முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மார்பரசியல்


அங்கே என்னடா பார்வை. முகத்தை பார்த்து பேசத்தெரியாதா உனக்கு. அக்கா தங்கச்சியோட பிறந்தவனா நீ?!” என்று நீங்களே எத்தனை ஆண்களை இதுவரை சபித்திருக்கிறீர்களோ.
அது ஏன் அது ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்? துணிக்கடை பொம்மையை கூட விடுவதில்லையே! ஏன் தான் இந்த வக்கர புத்தியோ, என்று நீங்கள் எவ்வளவு தான் திட்டி தீர்த்தாலும், உண்மை என்ன தெரியுமா?
ஆணின் இந்த இயல்பிற்கு அவன் காரணம் இல்லை. இயற்கை அவனை அப்படி இயங்கும் படியாகத்தான் வடிவமைத்திருக்கிறது. இந்த இயற்கைக்கு வேறு வேலை இல்லையா? போயும் போயும் இப்படியா ஆண்களை வடிவமைக்கணும்? என்று அதற்குள் அலுத்துக்கொள்ளாதீர்கள் ஸ்நேகிதி. இயற்கையின் இந்த ஏற்பாட்டில் நிறைய லாஜிக் இருக்கிறது.
மனித இனம் உருவான ஒன்றரை மில்லையன் வருஷத்திற்கு முன்னால் பூமியில் வேறு சில மனித குரங்குகளும் வாழ்ந்துக்கொண்டிருந்தன. இந்த எல்லா மனித குரங்குகளும் கிட்ட தட்ட ஒரே இனம் என்பதால் எல்லாமே தூரத்தில் இருந்து பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். உதாரணத்திற்கு பொனொபோக்களும், சிம்பான்ஸீக்களூம் வெவ்வேறு விதமான மனித குரங்குகள். பழக்கப்படாதவர் பார்வையில் இரண்டுமே ஒரே மாதிரி தான் இருக்கு என்றே தோன்றிவிடும். ஆனால் உத்து பார்த்தால் வித்தியாசங்கள் தென் படும்.
இது போல தான் அந்த கால மனிதவர்க்கம். சேப்பியன் மனிதர்கள், நியாண்டிரதல் மனிதர்கள், ஃப்லொரிசியன் மனிதர்கள் என்று மூன்று வகையான, (யாருக்கு தெரியும் அதற்கு மேலும் இருக்கலாம்) மனித ஜாதிகள் ஒரே சமயத்தில் பூமியில் வாழ்ந்து வந்தன. இந்த மூன்றூம் ஒன்றுவிட்ட உறவுக்கார உயிரினங்கள் தான் என்றாலும், இவற்றில் கலப்பு நேர்ந்தால் மகசூல் இருக்காது. உதாரணத்திற்கு பூனையும், புலியும் ஒரே ரகமான ஒன்றுவிட்ட உறவுக்கார மிருகங்கள் தான். ஆனால், பூனையும் புலியும் சேர்ந்தால் மகசூல் ஏற்படாதே. அதனால் இயற்க்கை பூனைக்கு தனியாக இன குறீகளையும், புலிக்கு தனியாய் வேறு வித இன குறீகளையும் ஏற்படுத்தி இருக்கு. அந்தந்த மிருகம் அதன் அதன் இன குறியை சரிபாத்து புணரும் படியாக தான் இயற்கை அவற்றின் நரம்புமண்டலத்தை வடிவமைத்து வைத்திருக்கிறது.
இதற்கும் ஆண்கள் பெண்களை இப்படி கண்ட கண்ட இடத்தில் உத்து பார்ப்பதற்கும் என்னங்க சம்மந்தம் என்கிறீர்களா? இருக்கே. நிறைய சம்மந்தம்! பல வகை வானர ஜாதிகள் ஒன்றாக வாழும் போது, அதில் யார் நிஜ மனித பெண் என்பது எப்படி மனித ஆணுக்கு தெரியும்? அவளுக்கு என்று பிரத்தியேகமாய், மனித இன குறிகள் ஏதாவது இருந்தால் தானே, சரி, இது நம்ம ஜாதி என்று இவன் அடையாளம் கண்டு கொள்வான். அப்படி குறி பார்த்து சரியான துணையை தேடி பிடித்து, புணர்ந்தால் தானே மனித இனம் பெருகும். இவன் பாட்டுக்கு குறி தவறி வேற்றின பெண்குரங்குடன் உறவு கொண்டு விட்டால், மனித இனம் பரவாதே.
அதனால் தான் இயற்க்கை, மனித பெண்ணுக்கு என்று பிரத்தியேகமாய் சில இன குறிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதில் முக்கியமான ஒரு இன குறி தான் மனித பெண்ணின் மார்பகம். மற்ற எந்த வானரத்திற்கு இது போன்ற ஒரு கொழுத்த பாலூட்டும் கருவி இல்லை. மனிதர்களில் மட்டுமே இப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது.
