முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய தலைமுறை


"I am a New Generaion Girl!!! Any thing for my Country to get Home the World Cup So INDIA Cheer with me That we need 1983 BACK" - ட்விட்டரில் பூனம் பாண்டே, மார்ச் 31, 2011 மதியம் 2:39 

*******

பூனம் பாண்டே - 72 மணி நேரத்துக்கு முன் இந்தப் பெயரை உச்சரித்திருந்தால் நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்காது; ஆனால் இக்கணம் இப்பெயர் பிரபஞ்ச பிரசித்தம். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்லும் நாளைய பொன் நிகழ்வில் இந்த ஐந்தடி ஏழங்குல உயர 19 வயது மும்பை மாடலின் தூய நிர்வாண அழகியலை பேரார்வத்துடன் எதிர்நோக்கியிருக்கின்றன‌ சுமார் 242 கோடி இந்தியக் கண்கள். வாழிய, நம் நாட்டுப்பற்று

உலகக்கோப்பை போன்ற பிரம்மாண்ட விளையாட்டு நிகழ்வுகளில் இது போன்ற அதிர்ச்சி மதிப்பீட்டு அறிவிப்புகள் வெளியிடப்படுவது புதிதல்ல. கடந்த 2010 உலகக்கோப்பை கால் பந்துப் போட்டியில் கூட இது நடந்தது. அர்ஜெண்டினா கோப்பை வென்றால் அந்நாட்டின் தலைநகரான Buenos Airesல் நிர்வாணமாக ஓடுவதாக Luciana Salazar என்ற 29 வயது மாடல் அறிவித்தார். பதிலுக்கு பேரகுவே கோப்பை வென்றால் அதன் தலைநகரான Asunciónல் நிர்வாணமாக ஓடுவதாக Larissa Riquelme என்ற 25 வயது மாடல் அறிவித்தார். கடைசியில் இந்த இரு நாடுகளும் இல்லாமல் ஸ்பெயின் கோப்பையை வென்றது (துரதிர்ஷ்டவசமாக ஸ்பெயின் தேசத்தின் சார்பாக யாரும் எந்தவொரு ஓட்டத்தையும் திட்டமிடவில்லை)‌.

poonam pandey கடந்த‌ மூன்று நாட்களாக இந்திய ட்விட்டரின் டைம்லைனில் trending topic. கூகுள் தேடலில் poo என்று டைப்பினால் poonam pandey என்று தான் முதலில் காட்டுகிறது. தவிர‌, இந்த மூன்று தினங்களில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்களில் முதலிடம். இணையத்தில் அதிக முறை டவுன்லோட் செய்யப்பட்ட மாடல்களின் பட்டியலில் இடம். இரண்டு பேர் பேசிக்கொண்டால் விஷயம் எதைப் பற்றியதாக இருந்தாலும் கடைசியில் பூனம் பாண்டேவுக்கு வந்து ஏளனமும் ஏக்கமும் கலந்ததொரு பெருமூச்சுடன் நிற்கிறது.

Kingfisher, ibibo போன்றவற்றின் ஸ்விம் சூட் கேலண்டர்களுக்கு டூபீஸ் டிரெஸ்களில் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் எந்த மாடலுக்கும் ஒற்றை இரவில் இப்படியொரு புகழ் கிடைப்பதரிது. தீபிகா படுகோனும் Kingfisher calender girl தான். ஆனால் அவர் இந்த உயரத்தை அடைந்தது காத்திருப்புக்களும், கஷ்டங்களும் நிறைந்த பாட்டையின் வழி.

பூனம் பாண்டேவைப் பொறுத்தவரை அடிப்படையில் இது ஒரு பப்ளிஸிட்டி மட்டுமே. அவரே சொல்வது போல் அவரது லட்சியக்கனவு நடிகையாவது. அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் யாராவது இந்தி இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் பூனம் பாண்டேவிற்கு கூடிய சீக்கிரம் அழைப்பு விடுப்பார் (படத்தில் ந‌டிக்க). அவரது கதையையே படமெடுத்தாலும் ஆச்சரியமில்லை.

பப்ளிஸிட்டிக்காக என்றாலும் இதை நிச்சயம் ஸ்டன்ட் என்று சொல்ல மாட்டேன். அவர் சொன்னதைச் செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கிரிக்கெட் ஸ்டேடியம் போன்ற‌ பொதுவிடத்தில் இல்லையெனினும் வலைதளத்தில் நேரடி காணொளிபரப்பாக அல்லது ஏதாவது ஸாட்டிலைட் தொலைக்காட்சியின் மூலம் அவர் தன் வாக்கை நிறைவேற்றிட சாத்தியங்கள் அதிகம். தற்போதைய காஸ்ட்யூம்களிலிருந்து அவர் சொல்லியிருக்கும் நிலைக்கு மாற சில மில்லிமீட்டர்கள் துகலுரிந்தாலே போதுமானது என்பதால் அவருக்கு அது ஒரு பெரிய மனத்தடையாக இருக்காது என்றே தோன்றுகிற‌து. தவிர பாண்டேவின் பெற்றோர்களும் ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பதாக‌வே செய்திகள் தெரிவிக்கின்றன.

