இன்னிக்கு தேதிக்கு உலகின் நம்பர் ஒன் செக்ஸ் டாய் – வைப்ரேட்டர். உலக பெண்களின் ஏக்கத்தை தீர்ப்பதில் முக்கியமான பங்கு இதற்கு இருக்குங்கறது யாராலும் மறுக்க முடியாத மேட்டர். ஃபேக் ஆர்கஸம் (Fake Orgasm) பற்றி எழுத முயற்சித்து, அதற்கான தேடலில் கிடைத்தது இந்த கதை…! சுமார் 700 ஆண்டுகளுக்கு முன், 13’ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை.
அரசியல் காரணங்களுக்காக பல திருமணங்கள் செய்து கொண்ட மன்னர்கள், பெண்களை அந்தபுரத்தில் அடைத்து ‘மட்டும்’ வைத்திருந்தனர். உணவு உடுப்பு என ராஜ வாழ்க்கை கிடைக்கும். ஆனால் அடிப்படை செக்ஸ் தேவைகள் பூர்த்தி அடையாது. அரசியலிலோ அல்லது கல்வி சாலையிலோ பெண்களுக்கு இடமே இல்லாத நேரம் அது. விதவைகள், திருமணம் தள்ளிப் போன முதிர் கன்னிகள், இளம் பெண்கள், கணவனால் திருப்தி செய்ய முடியாத பெண்கள் என தங்களோட செக்ஸ் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத பெண்களிடம் சில வினோத அறிகுறிகள் தென்பட்டன..!
மன பதட்டம், தூக்கமின்மை, அடிவயிற்றில் கனம், செக்ஸ் கனவுகள், எரிச்சல், கோபம் இவற்றுடன் கால்களுக்கு நடுவில் அதிக ஈரப்பதம் என அந்த அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவர்கள் அதை ஹிஸ்டீரியா என்ற ஒரு வகையான மன நோய் என்று கருதினார்கள். (ஹிஸ்டர் என்றால் கிரேக்கத்தில் கர்ப்பப்பை என்று பொருள். கர்பப்பையால் வரும் மன நோய் ஹிஸ்டீரியா ஆனது). மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்ரேட்’ஸ் கார்ப்ஸ் என்ற புத்தகத்தில் இத்தகைய அறிகுறி தென்பட்டால் அதற்கு பெண்ணின் யோனியில் கை வைத்து மசாஜ் செய்யுமாறு சில மருத்துவ குறிப்புகள் இருந்தது. அப்படி செய்யும் பட்சத்தில் அவர்களின் ஹிஸ்டீரியா தற்காலிக நிவாரணம் பெறும் என்பது குறிப்பு. அப்போதைய மருத்துவர்கள் அதை செய்து பார்த்து ஓரளவு வெற்றி பெற்றிருந்தார்கள்.
நடுவில் க்றிஸ்துவ சர்சுகள் வளர்ந்த போது பாலின உறுப்பை தொடுவதே பாவம் என்ற கருத்து வலுப்பெற்றது. 16 முதல் 18ம் நூற்றாண்டு வரையில் பெண்களுக்கென்று தனியாக செக்ஸ் எண்ணம் கிடையாது, அவர்கள் ஆணின் செக்ஸ் தேவையை தீர்ப்பதற்கு மட்டுமே உள்ளனர் என்று மருத்துவ உலகம் நம்பியது. (மருத்துவர்கள் அனைவரும் ஆண்கள்) பெண்களுக்கான அரசியல் மற்றும் கல்வி சுத்தமாக மறுக்கப்பட்டதால் அவர்களின் தேவையை ஆண்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சுய இன்பம் செய்வது இறைவனுக்கு எதிரான செயல் என்று கருதப்பட்டதால் அதை செய்யும் பெண்கள் குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்டிருந்தனர். செய்வதற்கு மனதளவில் அஞ்சினர். இந்த கால கட்டத்தில் இங்கிலாந்தின் 60%திற்கு மேற்பட்ட பெண்கள் ஹிஸ்டீரியாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்கள், ஹிஸ்டீரியா வந்த பெண்களுக்கு மருத்துவ ரீதியாக யோனி மசாஜ் தெரபியை செய்ய துவங்கினர். தானே சுய இன்பம் செய்தால் குற்றம். கணவனோ அல்லது பிறரோ திருப்தி அளிக்க முடியவில்லை. ஆனால் ஒரு மருத்துவர் ட்ரீட்மென்ட் என்ற பெயரில் செய்து விடும் சுய இன்ப மசாஜிற்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டனர். (இதை சுய இன்பம் என்றோ செக்ஸ் தீர்வு என்றோ மருத்துவர்களும் கருதவில்லை, அந்த பெண்களும் அப்படி நினைக்க வில்லை என்பது முக்கியமாக குறிப்பிட வேண்டிய விசயம். அது ஹிஸ்டீரியாவிற்கான ஒரு சிகிச்சையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஏன் என்றால் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு கிடையாது என்றே மருத்துவ உலகம் தீவிரமாக நம்பியது. அதனாலேயே இந்த மசாஜ் மூலமாக பெண்களுக்கு கிடைத்த உச்சகட்டத்தை orgasm என்று குறிப்பிடாமல் Paroxysm என்று குறிப்பிட்டது மருத்துவம்.)
