முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமக்கிழத்திகள்









===============
Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women!
முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத்துவம் காண‌ முடியும், திருப்தி கொள்ள முடியும் எனக் கேட்கும் ஒரு நவீனச் சிந்தனையுடைய திருமணமான பெண் கலிந்தி. தான் விரிவுரையாளராக இருக்கும் வகுப்பின் மாணவனுடனே உறவு கொள்கிறாள். கணவன் அருகில் இல்லை என்பதால் ஊர் மேய்கிறாள் என்று இதை எளிமையாகச் சுருக்கிப் பேச முடியும் என்றாலும் தன் செய்கை குறித்து அவளுக்கென ஒரு தர்க்கம் இருக்கிறது, அதை இடையிடையே கேமெரா பார்த்துப் பேசுகிறாள். அந்தப் பகுதிகள் யாவும் ரசனையானவை. அக்காட்சிகளில் ராதிகாவின் நடிப்பு அள்ளுகிறது.
ஆனால் கலிந்தி பேசும் தர்க்கத்திற்கும் அவள் நடந்து கொள்வதற்கும் சம்மந்தமே இருப்பதில்லை. உறவு கொண்டதைக் காரணமாக்கி மாணவன் தன் மீது ஆதிக்கம் செலுத்த முயலக்கூடாது என எதிர்பார்க்கிறாள் (உதாரணம்: அதாவது பிற ஆண்களுடன் அவள் பேசக்கூடாது என்று சொல்வது, மற்ற ஆண்களுடன் அவள் பேசுவதைப் பகிர வேண்டும் என எதிர்பார்ப்பது போன்றவை). ஆனால் உண்மையில் அவள் தான் அதை அவனுக்குச் செய்கிறாள். மாணவனின் வீட்டில் கண்டெடுக்கும் தன் பேண்டீஸையே யாருடையது என அவனைச் சந்தேகப்பட்டு அடிப்பது அதன் உச்சம். ஆனால் அதன் பொருள் மாணவன் மீது அவளுக்குக் காதல் என்பதில்லை. அவள் தன் கணவனை ஏமாற்றுகிறாள் என்பதுமில்லை (எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்து கொள்கிறாள்.) அவள் தன் மணவாழ்க்கையில் நீடிக்கவே விரும்புகிறாள். இப்படியான முரண்பாடுகளின் மூட்டையாக கலிந்தி பாத்திரம் இருக்கிறது ('உன்னாலே உன்னாலே' சதா போல்).
யோசித்துப் பார்த்தால் பெரும்பாலும் பெண்கள் இப்படியானவர்களே எனத் தோன்றுகிறது. தம் சொல்லும் செயலுக்கும் சம்மந்தமில்லாத குழம்பிய மனநிலையில் உள்ள‌வர்கள். குறிப்பாய் ஆண்களுடனான உறவுகளில் இப்படியான விநோத முரண்கள் நிரம்பியிருக்கும். அதை உடைத்துப் பேசுகிறது என்பதால் இதை ஓர் ஆணாதிக்கப் பிரதியாகவும் வாசிக்கலாம். இப்பகுதியின் வசனங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. ராதிகா ஆப்தேவும் அனுராக்குடன் இணைந்து எழுதி இருக்கிறார்!
படத்தில் ராதிகா பேசும் கடைசி வசனம் (பாகல் ஹே க்யா? ஷாதி ஷூதா ஹே மே!) மீனம்மாவின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையின் இறுதிப்பகுதியை நினைவூட்டியது. மதுவும் கலிந்தியும் ஒரே மாதிரி குழப்பம் கொண்ட பெண்கள் தாம்!
ஸோயா அக்தர் இயக்கியிருக்கும் இரண்டாம் பகுதி ஒரு பேச்சிலருக்கும் அவன் அடுக்கக வீட்டில் வேலை செய்யும் சுதா என்ற பெண்ணுக்கும் நடக்கும் உடலுறவில் தொடங்குகிற‌து. அவள் அவளை உடலுறவுக்காக மட்டுமே பயன்படுத்துகிறான், அதைத் தாண்டி அவள் மீது எந்தச் சிறுபிரியமும் கொண்டவன் இல்லை என்பது அடுத்து வரும் காட்சிகளில் தெரிய வருகிறது. ஆனால் அவளுக்கு அது ஜீரணிக்க முடியாததாய் இருக்கிறது. அதைக் கடந்து தன் இயல்பு வாழ்க்கையில் கரைவது தான் கதை. சுதாவாக வரும் பூமி பெட்னேகர் கொஞ்சமும் மிகையின்றி ஒரு பணிப்பெண்ணாக‌ அசத்தலாக நடித்திருக்கிறார். நான்கு படங்களில் எனக்கு மிகப்பிடித்தது இதுவே. காரணம் இதில் தான் வெறும் அறிவுப்பூர்வக்கதை சொல்லலாக மட்டும் எஞ்சாமல் அந்தப் பெண்ணின் உண்மையான மற்றும் நியாயமான உணர்வுகள் நம்பகத்தன்மையுடன் பார்வையாளனுக்குக் கடத்தப்படுகிறது. அளவான வசனங்கள், கச்சிதமான கலவிக்காட்சி என கலாப்பூர்வமாகவும் நிறைவான படம். படத்தின் இயக்குநர் ஒரு பெண் என்பதும் இங்கே நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை.
அடுத்தது திபாகர் பேனர்ஜி இயக்கியிருக்கும் படம். மனீஷா கொய்ராலா நடித்திருக்கிறார். மத்திய வயதுப் பெண் ரீனா தன் கணவனின் நெருங்கிய சினேகிதனுடன் சில ஆண்டுகளாகக் கள்ள உறவில் இருக்கிறாள். கணவன் அவளை ஒரு மனைவியாகப் பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளின் தாயாக மட்டுமே பார்க்கிறான் என்பதும் அத்திருமணத்தின் பொருட்டு தன் வாழ்வின் லட்சியங்களைத் தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது என அவள் கருதுவதே காரணம். ஒரு நாள் அவள் கணவனுக்கு அவள் மீது சந்தேகம் வருகிறது. அதைக் கையாள்வதோடு எப்படி அதைத் தன் எதிர்கால நலனுக்கும் பயன்படுத்திக் கொள்கிறான் என்பது தான் கதை. Shrewd என்பார்கள். அது மாதிரி ஒரு புத்திசாலித்தனம் ரீனாவின் பாத்திரத்தில் வெளிப்படுகிறது படத்தின் பிற்பகுதியில். முற்பகுதி நமக்கு ஏற்படுத்தும் அவள் குழப்பமானவள், பலவீனமானவள், திக்கற்றவள் என்ற பிம்பம் கடைசியில் இவ்வாறு நொறுங்குகிறது. 'வெற்றி' என்ற ஜெயமோகனின் சிறுகதையை இது நினைவூட்டியது. அதன் நாயகி இப்படித்தான் நுட்பச்சதி செய்வாள். அவள் கணவனிடமே திரும்புவதும் அதன் பின்னிருக்கும் உணர்வுகளும் மீனம்மா கயலின் 'அப்பாற்பட்ட மழை' சிறுகதையை ஞாபகப்படுத்தியது.
கடைசியாய் கரண் ஜோகர் இயக்கியிருக்கும் படம். திருமணமான ஒரு பெண் கலவியில் ஈடுபடுவதன் நோக்கம் குழந்தை பெறுவது மட்டுமல்ல, அவள் உடலின்பத்துக்கும் தான் என்ற கருத்தைச் சொல்கிறது. சந்தோஷம் குழந்தை நான்கு இயக்குநர்களில் இவர் மட்டுமே வெகுஜனக் கதை சொல்லி என்பதால் இது மிக நேரடியான கதையாய் இருக்கிறது. அதுவும் வழக்கமான பாலிவுட் கதைகூறல் மொழி. இதில் பார்வையாளன் யோசிக்கவென்று ஏதும் இல்லை. உதாரணமாய் மேலே படம் என்ன சொல்கிறது என்று குறித்திருக்கிறேனோ அதையே நாயகி வசனமாய்ப் படத்தின் இறுதியில் பேசி விடுகிறாள். அத்தனை வெளிப்படையான படம்! வீட்டில் பார்த்து வைத்து திருமணம் செய்து கொள்ளும் பள்ளி ஆசிரியை மேகாவுக்குக் கணவனுடனான கலவி எப்போதும் ஐந்து விநாடிகள் தான் நீடிக்கிறது. அவள் உச்சம் என்பதை அடைவதே இல்லை. பின் தோழியின் (நேகா தூபியா) அறிவுரைப்படி மின்னணு வைப்ரேட்டரை நாடுகிறாள் (அனேகமாய் வைப்ரேட்டரைத் திரையில் காட்டிய முதல் இந்தியத் திரைப்படம் இதுவென நினைக்கிறேன்). அதன் விளைவுகள் என்ன என்பது மீதிக்கதை. மேகாவாக நடித்திருக்கும் கியாரா அத்வானி பேரழகி. நடிப்பும் வருகிறது. குறிப்பாய் கிழவி டிவி ரிமோட் இயக்கும் காட்சியில்!
அனுராக் காஷ்யப் - ஓக்கே | ஸோயா அக்தர் - நன்று | திபாகர் பேனர்ஜி - சுமார் | கரண் ஜோகர் - சுமார் | Overall - ஓக்கே

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

அம்போவான கிம்போ

BY  JEEVANAND RAJENDRAN இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றனர். ஆன்மீக வியாபாரத்தோடு நிற்காமல், அந்த ஆன்மீக பாப்புலாரிட்டியை மேலும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபடுபவதில் முன்னணியில் இருப்பவர்கள் இருவர்.  ஒருவர் ஜக்கி வாசுதேவ்.  மற்றொருவர் பாபா ராம்தேவ்.  பாபா ராம்தேவின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ராண்ட்தான் பதஞ்சலி. அண்ணாமலை படத்தில் ரஜினியின் வளர்ச்சியை விட பிரம்மாண்டமானது பதஞ்சலியின் வளர்ச்சி. நூடுல்ஸ் முதல் ஆட்டா வரை அனைத்து வித மளிகை வியாபாரத்தில் பன்னாட்டு முன்னணி நிறுவனங்களை மிக குறுகிய காலத்தில் பின்னுக்கு தள்ளியது.  இன்று பதஞ்சலி நிறுவனம் உலகளாவிய மிகப் பெரிய ப்ராண்ட்.  கோடிகளில் திளைக்கும் ஒரு நிறுவனம். பிரபல சர்வதேச ப்ராண்டுகள், ஒர...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. ” என் பெண் வருகிறாள் ” என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில் , ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து ; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த , குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ” ஹாய்! ” என்றாள். ” என்னைத்தெரியுமா ?” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு. ” சொல்லுங்க ” என்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர் , ” இவருதான் ...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest