இது தான் நம் சமூகத்தில் இருக்கும் சிக்கல், ஆணும் பெண்ணும் கலவி கொள்ளுவதை இயற்கையென்றும், ஓர்பாலீர்ப்பு செயற்கையென்றும் நாம் புரிந்துக்கொள்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள இனப்பெருக்க அம்சத்தினால் மட்டுமே.
- Vasugi Bhaskar
- Hixic Contributor
"கந்தனுக்கு சவரம் செய்ய ஆரம்பித்தான், அவன் கரங்கள் முகத்திலும் கழுத்திலும் படும் போதும், உராயும் போதும் கந்தனுக்கு ஒரு ஆணுக்குரிய ஆசை ஏற்பட்டது. தொட்டும் தொடாததுமாய் வேலை செய்வதும், திடீரென உராய்வதும், பிறகு விலகி விடுவதும் கந்தனது ஆசையைப் பெருக்கின"
ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளை' நாவலில் கந்தன் என்னும் கதாபாத்திரம் சவரக்கடையில் அனுபவித்த உணர்வை இப்படியாக விவரித்திருப்பார் கதாசிரியர்.
ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளை' நாவலில் கந்தன் என்னும் கதாபாத்திரம் சவரக்கடையில் அனுபவித்த உணர்வை இப்படியாக விவரித்திருப்பார் கதாசிரியர்.

இதில் கந்தன் ஓர் பாலின ஈர்ப்பாளர் அல்ல, ஆனால் சவரக்கடையில் குறிப்பிட்ட உடற்பகுதியில் சீண்டப்படும் போது அவன் உடலில் உருவான கிளர்ச்சி ஒரு ஆணால் தூண்டப்பட்டவை. அந்தவொரு நொடி அவன் ஆணால் தூண்டப்பட்டிருப்பது அப்பட்டமான உண்மை, அவனுக்குள்ளும் ஓர்பாலின ஈர்ப்பு தன்மை இருந்திருக்கிறது, இருக்கிறது, எல்லோருக்கும் இருக்கிறது, அது எத்தனை சதவிகிதம் தலை தூக்கி பார்க்கிறது என்பதை பொறுத்துத் தான் ஒருவரின் பாலியல் ஈர்ப்பு தேர்வு Straight / Gay / Lesbian / Bisexual என்பது முடிவாகிறது.ஓர்பாலீர்ப்பை இயற்கைக்கு எதிரானதாக கட்டமைத்திருக்கும் சமூக நிலைப்பாட்டிலிருந்து இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில் சிக்கல் இருக்கத்தான் செய்யும், ஆனால் உண்மையென்பது முழுவுடல் மழிக்கப்பட்டு கத்திரி வெய்யலில் நிர்வாணமாய் நிற்பதை போன்றது, பொய் என்பது அதே காட்சியை நிலவெளியில் ரம்மியமாய் பார்ப்பதை போல. பொய்கள் கொஞ்சம் அழகூட்டும், அது கவிதையாய் புனைவாய் இருக்கும் பட்சத்தில் தொலைந்து போகட்டும் என்று விடலாம், ஆனால் அறிவியலிலும் வரலாறிலும் பொய்யென்பது அபத்தம். அப்படியானவொரு அபத்தம் தான் ஓர்பாலீர்ப்பை இயற்க்கைக்கு எதிரானது என்பதும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து என் நண்பன் வந்திருந்தான், ஓர் பாலீர்ப்பு பற்றிய அவனுடனான விவாதத்தில் Gay வாக இருப்பது "இயற்கைக்கு எதிரானது இல்லையா?" என்று விவாதம் தொடர்ந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து என் நண்பன் வந்திருந்தான், ஓர் பாலீர்ப்பு பற்றிய அவனுடனான விவாதத்தில் Gay வாக இருப்பது "இயற்கைக்கு எதிரானது இல்லையா?" என்று விவாதம் தொடர்ந்தது.

நான் அவனிடம் கேட்டேன்
"நீ Gay கிடையாது தானே?"
