முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

PARCHED: உலர் பெண்டிர்



Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான் PARCHED படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன.

பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.)


ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள், குடித்து விட்டு வந்து அவளை மலடி எனச் சொல்லி அடிக்கும் கணவனைப் பெற்றவள். ஒருத்தி ரெக்கார்ட் டான்ஸ் ஆடுபவள், அதன் நீட்சியாய் பாலியல் தொழில் செய்பவள். ஒருத்தி தன் காதலைத் துறந்து விட்டு 14 வயதிலேயே 4 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு பெற்றோறால் இன்னொருவனுக்குக் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறவள். இவர்கள் நால்வரும் இவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கதை.

ராஜஸ்தானின் ஏதோ ஒரு பட்டிக்காட்டில் கதை ந‌டப்பதாகக் காட்டுகிறார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாத பத்தாம்பசலிக் கிராமம் என்பதைக் காட்ட டிவி கூட இன்னும் அங்கே வரவில்லை எனக் காட்டியிருப்பது கொஞ்சம் நம்பச் சிரமமாக இருக்கிறது. போலவே ஷாரூக் கான் யாரென்றே தெரியாத பெண்கள் கொண்ட‌ வட இந்தியக் கிராமம் என்பதும்.

Bhopal: Prayer for Rain, Angry Indian Goddesses ஆகிய படங்களில் நடிப்பின் மூலம் முன்பே கவர்ந்தவர் நடிகை தன்னிஸ்தா சேட்டர்ஜி. இப்படம் அவரது மாஸ்டர்பீஸ். ராதிகா ஆப்தே பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தான் கர்ப்பமுற்றதை உணரும் காட்சியில் அவர் முகபாவங்கள் ஓர் அற்புதம். இன்னொரு காட்சி குழந்தை பெற இன்னொரு ஆடவனுடன் கலவியில் ஈடுபடும் காட்சி. அக்காட்சியில் பெருமாள்முருகனின் மாதொருபாகன் நினைவு வந்தது. (அது வேறு மனநிலை என்றாலும்) பொன்னாவின் எதிர்வினையும் கிட்டத்தட்ட அப்படியானதாகவே இருக்கும். மாதொருபாகன் திரைப்படமாக எடுக்கப்பட்டால் பொன்னாவாக ராதிகா ஆப்தேவே நடிக்க வேண்டும்! விரைவில் ராதிகா தேசிய விருது பெறுவார். (இப்படத்திலேயே சிறந்த துணை நடிகையாக வாங்கக்கூடும்.) பாலியல் தொழிலாளியாக வரும் சுர்வீன் சாவ்லாவும் சிறப்பான பங்களிப்பு. இவர்களின் உயிர்ப்பான‌ நடிப்புக்காகவே படத்தை நிச்சயம் பார்க்கலாம் என்பேன்.

படத்தில் ஒரு காட்சி வரும். Motherfucker, Sisterfucker என்றெல்லாம் சொற்கள் உருவாக்கியது ஓர் ஆணாய்த் தான் இருக்க முடியும். ஏன் எப்போதும் பெண்களே தான் அப்படிக் கலவி செய்யப்பட வேண்டுமா? நாம் இப்போது புதுச் சொற்கள் உருவாக்குவோம் எனச் சொல்லி Sonfucker, Brotherfucker என மலை மீது உரக்கக் கூவுவார்கள். தற்காலிகச் சுதந்திரம் கிடைத்த உற்சாகமான பாமரப் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு வெளிப்படுத்தும் வெள்ளந்தித்தனமான ஒரு குறியீட்டு எதிர்ப்பாய் அதை இயக்குநர் முன்வைக்கிறார் என்றே எடுத்துக் கொள்கிறேன். சோகம் என்னவென்றால் இணையத்தில் பெண்ணுரிமை பேசினால் கிடைக்கும் அகண்ட புகழையும் செல்வாக்கையும் கண்டு ஈர்க்கப்பட்டு வீராவேசமாய் உருவாகும் பெரும்பாலான self-proclaimed பெண்ணியவாதிகள் பலரும் பெண் சுதந்திரம் என்பதே அப்படிக் கதறுவதோடு முடிந்து விடுகிறது என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் அந்தக் கதாபாத்திரங்கள் அப்படிக் கத்துவதோடு நின்று விடுவதில்லை. பெரும்பாலான பெண்கள் எடுக்கத் தயங்கும் சிரமமான தேர்வுகளைத் தம் வாழ்வில் எடுக்கின்றனர். தம் மனம் விரும்பியபடி வாழத் தீர்மானிக்கின்றனர். சுருக்கமாய்ச் சொன்னால் பெண்ணியம் என்ற சொல்லை ஒருமுறையும் பயன்படுத்தாமல் அவர்கள் தம் செயலால் பெண்ணியம் பேசி விடுகின்றனர். அவர்கள் நம் மனதில் நிறைகிறார்கள்.

"Women who read do not make good wives" என்ற வசனம் படத்தில் வருகிறது. கல்வி மறுக்கப்படும் பெண் அடிமையாகத் தான் இருப்பாள் என்ற பெரியாரின் கருத்தை அது முன்வைக்கிறது என்றாலும் "Women who (just) read do not make good feminists either" என்று தோன்றியது. வாசிப்போடு கூடிய நேர்மையும், நல்லறிவுமே அசல் பெண்ணியத்திற்கு அடிகோலும்.

