முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூடர் கூடம்…

Moodar-Koodam-Movie-Poster-01
 .
அங்காடித் தெரு மற்றும், வழக்கு எண் 18/9 கதையம்சம் உள்ள உணர்வுபூர்வமான படங்கள்.  மூடர் கூடம் படம் அப்படிப்பட்டதா.  அப்படி என்ன அப்படத்தின் சிறப்பான கதை ?   நான்கு பேர் சேர்ந்து ஒரு வீட்டில் திருடுகிறார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது… இது என்ன அப்படிப்பட்ட புதுமையான கதையா ?  என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்தக் கட்டுரை.
ரிசர்வாயர் டாக்ஸ் திரைப்படம், ஹாலிவுட்டில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் கதை என்ன ?  ஆறு பேர் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள்.  ஹாலிவுட்டின் போக்கையே மாற்றிய படம் என்று புகழப்பட்ட படம் பல்ப் ஃபிக்ஷன்.  அந்தப் படத்தின் கதை என்ன ?  நிழல் உலகத்தைச் சேர்ந்த ஒரு எட்டு கேரக்டர்களிடையே நடக்கும் கதைதான் படம்.   இந்த இரு படங்களையும் எடுத்த இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ.
timthumb
க்வென்டின் டாரன்டினோ
இந்தி சினிமாவில்   இசையமைப்பாளராக இருந்த விஷால் பரத்வாஜ் இயக்கிய திரைப்படம்  மக்பூல்.  இது   ஷேக்ஸ்பியரின் மேக்பெத். அடுத்து அவர் இயக்கிய படம் ஓம்காரா.  இது  ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தின் தழுவல்.  இதே விஷால் பரத்வாஜ் எடுத்த மற்றொரு படம் கமீனே    அந்தப் படத்தில் என்ன புதுமையான கதை ?  இரட்டைப் பிறவிகளான இரண்டு சகோதரர்கள் நடுவே சண்டையிட்டுக் கொண்டு இறுதியில் ஒன்றாக சேர்கிறார்கள்.   ஒருவன் நல்லவன். ஒருவன் கெட்டவன். இறுதியில் இருவரும் திருந்தி ஒன்று சேர்கிறார்கள்.
Vishal_Bhardwaj
விஷால் பரத்வாஜ்
விஷால் பரத்வாஜைப் போலவே பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு, நம்பிக்கையோடு விவாதிக்கப்படும் மற்றோரு இயக்குநர் அனுராக் காஷ்யப்.  இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்ட கேங்ஸ் ஆப் வாசிபூர் (Gangs of Wasseypur) என்ற திரைப்படங்கள், கல்ட் க்ளாசிக் என்று கொண்டாடப்பட வேண்டிய அளவுக்கு வரவேற்பை பெற்றன.     இந்தப் படத்தின் கதை என்ன ?  மூன்று தலைமுறையாக இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் வன்முறையான மோதல்தான் கதை.  கிட்டத்தட்ட சரத்குமாரின் நாட்டாமை கதைதான்.
Anurag-Kashyap-Headshot-for-web
அனுராக் காஷ்யப்
க்வென்டின் டாரன்டினோ, விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷ்யப் ஏன் கொண்டாடப்படுகிறார்கள் ?  அப்படி என்ன புதுமையைச் செய்து விட்டார்கள் ? காலங்காலமாக சினிமாவில் கதை சொல்லப்பட்டு வந்த விதத்தை மாற்றி, புதிய பாதையில் சினிமாவை பயணம் செய்ய வைத்ததாலேயே இந்த இயக்குநர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.
க்வென்டின் டாரண்டினோ, விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இயக்குநர்களின் வரிசையில் நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு திரைப்படம்தான் மூடர் கூடம்.
நான்கு பேர் சந்தர்ப்ப சூழலால் காவல் நிலைய லாக்கப்பில் சந்திக்கிறார்கள். அவர்கள் நான்கு பேருக்கும் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத பராரிகள்.  அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, அந்த நான்கு பேரில் ஒருவரின் உறவினர் வீட்டில் திருடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். வழக்கமாக காவல் நிலையத்தில் சிக்குபவனை போட்டுப் புரட்டிப் புரட்டி எடுக்கும் காவல்துறை அதிகாரிகளையே காட்டும் சினிமாவிலிருந்து மாறுபட்டு, நிஜ வாழ்வில் அபூர்வமாக நடப்பது போல அந்த இன்ஸ்பெக்டர் எந்த வழக்கும் போடாமல் அவர்களை துரத்தி விடுகிறார். போகும்போது செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புகிறார்.  அவர்கள் நால்வரும் வெளியேறி டாஸ்மாக் பாருக்குள் தண்ணியடிப்பதில் கதை தொடங்குகிறது. நவீன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்தவன்.  செண்ட்ராயன், கஞ்சா வியாபாரி. குபேரன்,சமுதாயத்தால் முட்டாள் என ஒதுக்கப்பட்டவன்.வெள்ளை, அனாதையாக வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வந்து இறங்குபவன்.