(வழக்கம் போல்) சிவசேனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மகாராஸ்ட்ர பிஜேபி ம‌களிர‌ணி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறது. போபால் நீதிமன்றம் ஒன்றில் பிராமண சமூகத்தைப் பற்றி பூனம் தப்பபிப்பிராயம் ஏற்படுத்தி விட்டார் என அவ்ர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதை எழுத ஆரம்பிக்கும் சற்று நேரம் முன்ன‌தாக‌ உத்திரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் காவல் நிலையத்தில் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவின் பேரில் பூனம் பாண்டேவின் மீது எஃப்ஐஆர் ப‌திவு செய்திருக்கிறார்கள்.

மறுபக்கம் PETA இயக்கம் (People for the Ethical Treatment of Animals) கிரிக்கெட்டுக்காக அல்லாமல் பிராணிகள் நலனுக்காக பூனம் பாண்டே நிர்வாணமாக ஓட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பாலிவுட் இயக்குநர் சுபார்ன் வர்மா (Ek Khiladi Ek Haseena, Acid Factory) பூனம் பாண்டேவின் நிர்வாண நிகழ்படத்தைத் தான் ஏற்கனவே எடுத்திருப்பதாகச் சொல்லி ஏப்ரல் ஃபூல் செய்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.

"விமர்சன‌ங்களுக்கும், மிரட்டல்களுக்கும் நான் அஞ்சவில்லை. இது கிரிக்கெட் எனும் விளையாட்டின் பால் கொண்ட காதலால் இந்திய அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில் செய்வது. நாட்டின் சட்டத்தையோ, கிரிக்கெட் வாரியத்தையோ மீறி எதையும் செய்யும் எண்ணமில்லை" என்று சொல்லியிருக்கிறார்  பூனம் பாண்டே. இதற்கிடையே நாளை மும்பையில் நடக்கும் மேட்ச்சைப் பார்க்க பூனம் டிக்கெட் வாங்கி விட்டதாகத் தெரிகிறது. "எதுவுமே முடியாவிட்டால், குறைந்தப‌ட்சம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ட்டெஸ்ஸிங் ரூமிலாவது இக்கட்டவிழ்ப்பு நடந்தே தீரும்" என சூலுரைத்திருக்கிறார் பூனம் பாண்டே.

ஒரு மனமுதிராப் பதின்மச்சிறுமியின் எளிய‌ சினிமா மோகம் தாண்டி இதில் வேறேதும் புலப்படவில்லை. இந்தியச் சமூகம் தன் அத்தனை அரிஷ்டவர்க்க உளச்சிக்கல்களோடும் அவளைக் களப்பலியிடக் காத்திருக்கிறது. எனக்கு பூனம் பாண்டே என்ற பெண்ணின் கம்பீரம் வீசும் நிர்வாண தேகத்தை மீறிய‌‌ சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. பார்க்கலாம்.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

அணையாத காதல் தீ

சாதி என்னவெல்லாம் செய்யும்? ஊரைக் கொளுத்தும்; கௌரவக் கொலை செய்யும்; காதலித்து மணந்தவர்களைப் பிரிக்கும். சினிமாவில் மட்டுமே பார்த்த இதுபோன்ற காட்சிகளெல்லாம் அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் அரங்கேறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள்.  தர்மபுரி நத்தம் தலித் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனை திவ்யா என்கிற வன்னிய சாதியைச் சேர்ந்த பெ ண் காதலித்து மணந்ததைப் பொறுக்காமல் மூன்று தலித் கிராமங்கள் எரிக்கப்பட்ட அந்த நவம்பர் 7ம் தேதிக்குப் பின் நிகழ்ந்தவை ஊரறியும். அதன் பின்னர் தொடர்ச்சியாக நிகழ்ந்த கௌரவக் கொலைகள், தலித் பெண்கள் மீதான தாக்குதல்கள், சாதியின் பெயரால் நிகழும் தாக்குதல்கள், குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள் என்று மரக்காணம் வரை நீண்டது பிரச்சனை. மாமல்லபுரம் வன்னியர் விழாவில் பேசியதற்காக ராமதாஸ், காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வளவு நடந்தபோதும் திவ்யாவும் இளவரசனும் எங்கிருக்கிறார்கள் என்கிற விவரம் மட்டும் யாருக்கும் தெரியவில்லை. திவ்யாவின் தாய் தேன்மொழி தன் கணவரின் மரணத்துக்கு இளவரசன் தான் காரணம் என்றும் தன் மகளை கடத்திவிட்டதாகவும்  தொடு...