"ஆமாம்"
"அப்போ உனக்கு ஆணுடனான ஈர்ப்போ, கவர்ச்சியா, சக ஆண் உன் உணர்வுகளை தூண்ட முடியாது என்று சொல்கிறாயா?"
"முடியாது"
"சரி, நான் உன் ஆணுறுப்பை தொட்டு தூண்டுவதற்கான வேலையை செய்தால், அது சலனமின்றி அப்படியே கிடக்கும் தானே..?" என்று கேட்டேன்.
"ஆமாம்"
"அப்போ உனக்கு ஆணுடனான ஈர்ப்போ, கவர்ச்சியா, சக ஆண் உன் உணர்வுகளை தூண்ட முடியாது என்று சொல்கிறாயா?"
"முடியாது"
"சரி, நான் உன் ஆணுறுப்பை தொட்டு தூண்டுவதற்கான வேலையை செய்தால், அது சலனமின்றி அப்படியே கிடக்கும் தானே..?" என்று கேட்டேன்.
வெடித்துச் சிரித்தான், "அது எப்படி?" என்று மழுப்பினான். இறுதியாக ஆணின் தூண்டுதலாலும் அங்கே பாலீர்ப்பு சாத்தியம் என்கிற அளவில் அவன் அடிப்படையை புரிந்துக்கொண்டான்.
இது தான் நம் சமூகத்தில் இருக்கும் சிக்கல், ஆணும் பெண்ணும் கலவி கொள்ளுவதை இயற்கையென்றும், ஓர்பாலீர்ப்பு செயற்கையென்றும் நாம் புரிந்துக்கொள்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள இனப்பெருக்க அம்சத்தினால் மட்டுமே. மனித இனத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதை தவிர்த்து அதற்கும் ஈர்ப்புக்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லை. மாட்டிடம் இருந்து நாம் பாலை கறப்பதற்கு முன் அது சுரப்பதற்கு, உற்பத்தியாவதற்கு எத்தனை விதமான இயற்கை வழிமுறைகள் உள்ளதோ, பால் உற்பத்தியான பின்பும் தயிர், நெய், வெண்ணை என்று அது எத்தனை கிளைகளாக ஒரே மூலப்பொருளில் இருந்து நமக்கு பல்வேறு வடிவங்கள் கிடைக்கிறதோ, அதை போன்றதொரு கிளை அமைப்பு தான் நம் மனித உடலும். பல்வேறு விதமான சங்கதிகள் நம் மரபணுக்களில் ஒளிந்து கிடக்கிறது, அவை ஒரே வடிவத்தை கொண்டவை அல்ல. ஏழு வண்ணத்தை ஒன்றோடு ஒன்று கலந்து புதுப்புது நிறங்களை உருவாக்குவதை போல, இன்றைய மனித உடல் / உணர்வுகளுக்கு சில மூலக்கூறுகள் இருந்தாலும், அவை பல்வேறு வடிவங்களால் ஆனவை. இந்த அடிப்படையை புரிந்து கொண்டால், ஒரு ஆணுக்கும் ஆணுக்குமான ஈர்ப்பையும், பெண்ணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பையும் ஏலியன் தனமாக அணுக வேண்டியதில்லை. அதில் எந்த உணர்வு மேலோங்கி இருக்கிறதோ அதுவே நாம்.

மதம், நாகரீகம், கலாச்சாரம் என்று மனிதன் தத்தம் வசதிக்கு பின்னாளில் நிறுவிக்கொண்ட வாழ்க்கை முறையால், இயற்கையாய் மேலெழும் இத்தகைய உணர்வுகளை சாகடித்து இந்த உலகம் எதை சொல்கிறதோ, எதை அங்கீகரித்ததோ, அதையே ஏற்று வாழ்வது அறம் என்பது மனிதனின் இயல்பாகி போயிருக்கிறது. இயற்கையாய் தன்னிடம் வெளிப்படும் உணர்வை சாகடித்து, உலகத்திடம் தெரியப்படுத்தாமால் போலியான ஒரு வாழ்க்கையை வாழ்கின்றவர் பெரும்பான்மை கூட்டமாக இல்லாமல் போனாலும், இதனால் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகி வாழ்கிறவர்களை எண்ணிக்கைக்கு உட்படுத்த முடியாத அளவு மறைந்து / மறைத்து வாழ வைத்திருக்கிறது இந்த சமூகம்.
