முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொல்லும் சாதி



ளவரசனின் மரணம் தமிழக மக்களின் மனங்களை உலுக்கிவிட்டிருக்கிறது. காதல் திருமணம் புரிந்த ஒரே ஒரு காரணத்துக்காக இளமையிலேயே அகால மரணம் அடைந்த இளவரசனுக்காக ஜூலை 4 மதியம் செய்தி கேட்டவுடன் பதறிய நெஞ்சங்கள் அதிகம்.


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக ஜூலை 1 அன்று திவ்யாவும் இளவரசனும் திவ்யாவும் ஆஜரானபோதுதான் திவ்யா இப்படிச் சொன்னார் ‘’அம்மா எப்போது விரும்புகிறாரோ அப்போது நான் இளவரசனுடன் வாழ்கிறேன்’’. இளவரசனுக்கு இந்த வார்த்தைகளில் ஓரளவு திருப்தி ‘’திவ்யா யாரையும் காயப்படுத்தவில்லை. திவ்யா கூறிய வார்த்தைகள் எனக்கும் சாதகமானவை. அவங்க அம்மாவுக்கும் சாதகமானவை. இருக்கட்டும். அம்மா கூட ஒரு வருஷம் இருக்கட்டும். நான் விட்டுப்போன படிப்பை முடிக்கிறேன். வேலைக்குப் போறேன். அப்புறம் எத்தனை நாள்தான் அடஞ்சு கிடக்க முடியும்? நிச்சயமா மீண்டும் நாங்க சேர்வோம். அவங்க அம்மாவுக்கும் மனசாட்சி இருக்குமில்லையா? நம்ம பொண்ணு வாழ்க்கை நம்மால வீணாயிடுச்சேன்னு நினைச்சு அனுமதி கொடுப்பாங்க’’  - இளவரசன் தெரிவித்த வார்த்தைகள் இவை. 


ஜூலை 2 அன்று திவ்யாவும் இளவரசனும் நீதிமன்றத்துக்கு வரவேண்டியதில்லை என்பதால் இளவரசன் கிளம்பி ஊருக்குச் சென்றுவிட, திவ்யா நீதிமன்றத்துக்கு வந்து ஊடகங்களின் முன் ஆஜராகி ‘நேற்று நான் அப்படி சொல்லவில்லை. இளவரசனின் வழக்கறிஞர் தவறாகக் கூறிவிட்டார். நான் அம்மாவோடுதான் இருக்கப் போகிறேன். இளவரசனுடன் வாழப்போவதில்லை’’ என்றார். இதை எப்படி எதிர்கொண்டார் இளவரசன்? ‘’இப்படி சொன்னப்புறம் என்ன செய்றது. படிக்கிறேன். வேலைக்குப் போறேன். இப்போதைக்கு திவ்யாவை தொந்தரவு செய்யவேண்டாம். அங்கேயே இருக்கட்டும். வேலைக்குப் போனபின் நாங்க மீண்டும் சேர்வோம்’’ என்று கூறியதாக இளவரசனின் தந்தை இளங்கோ கூறுகிறார். ‘’எங்களுக்கு தைரியம் சொன்னான். அவன் தற்கொலை செய்துக்குற ஆளில்லை. இது கொலைதான்..அடிச்சு சொல்றேன்.’’ என்கிறார். ‘’எம்.பி.சி. பையன் இவனோட ஃபிரண்ட் ஒருத்தன் கூப்பிட்ட்டான்னு சொல்லிட்டுத்தான் என் அக்கா வீட்டில் தகவல் சொல்லிட்டு பல்சர் பைக்கை எடுத்துக்கிட்டுப் போனான். 11 மணிக்குப் போனான். ஒன்றரை மணிக்கெல்லாம் அவன் உடம்பு ரயில்வே டிராக் கிட்ட கிடப்பதைப் பார்த்திருக்காங்க. அந்தப் பக்கமா போன டிரெயின் டிரைவர் ரயில்வே போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கார். டிரெயின்ல அடிபட்டதா தகவல் கொடுக்கல. ஒரு பாடி டிராக் ஓரமா கிடக்குதுன்னு தகவல் கொடுத்திருக்கார். எனக்கும் தகவல் வந்துச்சு.’’ என்கிறார் இளங்கோ.

போஸ்ட்மார்ட்டம் செய்வதில் பெரும் குழப்படியே நடந்திருக்கிறது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன். ‘’போஸ்ட் மார்ட்டம் செய்கையில் நாங்கள் சொல்லும் டாக்டர்களையும் இணைத்துச் செய்யவேண்டும் என்று கேட்டோம். எஸ்.பி. ஆஸ்ரா. கர்க்கும் ஒப்புக்கொண்டார். ஆனால் பெற்றோரிடம் கையெழுத்து பெறாமலேயே அவசரம் அவசரமாக போஸ்ட் மார்ட்டம் நடந்தது. வழக்கறிஞர் சங்கர சுப்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு 11 மணிக்கு வரவிருக்கும் நிலையில் காலையிலேயே எதற்காக போஸ்ட் மார்ட்டம் செய்யவேண்டும்?’’ என்கிறார் இதனால் இளவரசனின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இளவரசனின் வழக்கை விசாரிப்பது ரயில்வே காவல்துறை. கட்டமைப்பு வசதிகள் இல்லாத இந்தத் துறை புலனாய்வு செய்வதில் அனுபவம் இல்லாதது. எனவே வழக்கை அவர்கள் விசாரிக்கக் கூடாது என்பது அவர்களின் வாதமாக இருந்தது. ரயில்வே டி.எஸ்.பி ராஜேந்திரனை புலனாய்வு அதிகாரியாகக் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரிலேயே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது. இளவரசன் தரப்பு கேட்டுக்கொண்ட மருத்துவர்கள் வந்து சேர, அதற்குள்ளாகவே போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது அறிந்து உறவினர்கள் கொதித்தனர்.  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கர சுப்பு அளித்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இளவரசனின் உடலை பதப்படுத்தி வைககவேண்டுமென்றும், போஸ்ட் மார்ட்டத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ பதிவை பார்த்து அதில் திருப்தி இல்லாவிட்டால் மீண்டும் போஸ்ட் மார்ட்டம் நடத்தலாம் என்றும் கூறியது.

ஐந்து கோரிக்கைகளை இளவரசன் தரப்பு வைத்தது.
 1. ரயில்வே காவல்துறை வழக்கை விசாரிக்கக் கூடாது. பயிற்சி பெற்ற ஒரு குழு இதை விசாரிக்கவேண்டும்.
 2. இளவரசனுக்கும் திவ்யாவுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய சூழலில் காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருந்தால் அவர்களை திவ்யாவும் இளவரசனும் பிரிந்திருக்கவே வாய்ப்பில்லை. எனவே கடமை தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 3. ஆட்கொணர்வு மனு ஒன்றி வரம்பை மீறி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அவர்கள் இருவரையும் பாதித்தது. சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மீது தலைமை நீதிபதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 4.  144 தடை உத்தரவு என்கிற பெயரில் அஞ்சலி செலுத்த வருபவர்களையும், கட்சித்தலைவர்களையும் அனுமதிக்காமல் தடுக்கக்கூடாது. 
5. இளவரசனின் குடும்பம் உடைமைகளை இழந்து, மகனை இழந்து தவிக்கிறது. இவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கைகளை உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் முன்வைத்தனர். 

இதனிடையே ராணுவத்தில் பணிபுரியும் இளவரசனின் சகோதரர் திரும்பி வரும் வரை காத்திருப்பது என்றும், விடியோவை போட்டுப்பார்த்து திருப்தியானால் உடல் அடக்கம் நடக்கும் என்றும் இல்லையெனில் மீண்டும் போஸ்ட் மார்ட்டம் செய்வது என்றும் முடிவானது. 

இளவரசனின் மரணம் ஒரு தற்கொலை என்றே முதலில் செய்திகள் பரப்பப்பட்டன. பல ஊடகங்களிலும் அவ்வாறே செய்திகள் வந்தன. திவ்யாவின் முடிவால் மனமுடைந்து இளவரசன் சாவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றே அவை கூறின. ஆனால், ரயில்வே தண்டவாளத்துக்கு அருகே கிடந்த இளவரசனின் உடலைப் பார்க்கையில் எழும் கேள்விகளும் பதில் இல்லை. ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட உடல் போல இல்லை அந்த உடல். மடிப்பு கலையாத உடையுடன், தலையில் மட்டும் அடிபட்டு, மூளை சிதறி அருகில் பையுடன், சிகரெட், மதுப்புட்டியுடன் கிடந்தது இளவரசனின் உடல். இளவரசனின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் அது தற்கொலை அல்ல என்றும் கொந்தளிக்கிறார்கள் இளவரசனின் உறவினர்கள். 

