முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுகப் புரட்சி

மிகப் பெரிய வெற்றியாக அமைந்திருக்க வேண்டிய போராட்டம் மிக கரும்புள்ளியோடு முடிவடைந்திருக்கிறது.  ஜல்லிக் கட்டுக்கான இந்த இளைஞர்களின் போராட்டம், வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டமா என்றால் நிச்சயமாக இது வரலாற்று சிறப்பு மிக்க போராட்டமே.   தன்னெழுச்சியோடு அரசியல் கட்சிகளின் தலைமையின்றி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தமிழக இளைஞர்கள் நடத்தி உலகையே தமிழகத்தை நோக்கி திரும்ப வைத்துள்ளனர். அப்படி உலகை வியக்க வைத்த ஒரு போராட்டம், இப்படித்தான் முடியும் என்று பலரும் ஆருடம் கணித்தது போலவே வன்முறையோடு முடிந்துள்ளது.
CHN_2017-01-24_maip3_20

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சம்பிரதாயமான ஆர்ப்பாட்டங்களோடு ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நிறைவடைந்து விடும் என்றே ஆட்சியாளர்கள் கருதினர்.   தடையை மீறி அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டையொட்டி கைது நடவடிக்கைகள் அரங்கேறின.   போராட்டம் தீவிர வடிவம் பெறும் என்பதை அறியாத ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற ஒரே காரணத்தால் அவசர அவசரமாக கைதில் இறங்கினர். மெள்ள மெள்ள ஜல்லிக்கட்டு தமிழர் அடையாளம் என்ற உணர்வு பரவி, தமிழகத்தின் இதர மாவட்டங்களில் போராட்டம் தொற்றிக் கொள்ளத் தொடங்கியது.
சென்னையில் போராட்டம் முழு வீச்சை அடைந்தது.  பெருமளவில் மாணவர்களும், இளைஞர்களும் மெரினாவில் குவிந்தனர். சில நூறாக இருந்த எண்ணிக்கை லட்சங்களை தொட்டது.   மாணவிகள் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.   சென்னை கடற்கரை திருவிழாக் கோலம் பூண்டது.    குடும்பம் குடும்பமாக மக்கள் இந்த மாபெரும் திருவிழாவில் பங்கெடுக்கத் தொடங்கினர்.  ஜல்லிக் கட்டுக்கு என்று குவிந்த கூட்டம், பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, அந்நிய குளிர்பானங்கள், என்று அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கத் தொடங்கியது.     இவை குறித்த முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.
49640-zoknvippsm-1484756705
போராட்டத்துக்காக கூடிய கூட்டத்துக்கு உணவு, குடிநீர் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு வழங்கப்பட்டது.   அடிப்படை சிக்கல்கள் இல்லாமல் இருந்ததால் போராட்டம் தொய்வின்றி நடந்தது.
தொலைக்காட்சி சேனல்கள் போராட்டத்தை கொண்டாடின.   24 மணி நேரமும் இடைவேளையின்றி நேரடி ஒளிபரப்பு செய்தன.   செய்தி ஊடகங்களுக்குள் யார் இளைஞர்களின் நற்பெயரைப் பெறுவது என்பதில் பெரும் போட்டியே நடந்தது.    முதல் இரண்டு நாட்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருந்த தேசிய ஊடகங்கள், வேறு வழியேயின்றி போராட்டங்களை ஒளிபரப்பு செய்யத் தொடங்கின.  நேரில் செல்ல வாய்ப்பு கிடைத்தவர்கள் நேரில் சென்றனர்.   வாய்ப்பு இல்லாதவர்கள் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் ஆர்வத்தோடு போராட்டத்தை பின் தொடர்ந்தனர்.   தமிழகமே திருவிழாக் கோலம் பூண்டது.
தன்னெழுச்சியான மாணவ இளைஞர் போராட்டம் போலத்தான் வெளிப்படையாக தெரிந்தது.   ஆனால், இதில் எப்படி அரசியல் ஆதாயம் அடையலாம் என்று பல்வேறு சக்திகள் ஒரே நேரத்தில் இந்த போராட்டங்களை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின.
