முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிக சம்பளம்: கலாநிதி மாறன் முதலிடம்..!

 
 குபேர தம்பதிகள்:சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் அவருடைய மனைவி காவேரிகலாநிதிமாறன்.

அதிக சம்பளம் பெறும் சிஇஓ பட்டியலில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். கடந்த நிதி ஆண்டில் இவர்களது ஆண்டு சம்பளம் ரூ. 56.25 கோடியாகும். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜின்டால் ஸ்டீல் நிறுவனத்தின் நவீன் ஜின்டால் ரூ. 54.98 கோடியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். முந்தைய நிதி ஆண்டில் (2011-12) ஜின்டால் பெற்ற சம்பளம் ரூ. 73.42 கோடியாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்துக்கான போட்டி கலாநிதி மாறன்,  ஜின்டால் இடையேதான் உள்ளது.

ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சம்பளம் ரூ. 49.62 கோடி. ஹீரோ குழுமத்தின் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் ரூ. 32.72 கோடி, பவன் முன்ஜால் ரூ. 32.80 கோடி மற்றும் சுநீல் முன்ஜால் ரூ. 31.51 கோடியோடு அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளனர். ராம்கோ சிமென்ட்ஸ் பிஆர்ஆர் ராஜா, மாருதி சுசுகி முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷின்ஸோ நகானிஷி, டிவிஸ் லேப் ரவி கே திவி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பிஜிஆர் எனர்ஜி பிஜி ரகுபதி, டாடா மோட்டார் முன்னாள் தலைவர் கால் பீட்டர் பார்ஸ்டர் ஆகியோர் இம்முறை பட்டியலில் இடம்பெறவில்லை.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி ஆனந்த் மஹிந்திரா. சுநீல் மித்தல் ஆகியோர் அதிகம் சம்பளம் பெறுவோர் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.



கலாநிதிமாறன் தனது குடும்பத்துடன்:மகள் காவ்யா,மனைவி காவேரியுடன் கலாநிதிமாறன்.



Companies in which Kalanithi has influence:

Kal Publications
Udaya FM
Sun 18 Media Services South Co.
Kal Comm
Kal Airways
Kal Holdings
S&S Textiles
D.K. Enterprises
Kungumam Nithyagam
Kal Investments (Madras)
Kal Media Services
Kal Cables
Sun Business Solutions
South Asia FM
Kal Radio
AV Digital Networks (Hyderabad)
Deccan Digital Networks (Hyderabad)
Metro Digital Networks (Hyderabad)
Asia Radio Broadcast
Digital Radio (Kolkata) Broadcasting
Digital Radio (Delhi) Broadcasting
Digital Radio (Mumbai) Broadcasting
Optimum Media Services
Pioneer Radio Training Services
South Asia Multimedia
Like ·  · Share ·




















































கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

அணையாத காதல் தீ

சாதி என்னவெல்லாம் செய்யும்? ஊரைக் கொளுத்தும்; கௌரவக் கொலை செய்யும்; காதலித்து மணந்தவர்களைப் பிரிக்கும். சினிமாவில் மட்டுமே பார்த்த இதுபோன்ற காட்சிகளெல்லாம் அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் அரங்கேறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள்.  தர்மபுரி நத்தம் தலித் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனை திவ்யா என்கிற வன்னிய சாதியைச் சேர்ந்த பெ ண் காதலித்து மணந்ததைப் பொறுக்காமல் மூன்று தலித் கிராமங்கள் எரிக்கப்பட்ட அந்த நவம்பர் 7ம் தேதிக்குப் பின் நிகழ்ந்தவை ஊரறியும். அதன் பின்னர் தொடர்ச்சியாக நிகழ்ந்த கௌரவக் கொலைகள், தலித் பெண்கள் மீதான தாக்குதல்கள், சாதியின் பெயரால் நிகழும் தாக்குதல்கள், குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள் என்று மரக்காணம் வரை நீண்டது பிரச்சனை. மாமல்லபுரம் வன்னியர் விழாவில் பேசியதற்காக ராமதாஸ், காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வளவு நடந்தபோதும் திவ்யாவும் இளவரசனும் எங்கிருக்கிறார்கள் என்கிற விவரம் மட்டும் யாருக்கும் தெரியவில்லை. திவ்யாவின் தாய் தேன்மொழி தன் கணவரின் மரணத்துக்கு இளவரசன் தான் காரணம் என்றும் தன் மகளை கடத்திவிட்டதாகவும்  தொடு...

