*கோவலன்களின் கோபம்*
“மண வாழ்க்கைக்கு வெளியிலான உறவு என்கிறது சுப்ரீம் கோர்ட். ஆனால், நமது காதல் மன்னர்களோ, தனக்கு வாய்ப்புக் கிடைக்காத ஆத்திரத்தில் கள்ளக் காதல் என்று விளித்து, ஆறுதல் அடைகிறார்கள்.” (தோழர் Mathimaran V Mathi)
அது மட்டுமில்ல, தன் பெர்ஃபார்மென்ஸ் பத்தாததால தன் பொண்டாட்டி வேற எவன் கூடயாச்சும் உறவு வச்சுகிட்டாலும் தன்னால எதுவும் பண்ண முடியாதே என்கிற ஆதங்கமும் தான் இங்க பெரும்பான்மையான ஆண்களை அசிங்கமா அந்த தீர்ப்புக்கு எதிரா கதற விடுதுன்னு சொல்லுவேன். ஆண்கள் ஏன் இப்படி ஒரு insecurity feelingஓட வலம் வரணும்? Self Performance Appraisal இல்லன்னா பொண்டாட்டிகிட்ட வெளிப்படையா, “ஏம்மா நான் உன்னை திருப்திப்படுத்துறேனா? என் கூட சந்தோஷமா தானே வாழுற?” அப்டீன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டோ தன்னிலையை சரி பண்ணிக்கிறது ஏன் அவ்வளவு கடினமா இருக்கு நம்ம இந்திய ஆண்களுக்கு?
(பிகு:- பொண்டாட்டிகளும் இந்த செல்ஃப் பெர்பார்மன்ஸ் அப்ரைசல் அப்பப்போ பண்ணிக்கிறது உன் வீட்டு ஆம்பளைய கோவலன் ஆக விடாம தடுக்கும். தாம்பத்திய உறவுங்குறத சும்மா robot மாதிரி பண்ணாம நல்லா ரசிச்சு ருசிச்சு “சுவைச்சு
😉” பண்ணணும். வேண்டா வெறுப்போட எந்த ஒத்துழைப்பும் இல்லாம ஜடம் மாதிரி படுத்துகிட்டு இருந்தா, மாதவிகள் கொத்திகிட்டு போறது தான் நடக்கும்.)

உன் பொண்டாட்டி ஏன் உன்னை விட்டு வேற ஒரு ஆணோட உறவு வச்சுக்கிறான்னு யோசிச்சிருக்கியா எவனாச்சும் இதுவரை? ரொம்ப சிம்பிளா ஒரு கேள்வி கேக்குறேன்... எத்தனை ஆண்கள் உங்க பொண்டாட்டியோட செக்ஸ் வச்சுக்கிறப்ப அவ போட்டிருக்கிற உள்ளாடையை அழகா இருக்குன்னு வர்ணிச்சிருக்க இதுவரை? “உன் இடுப்பு வளைவு செமடி”, இல்லன்னா “இந்த பிராவுல உன் மார்பக குழி செமயா இருக்கு” இப்டி எத்தனை பேர் உன் பொண்டாட்டிகிட்ட ஒருவாட்டியாச்சும் சொல்லியிருக்க? கல்யாணமான புதுசுல இல்ல, நடுத்தரவயசுல கேக்குறேன். எவன் கிட்டயாச்சும் “நேத்து நைட் உங்க பொண்டாட்டி என்ன கலர் ஜட்டி போட்டிருந்தாங்க சார்?” அப்டீன்னு ஒரு கேள்விய கேட்டு பாரு, பெப்பரப்பேன்னு முழிப்பான், இல்லன்னா “இருட்டுல அதையெல்லாம் யாரு பார்த்தா?” அப்டீன்னு சப்பைக்கட்டு கட்டுவான்.\]
இதுவே உன் பொண்டாட்டி கூட திருமணத்திற்கு வெளியிலான உறவு வச்சிருக்கிற காதலன் என்ன பண்ணுவான், “ஏய் என்ன கலர் பிரா போட்டிருக்கமா?” அப்டீன்னு கேட்டு தான் ஒரு செக்ஸ் சேட்டயே தொடங்குவான். இல்லன்னா, “ஆகா அழகா ஷேவ் பண்ணி மொழு மொழுன்னு வச்சிருக்க பாரு, அப்டியே முகத்தை வச்சு தேய்க்கணும் போல இருக்கு” அப்டீம்பான். அதை கேக்குறப்பயே உன் பொண்டாட்டிக்கு ஹார்மோன்ஸ் கன்னாப்பின்னான்னு எகிறி ஜிவ்வுன்னு ஏறும். வெட் ஆவும். அவன் கூட படுக்க என்ன தகிடுதித்தம் வேணா பண்ணலாம் என்கிற முடிவுக்கு வந்திருவா.
