முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:







இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015


ஆர்.ராமசுப்ரமணியன்

பிப்ரவரி 13,2015 எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ்,தெலுங்கு,மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில்
இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு,தயாரிப்பு ,நிர்வாகம்,தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே ,ஆரம்பித்து 25 வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது .
பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினார்.இதனை 9,000 ச அடிகள் கொண்ட அலுவலக கட்டிடத்தின் காவலாளி மிக கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார் .
புகைப்படம் எடுக்கும் நிகழ்வு மட்டுமே ஓரளவுக்கு இறுக்கமான சூழ்நிலையை மாற்றியது .."நீங்கள் எல்லோரும் வேலையிலிருந்து வெளியேறினாலும்,இப்பொழுது வரைக்கும் புகைப்படம் எடுப்பதிலேயே மிகவும் பிஸியாக இருக்கீங்க "என்றார் சென்னையின் முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளர் பி.சி.சேகரன் மிக வெறுமையாக.



திடீர் முடிவு:
            பிப்ரவரி 9 ,2015  இந்தியா டுடே குழுமத்தின் சீஃப் எக்சிகியூடிவ்  ஆபிசர் ஆஷிஷ் பக்கா  மனித வள அதிகாரிகள் குழுவுடன் சென்னை வந்தார்,ஊழியர்களுடனான கூட்டத்தில் மூன்று பதிப்புகளையும் மூடுவதாக அறிவித்தார்.20 ஆண்டுகளாக மூன்று பதிப்புகளும் நஷ்டத்தில் இயங்குவதாகவும் இந்தியா டுடே குழுமம் இனியும் இதனை தாங்கமுடியாது என்றும் கூறினார்,பிப்ரவரி 25க்கு விற்பனையாகும் கடைசி இதழ் என்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறினார்.
பின்னர் எடிட்டர் இன் சீஃப்பும் ஸ்தாபகருமான அருண்பூரி ஊழியர்களுக்கு தனது இறுதி முடிவினை மின்ன்னஞ்சல் மூலமாக தெரிவித்தார்.
ஏப்ரல் 30 ல் இந்தியா டுடே குழுமத்தின் தென்னக அலுவலகம் அதே கட்டடத்தில்6 ,500 சதுர அடியில் சிறிய எடிட்டோரியல் மற்றும் விற்பனை குழுவாக தொடர்ந்து செயல்படும் என்றார்.


       இந்தியா டுடே 15 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு "சிகரம் 15" நிகழ்வில் மீடியா அதிபர் கலாநிதிமாறனுக்கு விருது வழங்கும் இந்தியா டுடே வின் எடிட்டர் இன் சீஃப் அருண்பூரி வலமிருந்து இடம்
                                         
செப்டம்பர் 2013 ,இதழின் முக்கிய அளுமைகள்,உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட சென்னை எடிட்டோரியல் சந்திப்பில் மூன்று இதழ்களும் முற்றிலும் பாதிப்பில் உள்ளன என்ற செய்தி வெளிப்படையான அறிவிப்பாக இருந்தது.இதனால் தெலுங்கு,மலையாள பதிப்புகளை மாத இதழ்களாக மாற்றப்படுவது என்ற முடிவினை பூரி மே 2014 பொது தேர்தல் வரை கிடப்பில் போட்டார்.
எனினும் 2014 செப்டம்பரில் நடைபெற்ற தில்லி எடிட்டோரியல்  மீட்டிங்கில் தெலுங்கு ,மலையாளம் பதிப்புகள்  மாத இதழ்களாக‌
மாற்ற இருந்தன என்ற அறிவிப்பு வந்தது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் பதிப்பை மாத இதழாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறப்பட்டு வந்தது.எனினும் பிப்ரவரி 9,2015 தமிழ் பதிப்பு மூடப்படுவதாக வந்த செய்தி ஏதிர்பாரததுதான்

.
சாகசங்கள் நிறைந்த பயணம்:

         இந்தியா டுடே யின் முதல் தமிழ்பதிப்பு செப்டம்பர் 1989ல் வெளியிடப்பட்டது.அதிலிருந்து அது ஒரு நீண்ட ஆச்சரிய பயணமாகவே இருந்தது.அந்த காலம் மிக நன்றாக இருந்தன.நாங்கள் உணர்வுரீதியான வார இதழடன் ஒன்றிபோய் இருந்தோம் எனலாம்.
இரண்டு சுற்று இதழ்களுக்கு அடுத்ததாக முதல்  இதழாக அம்பானி‍‍
நெய்வாஸ் வாடியா இடையேயான பிரச்சனை பற்றி அட்டைபடமாக வெளிவந்தது.