21
இவர்கள் நான்கு பேரையும் வைத்து, இவர்கள் நான்கு பேரும் கஷ்டப்பட்டு(?) முன்னேறும் அரைத்த மாவு சென்டிமென்ட் கதை உருவாக்கலாம். நான்கு பேரும்  ஆளாளுக்கு ஒரு பெண்ணை காதலிப்பதாக வைத்து ஆளுக்கொரு டூயட் வைக்கலாம். எவ்வித பொறுப்புணர்வும் இல்லாமல் படம் நெடுக லொள்ளு சபா டைப் காமெடிகளை மட்டுமே வைத்து படமெடுக்கலாம். இன்னும் நூற்றுக்கணக்கான தமிழ் சினிமாவின் வழக்கமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஆனால் அந்த வழிகளைக் கையாளாமல் புதிய முறையில் பார்வையாளர்களையும் கவரும் விதமாகக் கதை சொல்லியதில்தான் இத்திரைப்படம் மாறுபட்டு நிற்கிறது. திரைக்கதையின் வடிவம் செம ஃப்ரெஷ்.  ஒவ்வொரு முக்கிய பாத்திரத்துக்கும் முன் கதையாக படத்தின் பல்வேறு இடங்களில் ஃப்ளாஷ் பேக்குகள். ஒவ்வொரு ஃப்ளாஷ் பேக்கிற்கும், இந்த சிறிய பட்ஜெட்டிற்குள்ளும் சினிமாவின் பல்வேறு யுக்திகளை உபயோகப்படுத்திருப்பதும் அவை ரசிக்கும்படியாகவும் இருப்பதும் தான் ஹைலைட். படத்தில் நடித்திருக்கும் நாய்க்குக் கூட பாடலுடன்  முன்கதை.(இந்த ஃப்ளாஷ் பேக்கும் நவீனின் ஃப்ளாஷ் பேக்கும் இப்போது வெட்டப்பட்டுள்ளது வருத்ததிற்குறிய விஷயம்)
வீட்டுக்குள் திருடப் புகுந்ததிலிருந்து கதை விறு விறுவென்று நகர்த்தப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிற்குள் இருக்கும் கணவன், மனைவி. இரண்டு மகள்கள்.  ஒரு மகன். அந்த வீட்டுக்குள்ளே வேறு ஒரு காரணத்துக்காக திருட வந்த இன்னொரு திருடன். என்று முதல் பாதி பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.  தொடக்கத்தில் வந்தவர்கள் யாரென்று தெரியாமல், பணக்காரத் திமிரோடு குடும்பமே அந்த நாலு பேரையும் வேலை வாங்குகையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது. அனால் இந்த பரபரப்புகளுக்கு திடீர் திருப்பங்கள் என்று செயற்கையாக எதையும் புகுத்தாமல் திரைக்கதையில் தனது சாகசத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் நவீன்.
மூடர் கூடம் என்ற தலைப்பை முக்கிய கதாபாத்திரங்களாக வரும் நால்வருமே அடிக்கடி வெளிக்காட்டுகிறார்கள். நவீனின் கதாபாத்திரம் அந்த நான்கு பேருக்கும் தலைவனாக வழி நடத்துபவனாக நடந்து கொள்கிறது.அந்த கதாபாத்திரத்தின் இறுக்கமான முகம்.  உணர்ச்சிகளே இல்லாத டயலாக் டெலிவரி.  ஆனால், இப்படி உணர்ச்சிகளே இல்லாத நவீனின் கதாபாத்திரம் பேசும் பல வசனங்களின் மூலமாக சமுதாய அவலத்தை புரிந்து கொள்ளவும் அதே சமயத்தில் பல இடங்களில் வெடிச்சிரிப்பும் ஏற்படுகிறது.  இடைவேளைக்குப் பிறகு மேலும் சில பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. கேங்ஸ் ஆப் வாசிப்பூர் திரைப்படத்தில் வரும் சிறு சிறு பாத்திரங்கள் கூட முக்கியப் பங்கு வகித்து, படத்தின் சிறப்பைக் கூட்டுவது போலவே, இந்தப் படத்திலும் வரும் அத்தனை பாத்திரங்களும், சிறிது நேரமே வந்தாலும், திரைக்கதையின் விறுவிறுப்பைக் கூட்டுவதோடு, படத்தை சுவையுள்ளதாக ஆக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு கேரக்டருக்கும்  நபர்களைத் தேர்வு செய்யும் பணியை இயக்குநர் நவீன் மிகுந்த சிரத்தையோடு, மிக மிக கவனமாக செய்திருக்கிறார்.   இறுதிக் காட்சிகள் எதிர்ப்பார்த்தபடியே இருந்தாலும் கூட, இது ஏற்கனவே பார்த்ததுதானே, அல்லது தெரிந்ததுதானே என்ற அயர்ச்சி சிறிதும் ஏற்படவில்லை.
22