அது சரி, மனிதர்களில் மட்டும் ஏன் இப்படி ஓர் ஏற்பாடு? ஏன் என்றால் மனித பெண் தான் மற்ற மிருகங்களை மாதிரி இல்லாமல், எப்போதுமே இரண்டு கால்களில் நடக்கிறாள். அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? விஷயம் இது தான். மற்ற மிருகங்களில் பருவகாலம் வந்ததும் பெண் மிருகத்தின் உடம்பில் சில ஹார்மோன்கள் ஊரும். இந்த ஹார்மோனின் நெடி, காற்றில் பறந்து சுற்றியுள்ள பதினெட்டு பட்டிக்கும் பரவி விடும். இந்த ஹார்மோனால் ஈர்க்கப்பட்டு, வேறேதோ பிரதேசத்தில், மேய்ந்துக்கொண்டிருக்கும் ஆண் மிருகம் மோப்பம் பிடித்துக்கொண்டு, பெண்கள் இருக்கும் இடத்தை வந்து சேரும்.
இப்படி ஆண் வந்து ஆஜராகி, பார்த்தால், அங்கே பல பெண்கள் கூட்டமாய் இருக்குமே. இத்தனை பெண்களின் யார் தனக்கு ஹார்மோன் சிக்னல் அனுப்பினாள் என்று எப்படி தெரிந்துக்கொள்வது? இதற்காக ஆண் மிருகம் பெண்களின் பின்னால் போய், யாருடைய பின் புறம் சிவந்து உப்பி போயிருக்கிறது என்பதை கவனிக்கும். காரணம், சூல் கொள்ளும் தன்மையுள்ள பெண்ணின் ஜனன உருப்பு, சிவந்து உப்பிபோகும். இப்படி ஒருத்தி வீங்கி இருந்தால், அவளிடம் தன் விந்தணுக்களை முதலீடு செய்தால், அடுத்த சில மாதங்களின் அடுத்த தலைமுறை ரெடி! இப்படி இதை கண்டால் இப்படி ரியாக்ட் செய் என்று இயற்கையில் இயங்கும் இது மாதிரியான உத்தரவுகளை தான் இன்னேட் ரிலீசிங் மெக்கானிசம் என்கிறோம். (Innate Releasing Mechanism) எல்லா மிருகங்களிலும் இந்த இன்னேட் ரிலீசிங் மெக்கானிசங்கள் உண்டு. இந்த IRM தூண்டப்படாவிட்டால், அந்த மிருகத்தால் சரியாக ரியாக்ட் செய்யமுடியாது.
நான்கு கால்களின் நடமாடும் மிருகம் என்றால் இப்படி பின்னால் போய், யாருடைய ஜனன பகுதி உப்பி சிவந்திருக்கிறது என்று இன்னேட் ரிலீசிங் மெக்கானிசங்களை நோட்டம் விடலாம். ஆனால் மனித பெண்ணோ இரண்டு கால்களின் செங்குத்தாக தானே நிற்கிறாள். அதனால் அவள் ஜனன பகுதி கண்மறைவாகி விடுமே. இதில் யார் கருவுற தயாராக இருக்கிறாள் என்பதை எப்படி ஆண் மிருகம் கண்டுபிடிப்பானாம்?
இன்றைகாவது ஜன தொகை பெருகி விட்டது, அதனால் யாரும் அடுத்த தலைமுறையை பெற்றுக்கொள்வது பற்றி பெரிதும் கவலை படுவதில்லை. ஆனால் மனிதவர்கம் உருவான அந்த மில்லயன் வருடத்திற்கு முன், நிலைமையே வேறு. அப்போது பூமியில் மனிதர்கள் மிக சொர்ப்ப எண்ணிக்கையில் தான் இருந்தார்கள். அதனால், மகசூலை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
ஆனால் உயிர் உருவாகி, பாலின பிறிவினைகள் ஏற்பட்ட ஆதிகாலத்திலிருந்தே, ஜனன பாகம் உப்பி சிவந்திருக்கும் இன்னேட் ரிலீசிங் மெக்கானிசத்தை வெளிபடுத்தும் பெண்களோடு புணரும் படி தான் ஆண் மிருகங்கள் எல்லாவற்றின் நரம்பு மண்டலம் அமைக்கபட்டிருந்தது. இந்த IRM இல்லாத பெண்ணோடு புணர ஆண்களுக்கு உந்துதல் ஏற்பட்டதே இல்லை.
ஆக, உப்பும் பாகத்தை பார்த்தலே ஒழிய ஆணுக்கு கிளர்ச்சி ஏற்படாது, என்பதால் தான் இயற்கை மனித வர்க்க பெண்களுக்கு மட்டும் இந்த IRMமை கண்ணில் தெரியும் படி, இடமாற்றம் செய்தது. மற்ற மிருகங்களுக்கு இடுப்பெலும்போடு இனைந்திருக்கும் இந்த சமிக்ஞையை மனிதர்களில் மட்டும் மார்பெலும்போடு இனைத்துள்ளது.