அதை வெளிப்படுத்துகிறவர்கள் எத்தனை கேலிக்கும், கிண்டலுக்கும், தண்டனைக்கும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதை வரலாற்றிலும் நிகழ் காலத்திலும் நாம் பார்க்கிறோம். பெரும்பான்மை உலகத்தின் பார்வைக்கு எது சரியோ அதுவே சரி, எது தவறோ அதுவே தவறு என்னும் இலக்கணத்தை துச்சமென மதிக்காமல், இயற்கையாய் தன்னிடமிருந்து வெளிப்படும் உணர்வின் மூலம் நீயென்னை மதிப்பிடுவாய் என்றால், "உன் அந்த அங்கீகாரம், எனக்கு தேவையில்லை" என்று உலகம் முழுக்க இந்த குரல்கள் வலுப்பெற தொடங்கி இருப்பதின் வெளிப்பாடே LGBTQ + அமைப்புகள் உருவாகியிருப்பதற்கான காரணம். குற்றவுணர்வோடு வாழும் மனிதர்களை உளவியல் ரீதியான சிக்கல்களில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில், இந்த பொது சமூகத்தோடு உரையாடவும், அது பற்றிய விழிப்புணர்வையும், அடுத்த கட்டத்திற்கு LGBTQ சமூகத்தை முன்நகர்த்தவும் பல நிகழ்வுகள் உலகம் முழுக்க அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் நான் கடந்த சனிக்கிழமை 07. 07.2018 அன்று கலந்து கொண்ட சென்னையில் நடந்த 'குயர் இலக்கிய விழா'வும்.

திட்டமிடாமல் எதேச்சையாக கலந்துக்கொண்ட அந்த முழு நாள் நிகழ்வின் இறுதியில் பங்குபெறாமல் போயிருந்தால் 'கிரேட் மிஸ்' ஆகியிருக்கும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டது. குயர் இலக்கிய விழாவின் அமர்வுகளில் கலந்தாலோசிக்கப்பட்ட எதிலும் ஓர் இடத்தில் கூட இந்த சமூகத்திடம் மன்றாடும் கருத்துக்கள் இல்லை, "எங்களையும் புரிந்துகொள்ளுங்கள்" என்னும் தொனி இல்லை. விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கோபிநாத் நடிகர் விஜய் சேதுபதியிடம் "நீங்க எப்போதும் சிம்பிளா இருக்கீங்களே?" என்று கேட்பார், அதற்கு விஜய் சேதுபதி "நான் எப்போதும் கெத்தா தான் இருக்கேன், உங்களுக்கு அப்படி தெரியுது" என்பார். அது போல, குறை என்னிடம் இல்லை, அது பார்ப்பவரிடம் உள்ளது என்பதாக தான் முழு நிகழ்வின் உணர்வும் எனக்கு கொடுத்தது.
நிகழ்வின் இறுதியில், ஓர் பாலீர்ப்பாளராக இருந்து தம் பால்ய வயது வரை சந்தித்த வந்த அனுபவங்களின் அடிப்படையில் "மோஹனஸ்வாமி" என்னும் நாவலை எழுதிய கன்னட எழுத்தாளர் வசுதேந்திரா பேசும் போது 'நான் அடுத்த ஜென்மத்திலும் Gay வாக பிறக்க ஆசைப்படுகிறேன், ஏனினில் ஒரு Gay வாக இருந்து இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்னும் அனுபவத்தை நான் பெற்று விட்டேன், இந்த அனுபவ நினைவுகள் என்னோடு இருந்தால், என்னால் இந்த உலகை எதிர்க்கொள்ள முடியும்" என்றார்.
