விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன.
5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது.
லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்காது. சும்மா உன் குரலை கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு , ஒரு பாட்டு பாடேன் போன்ற மென் மொக்கைகள்தான் அதிகம். போனை வைக்கும்போது பதட்டத்துடன் திருட்டுத்தனமாக இடதும் வலதும் பார்த்துக்கொண்டு ப்ச் ப்ச் ப்ச் என மந்திரம் போல மூன்று முறை முத்தமிடுவார்கள்.லேண்ட்லைனிலும் பிரைவஸி இல்லாததுதான் காரணம். சில அட்வான்ஸ் அண்ணன்மார்கள் அந்த காலத்திலேயே என்ன கலர் பிரா போட்டிருக்க என்பது வரையும் கேட்டதுண்டு. அதற்கு எதிர் முனையில் , அம்மா இன்னிக்கி விரதம்டீ , ஒருவேளைதான், நாளைக்குதான் அஸைன்மெண்ட் எழுதணும் என சம்மந்தம் இல்லாமல் உளறுவது நடக்கும்.
காதலர்கள் மற்றும் முக்கியமாக கள்ளக்காதலர்களின் வரப்பிரசாதமாக வந்தது மொபைல் போன். வந்த புதிதில் இதைப் பற்றி புரிந்து கொள்ளாமல், இதன் அதிக பட்ச காமப் பாய்ச்சலை தெரிந்து கொள்ளாமல் இதை பாழாய்ப்போன பிஸினஸுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.மொபைல் நிறுவனங்களும் விழித்துக்கொள்ளவில்லை , காதலர்களும் கண்டுகொள்ளவில்லை.காதலும் காமமும் சுரத்தில்லாமல் மசமசவென சென்று கொண்டிருந்த கால கட்டம் இது.
செங்கல்லை கையில் வைத்து தூக்கிக்கொண்டு , மீட்டிங்க் அட் 6 ஓ கிளாக். தி ஃபைனல் ப்ரைஸ் ஈஸ் 75,000 , ஐ ஆம் இன் எ மீட்டிங்க் என வெட்டியாக மொபைலை அலைக்கழித்துக்கொண்டு இருந்தனர்.
இந்த காலத்தில் டெக்ஸ்டாப்பில் சாட் ரூம்கள் பல்கிப் பெருகின. சாட் ரூம்கள் முழுக்க ஆள் பிடித்தல் , பிடித்த பின் தனி சாட்டில் ஜொள்ள ஆரம்பித்து , கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து மூலமாகவே உடை களைந்து, உறுப்புணர்ந்து , உதடு , இதயம் போன்ற சிம்பல் போட்டு உச்சகட்ட கிளுகிளுப்பு வரை சென்றனர். என்ன பிரச்சனை எனில் , ஒரு முறை சாட் மூலம் உறவு கொள்ள வேண்டும் எனில் ,குறைந்தது 2 மணி நேரம் ஆகும்.
இண்டர்நெட் கனக்ட் ஆகி , சாட் ரூம் லோடாகி , ஆள் ஆன்லைக்கு வந்து வேலையை ஆரம்பிக்க வேண்டும். வந்ததும் வேலையை ஆரம்பித்து விட முடியாது. ஹாய் , ஹலோ போன்ற பல்வித நல விசாரிப்புகளுக்குப் பிறகு மெதுமெதுவாக சூடேத்தி முன்னேற வேண்டும். இந்த சாட் செக்ஸின் தலையாய சிக்கல் என்னவெனில், க்ளைமாக்ஸிலும் ஒரு கையால் டைப் செய்த வண்ணம் இருக்க வேண்டும்.
மொபைல் விலை குறைந்ததாலா , மொபைல் பிளான்களின் விலை குறைந்ததாலா? எப்போது என சரியாகத் தெரியவில்லை , மொபைல் சாதாரண மக்களின் கைகளில் புழங்க ஆரம்பித்தது.கூச்ச நாச்சம் எல்லாம் சிறகடித்து பறந்தது. பெண்களே சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தை (ஆக்சுவலி அந்த நேரத்தில் நல்ல வார்த்தைதான் , ஒரு புரிதலுக்காக) எல்லாம் சொல்லி கொஞ்சி குலவி பேச ஆரம்பித்தார்கள். நைட் பிளான் , ஜோடி நம்பர் என பிளான் மாத்திக்கொண்டு , பிளான் போட்டு விடிய விடிய வெட் ஆனார்கள். அந்த கால பேசிக் போன் பேட்டரி நெடு நேரம் தாக்குப்பிடித்து “நிற்கும்”. எஸ் எம் எஸிலும் மென்காம மெசேஜ்கள் பறந்த வண்ணம் இருந்தன.