சென்ட்ராயன், நவீன்,  ரஜாஜ் மற்றும் குபேரன் சிறப்பாக நடித்துள்ளார்கள் என்று சொல்வது, அந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதாகும். ஃபோனில் பேசும் சிறு குழந்தை, நாய் உள்ளிட்ட அனைவரையும் இத்தனை சிறப்பாக நடிக்க வைத்த பெருமை, இயக்குநர் நவீனையே சாரும்.   குறிப்பாக சென்ட்ராயனிடம் இயக்குநர் வாங்கிய வேலை மலைக்க வைக்கிறது. சென்ட்ராயனுக்கு இது ஒரு life time character. பாத்திரப் படைப்புக்கு அடுத்ததாக, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இசை.  க்வென்டின் டாரன்டினோ திரைப்படங்களில் இசைக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இத்திரைப்படத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த திரைக்கதையை மேலும் செழுமையூட்டும் விதத்தில் இசையமைத்துள்ளார் நடராஜன் சங்கரன். இவரும் இயக்குநர் நவீனும் ஒன்றாக பணியாற்றி, ஒன்றாக வேலையை விட்டு, ஒன்றாகவே திரைத்துரையில் வாய்ப்பு தேடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ள வசனங்களை தனித்தனியாக சொல்ல இயலாது.  அது படம் பார்க்கும் அனுபவத்தை குறைக்கும். திரைப்படம் முடிந்து வருகையில் தமிழில் ஒரு அற்புதமான இயக்குநர் உருவாகியுள்ளார் என்ற நிறைவு இருந்தது.
இயக்குநர் நவீன் பற்றி கொஞ்சம்..
ஒரு பொறியாளர்.  தமிழகத்தில் உள்ள ஈஐடி பாரி நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர் சில காலம் டெல்லியில் ஹார்லிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.  நல்ல சம்பாத்தியம் இருந்தும், சினிமாவின் மீதான தணியாத காதலால் குடும்பக் கடமைகளை முடித்து விட்டு தமிழ்த் திரையுலகை நாடி வருகிறார்.   ஒரு சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பின்னர், தனியாக கதை பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட்தான் மூடர் கூடம்.  இப்படிப்பட்ட கதையை சில தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.  பல தயாரிப்பாளர்கள் என்ன சார் இது.. காமெடி படம்னு சொன்னீங்க.. காமெடியே இல்ல ? என்று கேட்டிருக்கிறார்கள்.  சிலர், சார்… எடுத்தவுடனே, டாஸ்மாக் பார்லயே குடித்து விட்டு டான்ஸ் ஆடுவது போல ஒரு குத்துப்பாட்டு வையுங்களேன் என்றிருக்கிறார்கள்.   தன் கதையை சிதைக்க விரும்பாத நவீன், தன் சகோதரி, அவர் கணவர் ஆகியோரிடம் பணம் வாங்கி படத்தை சொந்தமாக எடுப்பது என்று முடிவு செய்கிறார்.  படத்தை எடுக்கத் தொடங்கியதும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.   பண நெருக்கடி மிரட்டுகிறது.  ஆனால் அதிர்ஷ்ட வசமாக நண்பர்கள் செய்த உதவியால் ஒரு வழியாக படத்தை முடிக்கிறார்.  அவர் இயக்குநராக பணியாற்றிய பாண்டிராஜே இந்தப் படத்தை வெளியிட முடிவெடுத்து வெளியிட்ட பிறகுதான் இன்று வெள்ளித்திரையில் மிளிர்கிறது மூடர் கூடம்.
25
க்வென்டின் டாரன்டினோவின் பல்ப் ஃபிக்ஷன் திரைப்படத்தில் முதல் காட்சியில் பம்ப்கின் என்ற பாத்திரமும் ஹனி பன்னி என்ற பாத்திரமும் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.  அந்தக் காட்சியில் மொத்தம் நாற்பது வார்த்தைகள் வந்தால் 35 வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக இருக்கும்.  குற்றத்தில் ஈடுபடும் நிழல் உலகத்தைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.  இதே போல கஞ்சா வியாபாரம் செய்யும், சென்ட்ராயன் கஞ்சா வாங்க வருபவர்களிடம் இப்படித்தான் பேசுகிறான்.  ஆனால், அந்த வார்த்தைகள் அனைத்தும், ம்யூட் செய்யப்பட்டிருக்கின்றன.  அதே போல, சென்ட்ராயனை அறிமுகப்படுத்தும் காட்சியில் சென்ட்ராயன் கஞ்சா சிகரெட்டை தயார் செய்யும் காட்சியும் அப்படியே தூக்கப்பட்டிருக்கிறது.
ஏன் இந்த சமரசங்கள் செய்யப்பட்டன ?  படத்துக்கு “யு” சர்ட்டிபிகேட் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை சமரசம்.
ஏன் யு சர்ட்டிபிகேட் வேண்டும் ?  யு சர்ட்டிபிகேட் கிடைத்தால்தான் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும்.   இப்படி வரிவிலக்கு கிடைப்பதற்காக பல்வேறு சமரசங்களைச் செய்யும்படி படைப்பாளிகள் நெருக்கடிக் குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.இது   மூடர் கூடம் இயக்குநர் நவீனும் இது போன்ற நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏ சர்டிபிகேட்டோடு எவ்வித வெட்டுக்களும் இல்லாத படமாக இது வந்திருக்க வேண்டும்.
courtesy: ASNR