      இந்தியா டுடே முதல் தமிழ் பதிப்பின் இதழ் செப் 5, 1989

 90 களில் டெல்லி ஆங்கில பதிப்பை போலவே வார இருமுறை இதழாக மாற்றப் பட்டன.வார இதழாக மற்றப்பட்ட காலம் மிகவும் போரட்டமாக இருந்தது.தமிழ் எழுத்துருவை தேர்வு செய்வது மிகவும்
 கடினமாக இருந்தது.வடிவமைப்பும் நிறைவற்று இருந்தன. ஆனால்
உள்ளடக்கம் மற்றும் அச்சுமுறை உயர்ந்ததாக இருந்தது .இதழில் பக்க செய்திக்கட்டுரையை பக்கமாக மாற்றியமைப்பதே மிகப்பெரிய சாவலாக இருந்தது.,
நாங்கள் வடிவமைப்புக்காக மொழிபெயர்ப்பை இழந்தோம்.ஏனினும் நிலைமை காலப்போக்கில் மாற்றப்பட்டது என்கிறார் நாணா.


   என்.எஸ்.நாணா  இந்தியா டுடே தென்னகபதிப்பின் யின் டெபுடி ஆர்ட்  டைரக்டராக பணியாற்றியவர்.தமிழ் பதிப்பின் லோகோ வை உருவாக்கியவர்


1989 முதல் 2002 வரையிலான காலகட்டம் ஆபூர்வமானது.ராஜிவ்காந்தி,வளைகுடா போர்,சோவியாத் யூனியன் பிளவு,பொருளாதார சீர்திருத்தங்கள்,ஜயின் கமிஷன் அறிக்கை வெளியீடு,ஐ.கே .குஜ்ரால் அரசு வீழ்ந்தது மற்றும் பி.ஜே.பியின் வளர்ச்சி என தமிழ் வாசகர்களுக்கு பெரும் தீனி போட்டது.
ராஜ செங்கப்பாவின் போர் பற்றிய நேரடி அறிக்கைகள்,சேகர்குப்தாவின் சோவியத் யூனியன் பிரிவு பற்றிய கட்டுரைகள் தமிழ் வாசகர்களுக்கு உலக வரலாற்று நிகழ்வுகள் பற்றிய உணர்வை அறிய வைத்தன என்கிறார் நாணா.
அப்போது தமிழக அரசியலிலும் கூட மிகவும் சுவராஸ்யமான காலமிது.ராஜிவ் காந்தி படுகொலை ,ஜெ.ஜெயலலிதாவின் வீழ்ச்சி
மற்றும் கைது,சினிமாவில் ரஜினிகாந்தின் மிகப்பெரிய வளர்ச்சி,திமுக கட்சியில் பிளவு என வாசகர்களுக்கு சிறந்த தீனியாக இந்தியா டுடே தமிழ் அமைந்தது,
இந்தியா டுடே தமிழ் பதிப்பு கவர்ஸ்டோரி வெளியிடுவதில் முன்னோடியாக திகழ்ந்த்து.கவர்ஸ்டோரிக்காக தரவுகளை பகுப்பாய்வு செய்தல்,வரைபடங்கள்,பெட்டி செய்திகள்,தகவலகள்,புகைப்பட கட்டுரை ஆகியவற்றைக் கொண்டு கவர்ஸ்டோரி படைப்பதில் தமிழ்நாடு பதிப்பு முன்னோடியாக இருந்தது,அதன்பிறகே மற்ற சில தமிழ் பத்திரிக்கைகளும் இதே முறையை  பின்பற்ற தொடங்கின எனலாம்.
வாஸந்தி