மிக ஃபேமஸான இந்த மருத்துவ முறை பல மருத்துவர்களை பெரும் பணக்காரர்களாக்கியது. ஆனால் மருத்துவர்களுக்கு வேறு ஒரு சிரமம் ஏற்பட்டது. ஒவ்வொரு பெண்ணிற்கும் 20 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை மசாஜ் செய்ததில் மருத்துவர்களின் கை பெண்டு நிமிர்ந்தது. சிலருக்கு 'வயலன்ட் மசாஜ்' வேறு செய்ய வேண்டி வந்தது. இதனால் மருத்துவர்களுக்கு கை ஒடிந்தது என்கிறார் ஒரு வரலாற்று ஆய்வாளர்.
18’ம் நூற்றாண்டின் மத்தியில் (1858) இந்த யோனி மசாஜ் செய்து செம்ம வெறுப்பானதாலோ என்னவோ Baker – Brown என்ற மருத்துவர்கள் மசாஜ் செய்வதால் பெண்கள் தற்காலிக நிவாரணம் பெறுகிறார்களே தவிர நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை, அதனால் நிரந்தர தீர்வுக்கு பெண்களின் க்ளிட்டோரியஸை வெட்டி எடுத்து விட வேண்டும் என்று விபரீத முடிவு செய்தார்கள். இவர்களின் கருத்துப்படி பெண்களின் கர்பப்பை, பெண்களின் உடம்பிற்குள் ஊர்ந்து கொண்டே இருப்பதாகவும் அது தான் ஹிஸ்டீரியாவிற்கு காரணம் என்றும் அதனால் ஒரு சர்ஜரி செய்து க்ளிட்டோரியஸ் மற்றும் கர்ப்பப்பையை வெட்டி எடுத்து விட வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்????? இதை தன் சொந்த சகோதரிக்கே செய்தும் காட்டினார்கள். குற்ற உணர்ச்சிக்கு ஆளான பல பெண்கள் தங்கள் செக்ஸ் தேவையை கட்டுப்படுத்த இந்த சிகிச்சையை இவர்களிடம் ATM கியூ போல வரிசையில் நின்று செய்து கொண்டார்கள். 1866’ல் இருந்து 1947 வரை இத்தகைய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக செய்து வந்தார்கள். இன்றும் சில பழங்குடி, ஆப்பிரிக்க முஸ்லிம் மத்தியில் இந்த பழக்கம் இருக்கிறது.