சில நிதர்சனங்கள்:மார்பு

குனிந்து எடுத்த நொடியில்... உள்ளாடையில்(பிரா) படிந்துவிட்டிரு ந்தன சில பார்வைகள்... கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில் எங்கோ ஒளிந்திருந்த நாம் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை தேடிக் கொண்டிருந்தன சில பார்வைகள்... கை வைத்து மறைப்பதைக் கூட அவமானப்பட்டுச் செய்கிறார்கள் “முன்னாலே போமா” என்று பின்னாலே தடவிவிட்டு போகும் நடத்துனர் கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால் மகளிர் இருக்கையின் இடுக்குகளில் கூனிக்குறுகி  அவரைப் போலவே சில திரௌபதிகள்... ஒவ்வொரு நிறுத்தத்திலும் மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை... ஆண்டவா! எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்கள்..., பாவம்..... ஆனால் அடுத்த பிறவியில்பெண்களுக்கு வைத்து விடாதே மார்பகத்தை.

பத்தி எழுதுவது எப்படி?

சமகால இதழியலில் எல்லோரும் எழுத்து கூட்டி பத்தி எழுதுகிறார்கள். எல்லோரும் பத்தி கட்டுரைகளை தொகுப்பாக்குகிறார்கள். ஆனால் பத்தி எழுத்தாளர்களில் எத்தனை பேர் என்னைப் போல் பிரபலத்தை அனுபவிக்கிறார்கள்? நான் பல முக்கிய நாவல்களை எழுதியிருக்கிறேன். குழந்தைகளைக்கூட விட்டு வைக்காமல் அவர்களுக்கும் புத்தகம் எழுதியிருக்கிறேன். எனினும் எனது பிரபலத்திற்கு பத்திதான் காரணம். குறைந்த உழைப்பில் நிறைந்த வருமானம் பத்தி எழுத்தில்தான் கிடைக்கிறது. இந்தப் பிரபலம் எல்லோருக்கும் வாய்க்காத காரணம் அவர்கள் நான் அல்ல என்பதே. எனது வெற்றியால் உந்தப்பட்டு பத்தி எழுத துவங்குபவர்கள் என்னைப் போலவே எழுதினால் ஓரளவு வெற்றியடையலாம். இப்போது அரிச்சுவடியை கற்போமா? முதலில் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளுடன் தொடங்க வேண்டும். ஆனால் ஆழமாக இருந்துவிடக்கூடாது. அது பத்தி எழுத்துக்கு எதிரானது. அந்த வரிகளில் இல்லாத கருத்தை விளக்கிசொல்ல சொந்த அனுபவத்திலிருந்து சப்பையான ஒரு சம்பவத்தை நினைவு கூற வேண்டும். அது சமீபத்தில் நடந்ததாக இருப்பது நல்லது. சம்பவத்தை கூறி முடித்தபின் மீண்டும் ஏதோ ஆழமாக சொல்ல முயல்வது போன்ற வரிகளில் முட...

ஜெயலலிதா- துயரம் நிரம்பிய சகாப்தம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5ம் தேதியன்று இரவு 11.30 மணிக்குப் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக்குறிப்பு கூறியது. அவரைப் போலவே, அவருடைய ஆட்சிக்காலத்தைப் போலவே அவருடைய மரணமும் கேள்விக்குரியதாய் ஆகியிருக்கிறது.  72 நாட்கள் மருத்துவமனை வாசம், எவராலும் பார்க்க முடியாமல் அவரை வைத்திருந்தது என்று எல்லாமே மர்மமுடிச்சுகளாய் இன்று தமிழக மக்கள் முன் கேள்விகளாய் நிற்கின்றன. ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளில் பலர் எழுதியதைக் காண முடிந்தது. உண்மையில் ஜெயலலிதா இரும்பு மனுஷியா?  ஆம்! அவர் இரும்பு மனுஷிதான். எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வண்டியிலிருந்து ஜானகியின் உறவினர் நடிகர் தீபனால் இறக்கிவிடப்பட்ட ஜெயலலிதா பின்னாளில் எம்.ஜி.ஆரின் கட்சிக்குப் பொதுச் செயலாளரானார். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை செய்து முடிக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. அதனால்தான் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருக்கிறார்.  ஆனால், அவர் எதையெல்லாம் நினைத்தார், செயல்படுத்தினார். அந்த இரும்பு மனம் கொண்டு அவர் எப்படிச் செயலாற்றினார் என்பதை...