இலக்கிய தரத்தில் இலக்கிய மலர்களை தொடர்ச்சியான இந்தியா டுடேவில் கொண்டுவந்தவர்


தமிழ்நாடு  உள்ளூர் செய்திகளை வெளியிடுவதில் பிரச்சனைகள் இருந்தன .முதல் இரண்டு செய்தி ஆசிரியர்கள் மாலன் ,வாஸந்தி இருவருமே இலக்கிய பின்புலம் கொண்டவர்கள் ஆனால் பத்திரிக்கையாளர்கள் அல்ல இது சில நன்மைகளை விளைவித்தாலும் கூட இதழ் தொடர்ந்து செய்தி இதழாக இருப்பதில் பாதிப்பையே ஏற்படுத்தின.இதழை உள்ளூருக்கு தகுந்தபடி மாற்றியமைக்கவில்லை .இதற்காக நான் தில்லி தலைமையுடன் முரண்பட்டேன்.நிலைமை மெல்ல பின்னர் மாறியது என்றாலும் தேசிய தரத்திற்கு உள்ளூர் செய்திகளை வெளியிட வலுவான காலச்சாரம் தோல்வியுற்றது என்கிறார் தமிழ் பதிப்பின் முன்னாள் இணை ஆசிரியர் ஆழி செந்திலநாதன்,ஏனினும் அந்த காலத்தில் தேசிய செய்திகள் 360 கோணத்தில் மிக அழமாக இருந்தனதமிழ் இதழியலில் பத்தி எழுதும் முறையை கொண்டு வந்தது இந்தியாடுடே தான் என்கிறார் செந்தில்நாதன்
தில்லி‍‍ தலைமையின் அணுகுமுறை:

இந்தியா டுடே தமிழ் இதழியலில் தொழிற்முறையை கொண்டுவந்தது,ஆனால் தமிழ்நாடு அளவிலான உள்ளூர் செய்திகள் பரவலாக இல்லாததால் தமிழ் வாசகர்களின் கண்களுக்கு அதன் தமிழ் பதிப்பு  வேற்றுலக வாசியாக(ஏலியன்ஸ்)கருதப்படும்  ஒரு விசித்திர சூழ்நிலையை உருவாக்கியது

ஒவ்வொரு செய்திகளுக்கும் தம்மாத்துண்டு செய்தி போட வேண்டும் என்றாலும் கூட தில்லி தலைமையின் உத்தரவு வாங்க வேண்டும் எனபது காட்டாயம்.2002 ல் ஆனந்த நடராஜன் எக்ஸிகியூடடிவ் எடிட்டர் ஆக பதவியேற்ற பின்னர் தான் நிலைமை மாற்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டது என்கிறார்கள் சில முன்னாள் ஊழியர்கள்.



ஆனந்தநடராஜன்,ராமநாதபுரத்தை சேர்ந்தவர்,இந்தியா டுடே தமிழ் பதிப்பில் எக்ஸிகியூட்டிவ் எடிட்டராக 2002‍ முதல் 2013 வரை இருந்தவர்

 அவர் உள்ளூர் செய்திகளை படைப்பதில் கவனம் செலுத்தினார்.
 மேலும் சில புதிய பகுதிகளை தமிழிலுக்கு அறிமுகம்  செய்தார்.துரதிருஷ்டவசமாக தில்லி தலைமையின் அனுசாரனை  இல்லாததால் இயல்பான பத்திரிக்கையாளராகிய ஆனந்தநடராஜின் முயற்சிகள் தோல்விகண்டன.
பெரும்பாலன நோக்கர்கள் தில்லி தலைமையே அதன் வீழ்ச்சிக்குக் காரணம் என்கின்றனர்.இதுவே ஒரு காலத்தில் விற்பனையில் 2.75 லட்சம் பிரதிகள்  விற்ற  தமிழ் பதிப்பை 24,000 பிரதிகளுக்குக கீழே இறங்கி வர காரணமாக இருந்தது.

