வொரு பொண்ணும்  ஒவ்வொருஃபீலிங்ஸைக்கொட்டசிவப்புத்திரை மூடப்பட்டுவரிசையில் அடுத்து வருபவருக்கு ஷோ ஆரம்பிக்கும்.

லேடீஸ் பாத்தாங்களேகூச்சமா இல்லையா என ஆங்காங்கே சிலர் நினைப்பது கேட்கிறதுநானெல்லாம்கவரி மான் பரம்பரைவந்த ஆத்திரத்துக்கு சிக்கென கண்ணை இறுக மூடிக்கொண்டேன் (வேறு வழி?)

எங்கண்ணன் கொஞ்சம் ரொம்பவே வெள்ளைநான் லைட்டா காக்காவுக்கு காம்படிசன்சில கிழடுகள்எங்கண்ணனுடையதை சாதாரணமாகவும்என்னுடையதை கண்கள் சுறுக்கிவெயில் நேரத்தில் நெற்றியில்கையை வைத்துப்பார்ப்பதுபோல் பார்த்து உண்மையிலேயே வெந்த புண்ணில் விழி பாய்ச்சிச் சென்றதுகள்.

எல்லோரும் வந்து பார்த்தும் அத்தை மகள்களை மட்டும் காணவேயில்லை. அவர்களைப்பார்த்தால் காயம் சீக்கிரம் ஆறாதாம். பாட்டி சொன்னார். “ஏன்? அவங்களப்பாத்தா தையல் பிரிஞ்சுடுமா” எனக்கேட்கும் பகுத்தறிவு அப்போது இல்லாததால் அப்பாவி கோயிஞ்சாமியாக நம்பினோம். 
எங்களுக்கும் எங்கள் அம்மாக்களுக்கும் அன்றிரவு தூக்கமில்லைநாங்கள் புரண்டு படுத்து விடாமலும்,கொசுபூச்சி கடித்துவிடாமலும் இருக்க அருகிலேயே இருந்து விசிறிக்கொண்டிருந்தனர்.
அடுத்த நாள்இடைத்தேர்தல் தொகுதி மக்களுக்கு கிடைப்பதுபோல பலமான மரியாதை ரிட்டன்ஸ்என்ன வேணும் என அப்பா (நேற்று “என்ன உட்டுடுங்கடா டாய்”னு திட்டினேனேதட் சேம் தகப்பன்சாமி)கேட்கடெக்கு வேணும் என கோரஸ் பாடினோம்அடுத்த ஒரு மணி நேரத்தில் டெக்கு (வீடியோ ) வந்தது.வீட்ல விசேஷங்கசத்யம் சிவம் சுந்தரம்துர்கா போன்ற காவியங்களைப்பார்த்ததாய் நியாபகம்மூன்றுவேளையும்  கோழிக்கறிபச்சை முட்டைபால்மேரி பிஸ்கட்பழம் என தடபுடல் கவனிப்புகள்.அவ்வப்போது சிவப்புத்துணி லுல்லாவில் ரத்தத்தோடு ஒட்டிக்கொண்டு பிரிக்க முடியாது  லந்து பண்ணும். And ச்சுச்சா & கக்கா போகும்போது தவிர பிரச்சினை ஏதுமில்லை.

இப்போது விருந்தினர் விசிட்டுகள் சகஜமாகஎல்லாம் இயல்பு நிலைக்குத்திரும்பியது.
ஒரு வாரத்தில் அடுத்த டுஸ்ட்டாகஒரு டாக்டர் வந்து சுடுநீர் எனப்பொய்சொல்லப்பட்ட கொதிநீரைஜிம்பலக்கடி பம்பா”வில் ஊற்றிடெட்டால் போட்டு துவைத்துவீடு முழுகிகோலம் போட்டு புள்ளி வைத்துஅவர் பங்குக்கு சம்பவம் நடத்திவிட்டுச்சென்றார்பட்ட (கா*)லிலே படும் என்பது இதுதானோ எனநொந்துகொண்டே மேலும் ஒரு வாரம் ஒடியது

மீண்டும் டாக்டர் வந்து பார்த்து சரியாகிடுச்சு என்றார்அவர் சர்ட்டிபிகேட் கொடுத்துச்சென்ற அரை மணிநேரத்தில் டெக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