சில நிதர்சனங்கள்:மார்பு

குனிந்து எடுத்த நொடியில்... உள்ளாடையில்(பிரா) படிந்துவிட்டிரு ந்தன சில பார்வைகள்... கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில் எங்கோ ஒளிந்திருந்த நாம் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை தேடிக் கொண்டிருந்தன சில பார்வைகள்... கை வைத்து மறைப்பதைக் கூட அவமானப்பட்டுச் செய்கிறார்கள் “முன்னாலே போமா” என்று பின்னாலே தடவிவிட்டு போகும் நடத்துனர் கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால் மகளிர் இருக்கையின் இடுக்குகளில் கூனிக்குறுகி  அவரைப் போலவே சில திரௌபதிகள்... ஒவ்வொரு நிறுத்தத்திலும் மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை... ஆண்டவா! எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்கள்..., பாவம்..... ஆனால் அடுத்த பிறவியில்பெண்களுக்கு வைத்து விடாதே மார்பகத்தை.

பத்தி எழுதுவது எப்படி?

சமகால இதழியலில் எல்லோரும் எழுத்து கூட்டி பத்தி எழுதுகிறார்கள். எல்லோரும் பத்தி கட்டுரைகளை தொகுப்பாக்குகிறார்கள். ஆனால் பத்தி எழுத்தாளர்களில் எத்தனை பேர் என்னைப் போல் பிரபலத்தை அனுபவிக்கிறார்கள்? நான் பல முக்கிய நாவல்களை எழுதியிருக்கிறேன். குழந்தைகளைக்கூட விட்டு வைக்காமல் அவர்களுக்கும் புத்தகம் எழுதியிருக்கிறேன். எனினும் எனது பிரபலத்திற்கு பத்திதான் காரணம். குறைந்த உழைப்பில் நிறைந்த வருமானம் பத்தி எழுத்தில்தான் கிடைக்கிறது. இந்தப் பிரபலம் எல்லோருக்கும் வாய்க்காத காரணம் அவர்கள் நான் அல்ல என்பதே. எனது வெற்றியால் உந்தப்பட்டு பத்தி எழுத துவங்குபவர்கள் என்னைப் போலவே எழுதினால் ஓரளவு வெற்றியடையலாம். இப்போது அரிச்சுவடியை கற்போமா? முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக்கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிசொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முட...

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

நான் விரும்பும் அரசியல்!

*அரசியலுக்கு வருபவர்களுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கலாம்? குறைந்த பட்சம் கல்லூரி பட்டம் அல்லது பட்டய கல்வி படித்திருப்பது நல்லது.(கல ்வி தகுதி இல்லாதவர்களுக்கு அவர்களின் மக்கள் நலன் சார்ந்த அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் இந்த விதியை சற்று தளர்த்தலாம்) *யார்,எப்போது அரசியலுக்கு வரலாம்? அரசியலுக்கு வருபவர்கள், தங்கள் குடும்ப செலவுகளை,சுயமாக சமாளிக்கும் அளவுக்கு பொருளாதார பின்புலங்களை தயார் செய்த பிறகு பகுதி நேர அரசியலில் ஈடுபடலாம். நானும் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி கொண்டு, எந்த வேலைகளும் செய்யாமல், ஊர் பணத்தை தின்று கொழுக்கவோ,மக்கள் வரிப்பணத்தை களவாடவோ அரசியலுக்கு வருவதற்கு பதிலாக அரசியலுக்கு வராமலேயே இருக்கலாம்.மக்கள் பணத்தை கொள்ளையடித்து, என்ன மக்கள் நலன் சார்ந்த அரசியல் செய்ய போகிறார்கள்? மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்பது,மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கான தீர்வை பெற்று தர வேண்டும்.சம்மந்தப்பட்ட அதிகாரிகளை ,ஆட்சியாளர்களை சந்தித்து பிரச்சினை குறித்து பேசி தீர்வை எட்ட வேண்டும். இங்கே தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சியினர் செய்வது போல, எந்த வேலைக்கும் போகாமல், வெள்ளை...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

The hunt for Amma’s assets

COVER STORY By Lakshmi Subramanian  |  Green, with a hint of red: Kodanad estate was recently in the news when a security guard there was murdered during a heist | Bhanu Prakash Chandra Jayalalithaa’s death triggered a battle for assets worth thousands of crores. While Sasikala and her family want to have it all, Jayalalithaa’s niece and nephew have staked their claim. Now, with the Kodanad murder adding mystery to the mix, THE WEEK visits some of the high-profile properties that are part of Jayalalithaa’s legacy Though it is famous as Jayalalithaa’s abode, she holds shares worth only Rs 3.13 crore in the Kodanad estate. “The value of the properties was so huge that the [Mannargudi] family members themselves could not ascertain it.” - A. Shankar, RTI activist Though it is famous as Jayalalithaa’s abode, she holds shares worth only Rs 3.13 crore in the Kodanad estate. “The value of the properties was so huge that the [Mannargudi] family members t...