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

ஒண்டிக்கட்டை இதிகாசம்

சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...

பெண் பெரியார்.

யார் இந்த பெண் பெரியார் என்று உங்களுக்கு வியப்பு ஏற்படக் கூடும். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள சசிகலாவைத்தான் பெண் பெரியாராக உருவாக்க ஊடகங்கள் முயன்று வருகின்றன.   இப்படி இவரை பெண் பெரியாராக்க உருவாக்குவதில் பார்ப்பன ஊடகங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன என்பதுதான் விசித்திரமான செய்தி. தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பை மீண்டும் கிளப்ப ஒரு பெருங்கூட்டமே போராடி வருகிறது.   ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் இறுதி அஞ்சலி வரை, பூலான் தேவி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எப்படி இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஜெயாவின் அண்ணன் மகள் தீபாவைக் கூட உள்ளே விடாமல் ஆக்ரமித்தனர் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். இப்போது அடுத்த கட்டமாக அதிமுகவுக்கு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கி அவரை முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் கணவர் நடராஜன் எடுத்து வருகிறார். சசிகலா தலைமையிலான மன்னார்குடி கும்பல் தொண்ணூறுகள் முதல் அடித்து வந்த கொள்ளை என்ன என்பதை நாடே அறியும்.  சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட பெரும்பாலான வேட்பாளர்களி...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக‌  ‘கேப்டன்  –  அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது  தமிழில்   மொழிபெயர்த்தால்  ‘ நோ   ப்ரா   டே ’.  இருவரும் மார்புக்கச்சை   அணியாமல்   ஏகப்பட்ட   போட்டோக்கள்   எடுத்து ,  ட்விட்டரில்   பகிர்ந்து   தங்களது ஃபாலோயர்களை   ஏகத்துக்கும்   குஷிப்படுத்தினார்கள் .   எலிசபெத்   மகாராணி   கூட  ’ நோ   ப்ரா   டே ’ குறித்து   ஏதோ   ட்விட்   போட்டிருக்கிறார்களாம் . இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்க...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

வசீகர எழுத்துக்காரன்

சரவணன் சந்திரன்(எழுத்தாளர்) சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது சரவண சந்திரனின் பன்முக படைப்புகள் தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு. இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை  ...