முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வஞ்சிர மீன்கள் மீதான காதலும் சிறிய மார்பகங்கள் கொண்ட பெண்களும்!

                                                             


இப்போது சொல்லும் விஷயத்தை நீங்கள் நேரிடையாகவும் புரிந்து கொள்ளலாம். மறைமுகமாகவும் பொருள் கொள்ளலாம் நண்பர்களே! அது உங்கள் விருப்பம் சார்ந்தது. கடந்த ஆறேழு வருடங்களாக ‘FISHIN' என்ற பெயரில் கடை ஒன்று நடத்தி வருகிறேன். அங்கே சொல்லி வைத்தாற்போல வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது வஞ்சிரம் மீனைத்தான். இத்தனைக்கும் பாரம்பரியக் கடலோடிகள் இந்த மீனைச் சக்கை என்று சொல்லி ஒதுக்கி விடுவார்கள். அவர்கள் சத்தானதாகவும் சுவையானதாகவும் கருதுபவை சிறிய மீன்களான அயிலா, சங்கரா, மத்தி, பாறை, வவ்வால், சூரை போன்றவற்றையே. நமக்கு எப்போதும் எல்லா விஷயங்களிலும் எல்லாமே பெரியதாக இருக்க வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன வேண்டும். நொங்கு தின்னலாம். நோகாமல் மீன் சாப்பிட விரும்பினால் எப்படி?ஒருமுறை ஆங்கிலத்தில் வெளியாகும் நவநாகரீக பெண்கள் பத்திரிகை ஒன்றின் ‘பாவமன்னிப்பு’ பகுதியில் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதியிருந்தார். அதில், ‘என்னுடைய கணவர் பெரிய மார்பகங்கள் குறித்த பித்துப் பிடித்து அலைகிறார். சிறிய மார்பகங்களைக் கொண்ட எனக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்தியர்களின் பொதுவான மனநிலையே பெரிதாக இருப்பதையும் விரைப்பாக இருப்பவற்றையும் எளிதாக விரும்பத் துவங்குகிறது. இங்கு எல்லா விஷயங்களையும் இந்த இரண்டிற்குள் அடக்கி விடலாம்.தோசை மொறுமொறுவென்று இருக்க வேண்டும். அயர்ன் செய்த சட்டை மொட மொடப்பாக இருக்க வேண்டும். மொறுமொறுவென்று உளுந்த வடை இருக்க வேண்டும், அப்படியே அது தயிரில் கிடக்கிறது என்றாலும் மொறுமொறுக்கென்று காராப் பூந்தி இருக்க வேண்டும். பிங்கர் ப்ரை நீளமாக நறுகென்று கடிக்கிற மாதிரி மொறுமொறுவென இருக்க வேண்டும். மொறுமொறுவென்கிற கேஎப்சி சிக்கனுக்கு அடிமை. சாண்ட்விச்சாகவே இருந்தாலும் க்ரிஸ்பியாக கடிக்கும் போது க்ரக் என சத்தம் வரும்படியாக டோஸ்ட் செய்திருக்க வேண்டும்... என பொதுவாகவே ‘விரைப்பாக இருக்கும்’ விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி எதிர்பார்க்கிறோம். இந்த விரைப்பு மற்றும் பெரியதாக இருப்பதன் மீதான காதல் எந்தளவிற்கு அதன் எல்லைகளை விரித்திருக்கிறது என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.
                                                                                    





                                                                                                   




ஆண்களின் உளச்சிக்கல் பெண்களையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு ஓராயிரம் உதாரணங்களைக் காட்ட முடியும். ஏற்கனவே நாயுடு ஹால்களில் பிராவிலேயே சிங்கிள், டபுள்  ‘பேடுக’ளை வைத்தது போதாதென்று இப்போது ஜாக்கெட் தைக்கும் போதும்  ‘பேடு’ வைத்துத் தைக்கத் துவங்கி விட்டார்கள். அப்படி தைத்துத் தருகிற டெய்லர்களுக்கு மார்கெட்டில் பயங்கர டிமாண்ட் என்பதும் ஆச்சர்யகரமான உண்மை. பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்ணிற்கு இறுக்கமான பிரா அணிந்து கொண்டு இருப்பதால், எப்போதும் முதுகுவலி இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் காலங்கள் வலி மிகுந்ததாக இருக்கும். டிஷர்ட் போடுவதற்கு தர்மசங்கடமாக இருக்கும். பிரா இல்லாமல் இருப்பது சுகமான அனுபவமாக இருக்கும். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி இருக்க முடியாதே? ஓடுவது என்பதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. பிகினி அணிவது என்பது கனவில் மட்டுமே நினைத்துப் பார்க்கிற விஷயமாக இருக்கும். எப்போதும் பிறர் கண்ணை உறுத்துகிற மாதிரியே இருக்கும். திறந்த முதுகுடைய உடைகளை அணியவே முடியாது. துப்பட்டா கொண்டு மார்பை மார்பு காம்புகளை மறைப்பதே முழுநேர வேலையாக இருக்கும். அவர்களுக்குச் சரியான பிராவைத் தேர்ந்தெடுக்க கடைகடையாய் ஏறி இறங்க வேண்டியிருக்கும். பெரிய மார்பகம் மட்டுமே சுற்றத்தாரால் அவர்களது அடையாளமாய்ச் சுட்டப்படும் என பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களின் சிக்கல்களைக் கேட்டால், அதன் மீது பித்துக் கொண்டிருப்பவர்கள் பேடைக் கழற்றி எறிந்து விடுவார்கள். ஆனால் கேட்டால்தானே? கொஞ்சம் இணைய வெளிகளில் அலைந்து பார்த்தால் இந்தவகை உளச்சிக்கல் வேறு என்னென்ன வகைகளிலெல்லாம் வெளிப்படுகிறது என்பதை நெருக்கத்தில் பார்க்கலாம். 

                                                 


பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களைத் தேடுவதென்கென்றே பக்கங்கள் இருக்கின்றன. அது ஆங்கிலமாக இருந்தால், ‘பிக் பூப்ஸ்’, ‘பிக் டைட்ஸ்’ என்று தேடுகிறார்கள்.கோயில் சிற்பங்களைக் கொஞ்சம் அண்ணாந்து பாருங்கள். பழங்கால இலக்கியங்களில் மார்பகங்களின் வகைகள் என ஒரு பெரிய லிஸ்ட்டையே போட்டிருக்கிறார்கள். சிலைக ளில் பாருங்கள். அங்கும் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்ணிற்குத்தான் மிக முக்கியமான இடத்தைத் தந்திருக்கிறார்கள். சிறிய மார்பகங்கள் கொண்ட அரசியோ, அழகியோ இருந்திருக்கவே இல்லை என்கிற முடிவைத்தான் சிற்பங்களைப் பார்க்கும் போது எட்ட முடிகிறது. இப்போதைய சினிமா கனவு நாயகிகளை லிஸ்ட் போட்டுப் பாருங்கள். அதில் பத்து பேரில் எட்டு பேருக்கு மேல் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்ணாக இருப்பார்கள். பழம் இலக்கியங்களில் பெரிய மார்பகங்கள் இப்படியெல்லாம் வெளிப்படையாக வகைப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் முலை என்று எழுதுவதே மிகப் பெரிய புரட்சி நடவடிக்கை போல புரிந்து கொள்ளப்படுவதை என்னவென்று சொல்வது? இந்தவகையான பெரிய மார்பகம் குறித்த பித்தால் அவதிப்பட்ட துறவி ஒருத்தரின் கதையை இந்தயிடத்தில் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
இடிந்தகரை நியாபகம் இருக்கிறதா உங்களுக்கு? அணு உலைக்கெதிரான போராட்டங்களெல்லாம் நடந்தனவே. மக்கள் கூட்டம் கூட்டமாக உண்ணா விரதமெல்லாம் இருந்தார்களே? அதே ஊர்தான். இந்தியாவிலேயே அங்கு மட்டும்தான் விசுவாமித்திரரருக்கு கோயில் இருக்கிறது. விசுவாமித்திரனின் தவத்தைக் கலைத்த மேனகை ஒரு பரதவ குலப் பெண் என்றும் ஒரு வாய்வழிக் கதை இருக்கிறது. சிறுவயதிலிருந்தே பால் சுறா மீன்களை உண்டு வளரும் பரதவ குலப் பெண்களுக்கு இயல்பிலேயே பெரிய மார்பகங்கள் அமைகின்றன. ஆக விசுவாமித்திரருக்கும்கூட இந்த பெரிய வகை மார்பகங்கள் குறித்த பித்துப் பிடித்திருக்கிறது என்ற முடிவிற்கு இதன் மூலம் வரலாம். விசுவாமித்திரரை மயக்கிய மேனகை எங்கள் பரதவகுலப் பெண்ணா என யாரும் போர்க்கொடி பிடித்துவிட வேண்டாம். அப்புறம் ஏன் இந்தியாவிலேயே இங்கு மட்டும் அவருக்குத் தனிக் கோயில் இருக்கிறது என்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