அது கொலையோ தற்கொலையோ, எதுவாக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஏனெனில் தற்கொலைக்குத் தூண்டுதலும் குற்றமே. சென்ற ஆண்டு மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க சித்திரைத் திருவிழாவில் காடுவெட்டி குரு பேசியதும், அதன் தொடர்ச்சியாக தர்மபுரி பகுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் பேசிய சாதிவெறிப்பேச்சுகளே தர்மபுரி வன்முறைகளுக்குக் காரணம் என்பது ஊரறிந்த ரகசியம். இப்போது இளவரசன் – திவ்யா பிரிவு, இளவரசன் மரணம் என்று எல்லாவற்றிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு உள்ளது. ஆனால் அன்புமணி ராமதாஸ் ‘இளவரசனின் மரணம் வருந்தத்தக்கது. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறுகிறோம். அவர்கள் இருவருக்கும் இடையில் யாரும் தலையிட வேண்டாம். நாங்கள் ஒருபோதும் அவர்கள் விவகாரத்தில் தலையிட்டதில்லை’’ என்றார். ஆனால் இளவரசன் – திவ்யா வழக்கில் ஆஜரானது பா.ம.க. வழக்கறிஞர் பாலுவும் மற்ற பா.ம.க. வழகறிஞர்களும்தான். 

இதற்கிடையே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இளவரசன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். 

வழக்கறிஞர் சங்கரசுப்பு, ‘‘இளவரசன் நண்பர் பெயரில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இளவரசன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. கோவை அல்லது சேலம் மருத்துவமனையில் நாங்கள் விரும்பும் டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும். தர்மபுரி எஸ்.பி.யுடன் இன்று காலை போனில் தொடர்பு கொண்டு பிரேத பரிசோதனை நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்தோம். அவர் அதை நிராகரித்துவிட்டு அவசரம் அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. இளவரசன் மரணத்தை பற்றி அது கவலைபடவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார். இதே கருத்தையே முன்வைக்கிறார் சிந்தனைச் செல்வன். 144 தடையுத்தரவு மாவட்டத்தில் போடப்பட்டுள்ளதால் அஞ்சலி செலுத்த வருபவர்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வந்த புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தியை கைது செய்தது காவல்துறை. அவரை கைது செய்த சிறிது நேரத்தில் கைதை எதிர்த்து சென்னை உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஜூலை 4 அன்று மாலை வேளச்சேரியில் பத்திரிகையாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ‘’ரயிலில் அடிபட்டு இறந்ததாகச் சொல்லப்படுவதில் பலத்த சந்தேகம் நிலவுகிறது. அந்த சமயத்தில் ரயில் எதுவும் அந்தப் பக்கத்தில் வந்ததாகத் தெரியவில்லை. குர்லா எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து 12 மணிக்குப் புறப்படுகிறது. இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரமும் இந்த ரயில் வந்த நேரமும் ஒப்பிட்டுப்பார்க்கையில் சந்தேகம் வருகிறது. அவரை அடித்துத்தான் கொன்றிருக்கவேண்டும்’’ என்று தன் சந்தேகத்தை தெரிவித்தார். 



திவ்யாவின் தாய் தேன்மொழி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் திவ்யா – இளவரசன் தரப்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த். ஆனால் இன்றைக்கு திவ்யா அம்மாவுடன் இணைந்ததால், அவர் இளவரசன் தரப்பு வழக்கறிஞராகிவிட்ட விநோதம் நிகழ்ந்தது. ஆட்கொணர்வு மனு என்பது ஆளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டபின் வேண்டாத வேலைகளுக் கெல்லாம் பயன்படக்கூடாது என்கிறார் ரஜினிகாந்த்.

 ‘’ஆட்கொணர்வு மனுதான் திவ்யாவின் தாய் தாக்கல் செய்தார். திவ்யாவை
ஆஜர்படுத்தியாயிற்று. ஆனால் மீண்டும் மீண்டும் அந்த மனுவை வைத்தே
திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரிக்கும் வேலையைச் செய்தார்கள். சாதிவெறியர்களுக்கு நீதிமன்றம் துணை போனது என்றுதான் சொல்லவேண்டும். நீதிபதிகள் தனி அறையில் திவ்யாவிடம் பேசினார்கள் ஜூலை 1 அன்று. திவ்யா கண்ணீருடன் ‘அம்மா விரும்பினால் இளவரசனுடன் வாழ்வேன்’ என்று கூறினார். இது நீதிமன்றக் குறிப்புகளில் பதிவாகி உள்ளது. யார் வேண்டுமானாலும் அதை சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால் மறுநாள் திவ்யாவோ இளவரசனோ ஆஜராகத் தேவையே இல்லை. அதனால் இளவரசன் தர்மபுரிக்குச் சென்றுவிட்ட நிலையில்,தேவையில்லாமல் திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தார் பா.ம.க. வழக்கறிஞர்கள் அழுத்தம் கொடுத்து நிர்பந்தித்து திவ்யாவை ஊடகங்களிடம் வேறு மாதிரி பேசவைத்தனர். ‘இளவரசனுடன் இனி வாழப் போவதில்லை’ என்று அவர் தெரிவித்தார். அப்போது நான் தான் ஊடகங்களுக்கு தவறாக தகவல் கொடுத்ததாகவும் கூறினார். எல்லாமே நிர்பந்தத்தினால் வந்த வார்த்தைகள். நீதிமன்றக் குறிப்புகளில் பதிவான ஒரு விஷயத்தை கொஞ்சமும் தயக்கமில்லாமல் பொய்யாகப் பேச வைத்தார்கள் பா.ம.க.வினர். இதற்கு மறுநாள் இளவரசனின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இளவரசனின் மரணம் கொலைதான். தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. தலையில் மட்டும் காயம். இடது கையில் சிறிதளவு காயம். அவ்வளவுதான். ரயிலில் அடிபட்டால் இப்படி இருக்காது. அருகிலேயே மது பாட்டில் இருப்பதெல்லாம் பார்த்தால் கொண்டுவந்து வைத்தது போலவே உள்ளது. மிகவும் தைரியமான தன்னம்பிக்கை உடைய இளவரசன் தற்கொலை செய்துகொள்வார் என்பதை நம்ப முடியாது. அவருடைய உடலைப் பார்க்கையில் யாருக்குமே நடந்தது என்ன என்பதை யூகிக்க முடியும். ஆட்கொணர்வு மனுவை விவகாரத்து மனுபோல பாவிக்கக் கூடாது. இது நீதிமன்றமும் சாதியவாதிகளும் சேர்ந்து செய்த கொலை.’’என்கிறார் ரஜினிகாந்த்.

இளவரசனின் மரணத்தை அடுத்து தொலைக்காட்சிகளில் விவாதங்களும், இருவர் சந்தித்துக்கொண்டால் அதுகுறித்தே பேசுவதுமாக இந்த மரணம் பாதிப்புகளை உண்டாக்கி உள்ளது. இளவரசனின் மரணத்துக்கு எது காரணம்? அப்பட்டமான சாதிவெறி. தர்மபுரி மாவட்டத்தில் காதல் சாதிமறுப்பு திருமணங்கள் ஒன்றும் புதிதல்ல. இப்போதுகூட திவ்யா – இளவரசன் திருமணத்துக்குப் பின்பு கூட சில காதல் திருமணங்கள் நடந்தேறி இருக்கின்றன. கொண்டம்பட்டியைச் சேர்ந்த நேதாஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வன்னிய சாதி பெண்ணை மணம் புரிந்ததால் ஊருக்குள் நுழைய முடியாமல் வெளியூரில் மனைவியுடன் வசிக்கிறார். இன்று வரை அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்று அவருடைய குடும்பத்துக்கே தெரியாது. தர்மபுரி வன்முறையின்போது அவருடைய வீடு குறிவைத்து தாக்கப்பட்டது. அப்போது ஒரு பத்திரிகையில் வெளியான தாயின் புகைப்படத்தைப் பார்த்து அவரைத் தொடர்புகொண்டு கதறினார் நேதாஜி. இவரைப் போல இளவரசனும் திவ்யாவும் எங்காவது வெளியூரில் சென்று வாழ்ந்திருந்தால், தர்மபுரிக்கு வராமலேயே இருந்திருந்தால் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழ்ந்திருப்பார்கள். சென்னையிலும் பெங்களூரிலும் வாழ்ந்த இவர்கள் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் வெளியூரில் தங்கும் வசதி இன்றி இளவரசனின் பெற்றோருடன் வந்து தங்கியுள்ளனர். உள்ளூரிலேயே இருந்தது சாதியவாதிகளுக்கு வசதியாகிவிட்டது. 

கையில் பணமில்லாமல், இளவரசனும் திவ்யாவும் வழக்குக்காக சென்னை வரை இருசக்கர வாகனத்திலேயே வந்தார்கள் என்று இளவரசனின் பெற்றோர் தெரிவித்தனர். அந்தளவுக்கு பொருளாதார வசதியின்றி இருந்தவர்களுக்கு பணம் மட்டும் இருந்திருந்தால் எங்கோ கண்காணாத இடத்தில் வசித்து உயிருடனாவது இருந்திருப்பார்கள். ஆனால் இன்றைக்கு இளவரசன் உயிருடன் இல்லை. திவ்யாவுக்கு நிம்மதி இல்லை. தந்தையை ஏறகனவே இழந்து மன அழுத்தத்திலிருக்கும் திவ்யாவுக்கு இளவரசனின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அவருக்கு இந்தச் செய்தி போய்ச் சேர்ந்ததா என்பதே கேள்விக்குறி. சாதியவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் திவ்யா என்கிற இளம்பெண்ணை மீட்பது என்கிற நோக்கிலேயே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இளவரசன் தன் இறுதி முயற்சியாக திவ்யா, அவருடைய தாய் தேன்மொழி, அவருடைய சகோதரன் என்று அனைவருக்குமாக சேர்த்து அவர்களை மீட்க வேண்டும், உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இளவரசனிடம் இந்தியா டுடே எடுத்த முந்தைய பேட்டியிலும் கூட திவ்யாவின் தாய் தேன்மொழி நிர்பந்திக்கப்படுகிறாரென்றும், பா.ம.க.வைச் சேர்ந்த சாதியவாதிகளின் பிடியில் சிக்கியே அவர் தனக்கு கிடைக்கவேண்டிய காவல்துறை வேலையைக் கூட கிடைக்கவிடாமல் செய்தார் என்றும் தெரிவித்திருந்தார். ‘’’ இந்தளவுக்கு ஆகும்னு யாருக்குத் தெரியும். நான் பிறந்த சாதிதான் இவங்களுக்குப் பிரச்சனையா போச்சு. இவ்வளவு செய்றவங்க எதையும் செய்வாங்க.’’ என்று இளவரசன் முந்தைய பேட்டியில் கூறியிருந்ததே ஒரு வாக்குமூலமாகி நிற்கிறது. இளவரசனின் மரணம் தற்கொலையா கொலையா என்கிற விவாதங்களையெல்லாம் மீறி அவரைக் கொன்றது சாதியே.


             "எங்க ரெண்டுபேரு கிட்டயும் எந்த மன வேற்றுமையும் கிடையாது... எங்கள் காதலுக்கு எதிரான சக்திகள்தான் நாங்கள் இப்போது பிரிந்து வாழக் காரணம். எப்படியும் திவ்யா என்னிடம் வருவா...'  நம் இதழுக்கு இப்படி பேட்டியளித்திருந்த திவ்யாவின் காதலன் இளவரசன் இப்போது உயிரோடு இல்லை. தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் ரெயில்வே டிராக்கில் முகம் சிதைந்த சடலமாக 4-ந்தேதி மாலை அவர் உடலை கண்டெடுத்துள்ளனர் போலீசார். 5-ந்தேதி திவ்யா-இளவரசன் காதல் திருமணம் பற்றிய வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாள்.

நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ் வழங்கப் போகும் தீர்ப்பை கேட்கும், பார்க்கும் சக்தியை ஜூலை 1-ந்தேதியே இளவரசன் இழந்து விட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜூன் மாதம் இந்த வழக்கு இதே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகளிடம் பேசிய திவ்யா, "சமீபத்தில் நடந்த சம்பவங்களால் என் மனது குழம்பிப் போய் உள்ளது. எனவே தகுந்த முடிவு எடுப்பதற்கு முன்பு எனது தாயாருடன் தங்கியிருக்க விரும்புகிறேன்.  இளவரசனுடன் இப்போது பேச விருப்பமில்லை.

தாயாரின் உடல்நலன் சரி யில்லை என்றதால் என் சொந்த விருப்பத்தின் பேரில்தான் தாயாருடன் சென் றேன்' என்று தெரிவித்தார். இதனால் திவ்யாவை தாயாருடன் தங்கிக் கொள்ள அனுமதியளித்த நீதிபதிகள், "3 வார கால அவகாசம் அளிக்கிறோம். ஜூலை 1-ந்தேதி இதுபற்றி விசாரிக் கிறோம்' என்றனர்.

சொன்னபடியே ஜூலை 1-ந்தேதி கோர்ட்டில் ஆஜரானார் திவ்யா. நீதிபதிகளின் அறையில் வைத்து விசாரிக்கும்படி இருதரப்பு வக்கீல்களும் கேட்டுக்கொள்ள அதன்படி விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வழக்கு 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நீதிபதிகளிடம் திவ்யா சொன்னது என்ன என்பது பற்றி வழக்கறிஞர்கள் கூறும்போது, "எனக்கு அப்பாவின் இறப்பும் கலவர சம்பவங்களும் மறக்க முடியாததாக உள்ளது. அம்மாவையும், தம்பியையும் இழந்து விடுவேனோ என்று பயமாக உள்ளது. என் காதல் திருமணத்தை அம்மா ஒருவேளை ஏற்றுக் கொண்டால் சேரலாம். அப்படி ஒருபோதும் நடக்க வாய்ப்பில்லை. நாங்கள் சேர முடியாது' என்று திவ்யா கூறியதாக தெரிவித்தனர்.

பச்சை நிற சுரிதாரில் திவ்யாவும், அதே பச்சை நிற டி.சர்ட்டில் இளவரசனும் அன்று கோர்ட்டுக்கு வந்தி ருந்தது பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இந் நிலையில்தான் 3-ந்தேதி மறுபடியும் விசாரணை தொடங்கியது.

திவ்யாவின் தாய் தேன்மொழி தரப்பில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இதுவென்பதால், "தாயாருடன் மகள் வந்துவிட்டதால் வழக்கை திரும்பப் பெறுவதாக' திவ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இளவரசன் தரப்பு ஆட்சேபனை தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள், "இளவரசன் கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேறு மனுவை தாக்கல் செய்தால் விசாரிக்கலாம். இந்த ஆட்கொணர்வு மனுவில் அதை விசாரிக்க முடியாது' என்று தெரிவித்ததோடு மனு மீதான தீர்ப்பை 5-ந்தேதி வழங்குவதாக தெரிவித்தனர்.

கோர்ட்டை விட்டு வெளியே வந்த திவ்யா, "இளவரசனுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலையே எனக்கு இல்லை. அது இனி எப்போதும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அம்மாவின் முடிவுப்படி வாழத் தயாராகி விட்டேன். இளவரசனுடன் வாழத் தயார் என்று நான் சொன்னதாக சிலர் (எதிர்தரப்பினர்) தவறான தகவலை பரப்பி விட்டதால் என் தாயார், உறவினர்கள் மத்தியில் தனிமைப்படுத்தப்ப ட்டவளாகி நிற்கிறேன்' என்று சொல்லி 3-ந்தேதி சில வழக்கறிஞர்கள் வெளியிட்ட தகவலே தவறு என்பது போல பேட்டியில் கனல் கக்கினார். இதையெல்லாம் கேட்கக்கூடாது என்று எண்ணி தானோ என்னவோ அன்று இளவரசன் கோர்ட்டுக்கு வரவில்லை.

""திவ்யாவுக்கு அவங்க குடும்பம் முக்கியம்கறதால நான் திவ்யாவை மட்டுமில்லே, அவங்க குடும்பத்தையும் ஏத்துக்கறேன். ஆந்திரா பக்கம் ஒரு பிரைவேட் கம்பெனில 15 ஆயிரம் ரூவா சம்பளத்துல வேலைக்கு கூப்பிட்டிருக்காங்க. "ப்ளீஸ்... என் கூட வந்துடு திவ்யா' ன்னு உங்க மூலமா கோரிக்கை வைக்கிறேன் சார்'' என்று கலங்கிய இளவரசன்
....



Print E-mail
புதன்கிழமை, 10, ஜூலை 2013 (9:58 IST)

             ளவரசன் மரணத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் திவ்யாவிற்கு, உயர்நீதிமன்ற உத்தரவுப் படி மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் தரப்பட்டது. அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் நம் கவனத்துக்கு வர, இது தொடர்பாக திவ்யாவிடமே விசாரிக்க அவரது இல்லத்திற்கு சென்றோம். 

திவ்யாவின் அம்மா தேன்மொழியோ, ""திவ்யா மனம் குழம்பிப்போய் இருக்கிறாள். அவளிடம் நீங்கள் எதையாவது கேட்கப்போய், அவள் சோகம் அதிகமாகிவிடுமோ என்று பயப்படுகிறேன். ஆரம்பத்தில் இருந்து இந்த விவகாரத்தில்  அக்கறையோடு செய்தி வெளியிட்டிருப்பது எனக்குத் தெரியும். அவர்கள் சேர்ந்து வாழவேண்டும் என்று  நினைத்ததும் எனக்குத்தெரியும். எனவே திவ்யாவின் மனம் புண்படாதவாறு அவளிடம் பேசுங்கள்'' என்று திவ்யாவை சந்திக்க சம்மதம் கொடுத்தார். 

துயர ஓவியமாக காட்சிதந்த திவ்யாவிடம், "மருத்துவ கவுன்சிலிங்கின் போது, இளவரசன் அவசரப்பட்டிருக்கக் கூடாது. இது உண்மையான காதல்தானே, இன்னும் கொஞ்சகாலம் பொறுத் திருக்கலாம். அதற்குள் எங்க அம்மாவை சமாதானம் செய்திருப்பேன். நானும் வேலைக்கு போயிருப்பேன். அவனும் வேலைக்குப் போயிருப்பான். இதன்பிறகு நாங்கள் எல்லோரையும் புரியவைத்துவிட்டு சேர்ந்திருப் போம் என்று சொன்னீர்களா?' என்றோம். திவ்யாவோ கண்ணீர் வழியும் விழிகளோடு ""ஆமாம்,. அப்படி சொன்னது உண்மைதான்'' என்றார். 

"இதை இளவரசனிடம் சொல்லியிருக்கிறீர்களா?' என்றோம். திவ்யாவோ ""ஆமாங்க. கொஞ்சம் நிலைமை சரியானதும், குடும்பத்தில் எல்லோரையும் சமா தானப்படுத்திட்டு மறுபடி சேர்ந்து வாழலாம்ன்னு சொல்லியிருந்தேன். கோர்ட்டில் கூட, இப்ப அம்மா இருக்கும் சூழலில், அவங்களுக்காகத்தான் இள வரசனோட போகவிரும்பலைன்னு சொன்னேன்
உண்மைதான். இளவரசன் மரணம் அவராகதேடிக்கொண்டது என்றால் அவர் நிட்சயமாக அவசரப்பட்டுவிட்டார். அவரின் அவசரம் இந்த அபலையின் வாழ்வையே அழித்து அவப் பெயரையும்ஏற்படுத்திஉள்ளது.சாதிவிட்டுகாதலிக்கதுணிந்தவர் சில யதார்த்த பிரச்சனைகளையும், எந்த பிரச்சனைக்கும் காலம் ஒரு நல்ல மருந்து என்பதையும் சிந்திக்க தவறிவிடார். திவ்யா அவரின் தாயுடன் போனதை தவறாக புரிந்து இப்படி செய்துவிடார். இதயம் உள்ள அனைவரையும் துடிக்க வைக்கும் காவிய நாயக,நாயகி ஆகிவிட்டனர். ஆனால் இளவரசனின் மரணத்தில் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருதால் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்ப மாட்டார்கள்.

thanks and courtesy:ALL media friends.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