நான் விரும்பும் அரசியல்!

*அரசியலுக்கு வருபவர்களுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கலாம்? குறைந்த பட்சம் கல்லூரி பட்டம் அல்லது பட்டய கல்வி படித்திருப்பது நல்லது.(கல ்வி தகுதி இல்லாதவர்களுக்கு அவர்களின் மக்கள் நலன் சார்ந்த அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் இந்த விதியை சற்று தளர்த்தலாம்) *யார்,எப்போது அரசியலுக்கு வரலாம்? அரசியலுக்கு வருபவர்கள், தங்கள் குடும்ப செலவுகளை,சுயமாக சமாளிக்கும் அளவுக்கு பொருளாதார பின்புலங்களை தயார் செய்த பிறகு பகுதி நேர அரசியலில் ஈடுபடலாம். நானும் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி கொண்டு, எந்த வேலைகளும் செய்யாமல், ஊர் பணத்தை தின்று கொழுக்கவோ,மக்கள் வரிப்பணத்தை களவாடவோ அரசியலுக்கு வருவதற்கு பதிலாக அரசியலுக்கு வராமலேயே இருக்கலாம்.மக்கள் பணத்தை கொள்ளையடித்து, என்ன மக்கள் நலன் சார்ந்த அரசியல் செய்ய போகிறார்கள்? மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்பது,மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கான தீர்வை பெற்று தர வேண்டும்.சம்மந்தப்பட்ட அதிகாரிகளை ,ஆட்சியாளர்களை சந்தித்து பிரச்சினை குறித்து பேசி தீர்வை எட்ட வேண்டும். இங்கே தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சியினர் செய்வது போல, எந்த வேலைக்கும் போகாமல், வெள்ளை...

The hunt for Amma’s assets

COVER STORY By Lakshmi Subramanian  |  Green, with a hint of red: Kodanad estate was recently in the news when a security guard there was murdered during a heist | Bhanu Prakash Chandra Jayalalithaa’s death triggered a battle for assets worth thousands of crores. While Sasikala and her family want to have it all, Jayalalithaa’s niece and nephew have staked their claim. Now, with the Kodanad murder adding mystery to the mix, THE WEEK visits some of the high-profile properties that are part of Jayalalithaa’s legacy Though it is famous as Jayalalithaa’s abode, she holds shares worth only Rs 3.13 crore in the Kodanad estate. “The value of the properties was so huge that the [Mannargudi] family members themselves could not ascertain it.” - A. Shankar, RTI activist Though it is famous as Jayalalithaa’s abode, she holds shares worth only Rs 3.13 crore in the Kodanad estate. “The value of the properties was so huge that the [Mannargudi] family members t...

சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்

அதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார். ஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்த சசிகலாவின் வாழ்க்கை திரு மணத்துக்குப் பிறகு மாறத் தொடங்கியது. திமுக பின்னணி கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நடத்தி வைத்தார். நடிகையாக தமிழ்த் திரையுலகில் ஜொலித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆதரவுடன் தீவிர அரசியலில் இறங்கி னார். 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட் டார். அரசியலுக்கு புதியவரான ஜெய லலிதாவுக்கு ஆலோசனைகள் வழங்க வும், அரசிய...