இதழின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம் சந்தைப்படுத்துதல்,விற்பனை,விளம்பரம் மற்றும் விநியோக பிரிவுகளில் காணப்பட்ட குறைபாடுகள் என்கிறார் பெயர் குறிப்பிட விருமபாத அதில் பணியாற்றிய ஒருவர்.
"எடுத்துக்காட்டாக சென்னையிலிருக்கும் பெரிய ஜவுளி பிராண்ட் இந்தியாடுடே தமிழ் பதிப்பில் விளம்பரம் செய்ய விரும்புகிறது என்றால் டெல்லியிலிருந்து அதற்கான அழைப்பை பெற வேண்டும் அதன்பிறகே அதன் இடம் பற்றிய போதனைகள் வழங்கப்படும். இப்படியா தொனியிலான காலவிரயத்தினால் விளம்பரதாரருடன்
இணையும் திட்டத்தைனை முற்றிலும் கைவிட்டது.இதுவே பிராந்திய பதிப்புகளின் விளம்பர சந்தையினை அழித்தன என்கிறார் அவர்.
 மேலும் சில நிறுவனங்கள் தமிழ் பதிப்பில் விளம்பரம் செய்ய முன் வந்தால் கூட அவர்கள் ஆங்கில பதிப்பிலும் விளம்பரம் செய்ய அழுத்தம் செய்யப்பட்டதால் தூரத்தி அடிக்கப்பட்டன.இது நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் குறிக்கோளுடான படுகொலை என கணக்கிடப்படுகிறது என்கிறார் அவர்.
அருண்பூரியை தவிர இந்தியா டுடே நிறுவனத்தில் யாருக்கும் பிராந்திய பதிப்புகளை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என்கின்றார் செந்தில்நாதன் இது "தலையில் இருந்த மீன் அழுக" என்பதற்கு சிறந்த உதாரணம் என்கிறார் அவர்


 ஆழி செ.ச.செந்தில்நாதன் 2012 இல் இந்தியா டுடே தமிழ் இதழில் சீஃப் காப்பி                                 எடிட்டராக  பணியாற்றியவர்.

சென்னை அலுவலகம் 2012 மார்ச் ல் வாடகைக் கட்டைடத்திற்கு சென்றபோதே அதன் எதிர்காலம் என்னவென்று முன்கூட்டியே தெரிய ஆரம்பித்தது என்கிறார் செந்தில்நாதன்.அலுவலகம் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது 23ஆண்டுகளின் மொத்த இதழ்களும்  அவர்கள் பெற்றனர்.ஆனால் அதனை முழுவதுமாக நூலகத்திற்கே அளித்தனர்.மொத்த இந்தியா டுடே இதழ்களும் அதற்காக ஆதாரங்கள் 23 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் மற்றும் பிற துறைகளின் பதிவுகளாகும்,குகூள் ,மைக்ரோசாப்டின் மதிப்பின் படி பார்த்தால்50 கோடிகள் தேரும்.ஆனால் அதனை நூலகத்திற்கே அளித்தனர்.நான் புல்லரித்துவிட்டேன் என்கிறார் செந்தில்நாதன்.
மேலும் அவர் இதழை இணையத்தில் தொழிற்நுட்ப ரீதியில் தரம் உய்ர்த்த மறுத்தலும் ஒரு பிரச்சனையாக இருந்தது என்கிறார்.தமிழ் ,தெலுங்கு,மலையாளம் பதிப்புகளுக்கென்ற பிரத்யேக இணையதளங்கள் கிடையாது.இது ஊடகம் பிரிவு "டிஜிட்டலைசேசன்" நோக்கி முன்னேறுவதிலும் குழி பறித்தது.
எனினும் 25 ஆண்டுகளாக சந்தையில் இருந்த இந்தியா டுடே அதன்
பிராந்திய பதிப்புகளை தவிர்ந்திட எடுத்த முடிவு ஒரு பரிதாப நிலைதான் என்கிறார் செந்தில்நாதன்.