ஜெயலலிதாவின் உறவினர் தீபா, எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம் வைத்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதே நாளில்தான் காலை ஏழரை மணி முதல் இளைஞர்கள் மெரீனாவில் கூடத் தொடங்கினர்.    தீபாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பை மறைத்து இருட்டடிப்பு செய்ய, ஆட்சியாளர்களுக்கு மாணவர்களின் போராட்டம் பெரும் உதவியாக இருந்தது. தங்கு தடையின்றி மாணவர்கள் கூட அனுமதிக்கப்பட்டனர்.    ஆனால் இப்படி கூடிய கூட்டம் மக்கள் வெள்ளமாக பெருகும் என்பதை, ஆட்சியாளரும் உணரவில்லை, மன்னார்குடி கூட்டமும் உணரவில்லை.  ஆனால் இதில் தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு உருவாகி உள்ளதாக இரு தரப்புமே உணர்ந்தது.
பன்னீர் செல்வம் தனது ஆளுமையை நிலை நிறுத்தவும், தனது முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும் இதை ஒரு நல்ல வாய்ப்பாக உணர்ந்து, உடனடியாக அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கைகளை தொடங்கினார்.
2009ம் ஆண்டு ஈழப் போராட்டம் நடந்தபோது, அப்போதைய திமுக அரசு, அந்தப் போராட்டங்களை திட்டமிட்டு படிப்படியாக உடைத்து நீர்த்துப் போகச் செய்தது.   பெரும் இயக்கமாக உருவாக இருந்த அந்த இளைஞர் மற்றும் மாணவர் போராட்டம், காவல்துறை உதவியோடு பொய் வழக்களாலும், வன்முறையாலும் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அப்படிப்பட்ட இழிவான முறைகளை பன்னீர்செல்வம் அரசு கையாளவில்லை.  மாறாக மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முனைப்போடு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
டெல்லி சென்று நரேந்திர மோடியை சந்தித்தபோது, அவர் உதவி செய்ய முடியாது என்று கைவிரித்த நிலையில், மாநில அரசின் சட்டத் திருத்தத்துக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை பெற்று வந்தார்.   அதோடு அல்லாமல், டெல்லியிலேயே தங்கி சட்டத்திருத்தத்தை உள்துறை, சட்டம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகங்களுக்கு அனுப்பி அவற்றின் ஒப்புதலை பெற்று, குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்தார்.
சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்பது தெரிந்ததும், தமிழக அரசு சார்பில் ஞாயிறன்று ஜல்லிக் கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   வெளியிடப்பட்ட அவசர சட்டம், விடுமுறை நாளில் பீட்டா உள்ளிட்ட அமைப்பினரால் உச்சநீதிமன்றத்தில் தடை பெற்று விடப்படுமோ என்ற அச்சத்தில், சட்ட நகல் ரகசியமாகவே வைக்கப்பட்டது.   அரசு சார்பில் அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஞாயிறன்று ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.   இந்த இடத்தில் போராட்டம் நிறைவு பெற்று வெற்றி அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.   ஆனால், நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் அறிவித்ததோடு, ஜல்லிக் கட்டு நடத்த விடாமல், பன்னீர்செல்வத்தையும் திருப்பி அனுப்பினர்.
இந்த இடத்தில்தான் சசிகலாவின் கணவரின் நடராஜ தாண்டவம் ஆரம்பமானது.   போராட்டம் நிறைவுக்கு வந்து பன்னீர்செல்வம் தன் பதவியை நிலை நிறுத்திக் கொண்டு விடுவாரோ என்று அஞ்சிய நடராஜன், தனது தமிழ் தேசிய தொடர்புகள் மற்றும் விவி மினரல்ஸின் வைகுண்டராஜனின் உதவியோடு, போராட்டத்தை நீடிக்க செய்தார்.  வைகுண்டராஜனின் நியூஸ் 7, வேலை  அசாதாரணமாக இந்த போராட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது.   ஒரு கட்டத்தில், அவசர சட்டத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று வாட்சப்பில் வந்த வதந்தியை சரி பார்க்க வேண்டும் என்ற அடிப்படை நேர்மை கூட இல்லாமல் அதை அப்படியே செய்தியாக வெளியிட்டது.    இந்த செய்தி இந்நிறுவனத்தின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியது.   இது போராட்டத்தை மீண்டும் தீர்வு காணாமல் நீட்டிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே.