புதிய தலைமுறை August 24, 2012

புதிய தலைமுறை பிறந்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இன்று இரண்டாமாண்டு தொடக்கம்! வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு நன்றி! இன்று முழுவதும் சுவாரஸ்மான பல நிகழ்ச்சிகள் வரிசைகட்டுகின்றன. ஒரு தகவல் எப்படிச் செய்தியாகிறது, செய்தியாளர்களின் அனுபவங்கள், ஓராண்டில் வந்த வரைகலைப் பதிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன நடக்கிறது, செய்திசேகரிக்கச் செல்லுமிடங்களில் நிகழ்ந்த குறும்பு நிகழ்வுகள் அனைத்தும் ஒளிபரப்பாகின்ற ன. நீதிமன்றச் செய்தியாளர் சுப்பையாவின் சேட்டைகள் அமோகம்!!! இப்படி அனைத்துமே வெளிப்படையாக ஒளிபரப்பாவதால் நானும் சற்று மனம் திறக்கிறேன் இங்கு! முகநூல் பக்கங்களில் என் இதயம் தேடும் நண்பர்களே ! வாழ்க்கையை எழுதிப்பார்க்கும் எண்ணம்வந்ததுண்டு பலநாள். இன்றுதான் எழுத்துக்களாய் உதிர்கின்றன! வார்த்தைகளை வடிவாக அளந்துவைக்கும் மனநிலையிலில்லை இப்போது. எழும் எண்ணங்கள் எழுத்துக்களாய் என்னிடம் சரிபார்த்துக்கொள்ளாமல் விரல்வழி இறங்கி இங்கு அமர்கின்றன. இருகண்களால் மட்டுமல்ல இதயத்தாலும் படித்துவிடுங்கள். புரிந்துவிடும். இல்லையெனில் உதிரிப்பூக்களாய்த்தானிருக் கும். தொடுத்த சரமாயிராது. சிவகாசியில் தாமரை என்ற தொல...

Hurray…Superstar Rajini in India Today’s Top 50 Powerlist 2009!! -

இந்தியா டுடே இதழ் வருடா வருடம் இந்தியாவின்  டாப் 50 பலம் படைத்தவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் இந்த ஆண்டும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். இந்தியா முழுவதுமிலிருந்து பெரும் தொழிலதிபர்கள், திரைத் துறை வல்லுனர்கள், நடிகர்கள், மீடியா சக்கரவர்த்திகள், விளையாட்டுத் துறையினர், சமூக ஆர்வலர்கள், ஆன்மீக குருக்கள் மற்றும் பலர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள். (அரசியல் பிரபலங்கள் மற்றும் அரசியல் சக்திமிக்கவர்கள் பட்டியல் தனி). சென்ற வருடம் சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் 28 வது இடம் பிடித்திருந்தார். அதற்கு பிறகு ஏற்பட்ட குசேலன் சரிவுக்கு பிறகு கூட சூப்பர் ஸ்டார் இந்த வருடம் அதே இடத்தை பிடித்திருக்கிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாகும். இது ஒரு பெரும் சாதனையாகும். யாருடைய அபிப்பிராயம் முக்கியம்…? நம்மைப் பற்றி நமது நண்பர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை விட நம் எதிரிகள் வைத்திருக்கும் அபிப்பிராயம் தான் முக்கியம். ஏனெனில், அவர்களுக்கு நம்மை ப்ளீஸ் செய்யும் அவசியம் கிடையாது. கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டாரை கடுமையாக இந்தியா டுடே விமர்சித்து வருவது நம் அனைவருக...

மாலைகளும் வசைகளும்

- சரவணன் சந்திரன்    எதிர்ப்பு அரசியலில் புடம் போடப்பட்ட போர்க்குணமிக்க ஒரு தலைவன் காலப்போக்கில் மிதமான அணுகுமுறைக்கு மாறும்போது கிடைக்கும் தோற்றம்தான் தற்போதைய தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதியின் சித்திரம். எதற்காகவெல்லாம் அவர் ஆவேசப்பட்டு போராட்டத்தில் குதித்தாரோ, அதற்கெல்லாம் இப்போது அமைதி காக்கிறார். தன் கூடவே பிறந்த போர்க்குணத்தை நிகழ்கால அரசியல் யதார்த்தங்கள் மென்று விழுங்குவதைக் கண்டு புழுங்குகிறார் என்கிறார்கள் அவருடன் இருப்பவர்கள். அவரது அரசியல் வரலாற்றில் அவர் பெற்றதைவிட இழந்தது அதிகம். விடாப்பிடியாக மத்திய அரசால் அவரது ஆட்சி இரண்டுமுறை கலைக்கப்பட்டிருக்கிறது. 1976 மிசா காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு அவருடைய இயக்கத்தின் தோழர்கள் பலர் சித்திரவதைக்குள்ளானார்கள். இடையில் 12 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பில் அவர் இல்லாமல், அரசியல் வனவாசம் இருந்தார். 1984, 1987, 1991 முறையே தலைவர்கள் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், ராஜீவ்காந்தி மறைவின் போதெல்லாம் அவர் பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்பட்டார். அவருடைய தோழர்களான உடன்பிறப்புகள் தாக்கப்பட்டனர். இவ்வளவு நெருக்கடியான த...