இந்தப் பித்து தற்காலம் வரை நீடிப்பதுதான் பிரச்னைக்கும் காரணம். இது போல கட்டுரைகள் எழுதப்படுவதற்கும் காரணம். மாருதி ஸ்விப்ட் வண்டியை உலகத்தில் எந்த இடத்திலும் சீந்தக்கூட இல்லை. ஆனால் இந்தியாவில் அந்த வண்டி பம்பர் ஹிட். காரணம் வேறொன்றுமில்லை. அதன் பின்புறம் பருத்து பெரியதாக இருக்கும் என்பதுதான் காரணம். நண்பர் ஒருத்தர் விரட்டி விரட்டி பலான படங்களைப் பார்ப்பவர். ஒருமுறை, எஃப் டிவியை பிடிபிடியென பிடித்துக் கொண்டிருந்தார். என்ன காரணமென்று அவரிடம் கேட்ட போது, “என்ன எழவோ. இவள்களெல்லாம் சாப்பிடுவாளுகளா இல்லையா? நெஞ்சே இல்லாம அலைஞ்சுக்கிட்டிருக்காளுக” என்றார். உலகளாவிய டிரெண்ட் இதுதான் என்பதை அவருக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? அவர் ‘W’ என்று படம் வரைந்தால்கூட அதைக் குண்டாக வரையும் மரபணு கொண்டவர்களிடம் பேசிப் பயனில்லை என்பதால் நகர்ந்து விட்டேன்.
பொருளாதார உலகில்கூட சிறியதாக இருப்பதே சிறப்பு என வலியுறுத் துகிறார்கள். இப்போது வஞ்சிர மீனையே எடுத்துக் கொள்வோம். மேகி நூடுல்ஸ் சர்ச்சையில் சொல்லிக் கொண்டிருந்த, ‘லெட் கண்டண்ட்’ என்பது பெரிய வகை மீன்களில் அதிகமாக இருப்பதாக லேட்டஸ்ட் ஆய்வுகள் சொல்கின்றன. சிறிய வகை மீன்களில் இந்த வகை பாதிப்புகள் குறைவாக இருப்பதால், மருத்துவர்கள் சிறிய வகை மீன்களையே அதிகம் சாப்பிடச் சொல்கிறார்கள். பெரியதாக இருப்பவற்றால் சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதைச் சொல்வதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன். பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் பலர் இறுக்கமான பிரா அணிவதால், தீராத முதுகு வலியால் அவதிப்படுவதை ஏற்கனவே முன்பே சொல்லியிருக்கிறேன். தவிர இன்னபிற சிக்கல்களையும் சொல்லிக் கேட்டு அதையும் சொல்லியிருக்கிறேன். ஆனால் தங்களது கணவன், தன்னைச் சுற்றியிருக்கிற பார்வையாள உலகத்திற்காக பெரியதாக இருப்பதை விரும்புவதாகச் சொன்ன அவர் அடுத்துச் சொன்னதுதான் அதிர்ச்சி ரகம். கடவுள் பூமிக்கு இறங்கி வந்து உன்னுடைய உடலில் ஒரு உறுப்பை கூட்டிக் குறைக்க வரம் தருகிறேன் என்று கேட்டால் என்ன சொல்லுவேன் தெரியுமா என்றார். என்ன என்று கேட்ட போது, “என்னுடைய மார்பகங்களை சிறியதாக வடிவமைக்கச் சொல்வேன்” என்றார்.
இதில் உள்ள உளச்சிக்கலைப் புரிந்துகொள்வதற்கு நாம் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும்.
சிறிய அளவான அடக்கமான அளவுடைய மீன்களைப் பார்த்திருக்கிறீர்களா? உடனே அவை சாப்பிடத் தூண்டும். எனவே தயவுசெய்து நண்பர்களே வஞ்சிரம், பாறை என பெரிய வகை மீன்களை விரும்புவதை விட்டுவிட்டு மத்தி, சங்கரா போன்ற சிறியரக மீன்களையும் விரும்புங்கள். உண்மையில் அவைதான் உணவிற்குத் தகுந்தவை. சுவையிலும் அதை அடித்துக் கொள்ள வேறெதுவும் கிடையாது. தவிர எந்த விதத்திலும் அது உங்களுக்கு போரடித்துவிடாது. கைக்கு அடக்கமாக எப்போதும் ருசியைத் தூண்டும் மீன்களாக அவை இருக்கும் என்பது அனுபவப் பாடம். பெரியவை குறித்த பித்தும் விரைப்புத்தன்மை குறித்த கவலையும் உங்களை மட்டும் பாதிப்பதில்லை. இந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அவை பாதிக்கின்றன என்பதையும் நினைவில் நிறுத்துங்கள். அதற்காக பெரிய மார்பகங்களே தேவையில்லை என்பதில்லை. இயல்பாய் அது இருந்துவிட்டுப் போகட்டும். அதன் மேல் உங்கள் கற்பனைகளையோ எதிர்பார்ப்புகளையே ஏற்றாதீர்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். உங்களது தேவையில்லாத மனச்சிக்கல்களுக்காக கண்ணகி போல் அதை பிய்த்து எறிந்து கொண் டிருக்க முடியாதல்லவா? புற்றுநோய் உள்ளிட்ட இன்னபிற நோய்க் காரணங்களுக்காக மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண்கள் மீதும் மையல் கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. ஏனெனில் கமலஹாசனை நீங்கள் திரையில் மட்டும் பார்க்கவில்லையே? ஒருவேளை வஞ்சிர மீன்கூட கடலுக்குள் இதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கலாம்.
இலக்கியங்கள் தத்துவங்கள் எல்லாம்கூட இதையேதான் வேறுவேறு மொழியில் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்கிற வரிகளை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். நான் சொன்னதன் அர்த்தம் புரியும். விரைப்புத்தன்மை குறித்துப் பேசிக் கொண்டிருந்ததை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டோமே? சிறிய ரக அயிலா மீன்களைச் சாப்பிடுங்கள் சிறப்பாய் இருக்கும்.