மொபைல் இண்டர்நெட் 2ஜி ல் இருந்து 3 ஜிக்கு மாறியது. புதுப்புது ஆப்ஸ் முளைத்தன. மிகப்பெரிய காமப் புரட்சி உண்டானது. சாட் செக்ஸ் , ஆடியோ செக்ஸில் இருந்து ஜிவ்வென உலகமே விடியோ செக்ஸுக்கு எகிறியது. தூரத்தில் பிரிந்து இருக்கும் தம்பதியினருக்கு விடியோ செக்ஸ் ஒரு வடிகால்தான் எனினும் , சின்னஞ்சிறுசுகள் முதல் தாத்தா பாட்டி வரை ஸ்கேண்டல்களும் பஃபர் ஆகிக்கொண்டே இருந்தன.
இந்த விஞ்ஞான முன்னேற்றங்களின் வழியே செக்ஸும் முன்னேறி இருக்க வேண்டும்.முன்னேறி இருக்கிறதா என்று பார்த்தால் , இல்லை என்றே சொல்லவேண்டி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் திருப்தி இல்லாமலேயே திரிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எதையோ தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். நம் அன்றாட காதல் , காம வாழ்கையை இந்த மொபைல் போனும் , இண்டெர்நெட்டும் கடுமையாக மாற்றி அமைத்துள்ளன.
மொபைலும் , இண்டர்நெட்டும் இல்லாத 20 வருடங்களுக்கு முந்தைய செக்ஸ் வாழ்கை இப்போது இல்லை. நமது ரொமாண்டிக் வாழ்கை முறையை இவை கடுமையாக இன்ஃளூயன்ஸ் செய்துள்ளன. இவைகளை இந்த விஷயங்களுக்கு அளவாக பயன்படுத்த தெரியாமல் மாட்டிக்கொண்டு விட்டோம்.
வேலை நேரம் , சாப்பிடும் நேரம் , டாய்லட்டில் இருக்கும் நேரம் என எப்போதும் யாருக்காவது லவ் யூ , கிஸ் யூ , ஹக் யூ சொல்லிக்கொண்டே இருக்கிறோம். நாள் முழுக்க ஃபோர் ப்ளே செய்து கொண்டு இருந்தால் எப்படி ? மெயின் பிளே புட்டுக்காதா ? ஆரம்ப காதல் காலத்தில் 24 மணி நேரமும் லவ் யூ , கிஸ் யூ , இன்னும் இன்னும் அனைத்து அங்க அவயங்களையும் விளித்து கிஸ்ஸறேன் , கடிக்கிறேன் என சொல்லி சொல்லி பழக்கப்படுத்தி விட்டு கல்யாணத்திற்கு பிறகு அதையெல்லாம் நிறுத்தினால்? பிரச்சனைதான், அது தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கும். கணவனோ மனைவியோ இந்த விர்ச்சுவல் ஃபோர் ப்ளேயை நிறுத்தி விட்டால் , அந்த இடத்திற்கு அடுத்தவர் சுலபமாக வந்து விடுவார். வருபவர் சேவை நோக்கோடா வருவார் ? சில தினங்களில் படுக்கையை பகிர்வது வரை கொண்டு விடும்.அதோடு விட்டால் பரவாயில்லையே ! பிளாக்மெயில் , திருட்டு , கொலை என இன்ன பிற க்ரைம்களில் கொண்டு விட்டுவிடும்.
இப்போதைய லைஃப் ஸ்டைலில் அனைத்து வகையான செக்ஸும் தேவைப்படுகிறது. நாம் என்ன நினைத்துக்கொள்கிறோம் என்றால் , சாட் செக்ஸ் , போன் செக்ஸ் , விடியோ செக்ஸ் எல்லாம் மெயின் செக்ஸை அடையும் பாதைகள்தான் . மெயின் செக்ஸை அடைந்து விட்டோம் என்றால் இவையெல்லாம் தேவையில்லை என நினைத்து நிறுத்திக்கொள்கிறோம்.அல்லது நம் அன்றாட வேலை பளு இரவில் எப்போதாவது நடக்கும் 10 நிமிட களியாட்டத்தோடு உறங்க வைத்து விடுகிறது.
ஆனால் மற்ற பழக்கப்பட்ட ஆசைகள் அடிமனதில் உறங்காமல் கனன்று கொண்டிருக்கின்றன. யாரேனும் எப்போதேனும் லேசாக கிளறி விட்டால் விழித்துக்கொள்கின்றன.லவ் யூ , மிஸ் யூ , கிஸ் யூ மெசேஜ்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும். யாரேனும் எப்போதும் இவைகளை சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அடிக்ட் ஆகி விட்டோம்.
போன் செக்ஸ் , விடியோ செக்ஸில் கற்பனை அதிகம். என்ன வேண்டுமானாலும் பேசலாம் , எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீட்டிக்கலாம்.இதில் ஈடுபட்டு ஈடுபட்டு இதற்கு ஏற்ப மாஸ்டர் ஆனவர்கள், நேர் செக்ஸின்போது தடுமாறி விடுகிறார்கள். இரண்டிற்குமான விதிமுறைகள் வேறு.போன் செக்ஸோ விடியோ செக்ஸோ கடைசியில் வெறுமையில்தான் முடியும்.