ஆபரேஷன் செய்து கொண்ட பெண்கள் அதன் பின்னரும் அதே வகையான அறிகுறிகளை சொன்னதால் மருத்துவ உலகம் மேலும் குழம்பியது. இன்னொரு புறம் 'ஆபரேஷனுக்கு பயந்த பெண்கள்' கியூ, மசாஜ் செய்து கொள்ள நின்றது. ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் எல்லாம் வைத்து பூ போல மசாஜ் செய்தும் மருத்துவர்களின் கை வலி தாங்க முடியாததாக இருந்தது. அதே நேரத்தில் தான் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
1880'ல் மருத்துவர்களின் கை வலி குறைவதற்கு மின்சாரத்தால் இயங்கும், அதிர்வு கொடுக்கும் மசாஜரை யாரோ ஒருவர் செய்து கொடுக்க அதை பயன்படுத்திய மருத்துவர் Dr. Joseph granville வேறு ஆங்கிளில் சிந்திக்க, யோனி மசாஜ் செய்யும் வைப்ரேட்டர் உதித்தது. ஆரம்பத்தில் மருத்துவமனைகளில் ட்ரீட்மென்ட்டிற்க்காக மட்டும் பயன்பட்ட வைப்ரேட்டர் (கிட்டதட்ட ஒரு உலக்கை அளவுக்கு பெரிதாகவும் இரண்டு பேர் சேர்ந்து இயக்கும் வகையிலும் இருந்தது) காலத்தின் தேவையை பூர்த்தி செய்ய கைக்கு அடக்கமாக பேட்டரியால் இயக்கும் வகையில் மாறுதல் பெற்றது.
ஒரு வழியாக மருத்துவ உலகம் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் செக்ஸ் தேவையை உணர துவங்கியது. மிக பெரிய செமினாரில் ஆண்கள் ஒன்று கூடி, பெண்களின் க்ளிடோரியஸ் ஏன் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கிறது ? ஏன் யோனியின் உள்ளே இல்லை ? என்று ஆராய்ச்சி செய்து சுய இன்பம் இயற்கையானது என்று முடிவு செய்தார்கள். 1902’ல் வைப்ரேட்டர்களின் பொற்காலம் துவங்கியது. பெண்களுக்கான பிரத்தியேக மசாஜர் என்று பெண்களின் பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்தது. (கமென்டுகளில் அப்போது வந்த விளம்பரங்களை குடுத்திருக்கிறேன்). பல பெண்கள் அவற்றை வாங்கி குவித்தனர். இன்னும் ஒரு படி மேலே போய் ஹிஸ்டீரியா முதல் கிட்னி பிரச்சனைகள் வரை அனைத்தையும் இது சரி செய்யும் என்று விளம்பரம் செய்தார்கள். இதை ஒரு மருத்துவ குணமுள்ள கருவியாக அனைவரும் நினைத்தனர். அதற்கு ஆப்பு வைக்க 1920’ல் வந்தது “போர்ன் சினிமா”
போர்ன் சினிமாக்கள் வைப்ரேட்டரை sexual pleasure’க்கான கருவி என்ற வெளிக்காட்ட அதன் பின் அதை வாங்குவது பலருக்கு அசிங்கமாக பட்டது. விளம்பரங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. 1970’ல் வைப்ரேட்டர் விற்பனை சரிந்தது. மின்சாரத்தால் ஒழிந்த செக்ஸ் தேவை மின்சாரத்தாலேயே ஆப்படிக்கப்பட்டது. ஆனால் அதே கால கட்டத்தில் ஓங்கி எழுந்த பெண்ணிய கருத்துக்கள். பெண்ணிய விழிப்புணர்வுகள் ஆகியவை வைப்ரேட்டரை பெண்ணின் தேவை சார்ந்த ஒரு பொருளாக்கி அதை உரிமை ஆக்கியது. 1952’ல் அமெர்க்கன் சைகியாட்ரிக் சங்கம் ஹிஸ்டீரியாவை நோய்கள் பட்டியலில் இருந்து நீக்கி தள்ளுபடி செய்தது.
இன்று, வைப்ரேட்டர் பெண்களை செக்ஸ் அடிமை ஆக்குகிறது, ஆணுக்கான செக்ஸ் முக்கியத்துவம் குறைக்கிறது, கவனச்சிதறல் ஏற்படுவதால் இளம் வயது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பல எதிர் கருத்துக்களுக்கு மத்தியில் அமெரிக்காவில் 1/3 பெண்கள் வைப்ரேட்டர் பயன்படுத்திகிறார்கள்.
சொல்ல மறந்துட்டேன், இந்தியாவில் வைப்ரேட்டர் தடை செய்யப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் இன்றும் ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
disci: வைப்ரேட்டரின் வரலாற்றை திரைப்படமாக பார்க்க.: Hysteria மற்றும் The Road to Wellville ஆகிய திரைப்படங்களை பார்க்கலாம்
Neymar
பதிலளிநீக்கு