முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்று எங்கிருந்து வர வேண்டும்?


-சரவணன் சந்திரன்.
காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை. ஹிந்துவில் வந்த, வராத விஷங்களைத் தாங்கிய கட்டுரை.
இந்த விவகாரத்தை இப்போதுதான் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. ஆற்று மணல் சூரையாடப்படுகிறது என்றெல்லாம் உரத்த குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு ஒரு பொது நல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். தமிழகம் முழுக்க நடக்கும் கட்டுமானங்களில் ஆற்று மணலுக்கு மாற்றான எம் சாண்ட்டை (manufactured sand) பயன்படுத்தச் சொல்லி உத்தரவு போடவேண்டும் என்பது அந்த வழக்கின் சாரம். மிக முக்கியமான முன்னெடுப்பு இது. இது ஏதோ இன்றைக்கு எடுக்கப்படுகிற முன்னெடுப்பு போலச் சொல்லப்படுகிறது.
உண்மையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இது குறித்த விவாதங்கள் கட்டுமானத் துறையில் நடந்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக ஒரு லோடு மணல் 25000 ரூபாய் அளவில் 2012 இல் விற்கப்பட்ட போது இந்தத் துறையில் இருப்பவர்கள் எம் சாண்ட் குறித்து தீவிரமான உரையாடலை முன்னெடுத்தார்கள். ஆனாலும் அது குறித்த தெளிவான உரையாடல்கள் அரசுத் தரப்பில் அப்போது நடக்கவேயில்லை. அரசுத் தரப்பைப் பொறுத்தவரை ஆற்று மணலால்தான் கொழித்துச் செழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதால் இது குறித்து அவர்கள் காது கொடுத்துக் கேட்கக் கூடத் தயாராக இல்லை. ஒரு பரிந்துரையை மட்டும் தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டு விட்டனர்.
பொதுவாகவே நாள் தோறும் சென்னைக்கு மட்டுமே சுமார் பத்தாயிரம் ட்ரக் லோடு வரைக்கும் ஆற்றுமணலுக்கான தேவைகள் இருக்கின்றன. தமிழகம் முழுக்க எடுத்துக் கொண்டால், 55000 மணல் லாரிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நாளொன்றிற்கு ஒரு லோடாவது அவை அடித்து விடுகின்றன. இரண்டு லோடு, மூன்று லோடு அடிப்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு லோடு மணல் என்பது குறைந்தது இரண்டு யூனிட். இந்தப் பின்னணியில் ஒரு நாளைக்கு எத்தனை லோடு மணல் தமிழகத்தில் மட்டும் அடிக்கப்படுகிறது என்பதைக் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். கர்நாடகா மற்றும் கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்படும் மணல் இந்தக் கணக்கில் வராது. தவிர சட்டப்பூர்வமாகவே கேரளாவிற்கு மட்டும் ஒருநாளைக்கு சுமார் 100 லோடு வரை மண் இங்கிருந்து போவதாகவும் சொல்கிறார்கள்.
இதுதான் தமிழகத்தைப் பொறுத்தவரையான தினசரி மணல் தேவை. தனியார் கட்டுமானங்கள் மற்றும் பொதுப் பணித் துறையால் மேற்கொள்ளப்படும் அரசுக் கட்டுமானங்களும் இவற்றில் அடங்கும்.
இந்தப் பின்னணியில்தான் நீண்ட காலமாகவே ஆற்று மணலுக்கு மாற்றாக கருங்கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப்படும் மாற்று மணலான எம்.சாண்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. இந்த மணலைப் பொறுத்தவரை கட்டுமானத் துறையின் தரக்கட்டுப்பாடான ஐ.எஸ்.383 தரத்தில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. தரத்தில் ஆற்று மணலை விட இவை மிகச் சரியாக இருப்பதாகவே சொல்கிறார்கள். நிறத்தைப் பொறுத்தவரை அவை சிமெண்ட்டோடு சேரும் போது எந்த வித்தியாசங்களையும் கொண்டிருக்காது என்றும் விளக்குகிறார்கள்.