இன்னொரு விஷயம் இந்தப் படத்தில் பெரும்பாலான ஆண்கள் ஆணாதிக்கவாதிகளாகவும், வன்முறையாளர்களாகவும், கெட்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் எல்லா ஆண்களும் அப்படியே என இயக்குநர் முத்திரை குத்தவில்லை. அதே ஊரில் தான் பெண்கள் வேலைக்குச் சென்று முன்னேறுவதை ஊக்குவிக்க அவர்களை நம்பி, மதித்து வாய்ப்புகள் வழங்கும் ஆணும், ப‌டுக்கையில் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் அளித்து அவளைச் சமமாய் நடத்தி இன்பத்தைத் தரும் / பெறும் ஆணும், பெண் மீது கொண்ட பிரியத்தால் அவளுக்காக பல கிலோமீட்டர்கள் சைக்கிள் மிதித்து வந்து அவளைச் சந்திக்கும், இன்னொருவனுடன் திருமணமாகி அவள் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதால் கற்பு என்பதை மறுதலித்து அவளை மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் ஆணும் இருக்கிறார்கள். அது முக்கியப் புரிதல்.

பெண்ணியம் என்பது கண்மூடித்தனமாய் ஆண்களை எதிர்ப்பதும், திட்டுவதும், மறுப்பதும், துறப்பதுமல்ல; அவர்களுடன் இணையாய்க் கை கோர்த்து நடப்பதும், பரஸ்பரம் உதவியாய் வாழ்க்கையை நடத்துவதும், அது சாத்தியப்படாத போழ்து அவர்களிடமிருந்து விலகி தன் மனம் சரியெனத் தீர்மானிக்கும் வழியைச் சுதந்திரமாய்த் தேர்ந்தெடுப்பதுமே பெண்ணியம் என அழுத்தம் திருத்தமாய் இப்படத்தில் எழுதி வைத்திருக்கிறார் இயக்குநர் லீனா யாதவ். அவருக்கு என் வந்தனங்கள்.

லீனா பளிச்சிடும் ஒரு காட்சி அடி வாங்கிய‌ காயத்துடன் வீட்டுக்கு வரும் ராதிகாவுக்கு தன்னிஸ்தா மேலாடையை அகற்றி மருந்து தடவும் இடம். அங்கே அவர்களுக்குள் பரஸ்பரம் எழும் மெல்லிய காமம் வலுவான தாய்மையாக முதிர்ச்சியுறுகிறது. அதை மேலும் உயரே நகர்த்தும் காட்சி அடுத்து தன்னிஸ்தா இல்லாத போது அதே சூழலில் ராதிகா வரும் போது பதின்ம‌ வயதவளான தன்னிஸ்தாவின் மருமகள் (லெஹர் கான்) மருந்திடும் காட்சி. தாய்மை என்ற உணர்வுக்கு தன் வயதோ எதிராளியின் வயதோ பொருட்டில்லை என்பதும் பெண்கள் வயதுக்கு மீறியும் சக பெண்களின் பிரச்சனைகளை உணர்வர் என்பதும் அதில் சொல்லப்படுகிறது. இது போல் ஆங்காங்கே வலுவான காட்சியமைப்புகள்.

தொடர் அடர்குடியின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படும் ஆண் பாத்திரம் ஒன்று அது தெரிந்தும் தன் மனைவி தான் குழந்தையின்மைக்குக் காரணம் எனத் தினமும் குடித்து வந்து அவள் மீது உடல்நீதியான, மனரீதியான‌ வன்முறைகளைப் பிரயோகிக்கிறது. அவள் வேறு ஒருவனின் மூலம் தாய்மையடையும் போது அதற்கும் அவளைப் போட்டு அடிக்கிறது. அதன் மனோவியலை யோசித்துக் கொண்டிருக்கிறேன். (அன்னக்கொடி மனோஜ் பாத்திரம் நினைவுக்கு வருகிறது.)

ஆண்கள் அதீதமாய்க் குடிப்பதும், பாலியல் தொழிலாளிகளிடம் போவதும் பெண்களின் பெரும் பிரச்சனையாகப் படம் நெடுகிலும் சித்தரிக்கப்படுகிறது. கணவன் அப்படி நடப்பதால் திருமணமாகி வரும் பெண்கள் சொந்த‌ மாமனார் உள்ளிட்ட அந்த வீட்டு ஆண்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதும் சொல்லப்படுகிறது. "நான் எனது கரு ஒன்றைக் கலைத்துக் கொண்டேன். அதன் தந்தை யாரெனத் தெரியாததால்" என்று தன் தாய் வீட்டிற்கு ஓடி வந்து விடும் ஒரு குடும்பப் பெண் பேசும் வசனம் வருகிறது. ஆனால் அவளைக் கட்டாயப்படுத்தி அவளது புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவளது அடிபட்ட‌ பார்வையைப் பார்த்த பின்பும் நாம் இந்தியக் கலாசாரம் பற்றி எப்படி மார் தட்டிப் பேச முடியும்!
ரைட்டர்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

பெண் பெரியார்.

யார் இந்த பெண் பெரியார் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படக் கூடும். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவைத்தான் பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன.   இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி. தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது.   ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும்.  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களி...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...