ஸோ இப்டி அவ போகாம இருக்கணும்னா, நீயும் ரொமாண்டிக்கா மாறு. சும்மா குடும்பத்துக்காக உழைக்கிறேன்னு சொல்லி சொல்லியே பொண்டாட்டிய புழுக்கத்தோட படுக்க விடாத. வெளிய ஒண்ணா சுத்துறப்போ அவ உன் கைய ஆசையா புடிச்சுகிட்டா தட்டி விடாத. அவளுக்கு மூடு வந்து நைட்ல உன் மேல கைய போட்டா டயர்டா இருக்கேன் தொந்தரவு பண்ணாதன்னு சொல்லி தட்டிக்கழிக்காத. வாரத்துக்கு மூணு அல்லது நாலு நாளாவது கலவி வேணும் என்கிறத மனசுல வச்சு செயல்படு. நாப்பது வயசுக்கு மேல தான் பெண்களுக்கு காம உணர்வு அதிகரிக்கும், அரவணைப்பை தேடும், ஆனா குடும்ப சூழலால அவ அதை அடக்கி வச்சுக்குவா என்கிறத நல்லா தெரிஞ்சுக்க. (பிகு:- பெண்களுக்கும் இது vice versa தான். உங்க உணர்வுகளை உங்க இணைகிட்ட வெளிப்படுத்தவும் அவங்க ரொமான்ஸ் மூடுல வர்ரப்போ ஒத்துழைக்கவும் தயங்காதீங்கம்மா)
இது எதுவுமே தெரியாம, செய்யாம இப்ப ஆதங்கப்பட்டு அலறியெல்லாம் எந்த பிரயோஜனமும் இல்ல ஆண் நண்பர்களே. உங்க செயல்பாடு இயக்கம் எல்லாம் சரியா இருந்தா உங்க பொண்டாட்டி அவளை அணுகுற ஆணை ரொம்ப ஈசியா தவிர்த்துருவா. அப்டியும் செக்ஸ்ல வெரைய்ட்டி வேணும் என்கிறதுக்காக, அதாவது கணவன் கிட்ட திருப்திகரமான உறவு கிடைச்சும், ஒரு பெண் தன் கணவன் அல்லாத ஆணுடன் போறான்னா, அவளை திருமண உறவுல புடிச்சு அடைச்சு வச்சிருக்கிறது ரொம்ப தப்பு. அவங்க ஹார்மோன் செயல்பாடுகள் அப்டீன்னு புரிஞ்சுகிட்டு அவங்கள சுதந்திரமா போக விட்டுர்ரது தான் நல்லது. ஆண்கள் தங்களின் சுயநலத்துக்காய், சோம்பேறித்தனத்தால், தாய்மை புனிதம் தியாகம்னு எல்லாம் சொல்லி புருடா விட்டு குழந்தைகளுக்காகன்னு எல்லாம் அவங்கள புடிச்சு வைக்க முயற்சி செஞ்சா சிசுக்கொலைகள் தான் அரங்கேறும்.
இனி இந்த தீர்ப்பு வந்ததும் கள்ளக்காதல் என்கிற பதத்தை உபயோகிச்ச ஊடகச்செய்திகள பார்த்து என்னோட எதிர்வினை இப்படி இருந்தது:
இந்த “கள்ளக்காதல்” என்கிற பதம் இருக்கிற எந்த ஊடக செய்தியை பார்த்தாலும் அவங்கள கேவலமா தோணுது எனக்கு. “தகாத உறவு” என்கிற சொல்லாடலையும் நான் வெகுவா எதிர்க்கிறேன். காரணம் Extra Marital Affair என்கிறத “திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு” இல்லன்னா “திருமணம் தாண்டிய காதல்” அப்டீன்னு சொல்றது தான் பொருத்தமாயிருக்கும்னு நினைக்கிறேன்.
என்னைக்கேட்டா பெற்றோர் மாமா வேலை பார்த்து கூட்டிக்குடுக்கிற நிச்சயிக்கப்பட்ட திருமண உறவுல வச்சுக்கிற உடலுறவ தான் தகாத உறவுன்னும் கள்ளக்காதல்னும் சொல்லணும். ஏன்னா அது மனசுல காதலில்லாம சமூக கட்டாயத்துக்காகவும் குழந்தை உற்பத்திக்காகவும் ஏற்படுற அசிங்கமான உறவு......