பின்னிருந்து இயக்குவோரின் சதித்திட்டம் புரியாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், வறட்டுத்தனமான வாதங்களோடு போராட்டம் தொடர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர்.   நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.   நிரந்தரத் தீர்வு என்ன என்பதற்கான விளக்கம் அவர்களிடத்தில் இல்லை.    சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத காரணத்தால், அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.   அவசரச் சட்டத்துக்கும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டத்துக்கும் ஒரே அதிகாரம் உள்ளது என்பதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் நிரந்தரத் தீர்வு என்ற முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
Madurai : Youngsters stage a protest against Jallikattu ban at Alanganallur in Madurai on Monday. PTI Photo (PTI1_16_2017_000179B)
அரசு நினைத்திருந்தால் எப்போதோ இந்த போராட்டத்தை ஒடுக்கியிருக்க முடியும் என்பதை யாருமே கவனத்தில் கொள்ளவில்லை.   ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு ஊருக்கு சென்று, உள்ளே நுழையவிடாமல் திருப்பி அனுப்பப் பட்டது, எந்த அரசுக்கும் விடப்பட்ட நேரடி சவால்.    ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா என்பது அனைவரும் அறிந்ததே.   ஆனால் அரசின் பொறுமையை போராட்டக் குழுவினர் பலவீனம் என்று புரிந்து கொண்டனர்.
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று தொடங்கிய போராட்டத்தின் இலக்குகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.   ஜல்லிக் கட்டு நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றிய பிறகு நிரந்தரத் தீர்வு என்ற குழப்பமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமான தீர்வு என்பதே இல்லை என்பதை யாருமே புரிந்து கொள்ளத் தயாராக இல்லை.   மாநில அரசோ, மத்திய அரசோ, எந்த அரசு சட்டம் இயற்றினாலும் அந்த சட்டம் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் சோதிக்கப்படும் என்பதை யாரும் புரிந்து கொள்ள தயாராக இல்லை.    எந்த அமைப்பும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கக் கூடாது என்று ஒரு ஜனநாயகத்தில் எப்படியான நடவடிக்கை எடுக்க முடியும் ?   உச்சநீதிமன்றத்தை மூடி விடலாமா ?   அது சாத்தியமா ?   ஆனால் இவற்றை விவாதிக்கவோ, புரிந்து கொள்ளவோ யாருமே தயாராக இல்லை.
ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த சேனாதிபதி, ராஜசேகர் உள்ளிட்டோர் போராட்டத்தை கைவிடுமாறு வெளிப்படையான கோரிக்கைகளை விடுத்தனர்.    போராட்டத்தில் முன்னணியில் இருந்த பலர், விடுத்த கோரிக்கைகளும் செவிசாய்க்கப்படவில்லை.
இன்று கிராமப்புரங்களில் விவசாயத்தின் நிலை என்ன ?   கடுமையான நெருக்கடியில் விவசாயமும் விவசாயிகளும் இருக்கின்றனரா இல்லையா ?    காளைகளின் பயன் என்ன ?  அவை உழவுக்கு பயன்படுத்தப்படுவதில்லை.    வண்டி மாடுகளாக பயன்படுத்தப்படுவதில்லை.  ட்ராக்டர்தான்.  இனவிருத்திக்காக பயன்படுகின்றனவா என்றால் அதுவும் இல்லை.   அரசின் கால்நடை பராமரிப்புத் துறை நிலையங்களில், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும், உயர் ரக மாடுகளின் விந்துகளே, இனவிருத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.    அப்படி இருக்கையில் வருடம் முழுவதும் தீவனம் அளித்து, வருடத்தில் ஒரு நாள் நடக்கும் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை வளர்க்கும் பொருளாதார வசதி படைத்தது யார் ?  கிராமங்களில் பணம் கொழுத்த பண்ணையார்களால்தான் இதை சாத்தியப்படுத்த முடியும்.   உள்ளுர் மாட்டினங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று பலத்த கோரிக்கை எழுந்தது.     உள்ளுர் மாட்டினங்களை வளர்க்க வேண்டாம் என்று உங்களை யார் தடுத்தார்கள் ?    வீடுதோறும் காளை மாடுகளை, நாட்டின மாடுகளை வளர்க்க வேண்டாம் என்று தடுத்தது யார் ?    யாரும் தடுக்கவில்லை.  பொருளாதார ரீதியாக இப்படி மாடு வளர்ப்பது என்பது சாத்தியப்படாத ஒரு அவலச் சூழலில் விவசாயம் இன்று இருக்கிறது என்பதே முகத்தில் அறையும் உண்மை.