சாப்பாடு கவனிப்பு மட்டும் தொடர்ந்ததுமெல்ல மெல்ல மற்ற உடைகள் உடுத்தத்துவங்கிபின்னொருகாலத்தில் நண்பர்களால்  முக்காலா முக்காபுலா பாட்டுப்பாடி கலாய்க்கப்பட்டுபாய்வீட்டுப்பெண்ணைக்காதலித்த நண்பனை “கல்யாணம்லாம் ப்ரச்சனயில்ல மச்சிஆனா மொதல்லஒன்னோட ஜிங்குனமணில “மணிய” கட் பண்ணிடுவாங்கஓகேவா” என சிரித்துப்பேச வைத்துஇன்னும் பலவெளிச்சொல்ல முடியாத “றோபல்” அனுபவங்கள் தந்துஇதோஇந்தப்பதிவு வரை கொண்டுநிறுத்தியிருக்கிறதுஎங்கள் சுன்னத் கல்யாணம்
.
நன்றி  முத்தலிப் பாய் அண்ணண்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

சிம்புவின் ‘பீப்’ பாடலை முன்வைத்து : ஆதலால் இனி பெண்கள் காதை பொத்திக் கொண்டு அலைவோமாக!

விலாசினி ரமணி என் வீட்டுக்கருகில் ஒரு தறுதலை இருந்தான். எப்பொழுதெல்லாம் வீட்டை விட்டு இறங்குகிறேனோ அப்போதெல்லாம் சரியாக அவன் வண்டியைக் கிளப்பி தொடர்ந்து ஒலியெழுப்பிக்கொண்டேயிருப்பான். அவன் வீட்டு வாசலிலிருந்துதான். தெருவில் எங்காவது என்னைக் கடக்க நேர்ந்தாலும் விறுக்கென்று வண்டியை அதி வேகத்தில் உறுமவிட்டுச் செல்வான். எங்கள் வீடுகளுக்குப் பொதுவாக துவைத்த துணியைக் காய வைக்க உள்ளாடைகளான பிரா ஜட்டி பேண்டிஸ் திருடி சுய இன்பம் செய்வான் கட்டப்பட்டிருக்கும் கொடியை (அது நான் கட்டியதில்லையென்றாலும்) சமயம் கிடைக்கும் போதெல்லாம் அறுத்தெறிவான். என் துணிகள் அதில் காயாத போதும். வீட்டில் தொலைபேசி அடிக்கும் ஆனால் யாரும் பேச மாட்டார்கள். அவன் தான் என்றெல்லாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. வீட்டில் ஏதோ வேலையாக உள்ளறையில் இருந்தால், “வெளியே வாடி” என்பதுபோல் தொடர்ந்து ஏதாவது பொறுக்கித்தனம் செய்தபடி இருப்பான். அவன் நண்பர்களோடு இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம். எத்தனைக் கேவலமான வார்த்தைகளைப் பேச முடியுமோ, “புண்டை , கூதி”, “சுண்ணி” எல்லாம் எந்த பீப்பும் இல்லாமல் வரும். ஒரு கட்டத்த...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...

மார்பரசியல்

அங்கே என்னடா பார்வை. முகத்தை பார்த்து பேசத்தெரியாதா உனக்கு. அக்கா தங்கச்சியோட பிறந்தவனா நீ?!” என்று நீங்களே எத்தனை ஆண்களை இதுவரை சபித்திருக்கிறீர்களோ. அது ஏன் அது ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்? துணிக்கடை பொம்மையை கூட விடுவதில்லையே! ஏன் தான் இந்த வக்கர புத்தியோ, என்று நீங்கள் எவ்வளவு தான் திட்டி தீர்த்தாலும், உண்மை என்ன தெரியுமா? ஆணின் இந்த இயல்பிற்கு அவன் காரணம் இல்லை. இயற்கை அவனை அப்படி இயங்கும் படியாகத்தான் வடிவமைத்திருக்கிறது. இந்த இயற்கைக்கு வேறு வேலை இல்லையா? போயும் போயும் இப்படியா ஆண்களை வடிவமைக்கணும்? என்று அதற்குள் அலுத்துக்கொள்ளாதீர்கள் ஸ்நேகிதி. இயற்கையின் இந்த ஏற்பாட்டில் நிறைய லாஜிக் இருக்கிறது. மனித இனம் உருவான ஒன்றரை மில்லையன் வருஷத்திற்கு முன்னால் பூமியில் வேறு சில மனித குரங்குகளும் வாழ்ந்துக்கொண்டிருந்தன. இந்த எல்லா மனித குரங்குகளும் கிட்ட தட்ட ஒரே இனம் என்பதால் எல்லாமே தூரத்தில் இருந்து பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். உதாரணத்திற்கு பொனொபோக்களும், சிம்பான்ஸீக்களூம் வெவ்வேறு விதமான மனித குரங்குகள். பழக்கப்படாதவர் பார்வையில் இரண்டுமே ஒரே மாத...