எவ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன. சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள்.

ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.
கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி?
``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன.
1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந்த கார்செட்டுகள், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி, இடையை மெலிதாகக் காட்டும்.
இதைத் தொடர்ந்து 16-ம் நூற்றாண்டில், மேலாடைக்கும் மேலே உடுத்தக்கூடிய கார்செட்டுகள் ரோமானியர்களால் பயன்படுத்தப்பட்டன. உடலமைப்பை மாற்றிக் காட்டுவதோடு, முற்றிலும் மாறுபட்ட எம்பிராய்டரி, லேஸ் (Lace) போன்ற அழகிய வேலைப்பாடுகள் இந்த கார்செட்டுகளில் நிறைந்திருந்தன. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெல்லிய உடலமைப்பு ட்ரெண்டானது. அதைத் தொடர்ந்து, உலகப்போரின்போது `எலாஸ்டிக்’ பொருத்திய ஷேப்வேர்கள் தயாரிக்கப்பட்டன. இதுதான், கார்செட்டிலிருந்து இப்போது உபயோகப்படுத்தப்படும் ஷேப்வேர்களுக்கு அடித்தளம்போட்டது. அன்றுவரை ஆடம்பரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட `ஷேப்வேர்கள்’, 21-ம் நூற்றாண்டில் அத்தியாவசிய உள்ளாடைகளாகவும் உருவெடுத்தன.’’
எத்தனை வகையான ஷேப்வேர்கள் இருக்கின்றன?
`` `கம்ப்ரெஷன் (Compression)’, `ஸ்கின் டைட்டனிங்’ (Skin Tightening), `ஷேப்பர்ஸ்’ (Shapers) என ஷேப்வேர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அதிகப்படியான தசைகளை இறுக்கி, அழகான உடலமைப்பைக் கொடுப்பது கம்ப்ரெஷன் டைப். இதை, பெரும்பாலும் மருத்துவம், விளையாட்டு, அழகு தொடர்பான துறைகளில் பயன்படுத்துகிறார்கள். ஸ்கின் டைட்டனிங், கம்ப்ரெஷன் அளவுக்கு இல்லாமல், மிதமான அளவில் உடலை இறுக்கி, கட்டுக்கோப்பான உடலமைப்பு தரும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் உள்ளாடைகள்தான் ஷேப்பர்ஸ். இவை அந்தரங்க உறுப்புகளை மறைக்க உதவுவதோடு, அழகான உடலமைப்பையும் தருகின்றன.”
யாரெல்லாம் இதைப் பயன்படுத்துகிறார்கள்?
``ஃபேஷன் மற்றும் ஃபிட்னெஸ் விழிப்புஉணர்வு உள்ளவர்கள் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நீச்சல் வீரர்கள், `வெட் சூட்’ எனும் ஷேப்வேர்கள் பயன்படுத்துகிறார்கள். ஜிம்னாஸ்டிக் செய்பவர்கள், சைக்கிளிங் போகிறவர்கள், பெல்லி டான்சர்ஸ் போன்றோரும் ஷேப்வேர்கள் பயன்படுத்துகின்றனர். இது உடலுக்குக் குறைந்த அதிர்வைக் கொடுத்து, அதிக நெகிழ்வுத் தன்மையைத் தரும்.

திரைத்துறையில் இருப்பவர்கள் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைக்கு பதிலாக ஷேப்வேர்களைப் பயன்படுத்தலாம். இளைஞர்கள் மட்டுமல்லாமல், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைக்கும் முதியவர்கள்கூட பல்வேறு வகையான ஷேப்வேர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஏராளமான ஷேப்வேர்கள் இருக்கின்றன.
பார்ட்டி உள்ளிட்ட ஸ்பெஷல் நிகழ்வுகளுக்கு மட்டும் ஷேப்வேர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது சல்வார் கமீஸுக்குக்கூட உபயோகிக்கிறார்கள்’’ என்கிறார் அர்ச்சனா.
உடலோடு ஒட்டியிருக்கும் ஷேப்வேர்கள் உடலுக்கு ஆரோக்கியமானவைதானா என்று பிசியோதெரபிஸ்ட் கோதண்டத்திடம் கேட்டோம்.
``அழகுக்காக உபயோகப்படுத்தும் ஷேப்வேர்கள், நிச்சயம் உடலுக்கு பலவிதமான உபாதைகளைக் கொடுக்கக் கூடியவையே! உடலோடு ஒட்டி இருப்பதால், வியர்வைச் சுரப்பிகளை முற்றிலும் தடுக்கின்றன. உடலை எளிதில் அசைக்க முடியாது. வயிற்றுத் தசை அசைந்தால்தான் சாப்பிடும் உணவு செரிக்கும். வயிற்றுப் பகுதி இறுகினால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். அதிகபட்சம் ஐந்து மணி நேரம் தொடர்ந்து இந்த ஷேப்வேர்களைப் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் நேரத்தில் அணியவே கூடாது.
ஷேப்வேர்களைப் பயன்படுத்துவதால், டயட் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் தவறான எண்ணம். அதிகப்படியான தசைகளை, குறுகிய நேரத்துக்கு மறைக்க மட்டுமே இந்த ஷேப்வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், எந்த வகையிலும் உடலமைப்பு நிரந்தரமாக மாறப்போவதில்லை. எனவே, டயட் மற்றும் உடற்பயிற்சியை நிச்சயம் பின்பற்றியே ஆக வேண்டும்” என்கிறார் கோதண்டம்.
ஷேப்வேர்களைப் பயன்படுத்து வதால் ஏற்படும் சருமப் பிரச்னை களைப் பற்றி விளக்குகிறார் சரும மருத்துவர் பூர்ணிமா.
``ஷேப்வேர்கள் பெரும்பாலும் லைக்ரா துணிவகையில்தான் தயாராகின்றன. இது உடலை இறுக்கிப் பிடித்துக்கொள்வதால், சருமம் தன் சுவாசிக்கும் தன்மையை இழக்கிறது. 12 மணி நேரம் தொடர்ந்து இந்த ஷேப்வேர்களைப் உபயோகித்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அதிகப்படியான அழுத்தம், வியர்வையைக் கட்டுப்படுத்தி ஃபங்கஸ் தொற்று, வீக்கம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.
இதற்குத் தீர்வாக, பெரும்பாலான பெண்கள், மாய்ஸ்ச்சரைஸரைத் (Moisturiser) தவறாக உபயோகிக்கிறார்கள். அப்படிச் செய்தால், நோய்த்தொற்று அதிகம் பரவ வாய்ப்பிருக்கிறது. இவற்றை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த, மார்க்கெட்டுகளில் விற்கும் `டஸ்ட்டிங் பவுடர்’ உபயோகிக்கலாம். லைக்ரா துணி வகைக்குப் பதிலாக `காட்டன் கலந்த (Cotton Blended)’ துணி வகையில் உருவான ஷேப்வேர்களைப் பயன்படுத்தலாம்” என்கிறார் பூர்ணிமா.

கருத்துகள்
கருத்துரையிடுக