ரியல் எஸ்டேட்டாக பார்க்கும் நிலை:

  அருண் பூரிக்கு இந்தியா டுடெயின் தென்னக பதிப்புகளின் மீது  சில கனவுகள் இருந்தன.மூன்று பிராந்திய பதிப்புகளும் அவரின் செல்ல திட்டமாகும்.ஆனால் அவரின் அடுத்த தலைமுறையினருக்கு இதன் மீது ஈடுபாடோ ,காதலோ இல்லை.பூரிக்கு வயதாகிவிட்டது ,குடும்ப உறுப்பினர்கள் தந்த அழுத்ததின் காரணமாகவே அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத டெல்லி அலுவலத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளில் ஒருவர்.
பிர்லாவிடம் 26 சதவீத பங்குகள் கைமாறிய போது நிலைமை மோசமானது,பிர்லாக்கள் தந்த அழுத்தமும் காரணம்,ஆனால் அது ஒன்று மட்டும் அல்ல,பூரியின் அடுத்த தலைமுறையினரிடம் சிக்கிதவிக்கிற நிறுவனம் பிராந்திய பதிப்புகளின் சந்தை மேல் ஆர்வத்தை இழந்ததே காரணம் என்கிறார் மற்றொரு மூத்த நிர்வாகி.


                  அருண்பூரியுடன் குமார  மங்களம் பிர்லா
 பூரியின் மகன் ஆங்கார்பூரி சென்னை அருகே  மறைமலைநக‌ரில்
 உள்ள "தாம்சன் பிரஸ்" என்ற அச்சகத்தை நிர்வாகிப்பவர்.தாம்சன் பிரஸ் 18    ஏக்கரில் செயல்படுகிறது .இதன் மொத்த மதிப்பு 160 கோடி.அவர்கள் எந்த புது   ஆர்டரையும் எடுப்பதில்லை. தென்னிந்தியாவிற்கான ஆங்கில இந்தியாடுடேவை  அச்சிடவே பேணி வருகின்றனர்.இது பூரியின் மகனுக்கு  எவ்வித அணைப்பை ஏ ற்படுத்த வில்லை.அங்கே ஓட்டுமொத்த தென்னிந்தியாவிற்குமான மொத்தம் 40,000 பிரதிகளே அச்சிடப்பட்டு வருகின்றன.இந்த அற்பமான பிரதிகள் பொருட்டு பெரிய அச்சகம் (சொத்து) தேவையில்லை என்றே கூறிவருகிறராம்.அவரின் கண்களுக்கு இதழியலை விட ரியல் எஸ்டேட் தெரிகிறது
இன்று தரமான தமிழ் பத்திரிக்கைகளுக்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.குறுகிய காலத்தில் அவர்கள் மீண்டும் வந்தால் கூட இந்தியா டுடே அதன் இடத்தை நிச்சயம் பூர்த்தி செய்யும்.
"ஆமாம் நிச்சயமாகஆறு மாதத்திலோ அல்லது ஓராண்டு காலத்திலோ மீண்டும் ஆரம்பித்தால் கூட சந்தையை கைப்பாற்றுவார்கள் என்பது உறுதி ஏனென்றால் அவர்களுக்கு போட்டியாளர்கள் கிடையாதுயாரும்  இந்தியா டுடே தரத்தினை ஈடு செய்ய முடியாது" என்கிறார் மூத்த ஆர்ட் டைரக்டர்  என்.எஸ்.நாணா.
இவைதான் "ஏன் இதழின் பழைய பணியாளர்கள் சென்னை அலுவலகத்திற்கு கடைசி நாளில் வந்தனர் என்பதற்கு இயல்பான காரணம்".அங்கே ஒரு நல்ல‌ பிராந்திய இதழியல் ஏக்கத்துடன் உள்ளது

                     ஆர்.ராமசுப்ரமணியன், மூத்த‌பத்திரிக்கையாளர் 
        இந்தியா டுடே தமிழ் பதிப்பில் முதன்மை செய்தியாளராக இருந்தவர்.

        நன்றி ஆங்கில இணையதளம்:   http://viewsonnewsonline.com/?p=931

        சஞ்சிகை  இதழுக்காக‌  தமிழில்:   மகேஸ்வரன்பாண்டியராஜ்
 
                                   தொடர்புக்கு:maheshwarg20@gmail.com

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...