சில நிதர்சனங்கள்:நான் ஏன் இஞ்சினியரிங் எடுத்தேன்?

நான் ஒரு இன்சினிய‌ரிங்முடித்த‌மாணவன்.  தேர்வில் பாஸ் ஆவதற்காக உப தலைப்பிட்டு , பாயின்ட் பை பாயின்டாக எழுதி அதற்கு முன் ஒரு புல்லட் குறியீடு இட்டு, சம்மந்தமே இல்லாத கருத்துக்களை அடிக்கோடிட்டு விடைகள் சரியானவை என்று திருத்துபவர்களை நம்பவைத்துப் பழக்கப்பட்டவன் என்பதால் இந்தக் கட்டுரையும் அதே வடிவத்தில் வந்துவிட்டது தயவுகூர்ந்து பொருத்தருளவும். இஞ்சினியரிங்க் படிப்பதற்கான காரணங்கள் : இஞ்சினியரிங்க் படிப்பதற்கு பல்வேறு காரனங்கள் (காரணங்களுக்கு ரெண்டு சுழி ந வா இல்லை மூன்று சுழி ந வா எனத் தெரியாத காரனத்தால் ஒரு இடத்தில் ரெண்டு சுழியும் இன்னொரு இடத்தில்  மூன்று சுழியும் பயன்படுத்தப்படுகிறது.) உள்ளன அவை யாவை எனில்  "இஞ்சினியரிங்க் படிக்கவைங்க பய நல்லா வருவான்" ஒன்னறை  லட்சம் இஞ்சினியரிங்க்  அப்ளிகேசன் விற்க  இது போல யாரோ ஒரு புண்ணியவான் ஏதோ            ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடுவதைப் போல பொறுப்பில்லாமல் அப்பாவின் காதில் போட்டுவிடுவதுதான் காரணம்.  "எங்க நாத்தனார் பையன் இஞ்சினியரிங்க் த...

90-year old astute politician

As you become old you become wise, they say. But for this 90-year old astute politician who had scripted the most successful political moves, in the state, his acumen this time, has earned him brickbats rather than bouquets. Known for his sharp tongue and swift repartees Karunanidhi’s organizational skills in the past had taken his party in a triumphant path even when was unseated from power for over 13 years by his bête noire the late MG Ramachandran. But now the nonagenarian’s shrewdness had only turned more emotional to save his kin. On June 3, even when his cadres, had put up high-rise banners and posters across the city to celebrate his 90th birthday, he was a much worried man- more apprehended on how to maneuver support for his loving daughter. And 100 days after leaving the Congress-led alliance, his party has gone back to the Congress to get votes of five MLAs in the Rajya Sabha elections. “Karunanidhi quit the UPA in March claiming that the Congress was soft towards the S...

டாஸ்மாக் தமிழ்

உள்ளே நுழையும்போதே தலையை சொறிந்து கொண்டே வந்தான் டாஸ்மாக் தமிழ்.   வந்ததும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தான். “என்னப்பா அமைதியா இருக்க… ? எதுவும் பிரச்சினையா… ? “ என்று தமிழைப் பார்த்து வாஞ்சையோடு கேட்டார் கணேசன். “எனக்கு எதுவும் பிரச்சினை இல்லண்ணே…  ராஜ்யசபா தேர்தல்ல என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நிலைமை மாறிக்கிட்டே இருக்கு. ஆதரவு தருவாங்கன்னு நெனைச்ச பாட்டாளி மக்கள் கட்சி முறுக்கிக்கிட்டாங்க.“ “அவங்க ஏன் மச்சான் முறுக்கிக்கிட்டாங்க…  ? “ என்று உரையாடலுக்குள் நுழைந்தான் பீமராஜன். “செயற்குழு தீர்மானம்னு சொல்றாங்க. “ “அவங்க செயற்குழுவுல, டாக்டர் ராமதாஸுக்கு நெஞ்சு வலின்னுல தீர்மானம் போட்டாங்க….“ “ அது மட்டுமா போட்டாங்க…  “தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ராமதாஸ் அய்யா ஏற்கனவே இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழலில் 110 டிகிரி வெப்பநிலை நிலவிய திருச்சி மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு பிரிவில் அவரை தமிழக அரசு அடைத்துக் கொடுமைப் படுத்தியது....