சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர்
மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட் ஜெபராஜ்
ஒரு லாஞ்சரி (lingerie)பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து
சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில்
என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக
அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு
பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து,கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப்
பெண்ணை அணியச் சொல்வது சரியா? என்றார் சித்ரா
பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம்.
பிரெஞ்சு மொழியில் Linge என்றால் 'துவைக்கக்கூடியது'
என்று பொருள்.”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும்
உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது.20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்று காரணங்களுக்காக பெண்கள்
பயன்படுத்தினார்கள்.
1.உடலை அழகாகக் காட்டுவதற்கு..2.சுத்தமாக பளிச்சென காட்டுவதற்கு..
3.அடக்கமும் கண்ணியமும்
கொண்டவர்களாக தெரிவதற்கு! 1960 ம் ஆண்டு ப்ரெடரிக்ஸ் என்ற நிறுவனம் லாஞ்சரியை வடிவமைத்தது.ஹாலிவுட்
நடிகைகளின் கவர்ச்சிக்காட்சிகளுக்கு அதை வழங்கவும் செய்தது.நடிகைகள் அந்த உடையில்
கவர்ச்சி + அழகுடன் தெரிந்ததால் அவற்றுக்கான மவுது அப்போதிருந்து அதிகரிக்க
ஆரம்பித்தது.அமெரிக்காவில்.மென்ஸ் ஹெல்த என்னும் மருத்துவ இதழ் ஒரு முறை ஓர் ஆய்வை
ஆண்களிடம் நடத்தியது "உங்களுடைய செக்ஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் பாலியல்
கருவி எது?
இந்தக் கேள்விக்கு 90 சதவீதம் ஆண்கள் சொன்ன பதில் "லாஞ்சரி".
அமெரிக்காவில் பிரபலமடைந்த லாஞ்சரி
தற்போது இந்தியாவிலும் வலம்வரத் தொடங்கி விட்டது.கவர்ச்சியான உள்ளாடைகளில்
மனைவியைப் பார்ப்பதை பல கணவர்கள்
விரும்பத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கு இதனால் ஒரு பேண்டஸீயும் செக்ஸீக்கான
அகத்தூண்டுதலும் கிடைக்கிறது.பெண்ணுக்கு அப்படியல்ல,,,மனம் ஓர் ஆணை விரும்பினால் தான் செக்ஸீக்கான அகத்தூண்டல் பெண்களுக்குக்
கிடைக்கும்.ஓரே வித ஆடையில் மனைவியை பார்க்கும் ஆண்களுக்கு காலப்போக்கில் ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடும்.அந்த
சலிப்பை விரட்ட லாஞ்சரி பெண்களுக்கு உதவும்.
இது நவீன் யுகம் மனைவி படுக்கையறைக்கு
லாஞ்சரி அணிந்து வருகிறாரா?
கணவனிடம் உறவுக்கு ஓகே சொல்கிறார் என்று
அர்த்தம். பெண்கள் லாஞ்சரியை தராளமாக அணியலாம்.
அதே நேரத்தில் வெறும் உள்ளாடை சார்ந்து மட்டும் கவர்ச்சி அமையாது பெண்களின் உடலமைப்பில்தான் கவர்ச்சி
இருக்கிறது.பேக்கிங் அழகாக இருந்தாம் போதுமா? உள்ளே இருக்கும் பொருள் தரமாக இருக்க வேண்டாமா? எனவே பெண்கள் கவரும்விதத்தில் உடலை பராமரிப்பது முக்கியம். ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து
ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.
கவர்ச்சியான உள்ளாடைகளோடு பார்ப்பதால்
மட்டுமே மனைவி மீது செக்ஸ் ஈர்ப்பு வருகிறது" என்று ஒருவர் சொல்கிறாரா? அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள
வேண்டும்.
இது போன்ற பாலியல் விசயங்களில் தெளிவு
பெற படியுங்கள்
சொன்னால்தான் தெரியும் மன்மதக்கலை
டாக்டர் டி.நாரயண ரெட்டி
சூரியன்
பதிப்பக வெளியீடு ,விலை ரூபாய் 100
குறிப்பு :புத்தக விமர்சனத்திற்காக
இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக