முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீடியா போகஸ் நடப்புகால சஞ்சிகை


t_boy_and_gang
“ஸ்டாம்பு மீது ஸ்டாம்பு வந்து என்னைச் சேரும்… அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் ஆஸ்திரியாவைச் சேரும்…” என்று பாடியபடியே உள்ளே நுழைந்தான்…
”என்னப்பா ஸ்டாம்பு போஸ்ட் ஆபீஸ்னு பாட்ற” என்றார் கணேசன்.  அண்ணே… திமுக தலைவர் ஸ்டாம்பு விவகாரத்துல அசிங்கப்பட்டதுதான் சமூக வலைத்தளங்கள்ல இப்போ ஹாட் டாபிக்.  நம்ப பார்லயும் எல்லோரும் இதத்தான் பேசி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க.
”என்ன மச்சான் மேட்டர் அது ? ”என்றான் ரத்னவேல்.
”ஜுன் 5 கருணாநிதி பிறந்தநாள் அன்னைக்கு, ஆஸ்திரிய நாட்டு அரசாங்கம் அவரின் சமுதாயப்பணிகளை பாராட்டி அஞ்சல் தலை வெளியிட்டதுன்னு பெரிய செய்தி வெளியிட்டாங்க…. இந்த அஞ்சல் தலை தொடர்பா விடுதலை நாளேட்டில், ”தமிழ்கூறு நல்லுலகின் தனிப்பெரும் தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, அவர்தம் சமுதாயப்பணிகளைப் பாராட்டி, ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள ஆஸ்திரியா நாட்டில் வாழும் தமிழர் ‘வினையூக்கி’ செல்வகுமார் அவர்களின் முயற்சியில் அந்நாட்டு அஞ்சல் துறை, தலைவர் கலைஞரின் பிறந்த நாளான நேற்று முன்தினம் (3.6.2013) 90 யூரோசென்ட் மதிப்புள்ள, அஞ்சல் வில்லையை வெளியிட்டுள்ளது. தலைவர் கலைஞர் அவர்களின் படம், தி.மு.க. கொடி ஆகியவற்றுடன் அவரது வயதைக் குறிக்கும் வண்ணம் 90 என்று குறிக்கப்பட்ட இலச்சினையுடன் இந்த அஞ்சல் தலை வெளிவந்துள்ளது. இதை ஆஸ்திரியா நாட்டின் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு அஞ்சல்களுக்கும் பயன் படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வெகுவிரைவில் இந்த அஞ்சல் தலையை, தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் வழங்க இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.”  இப்படி முரசொலியில செய்தி வெளியிட்டுட்டாங்க.
1012397_10151585429468303_1232257978_n
Untitled
1001017_1398791497002893_715502178_n
1000114_10151734885904889_772454223_n
1003305_605156479506255_272949126_n
இரண்டு நாளைக்கு முன்னாடி, முகநூல்ல ஆக்டிவா இருக்கற திமுக உடன்பிறப்பு ஒருத்தர் கருணாநிதியை நேரா சந்திச்சு இந்த ஆஸ்திரிய ஸ்டாம்பை குடுத்தார்.  இதைப் பத்தி கலைஞர் டிவியில “ஆஸ்திரிய தமிழர்”  கலைஞரிடம் நேரடியாக ஆஸ்திரியா நாடு வெளியிட்ட ஸ்டாம்பை அளித்து வாழ்த்து பெற்றார்னு செய்தி வெளியிட்டாங்க.  கலைஞரோட முகநூல் பக்கத்துலயும் இதைப் பத்தி பெருமையா போட்டுக்கிட்டாங்க.
அன்னைக்கே முகநூலில், பணம் கட்டினால் யாருக்கு வேண்டுமானாலும் ஆஸ்திரிய அரசாங்கம் ஸ்டாம்பு வெளியிடும்ன்ற விபரத்தை கண்டுபிடிச்சு, அதைப் பத்தி முகநூல் முழுக்க கிண்டல்.  இந்த ஸ்டாம்பு வெளியிட்ட டான் அஷோக்ன்ற நபர், ஆஸ்திரிய தமிழர் இல்லை, ஆரப்பாளையம் தமிழர்னும், அவருக்கு ஸ்டாம்படி சித்தர்னும் பேரு வச்சு, செம கிண்டல்… ரெண்டு நாளா முகநூலே களை கட்டுச்சு.. இந்த வயசான காலத்துல இவருக்கு இப்படி ஒரு வெட்டிப் பெருமை தேவையான்னு எல்லாம் சிரிக்கிறாங்க…  90 வயசுத் தலைவருக்காக ஆஸ்திரிய நாடு ஸ்டாம்பு வெளியிட்டா என்ன, வெளியிடாட்டி என்ன…”
”என்னடா செய்யறது, தற்புகழ்ச்சியும், போலி புகழும், திராவிட இயக்கத்தோட ஒரு அங்கமாச்சே….” என்றான் பீமராஜன்.
”தயாளு அம்மாளை சாட்சி சொல்ல வைக்கிறதுலேர்ந்து காப்பாத்தணும்னு தீவிரமா இருக்காரு கலைஞர்.  மத்திய சுகாதாரத்துறை அமைச்சரா இருக்கற குலாம் நபி ஆசாத் மூலமா, எய்ம்ஸ் மருத்துவமனையில இருக்கறதுல செட்டிங்குக்கு ஒத்து வர்ற டாக்டர்களை தேர்ந்தெடுக்கனும்னு கடும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.  அதுக்கு குலாமும் ஒத்துக்கிட்டாரு.  இந்த வேலை டி.ஆர்.பாலுக்கிட்ட ஒப்படைக்கப்பட்டிருக்கு. ”
”தயாளு அம்மாள் பக்கத்துல இருக்கற ஆளை திடீர்னு அடிக்கிறாங்கன்னு நீதிமன்றத்துல சொன்னாங்கள்ல….  எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதனைக்கு வரும்போது, ஆளுக்கு ஒரு குத்து மூஞ்சி மேலயே விடச் சொல்லு…  டாக்டர்கள் குத்து வாங்கிட்டு, ஆமா வியாதி முத்திடுச்சுன்னு சொல்லிடுவாங்க.. ” என்று சொல்லி விட்டு சிரித்தான் வடிவேலு.
”திமுகவுல குஷ்பு புயல் மீண்டும் வீச ஆரம்பிச்சுடுச்சு மச்சான்…” என்று கூறி விட்டு நிறுத்தினான் தமிழ்.
அனைவரும் ஆர்வமாக நெருங்கி அமர்ந்தனர். ”தென் சென்னைக்கு குஷ்புவைத்தான் வேட்பாளரா நிறுத்தப் போறேன்… உங்களால என்ன பண்ண முடியும்னு குடும்பத்தினர்கிட்ட சொல்லிட்டாரு.  ஆனா, தென் சென்னைக்கு போட்டி  கடுமையா இருக்கு.. ”
”வேற யார் போட்டி போட்றாங்க… ? ”
”பழைய மேயர் மா.சுப்ரமணியம் முயற்சி பண்றாரு. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முயற்சி பண்றாங்க…”
”தமிழச்சி கலைஞர் பிறந்தநாளுக்குக் கூட வரலயே…” என்று கேட்டான் ரத்னவேல்.
DSC_0053
”அது ஒருபெரிய கதை மச்சான்…  மே கடைசி வாரத்துலயே கருணாநிதியைப் போய் பாத்த தமிழச்சி, அய்யா, நான் ஜுன் முதல் வாரத்துல ஃப்ரான்ஸ் சுற்றுப்பயணம் போறேன். என்னால வர முடியாது.  அதனால இப்பவே வாழ்த்து தெரிவிச்சுக்கறேன்னு சொல்லி பாத்துட்டுப் போயிட்டாங்க… ஆனா, அவங்க உண்மையில வெளிநாடு போனது 29 ஜுன் அன்னைக்குத்தான்…”
”அப்புறம் எதுக்கு பிறந்தநாள் அன்னைக்கு கலைஞரை பாக்கல ? ”
”பிறந்தநாள் அன்னைக்கு கலைஞரைப் பாத்தால், தன்னைப் பத்தி செய்தி ஊடகங்களில் வரும்.  அப்படி வர்றது, காவல்துறை டிஐஜியா இருக்கற தன் கணவருக்கு நல்லதில்ல… அதனால தவிர்த்துட்டாங்க.. ”
IMG_0001
தமிழச்சியின் விமான டிக்கட்
”அது எப்படிப்பா இப்படி ஒரு பொய்யை சொல்லிட்டு பிறந்தநாள் அன்னைக்கு இங்கயே இருப்பாங்க…”
”இப்படித்தான் மச்சான் நானும் கேட்டேன்… அந்த திமுக உடன்பிறப்பு டிக்கட்டையே எடுத்து குடுத்துட்டாரு…
அது மட்டும் இல்ல…  குஷ்பு விவகாரம் திமுகவுல பெரிசானதுக்கும், தமிழச்ச ஒரு பெரிய காரணம்னு சொல்றாங்க….”
”அவங்க என்ன பண்ணாங்க ? ”
”குஷ்புவுக்கு தென் சென்னை கிடைச்சால், தனக்குக் கிடைக்காதுன்னு தெரிஞ்ச தமிழச்சி, முக.ஸ்டாலின்கிட்ட, குஷ்புவோட ஆதிக்கம் கட்சிக்கு நல்லதில்லன்னு சொல்லிட்டு வர்றாங்கன்னும் ஒரு பேச்சு இருக்கு. ”
”தென் சென்னைக்கு யாரு யாருதான் போட்டி போடுவாங்க… ? ”
”தென் சென்னையை விடு… மத்திய சென்னைக்கே தயாநிதி மாறனுக்கு பதிலா வேற ஆளுக்கு குடுக்கணும்னு கட்சியில பேச்சு இருக்கு….  கேடி சகோதரர்கள் கட்சிக்காக எதுவும் செய்யல, திமுக செய்திகள்  கூட சன் டிவியில இருட்டடிப்பு செய்யப்படுது, டெல்லி செல்வாக்கை தங்களோட சொந்த நலனுக்குத்தான் பயன்படுத்திக்கிறாங்க…. கட்சிக்காக எதுவுமே செய்யலன்னு சிலர் நினைக்கிறாங்க…
கனிமொழி தரப்போ, தனக்கு இவ்வளவு சிக்கல் வந்ததுக்கும் காரணம் மாறன்கள்தான்,  தன்னைப் பத்தி வட இந்திய ஊடகங்கள்ல தொடர்ந்து தவறான செய்திகள் வருவதற்கு காரணமே மாறன்கள்தான், அதனால, மாறனுக்கு மத்திய சென்னை குடுக்கக் கூடாதுன்னு நெனைக்கிறாங்க…  தேர்தல்ல நடக்கற போட்டிய விட, திமுகவுல நடக்கிற போட்டி சிறப்பா இருக்கும்பா….”
”சரி மத்திய தேர்தல் எப்படிப்பா அமையும்னு நினைக்கிற… ? ” என்றார் கணேசன்.
”நாட்டை மத ரீதியா துண்டாடனும்னு காங்கிரஸ் கட்சி முடிவு பண்ணிடுச்சுன்னே.. ”
”என்னப்பா சொல்ற…. பிஜேபி தானே இந்த  வேலையைப் பண்ணுவாங்க ? ”
”இல்லன்ணே… காங்கிரஸ்தான் இந்த வேலையை தீவிரமா பண்ணிக்கிட்டு இருக்காங்க… இந்தியா முழுக்க இருக்கற இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் எடுக்கணும்னு காங்கிரஸ் தீவிரமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர்ல இருந்து, 26/11 தாக்குதல் மற்றும் பாராளுமன்றத் தாக்குதல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் போடா சட்டங்கள் கொண்டு வருவதற்காக அரசாங்கமே நடத்துனதுன்னு உள்துறை அதிகாரி ஒருத்தர் சொன்னதா பத்திரிக்கையில வெளி வந்த செய்தி… இதெல்லாம் இந்தப் பின்னணியிலதான் வருது. ”
”யாரோ ஒரு உள்துறை அதிகாரி சொன்னா உண்மையாயிடுமா… இதை யாருப்பா நம்புவாங்க… ? ”
”இல்லடா… அங்கதான் தப்பு பண்ற… அந்த அதிகாரி சொன்னதா, டைம்ஸ் ஆப் இந்தியா முதல் பக்கத்துல செய்தி வெளியிட்டிருந்தாங்க…   முஸ்லீம் பத்திரிக்கைகளான உணர்வு, மக்கள் உரிமை, எல்லாத்துலயும், அந்த செய்தியை விரிவா வெளியிட்டிருந்தாங்க…
திங்கட்கிழமை அன்னைக்கு காங்கிரஸ் கட்சியோட செய்தித் தொடர்பாளர் ஷகீல் அஹமது, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு குஜராத் கலவரத்தோட வெளிப்பாடுன்னு ட்வீட் பண்ணியிருந்தார்.  இது பத்தி சர்ச்சை எழுந்ததும், உடனே இது அவரோட சொந்தக் கருத்துன்னு இதை மறுத்தது காங்கிரஸ்.  ஆனா, இது மாதிரி திட்டமிட்டு, தொடர்ந்து பல வேலைகளை காங்கிரஸ் கட்சி பண்ணும்.
இஷ்ரத் ஜஹான் கொலை வழக்குல சிபிஐ மற்றும் காங்கிரஸ் கட்சியைப் பாராட்டி, சுவரொட்டிகள் முஸ்லீம் அமைப்புகளால வெளியிடப்படும்.  இதுதான் காங்கிரஸ் கட்சியோட முக்கியமான தேர்தல் உத்தி…..”
M_Id_384394_Ishrat_Jahan
”தமிழ்நாட்டுலயும் இந்து தலைவர்கள் கொல்லப்பட்டு வர்றாங்களே…”
”ஜெயலலிதா விஸ்வரூபம் பட விவகாரத்துல, இஸ்லாமியர்களோட தன்னை அடையாளப்படுத்திக்கிட்டாங்க… திரும்பவும் இந்தப் பெயர் வரக்கூடாதுன்னுதான், வர்றேன்னு ஒத்துக்கிட்ட இஃப்தார் பார்ட்டியை ரத்து பண்ணினாங்க… ஏற்காடு எம்எல்ஏ இறந்ததுக்காக ரத்து பண்ணாங்கன்னு செய்தி வந்தாலும், சேலம் பிஜேபி ஆடிட்டர் கொலை செய்யப்பட்டதுதான் உண்மையான காரணம்.
காவல்துறையும், இந்த விஷயத்துல மெத்தனமாத்தான் இருக்கு… அத்வானி பைப் பாம் வழக்குலயே போலீஸ் பக்ருதீன், பண்ணா இஸ்மாயில் தேடப்பட்டு வந்தாங்க… அதுக்கப்புறம், பெங்களுரு குண்டு வெடிப்புலயும் இவங்க தேடப்பட்டு வந்தாங்க…. ஆனா, இப்போதான் சென்னை மாநகர காவல்துறை இவங்க படத்தை வெளியிட்டு, தகவல் சொன்னா விருதுன்னு சொல்லியிருக்காங்க..
22THFAKRUDHEEN_1525561g
22THISMAIL_1525562g
இந்தக் கொலைகளால, இந்து அமைப்புகள் ரொம்ப தீவிரமாயிருக்காங்க… பதிலுக்கு கொலை பண்ணனும்னு அந்த அமைப்புகள்ல பேச்சு இருக்கு.. மீண்டும் கொலைகள் தொடர்ந்தா ஆச்சர்யப்படறதுக்கு இல்ல. ”
”என்னப்பா நீ சொல்றதப்பாத்தா பகீர்னு இருக்கே….”
”ஆமாண்ணே… தேர்தல் நெருங்க நெருங்க, மதரீதியான சிக்கல்கள் நெறய்ய உருவாக வாய்ப்பு இருக்கு… சிமி அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் சேந்து, எந்தெந்த இடத்துலயெல்லாம் இஸ்லாமியர்கள் எம்.பிக்களா தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கோ, அங்கயெல்லாம், வலுவா கூட்டணி அமைக்கணும்னு முடிவெடுத்து இருக்காங்க.”
“சரி அமைச்சரவை மாற்றம் எப்போ நடக்கும் ? “ என்று கேட்டான் பீமராஜன்.
“கொடநாட்டுல இருந்து ஜெயலலிதா திரும்புனதும், மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க… இந்த முறை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் பெயர்கள் மாற்றப் பட்டியல்ல இருக்கறதா சொல்றாங்க…“
செந்தில் பாலாஜி மேல ஏற்கனவே நெறய்ய புகார் இருக்கு… அமைச்சர் பழனியப்பன் கல்லூரிகளிடம் வசூல் வேட்டையில ஈடுபட்டு இருக்கறதா நெறய்ய புகார் போயிருக்கு…“
“மீடியா செய்திகன் என்னடா இருக்கு… ? “
“ஜெயா டிவியில இருந்த குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடு இல்ல…  ஜெயா டிவியோட செய்தி ஆசிரியர் தில்லையை திடீர்னு பணி நீக்கம் பண்ணிட்டாங்க.. “
1016168_603243016364268_548920675_n
“அவரு நல்ல மனுஷனாச்சே…. காசு கீசு வாங்க மாட்டாரே…“
“ஜெயா டிவியில 15 வருஷம் இருந்துருந்தா இந்நேரம் அவர் கோடீஸ்வரான ஆயிருக்கணும்.  ஆனா, அவருக்கு பத்திரிக்கையாளர் குடியிருப்புல இருக்கற ஒரே வீடும் பணம் கட்டாததால ஏலத்துக்கு வந்துருக்கு.. இதுதான் இன்னைக்கு அவரோட பொருளாதார நிலைமை. “
“சரி என்னதான் தப்பு பண்ணாராம்… எதுக்கு அவரை நீக்குனாங்க.. ? “
“பெரிய குற்றம் ஒண்ணும் இல்லப்பா….  நெய்வேலி பங்குகளை வாங்கனும்ன்ற காமராஜரோட கனவை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நனவாக்கிட்டாங்கன்னு செய்தி போட்டாரு…  இது அம்மாவோட திட்டம், அம்மாவோட வெற்றி… காமராஜரோட பேரை எப்படி யூஸ் பண்ணலாம்னுதான்.. இதுதான் இவர் செஞ்ச தப்பாம்.. “
“என்னய்யா அநியாயமா இருக்கே… ? “
“அநியாயம்தான்… என்ன பண்றது ?  இதுதான் ஜெயா டிவி…  அந்த செய்தியை எப்படிப் போட்டு இருக்கணும்னா…  “புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மத்திய அரசோடு போராடி, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதையே ஒரே லட்சியமாகக் கொண்டு, நெய்வேலி பங்குகளை வாங்கியிருப்பதன் மூலம், தமிழர்களின் பல ஆண்டு கால கனவை ஒரே நாளில் நனவாக்கியிருக்கிறார்….  இதனால், தமிழர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறது“ என்று கட் பண்ணி, சில அடிமைகளின் பைட்டை இந்த இடத்தில் போட வேண்டும்.
இப்படி செய்தி போட்ருந்தா ஒண்ணும் ஆயிருக்காது…“
“சரி அங்க புதுசா மதிவாணன்னு ஒருத்தர் போயிருக்காரே…. என்ன நடக்குது ? “
“மதிவாணன் கிட்ட வேலை செய்யறதுக்கு யாரும் தயாரா இல்ல.. என்ன காரணம்னா மதிவாணனை விட பணியில் மூத்தவர்கள் நெறய்ய பேர் ஜெயா டிவியிலயே இருக்காங்க..  மேலும் மதிவாணன், சன் டிவி ராஜாவோடஆளு… ரொம்ப நாளா ராஜாவோட நம்பிக்கைக்கு பாத்திரமா இருந்தாரு.  அப்புறம் புதிய தலைமுறைக்கு போனாரு…. அங்க கொஞ்ச நாள் இருந்தாரு… அப்புறம் தந்தி டிவிக்கு போனாரு… அங்கயெல்லாம் இருந்துட்டு ஜெயா டிவிக்கு வந்த மதிவாணனுக்கு 1.70 லட்சம் சம்பளம்.  இது அவரை விட பணியில் மூத்தவங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துது.  அவங்கல்லாம் 30 , 40 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு இருக்காங்க…
நெறய்ய பேர் போயி ரபி பெர்நார்ட் கிட்ட புகார் பண்ணியிருக்காங்க… ரபி பெர்நார்ட் அவங்களை பொறுமையா இருங்கன்னு சொல்லி சமாதானப்படுத்தியிருக்காரு….
சமீபத்துல ஏற்காடு எம்.எல்.ஏ இறந்ததுக்கு ஜெயலலிதா நேர்ல போயி அஞ்சலி செலுத்துனாங்க.  ஜெயலலிதா எங்க போனாலும், சென்னையிலேர்ந்து ஜெயா டிவி யூனிட் போகும்.  ஆனா இந்த முறை போகாம கோட்டை விட்டுட்டாங்க.. ஜெயலலிதாவுக்கு, தனது ஓய்வு நேரத்தையும் ரத்து செய்து விட்டு, ஒரு கட்சி எம்எல்ஏவின் மரணத்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்னு பெரிசு பெருசா செய்த வரணும்னு ஆசை.   ஜெயா டிவியில இந்த செய்தி லோக்கல் ரிப்போர்டரை வச்சு மொக்கையா எடுத்துருந்தாங்க… பாத்துட்டு செம கடுப்பான ஜெயலலிதா, மதிவாணனையும், ரபி பெர்நார்டையும் காய்ச்சி எடுத்துட்டாங்க..
8366PJULY---18---D-big
இப்போ மீண்டும் தில்லையையே கூப்புடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க… 15 வருஷமா ஜெயா டிவியிலயே இருக்கற தில்லைக்கு, இந்த விஷயத்துல நல்ல அனுபவம் இருக்கு… அவரை மாதிரி அனுபவம் வாய்ஞ்ச ஆளு இல்லன்னு திருப்பிக் கூப்புடப் போறதா பேசிக்கிட்டு இருக்காங்க.. “
“சரி… தமிழ் இந்து எப்படிப் போயிக்கிட்டு இருக்கு ? “
“ஆட்கள் சேர்க்கும் பணி முழு வீச்சுல நடந்துக்கிட்டு இருக்கு.  தினமணியில அனைத்து ஊழியர்களுக்கும் கணிசமா சம்பளம் ஏத்திட்டாங்க.  ஆனா விகடன்ல யாருக்கும் சம்பளம் ஏத்தல….  கொள்ளை கொள்ளையா லாபம் சம்பாதிக்கிற சீனிவாசன், இதுக்கு மேலயெல்லாம் யாருக்கும் சம்பளம் ஏத்த முடியாது… போறவன் போகட்டும்னு சொல்லிட்டாராம்…“
“ஆளு போயிட்டா எப்படிப்பா பத்திரிக்கை நடத்தறது….“
“அப்போல்லோ ஹாஸ்பிட்டல் இருக்குல்ல…  அங்க வேலை பாக்கற நர்ஸ்கள் யாருன்னு நெனைக்கிற…. பெரும்பாலானவங்க, அப்போல்லோ நர்சிங் கல்லூரியில படிக்கிறவங்க…. அந்த செவிலியர்களை பயிற்சின்னு போட்டு வேலை வாங்கிட்டு, ப்ராக்டிக்கல்னு சொல்லிக்கறது….
அதே மாதிரிதான் விகடன்ல நடக்கற மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டமும்…  அவங்களை வச்சு வேலை வாங்கிக்கறேன்னு சொல்லிட்டாராம் சீனிவாசன்…“
“என்னப்பா இவ்வளவு மோசமா பண்றாரு ? “
“அவங்க அப்பா பாலசுப்ரமணியம், பத்திரிக்கையை தவமா நடத்துனவரு….  புள்ளைக்கு வெறும் லாபம் மட்டும்தான்.  அந்த லாபம் புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வந்தாலும் சரி, டைம் பாஸ்ல ஜட்டி படம் போட்டு வந்தாலும் சரி….. லாபம் வந்தா போதும்னு நினைக்கிறாரு…“
tp40
இந்த வார டைம் பாஸில் வந்த படம்
juni
விகடன மேலாண் இயக்குநர் சீனிவாசன்
“நக்கீரன்ல இளவரசன் உண்மை கதைன்னு தொடர் ஆரம்பிச்சுருக்காங்க போலருக்கே….“ என்றான் வடிவேல்.
“அந்தக் கதையை முழுக்க முழுக்க எழுதுனது ராஜ்குமார்னு ஒரு உதவி இயக்குநர்.  இளவரசனோடயே போயி ஒரு வாரம் தங்கியிருந்து எழுதுனார்.  இளவரசன் இறந்ததும், இதுக்கான மதிப்பு கூடிடுச்சு. விகடன் நிறுவனத்துலதான் முதல்ல பேசியிருக்கார்.  அவங்க பணமெல்லாம் தர முடியாது… எங்க பத்திரிக்கையில உங்க தொடர் வர்றது உங்களுக்கு பெருமைனு சொல்லியிருக்காங்க…
அந்த நேரத்துல கோபால் அண்ணாச்சி, அந்தப் பையனை புடிச்சு, ஒரு கணிசமான தொகை குடுத்து, தொடரை வெளியிட ஆரம்பிச்சுட்டாரு.
1069209_10153029219320403_2039059400_n
இப்போ அதுக்கும் சிக்கல் வரும் போல இருக்கு ? “
“அதான் தொடர் வந்துடுச்சே… அதுல என்ன சிக்கல்“ என்று பதற்றமாக கேட்டான் ரத்னவேல்… அவன் பணியாற்றும் பத்திரிக்கையாயிற்றே..
“இளவரசன் இறந்துட்டதால, என்கிட்ட காப்பிரைட் வாங்கணும்.  அப்படி வாங்காம வெளியிடறது சட்டவிரோதம்னு இளவரசனோட தந்தை வழக்கு தொடுக்கப் போறதா ஒரு பேச்சு இருக்கு.. “
“சரி நீதிமன்ற செய்திகள் என்னப்பா இருக்கு ? “
“தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், தன்னோட சங்கத்துக்கு எப்படியாவது அங்கீகாரம் வாங்கிடனும்னு தீவிரமா இருக்காரு.  இதுக்காக, தமிழ்நாடு பார்கவுன்சில்ல ஒரு தீர்மானம் எடுத்துட்டு வந்தாரு“
MR-Prabhakaran
“பார் கவுன்சில்ல தீர்மானம் வர்றது அவருக்கு எப்படி உதவி பண்ணும் ? “
“அந்த தீர்மானத்தின் படி அவர் சங்கம் அங்கீகரிக்கப்பட்டா, உயர்நீதிமன்றத்தையும் அதை வச்சு அங்கீகரிக்க வச்சுடலாம்னு திட்டம் போட்டாரு.   ஆனா, அவருக்கு ஆதரவா 10 வாக்குகளும், எதிரா 13 வாக்குகளும் விழுந்துச்சு. இதனால அவரு சங்கத்துக்கு அங்கீகாரம் வாங்குற முயற்சிகள் கொஞ்சம் பின்னுக்குப் போயிருக்கு. “
“ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி முன்ஜாமீன் தொடர்பா நீதிபதி ஒரு வித்தியாசமான தீர்ப்பு வழங்கியிருக்காருன்னு சொன்னியே அந்த வழக்கு என்னப்பா ஆச்சு…. ? “
“நீதிபதி ராஜேந்திரன் தன்னோட உத்தரவுல,
The Learned counsel for the respondent (CBI) submitted that the respondent is prepared for one more inspection to verify the documents relating to the administration of the petitioner institution.
Considering the submission of the counsels for both sides taking into consideration the interest of the Students, this court feels that there can be re-inspection of the college to ascertain whether the infrastructure facilities are lacking or not, as per the norms fixed by the Dental Council of India and whether the deficiency as pointed out in the counter has been rectified. Such inspection shall be carried out jointly by the respondent police (CBI) along with the official of the government Dental College, Madras and the officials of the college.
தீர்ப்புல, சிபிஐ வழக்கறிஞர் வாதாடுகையில் அந்தக் கல்லூரியை சரிபார்க்க மீண்டும் ஒரு முறை சோதனை நடத்த ஒப்புக் கொண்டுள்ளார். அதனாலும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், மீண்டும் ஒரு முறை சிபிஐ அந்தக் கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்று சோதனை நடத்த உத்தரவிடுகிறேன் னு உத்தரவு போட்ருந்தார்.
சிபிஐ வழக்கறிஞர், நான் இந்த மாதிரி வாதாடவேயில்லன்னு ஒரு மனு தாக்கல் பண்ணினார்… கடுப்பான நீதிபதி, இந்த வழக்கை வேற நீதிமன்றத்துக்கு மாற்றுகிறேன்னு உத்தரவு போட்டுட்டார்.
“நல்ல நீதிபதியாத்தானேப்பா இருக்கறாரு ? “
“அண்ணே… இவரோட வரலாறு தெரியாது உங்களுக்கு.  இப்போ மாவட்ட நீதிபதியா இருக்கற ஒருத்தர்கிட்ட, நீதிபதி ராஜேந்திரன் வழக்கறிஞரா இருந்தப்போ வாதாடியிருக்காரு.  வாதாடி முடிஞ்சதும், அந்த நீதிபதியோட அறைக்கு போன ராஜேந்திரன், உங்களுக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு குடுத்துட்றேன் னு சொல்லியிருக்காரு… கடுப்பான அந்த நீதிபதி, இந்த மாதிரியெல்லாம் என்கிட்ட பேசாதீங்க.. வெளியில போங்கன்னு சொல்லிட்டாரு.  “என்ன சார் பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்கன்னு“ அவருக்கு அட்வைஸ் பண்ணிட்டு வந்தாராம் ராஜேந்திரன்.   இதுதான் இந்த நீதிபதியோட லட்சணம்… இவரை போயி நல்ல நீதிபதின்னு சொல்றீங்களேண்ணே…
நீதிபதி எப்படி இருக்கணும்னு ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க.. ஆதிபராசக்தி மருத்துக் கல்லூரி மேல, இதே மாதிரி ஒரு வழக்கு.  அந்தக் கல்லூரியில உட்கட்டமைப்பு இல்லன்னு.  இந்த வழக்குல சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எல்லோரையும், நீதிபதி வி.பி.ரவீந்திரன் விடுவிச்சுட்டாருன்னு ஏற்கனவே நாம பேசிக்கிட்டு இருந்தோம். இதையடுத்து கல்லூரி நிர்வாகம், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி குடுக்கணும்னு வழக்கு போட்டாங்க. இந்த வழக்குல எதிர் மனுதாரரா மருத்துவக் கவுன்சிலை மட்டும் சேத்துருந்தாங்க.  எங்க மேல போடப்பட்ட வழக்குலேர்ந்து நீதிமன்றமே எங்களை விடுவிச்சுடுச்சு. அதனால அனுமதி குடுங்கன்னு கேட்டாங்க…
இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசீதரன் முன்னாடி விசாரணைக்கு வந்துச்சு. அப்போ நீதிபதி, சிபிஐ அமைப்பை இந்த வழக்குல சேர்த்து, அவங்க தரப்பையும் கேட்கணும்னு உத்தரவு போட்டுட்டாரு.   இதனால கல்லூரி நிர்வாகம் ஆடிப்போயிருக்கு.  நீதிபதி, சிபிஐயை சேக்காமலேயே இந்த வழக்கை முடிச்சுருக்க முடியும். ஆனா, உண்மையை கண்டு பிடிக்கணும்னு சிபிஐயை சேத்தாரு.   ஒரு நீதிபதி எப்படி இருக்கணும்னுன்றதுக்கு இதுதான் உதாரணம்.”
”பணி ஓய்வு பெற்ற நீதிபதி எலிப்பி தர்மாராவ் எப்படி இருக்கார்டா ?”
”எப்படியாவது மாநில மனித உரிமை ஆணையத்தோட தலைவராகலாம்னு முயற்சி பண்றார்.   மனித உரிமை ஆணையத்தோட தலைவர்களா, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள்தான் இருக்க முடியும்னு சட்டம்.   தமிழகத்திலிருந்து ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் இதுக்கு தகுதியானவர். ஆனா, அவர் இதை விட சிறப்பான பதவியை எதிர்ப்பாத்துக்கிட்டு இருக்காரு.  தலைமை நீதிபதியாகவே இல்லன்னாலும், எப்படியாவது மனித உரிமை ஆணையத்தோட தலைவராகணும்னு முயற்சி பண்றார் எலிப்பி.   மாநில அரசுக்கு ஆதரவா பல உத்தரவுகளை பிறப்பிச்சு இருக்கறதால, தமிழக அரசு அவருக்கு உதவி பண்ணும்னு நம்பறார். ”
”கூடங்குளம் வழக்கு என்ன ஆச்சு மச்சான்” என்று ஆர்வமாக கேட்டான் பீமராஜன்.
”கூடங்குளம் அணு உலையை எப்படியாவது திறந்துடனும்னு மத்திய அரசு தீவிரமா இருக்கு.   அணு சக்திக் கழகம் அணு உலை திறக்கறதுக்காக அளித்த தடையில்லா சான்றிதழ் தவறுன்னு ஒரு வழக்கு  தொடுத்தாங்க பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர். அப்போ பேசுன வில்சன், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துலதான் தொடுக்கணும்.  இங்கே தொடுக்க முடியாதுன்னு சொன்னார்.  மனுதாரர் சார்பில் ஆஜரான ராதாகிருஷ்ணன், மத்திய அரசு வழக்கறிஞர் சட்டம் தெரியாமல் பேசறார்னு சொன்னார்.  நீதிபதிகள், தலைமை நீதிபதியிடம் இந்த வழக்கை மாற்றுகிறோம்னு சொல்லிட்டாங்க… இது மட்டும்தான் நடந்துச்சு.
P_Wilson
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்.
ஆனா வில்சன், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்னு உச்சநீதிமன்றம் உத்தரவு போடலை… அது வெறும் பரிந்துரைதான்னு வாதாடுனதா, ஒரு செய்திக் குறிப்பை அடிச்சு, பத்திரிக்கையாளர்கள் எல்லாருக்கும் குடுத்துட்டாரு.  இதை நம்பிய பத்திரிக்கையாளர்கள் அப்படியே இந்த செய்தியை போட்டுட்டாங்க.
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது வழக்கை வாபஸ் பெறுவதா தொடுக்கப்பட்ட வழக்கு மாநில அரசு சம்பந்தப்பட்டது.  அந்த வழக்கில் வில்சன் ஆஜராகி வாதாடியதாக தெரிவித்துள்ளார்.  அதனால, வில்சன் தன் பதவியை ராஜினாமா பண்ணணும்னு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தோட செயலாளர் புகழேந்தி, வில்சனுக்கும், மத்திய சட்ட அமைச்சகத்துக்குமி புகார் கடிதம் அனுப்பிட்டாரு.  இன்னொரு மத்திய அரசு வழக்கறிஞரா மாசிலாமணி இருந்தும், அவருக்கு எந்த வழக்கும் போகாம, எல்லா வழக்கையும் வில்சனே அபகரிச்சுக்கிறார்னு ஒரு புகார் ஏற்கனவே இருக்கு.”
Wilson_complaint_Page_1
Wilson_complaint_Page_2
Wilson_complaint_Page_3
”ஈஷா மேல போட்ட வழக்கு என்ன ஆச்சு ? ” என்றான் வடிவேல்.
”ஈஷா மேல போட்ட வழக்கு உயர்நீதிமன்றத்துல நிலுவையில இருக்கு.  இந்த நிலையில, ஈஷா மையம், நாங்க கட்டுன கட்டிடங்களுக்கு அனுமதி குடுங்கன்னு கோவை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் குடுத்துருக்காரு. அனுமதியில்லாம கட்டுன கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் குடுத்து அது நிலுவையில இருக்கும்போது, கலெக்டர் இந்த விண்ணப்பத்தை நிராகரிச்சிருக்கணும்.  ஆனா, அதை நகர்புரம் மற்றும் ஊரக திட்டத் துறைக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்காரு.
கோவை மாவட்ட ஆட்சியரா இருக்கற கருணாகரன், ஈஷா யோகா மையத்தோட ரொம்ப நெருக்கமானவர்.  எப்படியாவது நான் உங்கள் கட்டிடங்களுக்கு அனுமதி வாங்கித் தர்றேன்னு உத்தரவாதம் குடுத்துருக்கறதா சொல்றாங்க…”
”காவல்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்..
”லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி ஏஎம்எஸ் குணசீலனுக்கும், ஜெயலலிதாவோட சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கிற டிஎஸ்பி சம்பந்தத்துக்கும் கடுமையான பனிப்போர் நடக்கறதா சொல்றாங்க…  ஐஜி குணசீலன் மேல, சம்பந்தம் முதல்வர் அலுவலகத்துல புகார் சொல்லியிருக்காராம்”
”ஏம்பா… ஐஜி, டிஜிபியெல்லாம் இருக்கும்போது, டிஎஸ்பி எப்படி முதல்வர் அலுவலகத்துல பேச முடியும்… ? ”
”என்னய்யா பேசற…. சம்பந்தம் யாரு… ஜெயலலிதாவோட பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கோட விசாரணை அதிகாரி இல்லயா… ?  முதல்வர் அலுவலகச் செயலாளர்கள் அத்தனை பேரும் அவர்கிட்ட பேசுவாங்க… அதனாலதான், சம்பந்தத்தோட முழு நேரத் தொழில் ரியல் எஸ்டேட்னு டிஜிபி ராமானுஜம் அறிக்கை அனுப்பியும் சம்பந்ததை யாராலயும் அசைச்சுக்க முடியலயே…. சம்பந்தம் கிட்டத்தட்ட லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மாதிரிதான் நடந்துக்கறார். ”
” அப்புறம்  ? ”
”ஜான் நிக்கல்சன் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை பாத்துக்கற பிரிவுல டிஐஜியா இருக்கார்.  அந்தப் பிரிவுல வேலை பாக்கற காவலர்களை இவரு சொந்த ஊர்ல இருக்கற வயல்ல விவசாயம் பாக்கறதுக்கும், இவரு பிசினெஸை பாத்துகக்கறதுக்கும் அனுப்பிட்டாரு. அது மட்டுமில்லாம அரசு ஒதுக்குன ரகசிய நிதியை மொத்தமா ஆட்டையைப் போட்டுட்டாரு.
2012-11-27-113824_1542344241
ஜான் நிக்கல்சன்.
இது தெரிஞ்ச டிஜிபி ராமானுஜம், ரகசிய நிதி ஒதுக்கீட்டை குறைச்சுட்டாரு…  உடனே நிக்கல்சன், சேலம் ரமேஷ் கொலை வழக்கு மற்றும் இதுல சம்பந்தப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளை பிடிக்க, இன்னும் ஏராளமான ரகசிய நிதியை ஒதுக்கணும்னு டிஜிபிக்கு ப்ரொப்போசல் அனுப்பியிருக்காரு…”
”தீவிரவாதிகயைப் பிடிக்கிறாங்களோ இல்லையோ… இதை சாக்கா வச்சு காவல்துறை அதிகாரிகள் நல்லா சம்பாதிக்கிறாங்க…. வாப்பா போகலாம்” என்றவாறு எழுந்தார் கணேசன்.  அனைவரும் அவரோடு எழுந்து கலைந்தனர்.


courtesy:Government servant sankar and all media friends....

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

Politics is a dangerous game: Rajinikanth

In an in-depth interview at his home in Poes Garden, Rajinikanth spoke candidly to India Today not only about his life and films but also his political vision for Tamil Nadu, and a range of burning public issues. Raj Chengappa  Amarnath K. Menon  New Delhi  November 30, 2018 ISSUE DATE: December 10, 2018 UPDATED: December 1, 2018 10:26 IST Photographs by Bandeep Singh Will he, won't he? Southern superstar Rajinikanth has exhibited Hamletian indecision about pursuing a political career ever since he announced he was joining the fray in December 2017. So far, he has not even announced the name of his political party, choosing instead to deploy his massive fan following under the umbrella of his Rajini Makkal Mandrams and using them to build a cadre of party workers across Tamil Nadu. Meanwhile, the ageing star (he is 67) continues to do what he knows best-make iconic films. His latest-2.0, releasin...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

மகிழ்ச்சியின் விலை என்ன?

சரவணன் சந்திரன் December 12 at 1:04 PM  ·  -மகிழ்ச்சி என்பது இங்கே விலை போகிற சமாச்சாரம் என்று யூகித்திருக்கிருக்கிறோமா? ஆழமாக விவாதிப்பதென்றால், மகிழ்ச்சி என்று இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிற உணர்வு கைதேர்ந்த கைகளால் உருக்கி உருவாக்கப்பட்ட சரக்கு. கவலைகளை மறந்து எந்நேரமும் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருப்பது. காடுகளில், மலைகளில், ஒரு கோப்பைத் தேநீரில் என சந்தை வழிநடத்தும் இடங்களிலான தேடல் அது. தொண்ணூறுகள் என்றில்லை. எண்பதுகளின் இறுதியில் இருந்தே இந்த மகிழ்ச்சி வணிகம் மெல்ல இந்தியாவிற்குள் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. வறுமையின் நிறம் சிவப்பு என சாக்கடைக்குள் அமிழ்ந்து கிடக்கிற ஆப்பிளை எடுத்து கழிவிரக்கத்தோடு உண்ணும் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையின் சந்தைச் சரக்கது. எதுவெல்லாம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்? என்னென்ன பரிந்துரைகள் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன? உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமெனில் மகிழ்ச்சியாய் மலர்ந்து சிரிப்பதற்கு ஒரு கோல்கெட் தேவையாக இருக்கிறது. மெல்ல பின்னோக்கி யோசித்தால், உலகமயமாக்கல் என்கிற கரங்கள் எ...

தலைப்பு இல்லை

பெண்கள் தினம் என்பதால் துப்பட்டா என்று தலைப்பு வைக்க நினைத்தேன்; தலைப்பிலாவது துப்பட்டா இருக்கட்டும் என்று chennai pasanga da நினைக்கக் கூடும். சுச்சி அக்கா என்று தலைப்பு வைக்க ஆசைப்பட்டேன்; twitter பசங்கடாவ் கோபித்துக் கொள்வார்கள். Screenshotஐ ஏதோ love letter போல பகிர்ந்து "பாத்தீங்களா பாத்தீங்களா" என்று feel செய்து கொள்கின்றனர். Twitterஇல் நான் activeஆக இல்லாததுக்கு காரணம் நான் செய்ய வேண்டிய shares updatesஐ அவர்களே screenshot செய்து followers கிடைக ்கச் செய்து விடுகின்றனர். எனவே இதற்கும் promotion தேவையில்லை என்பதால் தலைப்பு இல்லை என்பதையே தலைப்பாக வைத்துவிட்டேன். Suchi சகோதரியின் சேவையினால் scandals சுவாரசியமற்றதாகிவிட்டது. ஆக அவருக்குப் பெண்கள் தின வாழ்த்து தெரிவித்துவிடலாம். இருந்தாலும் நான் ஆண்களின் குளியல் videoகள், masturbating videos எதிர்பார்த்தேன். இந்த scandalsஐ ஆராய்ந்ததில் ஒரு சிறப்பான தகவலைக் கண்டறிந்தேன். அதாவது ஆண்களுக்கு mobile selfie camera handle செய்யத் தெரியாது போலும். அல்லது கை நடுக்கமாகவும் இருக்கலாம். ஆண்களின் scandals வராததற்கு இந்த இயலாமை ம...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...