இந்தியா டுடே இதழ் வருடா வருடம் இந்தியாவின் டாப் 50 பலம் படைத்தவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் இந்த ஆண்டும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். இந்தியா முழுவதுமிலிருந்து பெரும் தொழிலதிபர்கள், திரைத் துறை வல்லுனர்கள், நடிகர்கள், மீடியா சக்கரவர்த்திகள், விளையாட்டுத் துறையினர், சமூக ஆர்வலர்கள், ஆன்மீக குருக்கள் மற்றும் பலர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள். (அரசியல் பிரபலங்கள் மற்றும் அரசியல் சக்திமிக்கவர்கள் பட்டியல் தனி). சென்ற வருடம் சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் 28 வது இடம் பிடித்திருந்தார். அதற்கு பிறகு ஏற்பட்ட குசேலன் சரிவுக்கு பிறகு கூட சூப்பர் ஸ்டார் இந்த வருடம் அதே இடத்தை பிடித்திருக்கிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாகும். இது ஒரு பெரும் சாதனையாகும். யாருடைய அபிப்பிராயம் முக்கியம்…? நம்மைப் பற்றி நமது நண்பர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை விட நம் எதிரிகள் வைத்திருக்கும் அபிப்பிராயம் தான் முக்கியம். ஏனெனில், அவர்களுக்கு நம்மை ப்ளீஸ் செய்யும் அவசியம் கிடையாது. கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டாரை கடுமையாக இந்தியா டுடே விமர்சித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்க நமது மன்றங்களின் பலம் மற்றும் சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு பற்றி அவர்கள் கூறுவது கவனிக்கத் தக்கது தானே? இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள திரைத்துறையினரில் விளம்பரங்களில் (Commercial advertisements) எவற்றிலும் நடிக்காதது சூப்பர் ஸ்டார் மட்டுமே. அப்படியிருந்தும் அவர் இந்த பட்டியலில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரும் சாதனையாகும். தானுண்டு தன் வேலையுண்டு என்று பணியாற்றும் கடமை வீரன் அவர். அவரை தேடி இத்தகு சிறப்புக்கள் வருவது இயல்பு தானே…? மேற்படி டாப் இந்தியா 50 பட்டியலில் சூப்பர் ஸ்டார் இடம்பெற்றிருப்பது ஏன் என்ற காரணத்தியா இந்தியா டுடே விளக்கியுள்ளது. (இணைக்கப்பட்டிருக்கும் கட்டிங்கை பார்க்க)
‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...




கருத்துகள்
கருத்துரையிடுக