ஜல்லிக்கட்டை யுட்யூபில் மட்டுமே பார்த்த இந்த இளைஞர்கள் சென்னையில் லட்சக்கணக்கில் கூடிய போராட்டம், பல காலமாக அழுத்தப்பட்டிருந்த உணர்வுகளின் வெளிப்பாடு என்பதாகவே இந்த போராட்டத்தை புரிந்து கொள்ள முடியும்.    வேலையிழப்பு, பண மதிப்பிழப்பு, பொய்த்த விவசாயம், செயல்படாத ஒரு மாநில அரசு, பொய்களையே பேசும் மத்திய அரசு என்று பல்வேறு விவகாரங்களின் மீது உள்ள கோபம் ஒரு மையப்புள்ளியை அடைந்து, ஜல்லிக் கட்டு போராட்டமாக வெடித்தது என்றே இதை புரிந்து கொள்ள முடிகிறது.    ஒரு நாள் ஜல்லிக்கட்டு நடத்துவதால், தமிழகத்தின் எந்த வாழ்வாதார பிரச்சினைகளும் தீரப்போவதில்லை என்பது அனைவருக்கும் புரியாமல் இல்லை.   ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தில் திமுக உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளையும், மாணவர்கள் அனுமதிக்கவில்லை.   இது அரசியல் கட்சிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை.   அரசியல் தலையீட்டை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்த காரணத்தால் போராட்டத்துக்கு எவ்விதமான தலைமையும் இல்லாமல் போனது.  போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்த காவல் துறை முயன்றபோது, யாரோடு பேச்சுவார்த்தை நடத்துவது என்று புரியாமல் தவித்தனர்.  ஆர்ஜே பாலாஜி, ராகவா லாரன்ஸ், இயக்குநர் கௌதமன் போன்றோர் மாணவர்களின் பிரதிநிதிகளாக மாறினர்.    தலைமை இல்லாத காரணத்தால், எந்த கட்டத்தில் போராட்டத்தை நிறுத்துவது என்று யாருக்குமே புரியாத ஒரு குழப்பமான சூழல் இறுதி வரை நிலவியது.
பல்வேறு தமிழ் தேசிய இயக்கங்கள் மற்றும் நக்சல் ஆதரவு இயக்கங்களுக்கு, இளைஞர்களின் இந்த போராட்டம் வாராது வந்த மாமணியாக இருந்தது.     தாங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் மற்றும் இயக்கங்களின்போது, இது போன்ற கூட்டம் கூடியதை பார்த்தே இராத இந்த இயக்கங்கள், இந்த கூட்டத்தை எபப்பாடுபட்டாவது அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டின.   ஜல்லிக் கட்டுக்கு எதிராக கடுமையான நிலைபாடு கொண்டிருந்த இயக்கம் மக்கள் கலை இலக்கியக் கழகம்.   2008ம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், ஜல்லிக்கட்டு குறித்து இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது. “ஏறு தழுவுதல் மட்டும்தான் பாரம்பரியமாக வந்ததா? சாதிதீண்டாமை, வலங்கை இடங்கை வெறியாட்டங்கள் கூடப் பாரம்பரியமாக வந்தவைதான். அதற்காக அவற்றையெல்லாம் ஆதரிக்க முடியுமா? பாரம்பரியமாக நீடித்துவந்த பொட்டுக் கட்டுதலைச் சட்டம் போட்டுத் தடுக்க முற்பட்டபோது, பார்ப்பனஆதிக்க சாதியினர் பதறியதைப் போலத்தான் இருக்கிறது, சாதிவெறியை மறைத்துக் கொண்டு ‘தமிழன் வீரம்’, ‘பாரம்பரியம்’ எனப் பூசி மெழுகிடும் வாதமெல்லாம்.” இணைப்பு  ஆனால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்கள் மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்.
இளைஞர்களின் எழுச்சியை ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கு சாதகமாக திருப்பவே முயற்சித்தன.     ஏனெனில் இப்படியொரு மக்கள் திரளை அவர்கள் பார்த்ததேயில்லை. 1995ம் ஆண்டு, அப்போதைய ஆளுனர் சென்னா ரெட்டி, ஜெயலலிதா மீது வழக்கு தொடர சுப்ரமணியன் சுவாமிக்கு அனுமதி அளித்தார்.   இதனால், தமிழகத்தில் சுப்ரமணியன் சுவாமிக்கு செல்வாக்கு அதிகரித்தது. அவர் தனது ஜனதா கட்சியின் சார்பில் சென்னை மைலாப்பூரில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அதிமுகவின் ரவுடிகள் எஸ்டி சோமசுந்தரம் மற்றும் மதுசூதனன் தலைமையில் கூலிப் படையினர் அந்த கூட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டனர்.   மேடையில் கல்லெறியப்பட்டது.    சுவாமிக்கு பாதுகாப்பாக இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே சுவாமியை பத்திரமாக ஒரு வேனில் ஏற்றினர்.   வேனில் ஏறிய சுவாமி, “என்ன ஆச்சு… எதற்காக வேனில் ஏற்றுகிறீர்கள்” என்றதும், உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.    என் கட்சிக்கு இப்படி கூட்டம் வந்தது இதுதான் முதல் முறை.   இனி எப்போ வரும்னே தெரியலை.   இப்போ போயி பேச விடாம தூக்கிட்டு வந்துட்டீங்களே என்று வருத்தப்பட்டுள்ளார்.
அவரின் வருத்தத்தைப் போலத்தான் இந்த அமைப்புகளின் வருத்தமும் இருந்தன.    ஞாயிற்றுக் கிழமை சேனாதிபதி உள்ளிட்டவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போராட்டத்தை கைவிடுமாறு கூறிய பிறகும், போராட்டம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது இத்தகைய அமைப்புகளே.  ஞாயிறன்று இரவு மாணவர்களிடையே உரையாற்றிய இயக்குநர் கௌதமன்,  குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட அவசர சட்டத்தின் நகல், திங்களன்று வர உள்ளதாகவும், அதன் பிறகு கூடி என்ன செய்வது என்று முடிவு செய்யலாம் என்றும் இளைஞர்களிடையே கூசாமல் பொய் பேசினார்.   அவர்களும் ஹோ என்று ஒலியெழுப்பி ஆரவாரம் செய்தனர்.   அவசர சட்டம் வெளியிடப்படாமல், ஜல்லிக்கட்டை அரசு எப்படி நடத்த முன் வந்தது என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை.   அன்றே பேசிய மற்ற இயக்கத்தினர், பெப்சி கோக்கை தடை செய்ய வேண்டும், பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும், காவிரி நீர் மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை அடுக்கிக் கொண்டே சென்றனர்.   பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பதை ஏறக்குறைய அனைவருமே வலியுறுத்தினர்.
பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றால், மனித உரிமைகளுக்காக போராடும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், சுற்றுச் சூழலுக்காக குரல் கொடுக்கும் க்ரீன் பீஸ் போன் அமைப்புகளையும் அல்லவா தடைசெய்ய வேண்டும் ?    நமக்கு பிடிக்காது என்று பீட்டாவை தடை செய்ய தொடங்கினால், அவர்களுக்கு பிடிக்காது என்று மக்கள் அதிகாரம், மே 17 , நாம் தமிழர் என்று அவர்களும் தடை கோருவார்களே ?  என்ன பதில் சொல்வீர்கள் ?   பீட்டா போன்ற அமைப்புகளை கருத்து ரீதியாக எதிர்கொள்வதே ஜனநாயகம்.
ஞாயிற்றுக் கிழமை இரவைத் தாண்டி போராட்டம் திங்கட்கிழமை காலை நீடித்ததே வன்முறைக்கு வித்திடத்தான்.    திங்களன்று காலை, காவல்துறை சார்பில்  ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.   ஆனால் அவர்கள் மறுத்தனர்.    மிக மிக அதிசயமாக லத்தி இல்லாமல் அவர்களை கலைக்கச் சென்றது காவல்துறை.  அவர்களோ, கடலோரம் தஞ்சம் புகுந்தனர்.  பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அவர்களை அழைத்தபோதும், ஒருவரும் வரவில்லை.   மாறாக, ஜல்லிக் கட்டுக்கு நிரந்தர தீர்வு என்று பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருந்தனர்.