இவ்வகை செக்ஸின் போது எதிர்பார்ப்பு இன்னும் இன்னும் எகிறும்.நேரில் இப்படி செய்ய வேண்டும் , அப்படி செய்ய வேண்டும் என மனம் பல விதமாக ஏங்கித் தவிக்கும்.கண்டதையும் ப்ரோக்ராம் செய்து வைத்துக்கொள்ளும். நேரில் சந்திக்கும்போது , சூழ்நிலை வேறு மாதிரி இருக்கும். இதுதான் ரியாலிட்டி. விடியோவில் டூ பீஸுடன் மாடல் போல வளைந்து நெளிந்து , பேபி , மை பேபி என கொஞ்சிய அதே பெண் நேரில் வேறு மாதிரி நடந்து கொள்வாள். என் உயிரே , உன் அடிமை நான் என கொஞ்சி மருகியவன் , நேரில் கெடா மாடு போல நின்று கொண்டிருப்பான்.
விடியோவில் மார்பகம் முதல் புட்டம் வரை அனைத்தும் பெரிது பெரிதாக தெரியும் . கேமரா ஆங்கிள் , லைட்டிங்க் பொறுத்து அனைத்தும் இண்டர்நேஷனல் குவாலிட்டியில் மின்னும். வெப் கேமரா அருகே கொண்டு வந்து காட்டப்படும் ஆண்குறி உலகிலேயே பெரிய சீற்றமான ஆண்குறியென தெரியும். நேரில் ,இந்த குறியும் மற்றொரு குறியே தான்.
மேலும் விடியோ செக்ஸ் மற்றும் ரியல் செக்ஸ் இரண்டிற்கும் அடிப்படையில் டெக்னிக்கல் வித்தியாசம் உள்ளது. விடியோ செக்ஸில் இருவரும் தத்தமது கைகளையே உபயோகிக்கின்றனர்.குறியும் கையும் நட்பாகி , எப்படி ஹேண்டில் செய்வது ? எப்போது ஆர்கஸம் வர வைப்பது என குத்து மதிப்பாக செட் ஆகி விடும்.இதையே பொழப்பாக வைத்துக்கொண்டு இருந்தால் , இந்த ரிதமிற்கு செட் ஆகி , நேரில் ரியல் செக்ஸின் போது இரு குறிகளும் தடுமாறும்.ஆண்களுக்கு எரக்டைல் டிஸ்ஃபங்க்ஷன் , ப்ரீ மெச்சூர் எஜாக்குலேஷன் போன்ற சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு திருப்தியின்மை , ஆர்கஸம் வர தாமதமாவது , லூப்ரிகண்டே சுரக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் வரலாம்.
ஒரே வீட்டில் இருந்தாலும் ,கொஞ்ச நேரம் வாட்ஸப்பில் மெசேஜ் பண்ணிகிட்டு , கொஞ்ச நேரம் விடியோ சாட் பண்ணிட்டு அப்புறம் நேர்ல இண்டர்கோர்ஸ்க்கு வரலாம் என நினைக்கும் ஜோடிகள் தற்போதே முளைக்க ஆரம்பித்து இருப்பார்கள்.
நமக்கே தெரியாமல் மொபைல் மற்றும் இண்டெர்நெட்டால் 24 மணி நேரமும் செக்ஸ் சிந்தனையோடே இருக்கிறோம்.இது ஆரோக்கியமானதல்ல . செக்ஸுக்கென தனிப்பட்ட நேரம் இருக்கிறது. அப்போது ஃபோர் பிளேவை ஆரம்பித்தால் போதும். அது வரை தமது ஜோடியை சுத்தமாக கண்டு கொள்ளாமல் இருக்காமல் , அன்பு மற்றும் காதலான மெசேஜ்கள் அனுப்பலாம்.
ஜோடியை பிரிந்து தூரத்தில் இருப்பவர்கள் , வெகு அரிதாக போன் செக்ஸோ , விடியோ செக்ஸோ முயற்சி செய்யலாம், தவறில்லை.தங்கள் ஜோடி திரையில் வந்த உடன் ஜட்டியை கழட்டிவிடுவதோ , பிரா மற்றும் பேண்டியை கழட்டி போடுவதோ வேண்டாம்.கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்ள ஆயிரம் இருக்கிறது அல்லவா ? அதைச் செய்யுங்கள். நேரில் சந்திக்கையில் கூட்டு வட்டி போட்டு வேலையை முடித்துக்கொள்ளுங்கள்.
அராத்து
கருத்துகள்
கருத்துரையிடுக