தன வாழ்வின் பெரும்பகுதியை இந்த சமூகத்தின் பார்வைகளுக்கு தீக்கிரையாக்கி, அடிகளை சுமந்து இன்று தங்கமாய் மின்னுகிறவர்களின் கடந்த கால வலிகளுக்கு நியாயம் சேர்க்க வேண்டுமானால், அதன் பலனாக எதிர்கால சந்ததியினர் தம் வாழ்க்கையை தொடங்குவதிலிருந்தே சமத்துவ சமூகத்தை நுகர்ந்திட வேண்டும், ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் பார்வையை எதிர்க்கொள்ள நாற்பது ஐம்பது வருடம் காத்திருக்க வேண்டுமானால், எந்த சமூகம் வாழத்தொடங்கப் போகிறது?
சமூகத்தில் கருத்து மாற்றங்கள் இரண்டு வழியில் நிகழும்,
1. சமூகம் தாங்கி வந்த பிற்போக்குத்தனங்களை அதன் வேரிலிருந்தே கண்டறிந்து உண்மையை, சமத்துவத்தை உள்ளிருந்து உணர்தல்
2. பெரும்பான்மை சமூகம் ஒரு கருத்தை ஏற்கும் போது மறுப்பேதும் சொல்ல முடியாமல் நாமும் அதன் நெருக்கடியால் அதை ஏற்பதை போல நடித்தல்
LGBTQ + சம்மந்தப்பட்ட புரிதலிலும் மாற்றங்களிலும் பெரும்பாலும் இரண்டாவது நிலையோடு தான் நிற்கிறது. கரிசனத்திற்காக ஏற்பது, பாவப்படுவது, பெயரளவில் அங்கீகரிப்பது என்பது சமூகத்தின் உண்மையான மாற்றமல்ல. இதன் மூலம் பொது சமூகத்தில் பகிரங்கமாக நிலவும் சில பிற்போக்குத்தன மலங்களை வேண்டுமானால் மலர்களால் தற்காலிகமாக மூடலாம், ஆனால் மாற்றம் என்பது நியாயத்தை அதன் பிடியிலிருந்தே அணுகுவது. இரக்கத்திற்கு இரையாவதை விட இந்த மண்ணுக்கு இரையாகி போகலாம்.

"பால்புதுமையினர்" என்னும் அழகான வார்த்தையை இந்நிகழ்வில் நான் அறிந்துக்கொண்டேன், அதன் தன்மை உங்களுக்குள்ளும் எட்டிப்பார்க்கும், எனக்குள்ளும் எட்டிப்பார்க்கும், அது மேலெழும் சதவிகிதமே நம் விருப்பத்தேர்வு. அதில், விந்தையும் இல்லை வியப்பும் இல்லை என்னும் உண்மை உரைத்தால், இந்த கட்டுரை எழுதும் "என் தேர்வென்ன?" என்னும் கேள்வி உங்களை உறுத்தாது, அது என்னையும் உறுத்தாது.
மனம், மனசாட்சி, இதயம் போன்ற வார்த்தைகளை பல்வேறு வடிவத்தில் இந்த இலக்கிய உலகம் நூறு கோடி முறையாவது பயன்படுத்தியிருக்கும். அப்படியொன்று உண்மையிலேயே இருக்குமென்றால், அதற்கு கொஞ்சமும் துரோகமிழைக்காமல் மனசாட்சிக்கு உண்மையாய் கட்டுப்பட்டு வாழ்கிறவர்கள் தனது பாலின தேர்வை வெளிப்படையாய் சொல்லி வாழும் LGBTQ + தோழர்கள் தான்.
சமத்துவத்தை எந்த வடிவத்தில் பேசினாலும் அது இறங்கி வருவதல்ல, வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதல்ல, அதன் இருப்பிடத்திற்கு நாம் போய்ச் சேருவது.
-வாசுகி பாஸ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக