முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மோடு முட்டிகள்

*கோவலன்களின் கோபம்* “மண வாழ்க்கைக்கு வெளியிலான உறவு என்கிறது சுப்ரீம் கோர்ட். ஆனால், நமது காதல் மன்னர்களோ, தனக்கு வாய்ப்புக் கிடைக்காத ஆத்திரத்தில் கள்ளக் காதல் என்று விளித்து, ஆறுதல் அடைகிறார்கள்.” (தோழர் Mathimaran V Mathi) அது மட்டுமில்ல, தன் பெர்ஃபார்மென்ஸ் பத்தாததால தன் பொண்டாட்டி வேற எவன் கூடயாச்சும் உறவு வச்சுகிட்டாலும் தன்னால எதுவும் பண்ண முடியாதே என்கிற ஆதங்கமும் தான் இங்க பெரும்பான்மையான ஆண்களை அசிங்கமா அந்த தீர்ப்புக்கு எதிரா கதற விடுதுன்னு சொல்லுவேன். ஆண்கள் ஏன் இப்படி ஒரு insecurity feelingஓட வலம் வரணும்? Self Performance Appraisal இல்லன்னா பொண்டாட்டிகிட்ட வெளிப்படையா, “ஏம்மா நான் உன்னை திருப்திப்படுத்துறேனா? என் கூட சந்தோஷமா தானே வாழுற?” அப்டீன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டோ தன்னிலையை சரி பண்ணிக்கிறது ஏன் அவ்வளவு கடினமா இருக்கு நம்ம இந்திய ஆண்களுக்கு? (பிகு:- பொண்டாட்டிகளும் இந்த செல்ஃப் பெர்பார்மன்ஸ் அப்ரைசல் அப்பப்போ பண்ணிக்கிறது உன் வீட்டு ஆம்பளைய கோவலன் ஆக விடாம தடுக்கும். தாம்பத்திய உறவுங்குறத சும்மா robot மாதிரி பண்ணாம நல்லா ரசிச்சு ருசிச்சு “சுவைச்சு ...

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

================================== பண்டித ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியாகக் கருதப்படுகிறார். 1947ல் சுதந்திரம் கிடைத்த போது சிதிலமடைந்து கிடந்த ஒரு பிரம்மாண்ட தேசத்தை அவர் தன் தொலைநோக்குப் பார்வையின் மூலம் - விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டை ஏற்படுத்தி - புத்துயிர்ப்புடன் நிர்மாணித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாடெங்கிலும் சாத்தியப்படுத்தினார். அவர் மறைந்த போது ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான மிக வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துப் போயிருந்தார். நிதானமாய் யோசித்தால் நேரு அவர்கள் இந்திய நாட்டிற்கு எதைச் செய்தாரோ அதையே தமிழ் நாட்டிற்கு கலைஞர் செய்தார். ஆனால் கலைஞரின் நவீனச் சிந்தனை கொஞ்சம் வேறுபட்டது. அது சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உத்தேசித்தது. இன்றைய நவீன ஆட்சி என்பதில் இரண்டு விஷயங்களை நோக்கி இருப்பதாகக் கருதுகிறேன். 1) வளர்ச்சி 2) சமத்துவம். அதாவது முரட்டுத்தனமாய் நாடு வளர்கிறது எனப் பொருளாதாரக் குறியீடுகள் மூலம் காட்டுவதோ, குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பெருவளர்ச்சி காண்பதோ, சமூ...

முத்தம்... ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்!

காமராஜ் செக்ஸாலஜிஸ்ட் ஹெல்த் `உன் முத்தம் ஒரு மோசடி  அதைப்போல் பற்றாக்குறையான ஈகை  வேறொன்றுமில்லை’ - கவிஞர் மகுடேசுவரன். இ ந்தக் கவிதையில் கவிஞருக்கு அதீத எதிர்பார்ப்பு. எவ்வளவு கொடுத்தாலும், `இன்னும் வேண்டும்’ என்று கேட்கிற வேட்கை. உண்மையில், அறிவியல்ரீதியாக முத்தம் தரும் பலன்கள் அற்புதமானவை. அண்மையில், சென்னையில் பாலியல் தொடர்பான ஒரு சர்வதேச மாநாடு (International Conference on Sexology) நடந்தது. இதில் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானி நாம் சியோல் பார்க் (Nam Cheol Park) உரையாற்றியது கலக்கல் ரகம். அவர் எடுத்துக்கொண்ட டாபிக், `முத்தம்.’ மனிதர்களுக்கு ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என்பதில் ஆரம்பித்து, மன அழுத்தம் குறைப்பதுவரை முத்தத்தின் அருமை பெருமைகளை 40 நிமிடங்கள் அவர் பட்டியலிட, அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது.  `அன்பின் வெளிப்பாடு’, `ஆபாசம்’... இப்படி இருவேறு எல்லைகள் முத்தத்துக்கு உண்டு. பள்ளிக்குச் செல்லும் குழந்தையிடம் `ஒண்ணு கொடுக்க மறந்துட்டியே செல்லம்...’ என்று முத்தத்தைக் கேட்டு வாங்கும் அப்பாக்களும் இங்கே உண்டு. வீட்டின் நடு ஹால்... கும்பலாக அமர்ந்து தொலைக்காட்...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்கிற பெருமர நிழல்

அரசியல் திராவிட அரசியல் சித்தாந்தங்களால் கவரப்பட வில்லையென்றால் கம்யூனிஸ்ட் ஆகியிருப்பேன் என்று கலைஞர் கருணாநிதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறேன். By  Leena Manimekalai  at Monday, August, 20, 2018 4:34 PM -லீனா மணிமேகலை முதன்முதலில் கலைஞர் மு.கருணாநிதியின் பெயர் என் மனதில் பதிந்தது எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. மறைந்த எனது தந்தை தமிழ்ப் பேராசிரியர் இரகுபதி, சிறுமியான என் மழலைத் தமிழைத் திருத்தி பிழையில்லாமல் தமிழ்த் தாய் வாழ்த்தைப் பாட கற்றுக் கொடுத்த போது, இரண்டு கேள்விகள் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு பதில்களையும் அவரே சொல்லி, என்னை மீண்டும் மீண்டும் ஒப்புவிக்க சொல்வார். ‘தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை’. ‘அதை தமிழ் நாட்டின் தேசிய கீதமாக மாற்றியவர் யார்? கலைஞர் மு. கருணாநிதி’. நானும் கேள்வி பதிலை அப்படியே ஒப்புவிப்பேன். தொலைக்காட்சியில் கரகர குரலும் கறுப்புக் கண்ணாடியுமாய் அவர் தோன்றி பேசும்போதெல்லாம் அப்பா அவரைக் காட்டி "யார் இவரு?" என்று கேடடால் "நீராடும் கடலுடுத்த...