16266156_10208477375198245_3927625162874752664_n
மெரினா சூழலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த காவல்துறையும் மெரீனாவில் குவிக்கப்பட, நகரத்தின் இதர பகுதிகள், சமூக விரோதிகளின் கைகளுக்குள் சென்றது.  ஐஸ்ஹவுஸ் போன்ற பதற்றமான பகுதிகளில் போதுமான காவல்துறையினரை நிறுத்தியிருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சென்னை மாநகரத்தை பைனாக்குலர் மூலம் நிர்வாகம் செய்தார் ஆணையர் கமிஷனர் ஜார்ஜ்.
காவல் நிலையம் தாக்கப்பட்டது என்ற செய்தி பரவியதுமே, காவலர்கள் வேட்டை நாய்களைப் போல பாய்ந்தனர்.  கையில் சிக்கியவர்களை அடித்து நொறுக்கினர்.    வாகனங்களை நொறுக்கினர்.  தீ வைத்தனர்.    காவல்துறையினர் இல்லாத இடங்களில் பதிலுக்கு காவல்துறையின் வாகனங்களும் பொதுச் சொத்துக்களும் கொளுத்தப்பட்டன.
போராட்டத்தின்போது, கேக் வழங்கி அன்போடு பேசிய காவல்துறையினரைப் பார்த்ததும் இளைஞர்கள் காவல்துறை உண்மையிலேயே மக்களின் நண்பன் என்று தவறாக நம்பினர்.   காவல்துறையின் உண்மை முகம் வன்முறை மட்டுமே.   வன்முறையை நிகழ்த்துவதற்காகவே அவர்கள் பயிற்சியளிக்கப்படுகிறார்கள்.   உருவாக்கப்படுகிறார்கள்.   சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009, பிப்ரவரி 19 அன்று நாள் முழுவதும் நடந்த காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்தை நேரில் பார்த்துள்ளேன்.  நேற்று நடந்தது ஒன்றுமே அல்ல.  கொடியங்குளம், தாமிரபரணி, பரமக்குடி, உயர்நீதிமன்றம் என்று காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்துக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
24_01_2017_005_001_012
CHN_2017-01-24_maip5_15

ஒரு வார காலமாக விடுப்பு இல்லாமல், தொடர்ந்து வெயிலில் பணியாற்றி வைத்திருந்தவர்களை, அடியுங்கள் என்று அனுப்பினால் என்ன ஆகும் என்பதே நேற்றைய காவல்துறையின் வன்முறை.   காவல்துறையின் மற்ற எல்லா வன்முறைகளையும் போல, இதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படப் போவதில்லை.   ஒரு நாளும் எடுக்கப்படப் போவதில்லை.  திமுக அரசாக இருந்தாலும் இது நடந்திருக்காது.  ஏனெனில் இதுதான் சிஸ்டம்.
ஜல்லிக் கட்டுக்காக நடந்த இந்த போராட்டத்தைப் போலவே இதர மக்கள் பிரச்சினைகளுக்காகவும் மாணவர்களும், இளைஞர்களும் திரளுவார்களா அப்படி திரண்டாலும் அதை அரசு இயந்திரம் இது போல அனுமதிக்குமா என்பது சந்தேகமே.   இருப்பினும், 1965க்கு பிறகு தமிழகத்தில் நடந்த எழுச்சிமிகு போராட்டம் இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தற்போதைய இளைய சமுதாயம் பொறுப்பற்ற செல்போன் தலைமுறை என்ற விமர்சனத்தை இளைஞர்கள் உடைத்தெறிந்துள்ளார்கள்.    செல்போன் மூலமாகவே சமூக பொறுப்புணர்வோடு போராட்டத்தை நடத்துவோம் என்பதை காட்டியுள்ளார்கள்.    செல்போன் மூலமாகவே ஒன்றிணைவோம் என்பதை உணர்த்தியுள்ளார்கள். சமூக அக்கறை மற்றும் பொறுப்புணர்வில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளார்கள்.   அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மகிழ்ச்சிதரத்தக்க வெற்றி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாளைய தலைமுறை நம்பிக்கை அளித்துள்ளது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...