Politics is a dangerous game: Rajinikanth

In an in-depth interview at his home in Poes Garden, Rajinikanth spoke candidly to India Today not only about his life and films but also his political vision for Tamil Nadu, and a range of burning public issues. Raj Chengappa  Amarnath K. Menon  New Delhi  November 30, 2018 ISSUE DATE: December 10, 2018 UPDATED: December 1, 2018 10:26 IST Photographs by Bandeep Singh Will he, won't he? Southern superstar Rajinikanth has exhibited Hamletian indecision about pursuing a political career ever since he announced he was joining the fray in December 2017. So far, he has not even announced the name of his political party, choosing instead to deploy his massive fan following under the umbrella of his Rajini Makkal Mandrams and using them to build a cadre of party workers across Tamil Nadu. Meanwhile, the ageing star (he is 67) continues to do what he knows best-make iconic films. His latest-2.0, releasin...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

மகிழ்ச்சியின் விலை என்ன?

சரவணன் சந்திரன் December 12 at 1:04 PM  ·  -மகிழ்ச்சி என்பது இங்கே விலை போகிற சமாச்சாரம் என்று யூகித்திருக்கிருக்கிறோமா? ஆழமாக விவாதிப்பதென்றால், மகிழ்ச்சி என்று இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிற உணர்வு கைதேர்ந்த கைகளால் உருக்கி உருவாக்கப்பட்ட சரக்கு. கவலைகளை மறந்து எந்நேரமும் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருப்பது. காடுகளில், மலைகளில், ஒரு கோப்பைத் தேநீரில் என சந்தை வழிநடத்தும் இடங்களிலான தேடல் அது. தொண்ணூறுகள் என்றில்லை. எண்பதுகளின் இறுதியில் இருந்தே இந்த மகிழ்ச்சி வணிகம் மெல்ல இந்தியாவிற்குள் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. வறுமையின் நிறம் சிவப்பு என சாக்கடைக்குள் அமிழ்ந்து கிடக்கிற ஆப்பிளை எடுத்து கழிவிரக்கத்தோடு உண்ணும் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் சந்தைச் சரக்கது. எதுவெல்லாம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்? என்னென்ன பரிந்துரைகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன? உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமெனில் மகிழ்ச்சியாய் மலர்ந்து சிரிப்பதற்கு ஒரு கோல்கெட் தேவையாக இருக்கிறது. மெல்ல பின்னோக்கி யோசித்தால், உலகமயமாக்கல் என்கிற கரங்கள் எ...

தலைப்பு இல்லை

பெண்கள் தினம் என்பதால் துப்பட்டா என்று தலைப்பு வைக்க நினைத்தேன்; தலைப்பிலாவது துப்பட்டா இருக்கட்டும் என்று chennai pasanga da நினைக்கக் கூடும். சுச்சி அக்கா என்று தலைப்பு வைக்க ஆசைப்பட்டேன்; twitter பசங்கடாவ் கோபித்துக் கொள்வார்கள். Screenshotஐ ஏதோ love letter போல பகிர்ந்து "பாத்தீங்களா பாத்தீங்களா" என்று feel செய்து கொள்கின்றனர். Twitterஇல் நான் activeஆக இல்லாததுக்கு காரணம் நான் செய்ய வேண்டிய shares updatesஐ அவர்களே screenshot செய்து followers கிடைக ்கச் செய்து விடுகின்றனர். எனவே இதற்கும் promotion தேவையில்லை என்பதால் தலைப்பு இல்லை என்பதையே தலைப்பாக வைத்துவிட்டேன். Suchi சகோதரியின் சேவையினால் scandals சுவாரசியமற்றதாகிவிட்டது. ஆக அவருக்குப் பெண்கள் தின வாழ்த்து தெரிவித்துவிடலாம். இருந்தாலும் நான் ஆண்களின் குளியல் videoகள், masturbating videos எதிர்பார்த்தேன். இந்த scandalsஐ ஆராய்ந்ததில் ஒரு சிறப்பான தகவலைக் கண்டறிந்தேன். அதாவது ஆண்களுக்கு mobile selfie camera handle செய்யத் தெரியாது போலும். அல்லது கை நடுக்கமாகவும் இருக்கலாம். ஆண்களின் scandals வராததற்கு இந்த இயலாமை ம...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...