குறிப்பாக உலகின் மிக உயரமான கட்டடமான, துபாயில் இருக்கும் Burj Khalija எம் சாண்ட் கொண்டு கட்டப்பட்டது என்றும் ஆதரத்தைத் தருகின்றனர். இதன் விலையைப் பொறுத்தவரை ஆற்று மணலை விட 30லிருந்து 40 சதவீதம் வரை விலை குறைவாகக் கிடைக்கிறது. தமிழகத்தின் ஒருநாள் தேவை தோராயமாக 30000 யூனிட் அளவு. கொஞ்சம் கூடலாம். குறையலாம். இந்தத் தேவையை மாற்று மணலைக் கொண்டு நிரப்பி விட முடியுமா என்று கேட்டால் முடியும் என்றே சொல்கிறார்கள். உதாரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் ஆயிரம் கிரஷர்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஐம்பது குவாரிகள் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் இருந்து சுமார் ஐயாயிரம் யூனிட் வரை உற்பத்தி நடக்கிறது.
ஒரு கிரஷரில் இந்தப் பணியைத் துவங்குவதற்கு ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி ரூபாய் வரை முதலீடு தேவை. அரசு இந்த விசயத்தில் மானியங்களைக் கொடுத்தால் மீதமிருக்கும் கிரஷர்களையும் செயலுக்குக் கொண்டு வர முடியும். மிக எளிதாகவே தமிழகத்தின் கட்டுமானத் தேவையான அந்த 30000 யூனிட் அளவை சரிக்கட்டி விட முடியும். இது முழுக்க முழுக்க இந்தத் துறை சார்ந்தவர்கள் சொல்லும் புள்ளி விபரம். வேலையில்லாத பொறியியல் பட்டதாரி நான் இல்லை என்பதால், இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.
இப்படி ஒரு எளிதான தீர்வை வைத்துக் கொண்டு எதற்காகப் புலம்பிக் கொண்டு அலைகிறோம்? ஏன் மாற்று மணலை கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியவில்லை? என்கிற கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால், இதில் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் புரிதல் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது, இத்தனைக்கும் அரசு கண்டிப்பான உத்தரவாக அல்லாமல் எம்.சாண்ட் பயன்படுத்தலாம் என ஒரு பரிந்துரை அறிவிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. ஆனாலும் அரசு காண்டிராக்டர்கள் இன்னமும் ஆற்று மணலையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
சில சமயங்களில் எம் சாண்டை விட விலை குறைவாக இருக்கும் திருட்டு மணலைப் பயன்படுத்தவும் செய்கிறார்கள். உண்மையில் இங்கே சிக்கல் 80 சதவீதம் மக்களிடம்தான் இருக்கிறது. இங்கு மக்கள் என்று சொல்லி யாரையும் குற்றம் சொல்லவே முடியாது. மக்கள் என்ன செய்தாலும் சரி என்பதுதான் அடிப்படையாகவும் இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் மக்கள் மனது வைத்தால் இந்த விவகாரத்தில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வரலாம். ஆனால் மாற்று மணலால் கட்டப்பட்ட வீடுகள் வெயிலில் உருகி விடும் என்கிற ரேஞ்சிற்கு இங்கே அறியாமை நிலவுகிறது.
தவிர விலை அதிகமானாலும் பரவாயில்லை, ஆற்று மணல்தான் வேண்டும் என மக்கள் அடம்பிடிக்கிறார்கள். “எங்க தாத்தா காலத்துல இருந்து மணலில்தான் வீடு கட்டுகிறோம். நானும் அப்படித்தான் கட்டுவேன்” என மக்கள் அடித்துச் சொல்வதாக இந்தத் துறையில் இருக்கும் கட்டுமானக்காரர்கள் சொல்கிறார்கள். தவிர மணல் மாபியாக்களின் பிடியில் இந்த வணிகம் இருப்பதால், அது பணம் கொழிக்கும் துறையாகவும் இருப்பதால் இந்த மாற்று என்கிற வார்த்தைக்கு எதிராகவே அவர்கள் கொடி பிடிக்கின்றனர்.
மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வீட்டு வாசலில் கொட்டும் மணலில் கையை விட்டால் தண்ணீர் சொட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆற்று வளத்தைச் சூரையாடுகிறோம் என்றெல்லாம் கவலையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுடைய பொறியாளர் மாற்று மண் என்று வார்த்தையை உச்சரிக்க ஆரம்பிப்பதற்குள் அதற்குத் தடை போடத் தலைப்படுகின்றனர். மாபியாக்களைப் பொறுத்தவரை ஆற்று மணல் இருக்கிற வரைதான் ஆட்டம் எல்லாமும். இரண்டு யூனிட் என்று சொல்லி விட்டு ஐந்து யூனிட் வரை ஆட்டையைப் போடும் நிதர்சன நிலையை அவர்கள் உடைக்கத் தயாராக இல்லை.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை இருபெரும் திராவிடக் கட்சிகளுக்குமான முக்கிய வருவாய் ஆதாரம் என்பது மணல் வியாபாரமே. நேரடியான அரசு வருவாய் என்பதை இந்த இடத்தில் சொல்லவில்லை. மறைமுகமான மணல் வருவாய் என்பதை இந்தயிடத்தில் பொருத்திப் புரிந்து கொள்ளுங்கள். திராவிடக் கட்சிகளே இப்படித்தான் என்கிற அரசியல் ரீதியிலான குரலில் இதைப் பதிவு செய்யவில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன். நிதர்சனத்தைப் பதிவு செய்கிறேன். மணல் வியாபாரம் முழுக்க இந்த இரண்டு கட்சிகள் மட்டுமல்லாமல் பலம் பொருந்திய பிற கட்சிகளின் குறுநில மன்னர்களின் கைகளில் இருக்கிறது.
அதை உடைப்பது என்பது இயலாத காரியம்தான். ஆனால் அதைவிட உடைக்க முடியாத ஒன்று இருக்குமென்றால் அது மக்களின் மனநிலைதான். பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேண்டும் என்கிற மனநிலையில் இந்த விஷயத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்ல முடியும். மாற்று மணல் குறித்த தெளிவான புரிதல்களை மக்கள் மத்தியில் கொண்டு வருவதுதான் இப்போதைய உடனடித் தேவை.
ஆற்று மணலைச் சூரையாடுகிறவர்களின் கையை உடைக்க வேண்டும் என குரல் எழுப்புபவர்களை நிறுத்தி, உன்னோட வீட்டுல எம் சாண்ட் பயன்படுத்துவாயா எனத் துணிந்து கேட்கலாம். மலைகள் உடைபடாதா? எனக் கேள்விகள் வரலாம். இடைக்கால அரசே இருக்கும் போது இடைக்கால ஏற்பாடு இந்த விஷயத்தில் இருக்கக் கூடாதா? ஜனநாயகத்தில் யாரை நோக்கியும் கேள்விகள் கேட்கலாம். மக்களும் அதில் அடக்கம். மக்கள் என்பதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் சரியென்று தலையாட்டினால், இனி ஆறுகளே இருக்காது. தவிர இந்த விசயத்தில் மக்கள் தலையில் கொஞ்சம் கொட்டினாலும் தப்பில்லை.

           







-சரவணன் சந்திரன்.
எழுத்தாளர், இயக்குநர். நாவலாசிரியர்.
இந்தியாடுடேயின் முன்னாள் மூத்த செய்தியாளராக‌ இருந்தவர்.
தேர்ந்த பத்திரிக்கையாளர்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...