மோகன் இ இ ந்திய அரசியல் அரங்கில் சமூக நீதி நோக்கிய மிக முக்கிய மைல்கல்லாக இன்று வரை போற்றப்படுவது மண்டல் குழுவின் அறிக்கை. அதை நிரூபித்துக் காட்டிய பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் 1982-ல் தனது 64 வது வயதில் மறைந்தார். 1918 ஆகஸ்ட் மாதம் பிறந்த மண்டலின் நூற்றாண்டு விழா இம்மாதம் கொண்டாடப்படுகிறது. உலகமயமாக்கலை சந்தித்து வந்த இந்தியாவின் நிலையற்ற 90-களில் அரசியல் அரங்கில் பேசு பொருளாக நிலவிய பெயர்தான் இந்தப் பி.பி.மண்டல். மண்டலின் ஆரம்ப காலம்: பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் 1918-ம் ஆண்டு பிறந்தவர் மண்டல். சமூக சீர்திருத்தவாதியான இவரின் தந்தை ராஷ்பி ஹரி மண்டல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இளம் வயது முதலே சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் மண்டலிடமிருந்து வந்தது. தர்பாங்கா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தபோது மதிய உணவு ஆதிக்க சமூக மாணவர்கள் சாப்பிட்ட பிறகே இவரின் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இளம் பிராயத்திலேயே இந்தச் சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராடி அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். அப்போது, நிலவிவந்த வங்காள மறுமலர்ச்சியால் ஈர்க்...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்