.கட்டுரையாளர் சரவணண் மூத்த பத்திரிக்கையாளர்"சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி" இயக்குநர்.இவரின் ஐந்து முதலைகளின் கதை மிக பரவலான வரவேற்பை பெற்றது .இக்கட்டுரை  மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு அக்டோபர் மாத உயிர்மை இதழில் வெளியாகியது

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

சிம்புவின் ‘பீப்’ பாடலை முன்வைத்து : ஆதலால் இனி பெண்கள் காதை பொத்திக் கொண்டு அலைவோமாக!

விலாசினி ரமணி என் வீட்டுக்கருகில் ஒரு தறுதலை இருந்தான். எப்பொழுதெல்லாம் வீட்டை விட்டு இறங்குகிறேனோ அப்போதெல்லாம் சரியாக அவன் வண்டியைக் கிளப்பி தொடர்ந்து ஒலியெழுப்பிக்கொண்டேயிருப்பான். அவன் வீட்டு வாசலிலிருந்துதான். தெருவில் எங்காவது என்னைக் கடக்க நேர்ந்தாலும் விறுக்கென்று வண்டியை அதி வேகத்தில் உறுமவிட்டுச் செல்வான். எங்கள் வீடுகளுக்குப் பொதுவாக துவைத்த துணியைக் காய வைக்க உள்ளாடைகளான பிரா ஜட்டி பேண்டிஸ் திருடி சுய இன்பம் செய்வான் கட்டப்பட்டிருக்கும் கொடியை (அது நான் கட்டியதில்லையென்றாலும்) சமயம் கிடைக்கும் போதெல்லாம் அறுத்தெறிவான். என் துணிகள் அதில் காயாத போதும். வீட்டில் தொலைபேசி அடிக்கும் ஆனால் யாரும் பேச மாட்டார்கள். அவன் தான் என்றெல்லாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. வீட்டில் ஏதோ வேலையாக உள்ளறையில் இருந்தால், “வெளியே வாடி” என்பதுபோல் தொடர்ந்து ஏதாவது பொறுக்கித்தனம் செய்தபடி இருப்பான். அவன் நண்பர்களோடு இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம். எத்தனைக் கேவலமான வார்த்தைகளைப் பேச முடியுமோ, “புண்டை , கூதி”, “சுண்ணி” எல்லாம் எந்த பீப்பும் இல்லாமல் வரும். ஒரு கட்டத்த...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...