இந்த இடமாற்றத்தினால், மனித பெண் முன் பக்கம் சமிக்ஞை பாகம் கொண்ட ஒரே வானர இனமாகி போனாள். அதனால் முன் பக்க வீக்கம் = மனித பெண். இந்த அமைப்பு இல்லாத பெண்= வேற்றின பெண் என்கிற முடிவிற்கு வந்தான் மனித ஆண். இந்த இனக்குறியை வைத்து அவன் தன் இன பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து உறவுக்கொண்டதால் தான் இன்று நாமெல்லாம் பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம்.
இவ்வளவு முக்கியமான மனித இன அடையாள குறியாக இருப்பதினால் மனித ஆணின் மூளையில் இந்த இன்னேட் ரிலீசிங் மெக்கானிசத்திற்கான ஈர்ப்பு மிக அழுத்தமாய் ஏற்கனவே முன் பதிவு செய்ய பட்டுள்ளது. அதனால் தான் சின்ன குழந்தையில் ஆரம்பித்து தொண்டு கிழங்கள் வரை வெறும் இந்த பாகத்தின் மேல் அவ்வளவு மோகம் கொள்கிறார்கள்.
நாகரீகத்தின் துவகத்தில் பெண்கள் இந்த பாகத்தை மறைக்காமல் வெளிப்படையாகவே விட்டுவைத்தார்கள். ஆனால் மனித கலாச்சாரம் பெருகி, நான் எனது என்ற எண்ணங்கள் எழுந்த பிறகு, என் மனைவியின் மனித இன அடையாள குறியை வேறு எவனும் பார்க்கக்கூடாது என்ற கருத்தும் தலைதூக்கியது. அதனால் பெண்கள் மாராப்பு அணிந்து கொள்ளும் வழக்கத்திற்கு மாறினார்கள்.
என்ன தான் மாராப்பை அணிந்து கொண்டாலும், மனித பெண்ணின் இந்த இன்னேட் ரிலீசிங் மெக்கானிச பாகத்தை கண்டு குஷிபடும் ஆணின் தன்மை இன்னும் மாறவில்லை. அதனால் தான் மனித ஆண் இன்னமும் பெண் என்றதும் உடனே அவள் இன குறி பாகத்தை கவனித்துவிடுகிறான். இந்த பாகத்தின் செழுமையை வைத்து அந்த பெண்ணின் வயது, பருவ நிலை, மகபேற்று வளம் ஆகியவற்றையும் யூகிக்க முயல்கிறான்.

இதெல்லாம் அந்த கால பெண்களுக்கு பெரிய விஷயமாய் இருந்ததோ இல்லையோ. காரணம் சமீபத்திய இருநூறு ஆண்டுகள் வரை தமிழ் பெண்கள் மாராப்பு அணிந்தது இல்லை, ஆனால் நாகரீகம் அடைந்து சுய மரியாதை பெற்ற பெண்களுக்கு எவனாவது தன் முகத்தை பார்க்காமல் கண்ட இடத்தை பார்த்து பேசினால் கோபம் வருகிறது. காரணம் முந்தய காலத்தில் சாமானிய பெண்ணுக்கு தன் உடலின் மீது கூட உரிமை இருக்கவில்லை. அதனால் எவன் வேண்டுமானாலும் மானாவாரியாக தன்னை உற்று பார்ப்பதை அவளால் ஆட்சேபிக்க முடிந்திருக்காது.
ஆனால் இன்றைய பெண்ணுக்கு சுய மரியாதை உண்டே. அவள் தன்னை ஆணூக்கு சரி சமம் என்று நினைப்பதால், தன் உடலின் மீது தனக்கு மட்டுமே உரிமை இருப்பதாய் அவள் நினைக்கிறாள். தன்னை எவன், எப்படி, எப்போது, எங்கே, எதற்க்காக பார்க்கலாம் என்பதை எல்லாம் அவளே முடிவு செய்கிறாள். அதனால் தான் அவள் அனுமதி இன்றி யாரும் அவள் உடம்பை உற்றுப் பாத்தாலும் அவளுக்கு கோபம் வந்துவிடுகிறது.
இந்த நாகரீக வளர்ச்சி புரிந்த மார்டன் ஆண்கள், இதனாலேயே தங்கள் இயற்கை உந்துதல்களை அடக்கிக்கொள்ள பழகி வைத்திருக்கிறார்கள். சாப்பாடு, தூக்கம், கழிவகற்றல் மாதிரியான இயற்கை உந்துதல்களை பிறருக்கு சங்கோஜம் ஏற்படாத படி, இடம் பொருள் ஏவல் பார்த்து எந்த அளவிற்கு நாசூக்காக செய்கிறார்களோ, அதே போலவே இந்த மனித பெண்ணின குறியையும் அணுகுகிறார்கள்.
- by டாக்டர் ஷாலினி

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...