ஒவ்வொரு முறை வாட்சப் ஸ்கேண்டல்கள் பார்க்கும்போதெல்லாம் இயல்பாகவே எனக்குள் எழும் கேள்விகள் நெருஞ்சி முள்ளென மனதைக் குத்தியபடியே இருக்கும்.
எங்கேனும் ஓர் புள்ளியில் இது மனதையும் கிட்னியையும் சேர்த்தே பிசைகிறது. முடிவில் சில கேள்விகள் தூக்கியபடி sorry தொக்கியபடி நிக்கும்.
‘ஹே பிளீஸ் நீ மட்டும் பார்த்துட்டு அழிச்சிடு” என கெஞ்சும் பச்சை சுடிதாரின் காதலன் ஏன் அழிக்காமல் விட்டான்?.
“இது எங்க அண்ணன் மொபைல் பாத்தா அவன் மட்டும்தான் பாக்குவான் கவலைப்படாதே” என ஆறுதல் சொல்லும் திமிர்பிடித்த ஆணின் அண்ணன் அதை பாத்திருப்பானா?
“போன வாரம் நா குண்டாயிட்டேன்னு அத்த சொன்னாங்க” என்பவளிடம் “முழுசா பாத்த நானே சொல்றேன் நீ இளச்சுட்ட” என்பவனின் உண்மையோடு நானும் ஒத்துப்போகிறேன்.
“என்ன வேணா செஞ்சிக்கோடா பட் ரெக்கார்ட் பண்ணாதப்பா” என்கிற சிம்ரன் ஒரு பேமிலி கேர்ள் என யூகிக்கிறேன்.
“டெய்லி இராத்திரிக்கு பாக்கணும் அதான்” என்ற போலிச்சமாதானத்தில் அவள் வீழ்ந்ததெப்படி?
“டேய் எரும கீழ மட்டும் எடுக்காதடா, வெக்கமா வருது” என்பவளின் வெக்கம் குறித்த அபார சிந்தனை என்னை தூங்கவிடாமல் செய்கிறது.
“எப்டிடா மொத டைமே இவ்ளோ பர்பெக்டா பன்ற” என ஆணின் கற்பை சந்தேகிக்கும் பெண்ணுக்கு இதான் பர்பெக்ட் என்று யார் சொல்லிருப்பார்கள்?
அத்தனை களேபரங்களுக்குப் பின்னும் “ஏடி இதுக்கே வெக்கப்பட்டா எப்டி” என்றவாறு முடியும் வீடியோவில் அதற்கு அப்புறம் என்ன நடந்திருக்குமென எவ்வளவு யோசித்தும் பிடிபடவில்லை.
“பெரிய வீடியோ கிராபரா வர்றதுக்கு இது டிரைனிங்குடி” என்பவனை சோ கியூட்டா என்றவாறு கன்னம் கிள்ளும் பெண்ணின் அப்பாவித்தனம் சோ கியூட்.
இப்படி ஒவ்வொரு வீடியோவுக்குப் பின்னரும் உடனே கசிவது கண்ணீராகவோ அல்லது (நீங்க நெனைக்குற மாதிரி இல்ல
)வியர்வையாகவோ இருக்கலாம். எனினும் ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற திருமூலரின் வாக்குப்படி நடந்துகொள்ளும் ஆண்கள் எப்போது திருந்துவார்கள்?

Stop recording! Live the moment
கருத்துகள்
கருத்துரையிடுக