😑
😑
😑



இதுக்கெல்லாம் தீர்வு என்னன்னு கேட்டா, பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை திருமணத்துக்கான ஒரு சந்தைப்பொருளாய் வளர்க்காமல், அவளை ஆணைப்போலவே அனைத்து உரிமைகளும் உணர்வுகளும் உள்ள ஒரு மனித உயிராய் பார்த்து, மதித்து, சுயசார்பும் சுயமரியாதையும் கொண்டவளாய், பொருளாதார சுதந்திரம் உள்ளவளாய் வளர்க்க வேண்டும். அப்டி ஆணுக்கு நிகராய் பெண்ணையும் வளர்த்தால் ஆண் அவளை பாதுகாக்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய, அவளுக்காய் உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடும். இப்படி சுதந்திரமாய் வளர்க்கப்படுற பெண்ணால் சுயமாய் சிந்தித்து எந்த கட்டத்திலும் தன் வாழ்க்கையை சரியாய் அமைத்துக்கொள்ளும் பக்குவம் உள்ளவளாய் வாழவும் முடியும்.
அதே போல ஆண் குழந்தைகளை தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் (உணவு தயாரித்தல், வீட்டுப்பராமரிப்பு) திறமை உள்ளவர்களாய் வளர்த்து விட வேண்டும். Stop spoon feeding your male children. எந்த தாயும் உங்க பையனுக்கு, “எனக்கு அப்புறமா உன்னை உன் பொண்டாட்டி பார்த்துப்பா ராசா” அப்டீன்னு false hope குடுத்து சவலைகளா வளர்க்காதீங்க. உன்னை நீ தான் பார்த்துக்கணும்னு அவனையும் தற்சார்புள்ளவனா தன்னம்பிக்கையுள்ளவனா வளர்த்துங்க.
குழந்தை வளர்ப்பும் Women’s Job இல்ல, பெற்றோரின் வேலைன்னு ஆணுக்கும் புரிய வச்சு வளர்த்தணும். தன் கருப்பையில தாங்கி பெத்து போட்டு பால் குடுக்கிறதோட ஒரு தாயோட special role முடிஞ்சு போயிரணும் குழந்தை வளர்ப்பில. அதுக்கப்புறம் எல்லாமே பொதுவுல தந்தையும் பகிர்ந்து செய்யிற மாதிரி தான் இருக்கணும். இதெல்லாம் எங்க நடக்க போகுதுன்னு நினைச்சீன்னா நீ இன்னும் ரொம்ப அறியாமையில உழல்றன்னு அர்த்தம். நல்லா கண்ண திறந்து பாரு... உன்னை சுத்தி இருக்கிற பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள்ள இந்த gender roles எல்லாம் இப்ப எப்டி மாறியிருக்குன்னு...
இனி, பெண் ஒருவர் மீது காதல் வயப்பட்டால் சாதி மதம் social statusனு சொல்லி அதை உடைக்காம, அவள் வாழ்க்கை அவள் தீர்மானம்னு விட்டு விட வேண்டும். மொத்தத்தில் ஆணோ பெண்ணோ, திருமணம் என்கிற உறவே “காமுறுதல்” “உடன்போதல்” எல்லாம் நிகழ்ந்ததுக்கு அப்புறமா ஏற்படுற மாதிரி பார்த்துக்கணும். சமூக கட்டாயத்துக்காக பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படும் திருமண முறையே ஒழிக்கப்படணும். கல்யாணம்னாலே காதலிச்சு தான் பண்ணியாகணும் என்கிற நிலை வரணும்.
தன் இணையை தானே சரியா தேர்ந்தெடுக்கிற திறமையை பக்குவத்தை பெற்றோர் குழந்தைகள் கிட்ட ஏற்படுத்தணும். வயதுக்கு வந்த குழந்தைகளின் வாழ்க்கை முடிவுகளில் பெற்றோர் தலையிடாமல், கல்வி ஆகட்டும், வேலை ஆகட்டும், இணைத்தேர்வு ஆகட்டும், அவர்களை சுதந்திரமாய் தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க முழு உரிமை கொண்டவர்களாய் வளர்க்க வேண்டும். இப்டி நடந்தா மண வாழ்க்கைக்கு வெளியிலான உறவுகள் ஏற்படுவது வெகுவாய் குறையும்... இல்லாமலே கூட போகும்.
Lulu Deva Jamla G
29/09/2018
9:06 am
கருத்துகள்
கருத்துரையிடுக